திருவரங்கத்தின் சிறப்புக்கள்
இத்தலம் பற்றிய சிறப்புக்களைத் தொகுத்து தனி நூலொன்றே எழுதி
விடலாம். சிலவற்றை மட்டும் இங்கு காண்போம்.
1) திருமகள் தினமும் வந்து பூஜித்துச் செல்லும் இத்தலம் இராமாயண
காலத்தோடு தொடர்பு கொண்டு இந்தியாவின் தேசியத்திற்கு மதமும் ஒரு
காரணம் என்பதைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
2) சிலப்பதிகாரத்தில் இத்தலம் கீழ்க்கண்டவாறு குறிக்கப்படுகிறது.
விரிந்த அலைகளோடு கூடிய மிகப்பெரிய காவிரியாற்றின் இடைக்குறையில்,
திருமகள் விரும்பி உறையும் மார்பை உடையவனும், நீலநிறம்
கொண்டவனுமாகிய திருமால் ஆயிரம் தலைகளுடையவனுமாகிய ஆதிசேடன்
என்னும் சிறந்த பாம்பனையாகிய பள்ளியணை மீது அழகுறச்சாய்ந்து
கொண்டிருக்கும் தன்மை நீல நிறமுடைய ஒரு மேகமானது ஒரு பொன்மலையைச் சூழ்ந்து படிந்திருக்கும் பான்மையில் திகழ்கிறது.
3) பரமபதத்தில் இரண்டு மணத்தூண்கள் உள்ளது. பரமபதத்திற்குச்
செல்வோர் இந்த மணத்தூண்களைத் தழுவி நித்ய சூரிகளாக
விளங்குகின்றனர். (நித்ய சூரி-அழிவில்லாத பேரின்பமயமான சூழ்நிலையில்
எம்பெருமானுக்கு பணிவிடைபுரியும் ஆத்மாக்கள்)இதே போல் இங்குள்ள
கருவறையிலும் இரண்டு மணத்தூண்கள் உள்ளன. இந்த மணத்தூண்களைத்
தழுவிக்கொள்வோர் பரமபதத்து நித்ய சூரியாகும் பாக்கியம் பெறுவர், என்பது
ஐதீஹம். இந்த மணத்தூண்களை பற்றிக்கொண்டு எம்பெருமானை வாழ்த்தும்
நாள் எந்நாளோ என்று குலசேகராழ்வார், மயங்கி நிற்கிறார். இதோ அவரின்
பாடல்,
4) உலகு போற்றும் காவியமான கம்ப இராமாயணத்தை கம்பர்
இங்குதான் அரங்கேற்றினார். இவ்விடம் தாயார் சன்னதிக்கு எதிரே கம்பர்
மண்டபம் என்ற பெயரில் நின்றிலங்குகிறது. கம்பர் தமது இராமாயணத்தில்
இரண்யனை சம்ஹாரம் செய்த வரலாற்றை விளக்குகிறார். இராமாயணத்தில்
இரண்ய வரலாறு வரக்கூடாது இதை ஏற்கமாட்டோம் என அறிஞர் பலரும்
உரைக்கவே, அவ்வாறாயின் எம்பெருமான் திருமுன்பு அரங்கேற்றம்
நடத்துவோம் அவர் ஒப்புக் கொண்டால் அனைவரும் ஏற்றுக் கொள்ள
வேண்டியதுதான், என்று முடிவு கட்டி இவ்விடத்தே வந்து கம்பர் தமது
ராமாயணத்தை அரங்கேற்றம் செய்யும் வேளையில் இச்சன்னதிக்குள்
மேட்டுப்புறத்தில் எழுந்தருளியுள்ள அழகிய சிங்கப் பெருமாள்,
கம்பரின் இராமகாதையை நாம் அங்கீகரித்தோம் என்ற கர்ஜனையுடன்
பெருமுழக்கம் செய்ததாகக் கூறுவர். இந்த மேட்டு அழகிய சிங்கர் கோவில்
5வது திருச்சுற்றுக்குள் 5வது மதிலுக்குள்) உள்ளது.
5) இப்பெருமானுக்கு அழகிய மணவாளன் என்பதும் ஒரு திருநாமம்.
அதாவது இவர் மிகவும் அழகான மாப்பிள்ளை ஆவார். எனவேதான் அழகிய
மணவாளர் ஆனார். ஸ்ரீவில்லிபுத்தூரின் ஆண்டாளையும், உறையூர்
கமலவல்லி நாச்சியாரையும் இவர் அழகான மாப்பிள்ளை திருக்கோலத்தில்
ஏற்றுக் கொண்டார். தான் பேணி வளர்த்த பெண்ணான ஆண்டாளை
இப்பெருமாள் பெண்டுகொண்டு போனதைப் பற்றி பெரியாழ்வார்.
என்று மயங்கி மகிழ்வார்.
6) ஆழ்வார்கள் பன்னிருவரில் பதினோரு ஆழ்வார்களின்
மங்களாசாசனத்தைப் பெற்ற திவ்யதேசமாகும் இது. 11 ஆழ்வார்கள் 247
பாக்களில் மங்களாசாசனம் பொழிந்த திவ்யதேசம். 108 திவ்யதேசங்களில்
இப்பெருமை வேறெந்த திவ்ய தேசத்திற்கும் இல்லை. 12 ஆழ்வார்களில்
மதுரகவியாழ்வார் வேறொன்றும் நானறியேன் என்று நம்மாழ்வார் ஒருவரை
மட்டுமே மங்களாசாசனம் செய்து உய்ந்தார். இவர் எந்த திவ்ய தேசத்தையும்
பாடவில்லை. திவ்யதேசங்களை மங்களாசாசனம் செய்த ஆழ்வார்கள்
மதுரகவியாழ்வார் தவிர்த்த மீதி 11 ஆழ்வார்கள்தான். இந்த 11
ஆழ்வார்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்டதால் இவர் ஆழ்வார்களுகந்த
எம்பெருமான் என்று போற்றப்படுகிறார்.
7) திருமங்கையாழ்வார் திருவரங்கத்தில் மதில் கட்டினார். திருநறையூர்
எம்பெருமான் மீது திருமடல் பாடியருளினார். தமக்கு மதில் எழுப்பியதால்
சந்தோசமடைந்த அரங்கநாதன் திருமங்கையாழ்வாரை விளித்து தீர்த்தம்,
மாலை,
சடாரி, பரிவட்டம் போன்றன கொடுத்து எமக்கும் மடலுரைக்கலாகாதோ
வென்றாராம். அதற்கு திருமங்கை யாழ்வார் மிகவும் பக்தியோடு வாய்புதைத்து
நின்று மதில் இங்கே மடல் அங்கே என்றாராம்.
8) வைணவ வளர்ச்சிக்கும், வைணவ மறுமலர்ச்சிக்கும் இத்திருவரங்கம்
ஒரு பாசறையாக விளங்கியதென்றால் அது மிகையல்ல. ஆம் முதல்வன்
இவன் என்று இராமானுஜரை அடையாளங்காட்டிய ஆளவந்தார் வைணவத்
தலைமையேற்று இங்கிருந்து ஆற்றிய தொண்டு அளவிடற்கரியது. வ்யாக்யான
சக்ரவர்த்தி என்னும் வைணவக் கடலும், பிள்ளை உலகாசரியன் என்னும்
வைணவ மேதாவியும் இங்கு நெடுங்காலம் தங்கியிருந்து வைணவம்
வளர்த்தனர். ஸ்ரீராமானுஜர் திருவரங்க கோவிலின் நிர்வாகத்தை ஏற்று
ஸ்ரீரங்க ஜீயராக இருந்து திருக்கோவில் நிர்வாக பரிபாலனம் பண்ணி
விசிஷ்டாத்வைதத்தை உலகுக்கு அளித்த இடம். திருவரங்கப்
பெருமாளுக்குரிய ஆபரணங்கள் முதற்கொண்டு அன்றாடம் அரங்கனுக்கு
அணிவிக்க வேண்டிய ஆடைகள், பிரசாதம், விழாக்கால நடைமுறைகள்
போன்றவற்றை முறைப்படுத்தி நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தினார். இதனை
திருவரங்கர் செல்வம் முற்றுந்திருத்தி என்ற அடைமொழியில் குறிப்பார்.
இவ்வொழுக்கு இராமானுஜருக்குப் பின்னால் இஸ்லாமியர்களின் படையெடுப்பு
வரையில் பெரிதும் போற்றிப் பாதுகாக்கப்பட்டன.
9) திவ்யதேசங்களில் தமிழ்ப்பாசுரங்களை இசையோடு இசைத்து முன்
செல்ல, அதனைச் செவிமடுத்தவண்ணம் பெருமாள் பின்னே வர, தமிழ் முன்
செலத்திருமால் பின்வர என்று தமிழ் பிரபந்தங்கட்கு முன்னுரிமை கொடுத்து
சீர்திருத்தம் செய்து இராமானுஜர் இங்கு நெடுங்காலம் இருந்தார். இங்கு
நடந்த இராமானுஜ வைபவங்களைப் பற்றி பெரிய நூலொன்றே யாத்து
விடலாம். இறுதியில் இராமானுஜர் திருநாடு (மோட்சம்) அடைந்ததும்
ரங்கநாதனே அவரை வஸந்த மண்டபத்தில் வைக்குமாறு பணிக்க இன்றும்
அவரது திருமேனியை தரிசிக்கும் இத்தகைய கீர்த்தி வேறெந்த
திவ்யதேசத்திலும் இல்லை.
10) இங்கு எல்லாமே பெரியவைகள். ஆம் கோவில் பெரிது.
இராமபிரானே நமக்குப் பெருமாள் ஆவார். அவரால் தொழப்பட்ட இந்த
ரங்கநாதன் பெரிய பெருமாள். கோவிலும் பெரிது. அதனால் பெரிய கோவில் ஆயிற்று. 7 மதில்களும்,
எண்ணற்ற மண்டபங்களும் பெரிது. இதற்குச் சிகரம் வைத்தாற்போல்
இத்தலத்தின் கோபுரம் ஆசியாவிலேயே பெரிது. இங்கு எழுந்தருளியுள்ள
கருடன் மிகப்பெரியவர். இங்கிருந்த ஜீயரும் பெரிய ஜீயர் உரையாசிரியர்,
ஆச்சான்பிள்ளையோ பெரியவாச்சான் பிள்ளை. திருமதில்கள் பெரிது.
இங்கிருந்த ஆச்சார்யார் நம்பிகளின் திருநாமமோ பெரிய நம்பி. தாயாருக்கு
பெரிய பிராட்டி என்பது பெயர் இங்கு செய்யப்படும் தளிகைக்கு பெரிய
அவசரம் என்று பெயர். இங்குள்ள வாத்யத்திற்கு பெரிய மேளம் என்று
பெயர். இங்கு தயாரிக்கப்படும் பட்சணங்கட்குப் பெரிய திருப்பணியாரங்கள்
என்று பெயர். ஆண்டாளை வளர்த்தெடுத்து அரங்கனுக்கு மணமுடித்துக்
கொடுத்து மாமனார் ஸ்தானம் வகிக்கும் ஆழ்வாரோ பெரிய ஆழ்வார்.
இரண்டாகப்பிரிந்து ஓடும் காவிரியும், கொள்ளிடமும் தமிழ்நாட்டிலேயே
பெரிய நதிகள். ஆழ்வார்களின் மங்களாசாசனங்களோ பெரிய
மங்களாசாசனங்கள். ஆம் 108 திவ்ய தேசங்களில் 11 ஆழ்வார்களால் 247
பாக்களால் பெரிய மங்களாசாசனம் பெற்றவர் இப்பெருமாள். இராமாயண
காலத்திற்கும் முற்பட்டு, இப்பூமிக்கு வந்த பெருமாள் இவரென்றால் இவரின்
தொன்மை பற்றி ஆராய்வது பெரிய ஆய்வு. அப்பேற்பட்ட தொன்மையான
பெருமாள் தமிழகத்தில் இங்கு வந்து பள்ளி கொள்ள விரும்பினாரென்றால்
அது பெரிய விஷயம். அம்மம்மா இங்கு எல்லாமே பெரியவைகள்.
11) திருப்பாணாழ்வார் தாம் தாழ்குலத்தில் பிறந்தோம் என்பதற்காக
திருவரங்கத்திற்கு உட்செல்ல மனம் கூசி தினந்தோறும் தென்
திருக்காவேரியின் கரையிலிருந்து திருவரங்கனை நோக்கிப் பக்திப்
பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார். ஒருநாள் திருவரங்கப்பனுக்கு
ஆராதனை புரியும் லோகசாரங்க முனிவர் என்பர் தென் காவிரியில்
திருவரங்கநாதனின் திருமஞ்சணத்திற்கு காவிரித் தண்ணீரை முகந்து கொண்டு
செல்ல வந்து கொண்டிருக்கும் போது தென் காவிரிக் கரைமீது நின்று
கொண்டு திருப்பாணாழ்வார் மெய்மறந்து பாடிக்கொண்டிருந்தார். இவரைக்
கண்ட லோகசாரங்க முனிவர் கையை தட்டி ஏ, பாணனே அப்பால் செல்க
என்றுகூறினாராம். தம்மை மறந்த நிலையில் எம்பெருமானிடம் ஈடுபட்டிருந்த
திருப்பாணரின் செவிகளில் கையொலி சத்தம் கேட்க வில்லை. தன்
நிலையினின்றும் பிறழாது மனமுருகி பாடிக் கொண்டேயிருந்தார்.
இதைக்கண்ட லோகசாரங்கர் ஒருசிறு கல்லை எடுத்து பாணர் மீது வீசவே
அது அவர் நெற்றியில் பட்டு இரத்தம் பீறிட்டது. நிலையுணர்ந்த பாணர்
நடுநடுங்கி ஒதுங்கி நின்று லோக சாரங்கருக்கு வழிவிடுத்தார். லோகசாரங்கர்
தீர்த்தம் முகர்ந்துகொண்டு திருவரங்கப்பன் முன் வந்து நின்றார். என்ன
ஆச்சர்யம் திருவரங்கனின் நெற்றியினின்றும் இரத்தம் வழிந்து கொண்டு தான்
இருந்தது. செய்வதறியாது திகைத்து அனைவரும் கூடி இந்த ஆச்சர்யத்தை
கண்ணுற்று வகையறியாது நின்றனர். மனம் நொந்து மயங்கிய நிலையில்
துயில்கொண்ட லோகசாரங்கர் கனவில் வந்த அரங்கன் பாணரைத்
துன்புறுத்தியது தவறென்றும், நும் போன்றே அவரும் தொண்டரன்றோ, நீர்
சென்று உம் தோள் மீது அவரைச் சுமந்து வாரும் என்று பணித்தார்.
மறுநாள் காலையில் லோகசாரங்க முனிவரும், மற்றையோர்களும்
தென்திருக்காவேரி செல்ல தம்மை மறந்து எம்பெருமான் மீது மையல்கொண்டு
பாடல்கள் இசைத்துக் கொண்டிருந்த திருப்பாணரை வணங்கி, அவரிடம்
பெருமாளின் திருவுளக்குறிப்பை தெரிவித்து தம்தோள் மீது ஏற்றிக்
கொணர்ந்து திருவரங்கர் முன் விடுத்தனர். திருவரங்கநாதனைக் கண்குளிரக்
கண்ட திருப்பாணாழ்வார் அவரது திருமுகம், கண், வாய், செவி, திருவுந்திக்
கமலம், ஆகியவற்றின் பேரழகில் மயங்கி அமலனாதிப்பிரான்
எனத்தொடங்கும் 10 பாசுரங்களை வழங்கி திருவரங்கன் திருவடிக்கீழ் புகுந்து
மறைந்தார். எம்பெருமானின் அடியார்கள் எக்குலத்தவராயினும் சமமே என்று
பறைசாற்றும் சாதி சமய பேதமற்ற வைணவம் திருவரங்கத்திலே காலூன்றி
எத்திக்கும் பரவ இவ்வரங்கனே வித்திட்டார்.
12) தொண்டரடிப் பொடியாழ்வார் திருவரங்கத்திற்கு அருகாமையில்
ஒரு நந்தவனம் அமைத்து தினந்தோறும் திருவரங்க நாதனுக்கு பூமாலையும்
பாமாலையும் சமர்ப்பித்து வந்தார். திருமங்கையாழ்வார் திருவரங்கத்திற்கு
மதில்கட்டும் சமயம் தொண்டரடிப்பொடியாழ்வாரின் நந்தவனம் குறுக்கிட்டது.
எனவே நந்தவனத்தை
ஒதுக்கிவிட்டு திருமதில் வளைத்தார். இஃதறிந்த தொண்டரடிப்
பொடியாழ்வார் மலர் கொய்யும்போது தமது ஆயுதத்திற்கு திருமங்கையின்
பட்டப் பெயர்களுள் ஒன்றான “அருள்மாரி” என்னும் பெயரைச் சூட்டி
மகிழ்ந்தார்.
13) திருவரங்கத்தில் நடைபெறும் விழாக்களில் மிகவும் ரசனை
பொருந்திய ஒரு நிகழ்ச்சியை இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது. பங்குனி
மாதம் நடைபெறும் திருவிழாவில் உற்சவத்தின் 6வது தினத்தில் திருவரங்கன்
உறையூர் சென்று கமலவல்லி நாச்சியாரைக் கடிமணம் புரிந்து கொள்கிறார்.
பிறகு 9வது தினத்தில் மீண்டும் ஸ்ரீரங்க நாச்சியாரைக் காண ஸ்ரீரங்கம்
திரும்புவார். மூன்று நாட்களாக உறையூர் செல்வியோடு இருந்துவிட்டு
வந்ததையெண்ணி ஸ்ரீரங்க நாச்சியார் பிணக்கு கொண்டு என்னைப் பார்க்க
வரக்கூடாது என்று திருக்கதவும் சாத்துவாள். இந்தப் பிணக்கிற்கு “ப்ரணய
கலஹம்” என்று பெயர். இந்தப் பிணக்கைத் தீர்த்து வைக்க நம்மாழ்வார்
வந்து சமாதானம் செய்துவைப்பார். அதன்பின் இருவரும் சமாதானமுற்று ஒரு
சேர்த்தியில் காட்சியளிப்பர். இத்திருநாளன்று தாயாருக்காக வாதிடுபவர்கள்
5வது திருச்சுற்றில் உள்ள பிரதானமான வாசற்கதவை அடைத்து விடுவார்கள்.
அரையர்கள் பெருமாளுக்கும் பிராட்டிக்கும் நடுவராக இருந்து தூது செல்வர்.
அப்போது பழம், பூ, முதலியவற்றை வீசுவதும் (பிராட்டி கோபமுற்று
பெருமாள் மீது வீசிவிட்டு கதவடைத்துக் கொள்வதாக ஐதீஹம்) அரையர்கள்
ஒருவர் மாட்டு ஒருவர் பேசி பிணக்கு தீர்ந்து சமாதானம் ஆகியுள்ளனர்.
என்று தெரிவிப்பர். இதன்பிறகு பெருமாளும் பிராட்டியும் ஒருசேரக்
காட்சியளிப்பர். இதற்கடுத்தநாள் இருவரும் ஒரே ரதத்தில் திருவீதி
உலாவருவர். இந்த ரதத்திற்கும் “கோரதம்” என்று பெயர்.
என்னே அரங்கனின் மாண்பு, ஆழ்வார்களின் பிணைப்பு. ஆம்
நம்மாழ்வார் சமாதானம் செய்து வைக்கிறார். தொண்டரடிப்பொடி திருமாலை
கட்டித் தருகிறார். திருமங்கை மண்டபமும் மதிலும் கட்டித் தருகிறார்.
பெரியாழ்வார் பெண்டு கொடுத்து மாமனாகிறார். ஆண்டாள் மனையாட்டி
ஆகிறாள். திருப்பாணாழ்வார் திருவடிகளில் சேர்த்தியாகிறார். இவர்களுடன் மற்றைய ஆழ்வார்களும் மங்களாசாசனப் பூக்களைச்
சூட்டி மகிழ்கின்றனர். என்னே ஆழ்வார்கட்கும் அரங்கனுக்கும் உள்ள
தொடர்பு.
14) அரையர் சேவை என்பது நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தை ராக
தாளத்தோடு இன்னிசையாய் இசைப்பது. மார்கழி மாதத்து வைகுண்ட
ஏகாதசியின் போது இங்கு அரையர் சேவை நடப்பது செவிகட்கு மட்டுமன்றி
கண்களுக்கும் அருவிருந்து. ஒரு சில திவ்யதேசங்களில் மட்டுமே இந்த
அரையர் சேவை இன்று வழக்கிலிருந்தாலும் திருவரங்கத்து அரையர்
சேவையே மிகச் சிறப்பானதாகும்.
15) இத்தலத்திற்குரிய நிலங்களைக் குத்தகைக்குவிட்டு அதிலிருந்து
அறுவடை செய்து வந்த நெற்கதிர்களை ஆண்டுதோறும் சித்திரைமாதத்தன்று
யானை மீது ஏற்றி வெள்ளைப் பிள்ளை என்பார் கொண்டு வந்து பெருமாள்
திருவீதி எழும்போது அவர்க்கெதிரே சமர்ப்பிப்பார். ஆண்டுதோறும்
நடைபெறும் இந்நிகழ்ச்சி கதிர் அலங்காரம் என்ற பெயரில் விசேடமாகக்
கொண்டாடப்படுகிறது.
16) திருவரங்கனின் கட்டளைப்படி ஆழ்வார் திருநகரியிலிருந்து
நம்மாழ்வாரை, மதுரகவியாழ்வார் இங்கு கொணர்ந்து சேர்த்தார். நம்மாழ்வார்
இங்கு வந்து எழுந்தருளியுள்ள இடம் இன்றும் ஒரு சந்தியா மடம் போல்
காட்சி தருகிறது. வைகுண்ட ஏகாதசியின்போது 7வது திருநாளன்று
நம்மாழ்வாருக்கு எதிரில் வந்து பெருமாள் சேவை தருவார். அர்ச்சகர்கள்
தங்கள் கரங்களாலேயே பெருமாளை எழுந்தருளச் செய்யும் இந்நிகழ்ச்சி
“திருக்கைத்தல சேவை” என்னும் பெயரால் நடைபெற்று வருகிறது. வைகுண்ட
ஏகாதசியன்று இங்கு சொர்க்க வாசல் திறப்பது மிகச் சிறப்பான விழாவாகும்.
இந்த பரமபத வாசலில் விரஜா நதி ஓடுவதாக ஐதீஹம்.
17) திருவரங்கனை நேராகக் கை கூப்பி வணங்கிய வண்ணம் உள்ள
மிகப் பெரிய கருடன் இங்கிருப்பதைப் போல் பிரம் மாண்டமான வடிவில்
இந்தியாவிலேயே வேறெங்கும் இல்லையென்று சொல்லலாம். இந்தக்
கருடாழ்வாரின் சன்னதி வாயிலை சுக்ரீவனும், அங்கதனும் காவல் புரிவதாக
ஐதீஹம். பாண்டிய மன்னன் சுந்தரவர்மன் காலத்தில் இது கட்டப்பட்டதாக
இருக்கலாமென்று வரலாற்றாய்வர் பகர்வர். இச்சன்னதிக்கு எதிரே உள்ள பரமன்
மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் பார்ப்பதற்குப் பேரழகு பொருந்தியவை.
இவை தேவராஜன் குறடு என்றும் கூறுவர்.
18) வைணவப் பேரறிஞர்களான பட்டர், வடக்குத் திருவீதிப்பிள்ளை,
பிள்ளை லோகாச்சார்யர், பெரியநம்பி போன்றோரின் அவதார ஸ்தலமிது.
19) இராமானுஜரும், மணவாள மாமுனிகளும் இங்கு நிகழ்த்திய
உபன்யாசங்களை கூட்டமாக அமர்ந்து சீடர்கள் கேட்கும் வண்ணம்
தீட்டப்பட்டுள்ள சிற்பங்கள் நம் சிந்தையை எங்கோ கொண்டு செல்கிறது.
20) பாதுஹாஸ ஹஸ்ரம் என்ற உயர்ந்த காவியம் ஸ்ரீநிகாமநந்த
தேசிகனால் இப்பெருமாள் மீது பாடப்பட்டதாகும்.
21) இக்கோவிலின் நான்காவது திருச்சுற்றில் தன்வந்திரி
சன்னிதிக்குவடபுரகோபுரவாசலின் பாறையில் 5 குழிகள் உண்டு.
இவ்விடத்திற்கு மூன்று வாசல்கள் வழி வரமுடியுமாதலால் இதற்கு ஐந்து குழி
மூன்று வாசல் என்பது பெயர். இங்கு தாயார் அரங்கன் வருகிறாராவென்று
இந்த ஐந்து குழிகளிலும் தன் கைவிரல்களை வைத்து மூன்று வாசல்கள்
வழியாகவும் பார்ப்பாராம்
இத்தலம் பற்றிய சிறப்புக்களைத் தொகுத்து தனி நூலொன்றே எழுதி
விடலாம். சிலவற்றை மட்டும் இங்கு காண்போம்.
1) திருமகள் தினமும் வந்து பூஜித்துச் செல்லும் இத்தலம் இராமாயண
காலத்தோடு தொடர்பு கொண்டு இந்தியாவின் தேசியத்திற்கு மதமும் ஒரு
காரணம் என்பதைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
2) சிலப்பதிகாரத்தில் இத்தலம் கீழ்க்கண்டவாறு குறிக்கப்படுகிறது.
விரிந்த அலைகளோடு கூடிய மிகப்பெரிய காவிரியாற்றின் இடைக்குறையில்,
திருமகள் விரும்பி உறையும் மார்பை உடையவனும், நீலநிறம்
கொண்டவனுமாகிய திருமால் ஆயிரம் தலைகளுடையவனுமாகிய ஆதிசேடன்
என்னும் சிறந்த பாம்பனையாகிய பள்ளியணை மீது அழகுறச்சாய்ந்து
கொண்டிருக்கும் தன்மை நீல நிறமுடைய ஒரு மேகமானது ஒரு பொன்மலையைச் சூழ்ந்து படிந்திருக்கும் பான்மையில் திகழ்கிறது.
| “நீல மேகம் நெடும் பொற்குன்றத்துப் பால் விரிந்து அகலாது படிந்தது போல ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற் பாயற் பள்ளிப் பலர் தொழுதேத்த விரிதிரைக் காவிரி வியன் பெருந்துருத்தி திருவமர்மார்பன் கிடந்த வண்ணம்” என்கிறார் இளங்கோவடிகள். |
செல்வோர் இந்த மணத்தூண்களைத் தழுவி நித்ய சூரிகளாக
விளங்குகின்றனர். (நித்ய சூரி-அழிவில்லாத பேரின்பமயமான சூழ்நிலையில்
எம்பெருமானுக்கு பணிவிடைபுரியும் ஆத்மாக்கள்)இதே போல் இங்குள்ள
கருவறையிலும் இரண்டு மணத்தூண்கள் உள்ளன. இந்த மணத்தூண்களைத்
தழுவிக்கொள்வோர் பரமபதத்து நித்ய சூரியாகும் பாக்கியம் பெறுவர், என்பது
ஐதீஹம். இந்த மணத்தூண்களை பற்றிக்கொண்டு எம்பெருமானை வாழ்த்தும்
நாள் எந்நாளோ என்று குலசேகராழ்வார், மயங்கி நிற்கிறார். இதோ அவரின்
பாடல்,
| “கடியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் மாயோனை மணத்தூனே பற்றி நின்றென் வாயாரா என்று கொலோ வாழ்த்தும் நாளே” |
இங்குதான் அரங்கேற்றினார். இவ்விடம் தாயார் சன்னதிக்கு எதிரே கம்பர்
மண்டபம் என்ற பெயரில் நின்றிலங்குகிறது. கம்பர் தமது இராமாயணத்தில்
இரண்யனை சம்ஹாரம் செய்த வரலாற்றை விளக்குகிறார். இராமாயணத்தில்
இரண்ய வரலாறு வரக்கூடாது இதை ஏற்கமாட்டோம் என அறிஞர் பலரும்
உரைக்கவே, அவ்வாறாயின் எம்பெருமான் திருமுன்பு அரங்கேற்றம்
நடத்துவோம் அவர் ஒப்புக் கொண்டால் அனைவரும் ஏற்றுக் கொள்ள
வேண்டியதுதான், என்று முடிவு கட்டி இவ்விடத்தே வந்து கம்பர் தமது
ராமாயணத்தை அரங்கேற்றம் செய்யும் வேளையில் இச்சன்னதிக்குள்
மேட்டுப்புறத்தில் எழுந்தருளியுள்ள அழகிய சிங்கப் பெருமாள்,
கம்பரின் இராமகாதையை நாம் அங்கீகரித்தோம் என்ற கர்ஜனையுடன்
பெருமுழக்கம் செய்ததாகக் கூறுவர். இந்த மேட்டு அழகிய சிங்கர் கோவில்
5வது திருச்சுற்றுக்குள் 5வது மதிலுக்குள்) உள்ளது.
5) இப்பெருமானுக்கு அழகிய மணவாளன் என்பதும் ஒரு திருநாமம்.
அதாவது இவர் மிகவும் அழகான மாப்பிள்ளை ஆவார். எனவேதான் அழகிய
மணவாளர் ஆனார். ஸ்ரீவில்லிபுத்தூரின் ஆண்டாளையும், உறையூர்
கமலவல்லி நாச்சியாரையும் இவர் அழகான மாப்பிள்ளை திருக்கோலத்தில்
ஏற்றுக் கொண்டார். தான் பேணி வளர்த்த பெண்ணான ஆண்டாளை
இப்பெருமாள் பெண்டுகொண்டு போனதைப் பற்றி பெரியாழ்வார்.
| ஒருமகள் தன்னையுடையேன் உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல் வளர்த்தேன் செங்கண்மால்தான் கொண்டு போனான்பெருமகளாய்க் குடிவாழ்ந்து பெரும்பிள்ளை பெற்ற வசோதை மருமகளைக் கண்டுகந்து மணாட்டுப் புறம் செய்யுங்கொலோ - பெரியாழ்வார் திருமொழி 3-8-4 |
6) ஆழ்வார்கள் பன்னிருவரில் பதினோரு ஆழ்வார்களின்
மங்களாசாசனத்தைப் பெற்ற திவ்யதேசமாகும் இது. 11 ஆழ்வார்கள் 247
பாக்களில் மங்களாசாசனம் பொழிந்த திவ்யதேசம். 108 திவ்யதேசங்களில்
இப்பெருமை வேறெந்த திவ்ய தேசத்திற்கும் இல்லை. 12 ஆழ்வார்களில்
மதுரகவியாழ்வார் வேறொன்றும் நானறியேன் என்று நம்மாழ்வார் ஒருவரை
மட்டுமே மங்களாசாசனம் செய்து உய்ந்தார். இவர் எந்த திவ்ய தேசத்தையும்
பாடவில்லை. திவ்யதேசங்களை மங்களாசாசனம் செய்த ஆழ்வார்கள்
மதுரகவியாழ்வார் தவிர்த்த மீதி 11 ஆழ்வார்கள்தான். இந்த 11
ஆழ்வார்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்டதால் இவர் ஆழ்வார்களுகந்த
எம்பெருமான் என்று போற்றப்படுகிறார்.
7) திருமங்கையாழ்வார் திருவரங்கத்தில் மதில் கட்டினார். திருநறையூர்
எம்பெருமான் மீது திருமடல் பாடியருளினார். தமக்கு மதில் எழுப்பியதால்
சந்தோசமடைந்த அரங்கநாதன் திருமங்கையாழ்வாரை விளித்து தீர்த்தம்,
மாலை,
சடாரி, பரிவட்டம் போன்றன கொடுத்து எமக்கும் மடலுரைக்கலாகாதோ
வென்றாராம். அதற்கு திருமங்கை யாழ்வார் மிகவும் பக்தியோடு வாய்புதைத்து
நின்று மதில் இங்கே மடல் அங்கே என்றாராம்.
8) வைணவ வளர்ச்சிக்கும், வைணவ மறுமலர்ச்சிக்கும் இத்திருவரங்கம்
ஒரு பாசறையாக விளங்கியதென்றால் அது மிகையல்ல. ஆம் முதல்வன்
இவன் என்று இராமானுஜரை அடையாளங்காட்டிய ஆளவந்தார் வைணவத்
தலைமையேற்று இங்கிருந்து ஆற்றிய தொண்டு அளவிடற்கரியது. வ்யாக்யான
சக்ரவர்த்தி என்னும் வைணவக் கடலும், பிள்ளை உலகாசரியன் என்னும்
வைணவ மேதாவியும் இங்கு நெடுங்காலம் தங்கியிருந்து வைணவம்
வளர்த்தனர். ஸ்ரீராமானுஜர் திருவரங்க கோவிலின் நிர்வாகத்தை ஏற்று
ஸ்ரீரங்க ஜீயராக இருந்து திருக்கோவில் நிர்வாக பரிபாலனம் பண்ணி
விசிஷ்டாத்வைதத்தை உலகுக்கு அளித்த இடம். திருவரங்கப்
பெருமாளுக்குரிய ஆபரணங்கள் முதற்கொண்டு அன்றாடம் அரங்கனுக்கு
அணிவிக்க வேண்டிய ஆடைகள், பிரசாதம், விழாக்கால நடைமுறைகள்
போன்றவற்றை முறைப்படுத்தி நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தினார். இதனை
திருவரங்கர் செல்வம் முற்றுந்திருத்தி என்ற அடைமொழியில் குறிப்பார்.
இவ்வொழுக்கு இராமானுஜருக்குப் பின்னால் இஸ்லாமியர்களின் படையெடுப்பு
வரையில் பெரிதும் போற்றிப் பாதுகாக்கப்பட்டன.
9) திவ்யதேசங்களில் தமிழ்ப்பாசுரங்களை இசையோடு இசைத்து முன்
செல்ல, அதனைச் செவிமடுத்தவண்ணம் பெருமாள் பின்னே வர, தமிழ் முன்
செலத்திருமால் பின்வர என்று தமிழ் பிரபந்தங்கட்கு முன்னுரிமை கொடுத்து
சீர்திருத்தம் செய்து இராமானுஜர் இங்கு நெடுங்காலம் இருந்தார். இங்கு
நடந்த இராமானுஜ வைபவங்களைப் பற்றி பெரிய நூலொன்றே யாத்து
விடலாம். இறுதியில் இராமானுஜர் திருநாடு (மோட்சம்) அடைந்ததும்
ரங்கநாதனே அவரை வஸந்த மண்டபத்தில் வைக்குமாறு பணிக்க இன்றும்
அவரது திருமேனியை தரிசிக்கும் இத்தகைய கீர்த்தி வேறெந்த
திவ்யதேசத்திலும் இல்லை.
10) இங்கு எல்லாமே பெரியவைகள். ஆம் கோவில் பெரிது.
இராமபிரானே நமக்குப் பெருமாள் ஆவார். அவரால் தொழப்பட்ட இந்த
ரங்கநாதன் பெரிய பெருமாள். கோவிலும் பெரிது. அதனால் பெரிய கோவில் ஆயிற்று. 7 மதில்களும்,
எண்ணற்ற மண்டபங்களும் பெரிது. இதற்குச் சிகரம் வைத்தாற்போல்
இத்தலத்தின் கோபுரம் ஆசியாவிலேயே பெரிது. இங்கு எழுந்தருளியுள்ள
கருடன் மிகப்பெரியவர். இங்கிருந்த ஜீயரும் பெரிய ஜீயர் உரையாசிரியர்,
ஆச்சான்பிள்ளையோ பெரியவாச்சான் பிள்ளை. திருமதில்கள் பெரிது.
இங்கிருந்த ஆச்சார்யார் நம்பிகளின் திருநாமமோ பெரிய நம்பி. தாயாருக்கு
பெரிய பிராட்டி என்பது பெயர் இங்கு செய்யப்படும் தளிகைக்கு பெரிய
அவசரம் என்று பெயர். இங்குள்ள வாத்யத்திற்கு பெரிய மேளம் என்று
பெயர். இங்கு தயாரிக்கப்படும் பட்சணங்கட்குப் பெரிய திருப்பணியாரங்கள்
என்று பெயர். ஆண்டாளை வளர்த்தெடுத்து அரங்கனுக்கு மணமுடித்துக்
கொடுத்து மாமனார் ஸ்தானம் வகிக்கும் ஆழ்வாரோ பெரிய ஆழ்வார்.
இரண்டாகப்பிரிந்து ஓடும் காவிரியும், கொள்ளிடமும் தமிழ்நாட்டிலேயே
பெரிய நதிகள். ஆழ்வார்களின் மங்களாசாசனங்களோ பெரிய
மங்களாசாசனங்கள். ஆம் 108 திவ்ய தேசங்களில் 11 ஆழ்வார்களால் 247
பாக்களால் பெரிய மங்களாசாசனம் பெற்றவர் இப்பெருமாள். இராமாயண
காலத்திற்கும் முற்பட்டு, இப்பூமிக்கு வந்த பெருமாள் இவரென்றால் இவரின்
தொன்மை பற்றி ஆராய்வது பெரிய ஆய்வு. அப்பேற்பட்ட தொன்மையான
பெருமாள் தமிழகத்தில் இங்கு வந்து பள்ளி கொள்ள விரும்பினாரென்றால்
அது பெரிய விஷயம். அம்மம்மா இங்கு எல்லாமே பெரியவைகள்.
11) திருப்பாணாழ்வார் தாம் தாழ்குலத்தில் பிறந்தோம் என்பதற்காக
திருவரங்கத்திற்கு உட்செல்ல மனம் கூசி தினந்தோறும் தென்
திருக்காவேரியின் கரையிலிருந்து திருவரங்கனை நோக்கிப் பக்திப்
பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார். ஒருநாள் திருவரங்கப்பனுக்கு
ஆராதனை புரியும் லோகசாரங்க முனிவர் என்பர் தென் காவிரியில்
திருவரங்கநாதனின் திருமஞ்சணத்திற்கு காவிரித் தண்ணீரை முகந்து கொண்டு
செல்ல வந்து கொண்டிருக்கும் போது தென் காவிரிக் கரைமீது நின்று
கொண்டு திருப்பாணாழ்வார் மெய்மறந்து பாடிக்கொண்டிருந்தார். இவரைக்
கண்ட லோகசாரங்க முனிவர் கையை தட்டி ஏ, பாணனே அப்பால் செல்க
என்றுகூறினாராம். தம்மை மறந்த நிலையில் எம்பெருமானிடம் ஈடுபட்டிருந்த
திருப்பாணரின் செவிகளில் கையொலி சத்தம் கேட்க வில்லை. தன்
நிலையினின்றும் பிறழாது மனமுருகி பாடிக் கொண்டேயிருந்தார்.
இதைக்கண்ட லோகசாரங்கர் ஒருசிறு கல்லை எடுத்து பாணர் மீது வீசவே
அது அவர் நெற்றியில் பட்டு இரத்தம் பீறிட்டது. நிலையுணர்ந்த பாணர்
நடுநடுங்கி ஒதுங்கி நின்று லோக சாரங்கருக்கு வழிவிடுத்தார். லோகசாரங்கர்
தீர்த்தம் முகர்ந்துகொண்டு திருவரங்கப்பன் முன் வந்து நின்றார். என்ன
ஆச்சர்யம் திருவரங்கனின் நெற்றியினின்றும் இரத்தம் வழிந்து கொண்டு தான்
இருந்தது. செய்வதறியாது திகைத்து அனைவரும் கூடி இந்த ஆச்சர்யத்தை
கண்ணுற்று வகையறியாது நின்றனர். மனம் நொந்து மயங்கிய நிலையில்
துயில்கொண்ட லோகசாரங்கர் கனவில் வந்த அரங்கன் பாணரைத்
துன்புறுத்தியது தவறென்றும், நும் போன்றே அவரும் தொண்டரன்றோ, நீர்
சென்று உம் தோள் மீது அவரைச் சுமந்து வாரும் என்று பணித்தார்.
மறுநாள் காலையில் லோகசாரங்க முனிவரும், மற்றையோர்களும்
தென்திருக்காவேரி செல்ல தம்மை மறந்து எம்பெருமான் மீது மையல்கொண்டு
பாடல்கள் இசைத்துக் கொண்டிருந்த திருப்பாணரை வணங்கி, அவரிடம்
பெருமாளின் திருவுளக்குறிப்பை தெரிவித்து தம்தோள் மீது ஏற்றிக்
கொணர்ந்து திருவரங்கர் முன் விடுத்தனர். திருவரங்கநாதனைக் கண்குளிரக்
கண்ட திருப்பாணாழ்வார் அவரது திருமுகம், கண், வாய், செவி, திருவுந்திக்
கமலம், ஆகியவற்றின் பேரழகில் மயங்கி அமலனாதிப்பிரான்
எனத்தொடங்கும் 10 பாசுரங்களை வழங்கி திருவரங்கன் திருவடிக்கீழ் புகுந்து
மறைந்தார். எம்பெருமானின் அடியார்கள் எக்குலத்தவராயினும் சமமே என்று
பறைசாற்றும் சாதி சமய பேதமற்ற வைணவம் திருவரங்கத்திலே காலூன்றி
எத்திக்கும் பரவ இவ்வரங்கனே வித்திட்டார்.
12) தொண்டரடிப் பொடியாழ்வார் திருவரங்கத்திற்கு அருகாமையில்
ஒரு நந்தவனம் அமைத்து தினந்தோறும் திருவரங்க நாதனுக்கு பூமாலையும்
பாமாலையும் சமர்ப்பித்து வந்தார். திருமங்கையாழ்வார் திருவரங்கத்திற்கு
மதில்கட்டும் சமயம் தொண்டரடிப்பொடியாழ்வாரின் நந்தவனம் குறுக்கிட்டது.
எனவே நந்தவனத்தை
ஒதுக்கிவிட்டு திருமதில் வளைத்தார். இஃதறிந்த தொண்டரடிப்
பொடியாழ்வார் மலர் கொய்யும்போது தமது ஆயுதத்திற்கு திருமங்கையின்
பட்டப் பெயர்களுள் ஒன்றான “அருள்மாரி” என்னும் பெயரைச் சூட்டி
மகிழ்ந்தார்.
13) திருவரங்கத்தில் நடைபெறும் விழாக்களில் மிகவும் ரசனை
பொருந்திய ஒரு நிகழ்ச்சியை இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது. பங்குனி
மாதம் நடைபெறும் திருவிழாவில் உற்சவத்தின் 6வது தினத்தில் திருவரங்கன்
உறையூர் சென்று கமலவல்லி நாச்சியாரைக் கடிமணம் புரிந்து கொள்கிறார்.
பிறகு 9வது தினத்தில் மீண்டும் ஸ்ரீரங்க நாச்சியாரைக் காண ஸ்ரீரங்கம்
திரும்புவார். மூன்று நாட்களாக உறையூர் செல்வியோடு இருந்துவிட்டு
வந்ததையெண்ணி ஸ்ரீரங்க நாச்சியார் பிணக்கு கொண்டு என்னைப் பார்க்க
வரக்கூடாது என்று திருக்கதவும் சாத்துவாள். இந்தப் பிணக்கிற்கு “ப்ரணய
கலஹம்” என்று பெயர். இந்தப் பிணக்கைத் தீர்த்து வைக்க நம்மாழ்வார்
வந்து சமாதானம் செய்துவைப்பார். அதன்பின் இருவரும் சமாதானமுற்று ஒரு
சேர்த்தியில் காட்சியளிப்பர். இத்திருநாளன்று தாயாருக்காக வாதிடுபவர்கள்
5வது திருச்சுற்றில் உள்ள பிரதானமான வாசற்கதவை அடைத்து விடுவார்கள்.
அரையர்கள் பெருமாளுக்கும் பிராட்டிக்கும் நடுவராக இருந்து தூது செல்வர்.
அப்போது பழம், பூ, முதலியவற்றை வீசுவதும் (பிராட்டி கோபமுற்று
பெருமாள் மீது வீசிவிட்டு கதவடைத்துக் கொள்வதாக ஐதீஹம்) அரையர்கள்
ஒருவர் மாட்டு ஒருவர் பேசி பிணக்கு தீர்ந்து சமாதானம் ஆகியுள்ளனர்.
என்று தெரிவிப்பர். இதன்பிறகு பெருமாளும் பிராட்டியும் ஒருசேரக்
காட்சியளிப்பர். இதற்கடுத்தநாள் இருவரும் ஒரே ரதத்தில் திருவீதி
உலாவருவர். இந்த ரதத்திற்கும் “கோரதம்” என்று பெயர்.
என்னே அரங்கனின் மாண்பு, ஆழ்வார்களின் பிணைப்பு. ஆம்
நம்மாழ்வார் சமாதானம் செய்து வைக்கிறார். தொண்டரடிப்பொடி திருமாலை
கட்டித் தருகிறார். திருமங்கை மண்டபமும் மதிலும் கட்டித் தருகிறார்.
பெரியாழ்வார் பெண்டு கொடுத்து மாமனாகிறார். ஆண்டாள் மனையாட்டி
ஆகிறாள். திருப்பாணாழ்வார் திருவடிகளில் சேர்த்தியாகிறார். இவர்களுடன் மற்றைய ஆழ்வார்களும் மங்களாசாசனப் பூக்களைச்
சூட்டி மகிழ்கின்றனர். என்னே ஆழ்வார்கட்கும் அரங்கனுக்கும் உள்ள
தொடர்பு.
14) அரையர் சேவை என்பது நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தை ராக
தாளத்தோடு இன்னிசையாய் இசைப்பது. மார்கழி மாதத்து வைகுண்ட
ஏகாதசியின் போது இங்கு அரையர் சேவை நடப்பது செவிகட்கு மட்டுமன்றி
கண்களுக்கும் அருவிருந்து. ஒரு சில திவ்யதேசங்களில் மட்டுமே இந்த
அரையர் சேவை இன்று வழக்கிலிருந்தாலும் திருவரங்கத்து அரையர்
சேவையே மிகச் சிறப்பானதாகும்.
15) இத்தலத்திற்குரிய நிலங்களைக் குத்தகைக்குவிட்டு அதிலிருந்து
அறுவடை செய்து வந்த நெற்கதிர்களை ஆண்டுதோறும் சித்திரைமாதத்தன்று
யானை மீது ஏற்றி வெள்ளைப் பிள்ளை என்பார் கொண்டு வந்து பெருமாள்
திருவீதி எழும்போது அவர்க்கெதிரே சமர்ப்பிப்பார். ஆண்டுதோறும்
நடைபெறும் இந்நிகழ்ச்சி கதிர் அலங்காரம் என்ற பெயரில் விசேடமாகக்
கொண்டாடப்படுகிறது.
16) திருவரங்கனின் கட்டளைப்படி ஆழ்வார் திருநகரியிலிருந்து
நம்மாழ்வாரை, மதுரகவியாழ்வார் இங்கு கொணர்ந்து சேர்த்தார். நம்மாழ்வார்
இங்கு வந்து எழுந்தருளியுள்ள இடம் இன்றும் ஒரு சந்தியா மடம் போல்
காட்சி தருகிறது. வைகுண்ட ஏகாதசியின்போது 7வது திருநாளன்று
நம்மாழ்வாருக்கு எதிரில் வந்து பெருமாள் சேவை தருவார். அர்ச்சகர்கள்
தங்கள் கரங்களாலேயே பெருமாளை எழுந்தருளச் செய்யும் இந்நிகழ்ச்சி
“திருக்கைத்தல சேவை” என்னும் பெயரால் நடைபெற்று வருகிறது. வைகுண்ட
ஏகாதசியன்று இங்கு சொர்க்க வாசல் திறப்பது மிகச் சிறப்பான விழாவாகும்.
இந்த பரமபத வாசலில் விரஜா நதி ஓடுவதாக ஐதீஹம்.
17) திருவரங்கனை நேராகக் கை கூப்பி வணங்கிய வண்ணம் உள்ள
மிகப் பெரிய கருடன் இங்கிருப்பதைப் போல் பிரம் மாண்டமான வடிவில்
இந்தியாவிலேயே வேறெங்கும் இல்லையென்று சொல்லலாம். இந்தக்
கருடாழ்வாரின் சன்னதி வாயிலை சுக்ரீவனும், அங்கதனும் காவல் புரிவதாக
ஐதீஹம். பாண்டிய மன்னன் சுந்தரவர்மன் காலத்தில் இது கட்டப்பட்டதாக
இருக்கலாமென்று வரலாற்றாய்வர் பகர்வர். இச்சன்னதிக்கு எதிரே உள்ள பரமன்
மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் பார்ப்பதற்குப் பேரழகு பொருந்தியவை.
இவை தேவராஜன் குறடு என்றும் கூறுவர்.
18) வைணவப் பேரறிஞர்களான பட்டர், வடக்குத் திருவீதிப்பிள்ளை,
பிள்ளை லோகாச்சார்யர், பெரியநம்பி போன்றோரின் அவதார ஸ்தலமிது.
19) இராமானுஜரும், மணவாள மாமுனிகளும் இங்கு நிகழ்த்திய
உபன்யாசங்களை கூட்டமாக அமர்ந்து சீடர்கள் கேட்கும் வண்ணம்
தீட்டப்பட்டுள்ள சிற்பங்கள் நம் சிந்தையை எங்கோ கொண்டு செல்கிறது.
20) பாதுஹாஸ ஹஸ்ரம் என்ற உயர்ந்த காவியம் ஸ்ரீநிகாமநந்த
தேசிகனால் இப்பெருமாள் மீது பாடப்பட்டதாகும்.
21) இக்கோவிலின் நான்காவது திருச்சுற்றில் தன்வந்திரி
சன்னிதிக்குவடபுரகோபுரவாசலின் பாறையில் 5 குழிகள் உண்டு.
இவ்விடத்திற்கு மூன்று வாசல்கள் வழி வரமுடியுமாதலால் இதற்கு ஐந்து குழி
மூன்று வாசல் என்பது பெயர். இங்கு தாயார் அரங்கன் வருகிறாராவென்று
இந்த ஐந்து குழிகளிலும் தன் கைவிரல்களை வைத்து மூன்று வாசல்கள்
வழியாகவும் பார்ப்பாராம்
Author: SudhaSri
Article Title: திருவரங்கம் - பாகம்- 2
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.