22) திருவரங்கமும் திருமதில்களும் கீழ் ஏழு உலகம், மேல் ஏழு
உலகம் என்பார்கள். எத்தனை உலகங்களோ, யாரே அறிவர் எம்பெருமானின்
லீலைகளை. ஆனால் இந்த திருவரங்கத்திற்கு மட்டும் 7 மதில்கள்.
ஒவ்வொன்றும் ஒரு வரலாற்றுச் சிறப்புக் கொண்டவை. ஒவ்வொரு விதமான
தெய்வாம்சம் கலந்தவை. ஏழு உலகங்கட்கு உண்டான பெயர்களையே இந்த
ஏழு மதில்கட்கு வைத்திருப்பதும், பூலோகத்திலிருந்து ஒவ்வொரு உலகமாக
கடந்து சென்றால் ஏழாவது உலகமாக சத்திய லோகம் இருக்குமோ என்று
எண்ணுவதைப் போல, சத்தியலோகத்திலிருந்தே இந்தப் பெருமாள் வந்ததால்
அந்த சத்திய லோகத்திற்கு வழிகாட்டுவதைப்போல் ஏழு மதில்களில்
முதலாவது மதிலுக்கு பூலோகம் என்றே பெயரிட்டு எம்பெருமான் பள்ளி
கொண்டுள்ள கருவறை மதிலுக்கு சத்தியலோகம் என்றே பெயர்
வைத்திருப்பதும் பெரிய ஆராய்ச்சிக்கு உரிய விஷயமாகும். 7 திருமதில்களை அடைவதற்கு முன்னால் 8வது திருச்சுற்று ஒன்று
தற்போது 7 மதில்களை உள்ளடக்கியதாய் அடைய வளையப்பட்டுள்ளது.
இதற்கு அடைய வளைந்தான் திருச்சுற்று என்று பெயர். சப்த பிரகாரங்கள்
எனப்படும் 7 பிரகாரங்களுக்குள் இது அடங்காது.
இந்த 8வது திருச்சுற்றில் தற்போதுள்ள மிக உயர்ந்த ராயர்கோபுரமான
தெற்கு கோபுரமே இந்தச் திருச்சுற்றின் நுழைவாயிலாகும். இந்த ராயர்
கோபுரம் கிருஷ்ண தேவராயர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகும். கிருஷ்ண
தேவராயர் மிகச் சிறந்த விஷ்ணு பக்தர். வைணவ சம்பிரதாயத்தில் ஈடுபாடு
கொண்ட மாமேதை. இவர் ஒரே சமயத்தில் நாடெங்கும் (அவரது ஆட்சிக்
காலத்தில்) 96 திருக்கோவில்களில் கோபுரம் கட்டும் பணியை
மேற்கொண்டார் என்று கூறுவர். தலைக்கோட்டை யுத்தத்தில் இவர் ஆட்சி
முறியடிக்கப்பட்டதும் பல கோபுரங்கள் பூர்த்தி அடையாமல் பாதியளவிலேயே
நின்று விட்டன.
இவைகள் மொட்டைக் கோபுரம் என்றும் ராயர் கோபுரம் என்றும்
அழைக்கப்பட்டன.
அடைய வளைந்தான் திருச்சுற்றில் பாதியளவில் நின்று போயிருந்த
ராயர் கோபுரத்தில் திருஷ்டிப் பரிகாரத்திற்கென்று முனிக்கு அப்பனான
ஸ்ரீனிவாசனை எழுந்தருளச் செய்திருந்தனர். இந்த ஸ்ரீனிவாசனுக்கு நித்ய
வழிபாடுகளும் நடைபெற்றன. இந்தக் கோபுர வாசலை முனியப்பன் கோட்டை
வாசல் என்றும் அழைத்தனர்.
இந்த ராயர் கோபுரந்தான் இன்றைய இந்தியாவின் பெருமைக்கு சிகரம்
வைத்தாற்போன்று ஆசியாவிலேயே பெரிய கோபுரமாகக் கட்டப்பட்டு
திருப்பொலிவோடு செம்மாந்து நிற்கிறது. இவ்வளவு உயரமான கோபுரம்
வேறெந்த திவ்யதேசத்திலும் இல்லை.
இக்கோபுரத்தைக் கட்டி முடிப்பதற்காகவே ஆந்திராவில் உள்ள ஸ்ரீ
அஹோபில மடத்தின் (சிங்கவேள் குன்றமென்னும் திவ்யதேசம் உள்ள இடம்)
41வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஜீயர் ஸ்வாமிகள், இங்கு வந்து
பன்னெடுங்காலந்தங்கி, பல எதிர்ப்புகளையும், இன்னல்களையும் தாண்டி,
பெரிய பெருமாளுக்கு பெரிய கோபுரத்தை நிர்மாணித்து ஒல்காத் தொல்புகழ்
பெற்றார்
7 வது திருமதில்
இதற்கு பூலோகம் என்று பெயர். இதற்கு ராஜவீதி, மாட மாளிகை வீதி,
சித்திரைத் திருவீதி எனவும் பெயர்கள் உண்டு. இது தற்போது கடைகள்,
வீடுகள், கட்டிடங்கள், அலுவலகங்கள் சூழ ஒரு குறுநகரம் போல் தெரிகிறது.
இதில் ஒரு கண்ணன் சன்னிதி, ஒரு ஆஞ்சநேயர் திருக்கோவில்,
வானமாமலை மண்டபம் ஆகியன உண்டு.
6வது திருமதில்
புவர்லோகம் என்று அழைக்கப்படும் இத்திருச்சுற்று திருவிக்கிரமன்
திருவீதி என்று அழைக்கப்படுகிறது. இது ஜவுளிக்கடைகளும்,
பாத்திரக்கடைகளும் நிறைந்து ஒரு பஜார் மாதிரி அமைந்துள்ளது. இந்த
வீதியில் பெருமாள் திருவாகனங்கள் உலாப்போகும் காரணத்தால் இதற்கு
உள் திருவீதியென்றும் உத்திரவீதி என்றும் பெயர். இதில்தான் யானைகட்டும்
மண்டபம் உள்ளது. ஸ்ரீராமானுஜர் தங்கியிருந்து ஸ்ரீரங்கத்து நிர்வாகத்தைக்
கவனித்த மடம் இதில்தான் உள்ளது. இது இன்றும் ஸ்ரீரங்கநாராயண
ஜீயர்களின் மடம் என்ற பெயரிலேயே வழங்கி தொன்று தொட்டு ஜீயர்கள்
பரிபாலனத்திலேயே இருந்து வருகிறது. அஹோபில மடம், மணவாள
மாமுனிகள் மடம் போன்றனவும் இதில்தான் உள்ளது. மணவாள மாமுனிகள்
தமது அவதார ரகசியத்தை உத்தம நம்பி என்னும் தமது சீடருக்கு இங்குதான்
காட்டியருளினார்.
இம்மடத்தின் தூண்களில் இந்நிகழ்ச்சி செதுக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து
பார்த்தால் 5வது திருச்சுற்றுத்துவக்கத்திலே உள்ள வெள்ளைச் சுதைகளால்
ஆன வெள்ளைக்கோபுரம் பொலிவுடன் தோன்றும்.
5வது திருமதில்
ஸு வர் லோகம் என்று அழைக்கப்படும் இந்த 5வது திருச்சுற்றில்
நுழையும் நுழைவாசலுக்கு நான்முகன் கோட்டை வாசல் என்று பெயர். இதைச்
சோழமன்னன் அகளங்கன் என்பவன் கட்டியதால் அவன் பெயராலேயே
அகளங்கன் திருச்சுற்று என்று அழைக்கப்படுகிறது. இதில் உள்ள ஆண்டாள்
சன்னிதி பேரழகு வாய்ந்ததாகும். பெருமாள் உலா சுற்றி வந்ததும் திருஷ்டி
கழித்து கொள்ளும் பழக்கம் உண்டு. அது இச்சுற்றில் உள்ள ஒரு நாலுகால்
மண்டபத்தில்தான் நடைபெறுகிறது. திருஷ்டி கழிப்பதென்பது ஒரு சிறிய
குடத்தின் மேல் ஒரு சிறு கிண்ணம் வைத்து அதில் கனமான திரியிட்டு
ஏற்றிப் பெருமாளுக்கு எதிரில் ஏற்றியிறக்குவதுபோல் சுற்றுவர். இந்நிகழ்ச்சிக்கு
திருவுந்திக்காப்பு என்று பெயர். இத்திருச்சுற்றில் எட்டுக் கரங்களுடன் கூடின
வரப்பிரசாதியான சக்கரத்தாழ்வார் சன்னதி, பேரழகு பொலியத் தோன்றும்
வேணுகோபால கிருஷ்ணர் சன்னதி போன்றனவும் உண்டு. ஸ்ரீரங்க விலாச
மண்டபம் என்று ஒரு மண்டபமும், வைகாசித் திருவிழா நடைபெறும் வஸந்த
மண்டபமும் தாயார் சன்னதியும் இதில்தான் உள்ளது.
தாயார் சன்னதிக்கு எதிரில்தான் கம்பர் இராமாயணத்தை அரங்கேற்றிய
கம்பர் மண்டபம் உள்ளது. இங்குள்ள மாடக்கோயிலில்தான் மேட்டழகிய
சிங்கர் எனப்படும் நரசிங்கப் பெருமாள் சன்னிதியும் உள்ளது.
ஆயிரங்கால் மண்டபமும் இதில்தான் உள்ளது. இதன் நடுவே உள்ள
திருமாமணி மண்டபத்தில்தான் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியன்று
தொடங்கும் திருவாய்மொழித்திருநாள் உற்சவம் நடைபெறும். அவ்வமயம்
திருவாய் மொழி சேவிப்பதும், அரையர் சேவையும் தெய்வீகமான
நிகழ்ச்சிகளாகும். இராமானுஜரின் திருமேனி வைக்கப்பட்டுள்ள கோவிலும்
இந்த சுற்றுக்குள்தான் உள்ளது. தொண்டரடிப் பொடியாழ்வார்,
திருப்பாணாழ்வார் ஆகியோருக்கும் கூரத்தாழ்வாருக்கும் பிள்ளை
லோகாச்சார்யாருக்கும் இதில்தான் சன்னிதிகள் உள்ளது.
4வது திருமதில்
மஹர்லோகம் எனப்படும் 4வது திருச்சுற்றுக்கு திருமங்கை மன்னன்
சுற்று, ஆலிநாடான் வீதி என்றும் பெயர். இம்மதில் திருமங்கையாழ்வாரால்
கட்டப்பட்டது. இதன் நுழைவாயிலுக்கு கார்த்திகை கோபுர வாசல் என்று
பெயர். இதில்தான் பிரம்மாண்டமான கருடாழ்வார் சன்னிதி உள்ளது.
இதற்கெதிரே உள்ள பரமன் மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் மிக்க
கலை நுணுக்கம் வாய்ந்தவை. இதில் முதலாழ்வார்கள் மூவரின் சன்னிதி,
நம்மாழ்வார் சன்னிதி, திருமழிசையாழ்வார் சன்னதி, திருக்கச்சி நம்பிகள்
சன்னிதி போன்றனவும் உண்டு. மிகச்சிறந்த சந்திர புஷக்ரணியும் இதில் தான்
உள்ளது. பிரசாதம் விற்கும் இடமும் இங்குதான். சொர்க்க வாசல் என்பதும்
இதில் தான். வேறெங்கும் காண்டற்கரிய மருத்துவப் பெருமாளான தன்வந்திரி
சன்னிதியும் இதில்தான் உள்ளது.
3வது திருமதில்
ஜநோலோகம் எனப்படும் இந்த 3வது திருச்சுற்றுக்கு ஆர்யபடர்வாசல்
என்று பெயர். முன்பு ஒரு காலத்தில் ஆர்யர் என்னும் வடநாட்டு
அந்தணர்கள் இவ்வாசலைக் காவல்புரிந்து வந்ததால் இப்பெயர் ஏற்பட்டது.
இதற்கு குலசேகரன் திருச்சுற்று என்றும் பெயர். இந்தச்சுற்றில்தான் தங்கமுலாம் பூசப்பட்ட
துவஜஸ்தம்பம் (கொடிமரம்) உள்ளது. இது 102 தங்கத் தகடுகள் பதிக்கப்பட்ட
கொடிமரம் ஆகும். விஜயநகரத்து மன்னர்களால் இக்கம்பம்
உண்டாக்கப்பட்டதென அறியமுடிகிறது. உள்கோடை மண்டபம், பரமபதவாசல்
டோலோத்ஸ்வ (ஊஞ்சல் உற்சவம்) மண்டபமும் இதில் உண்டு.
2வது திருமதில்
தபோலோகம் எனப்படும் 2வது திருச்சுற்றுக்கு ராஜ மகேந்திரன்
திருச்சுற்று என்பது பெயர். ராஜமகேந்திர சோழனால் இது கட்டப்பட்டது.
இதன் நுழைவாயிலுக்கு நாழிகேட்டான் வாசல் என்பது பெயர். பெருமாள்
இவ்வாசலுக்கு வந்ததும் நாழிகை என்ன என்று கேட்கும் வழக்கம் இருந்ததால்
இப்பெயர் உண்டாயிற்றென்பர். இதில் யாகசாலை, சேனை முதலியார் சன்னிதி,
கண்ணாடி அறை, திருப்பரிவட்டாரங்கள் வைக்குமிடம் ஆகியன உண்டு.
விஜயரங்க சொக்கநாத நாயக்கர் தம் குடும்பத்துடன் நின்றுள்ள காட்சியும்
இத்திருச்சுற்றில்தான் உண்டு. கற்பூரப் படியேத்தம், என்னும் விசேட நிகழ்ச்சி
கார்த்திகை மாதம் கைசிக ஏகாதசியன்று நடைபெறும். இந்நிகழ்ச்சியைக்
காண்பதற்காகவே விஜயரங்க சொக்கநாத நாயக்கர் தமது குடும்பத்துடன்
வந்தாரென்றும் வருவதற்குள் இந்நிகழ்ச்சி முடிந்துவிட்டதால் அடுத்த ஆண்டு
இந்நிகழ்ச்சியைக் காணவேண்டுமென்று ஓராண்டுக்காலம் தம் குடும்பத்துடன்
தங்கிவிட்டாரென்றும் கூறுவர். ராஜகம்பீரமான தோற்றத்துடன் உள்ள
இவர்களின் சிற்பங்கள் காண்பதற்கும் வசீகரமானவையாகும். ஸ்ரீசைலேச
தனியனை பெருமாளால் குழந்தைவடிவில் மொழியப்பட்டது. இந்தத்
திருச்சுற்றில்தான். இதில் உள்ள கிளி மண்டபம் திருமங்கையாழ்வாரால்
கட்டப்பட்டதென்பர். துலுக்க நாச்சியார் சன்னிதியும் இத்திருச்சுற்றில்தான்
உண்டு.
முதல் திருமதில்
சத்தியலோகம் எனப்படும் இந்த முதல்ச் சுற்றை உண்டாக்கியவன்
சோழமன்னன் தர்மவர்மன் என்று அறியப்படுகிறது. இதன் நுழைவாயிலுக்குத்
திருஅணுக்கன் திருவாசல் என்பது பெயர். கருவறை (மூலஸ்தானம்)
அமைந்துள்ளது இந்தச் சுற்றில்தான். பேரழகுடன் பெருமாள் சயனித்திருப்பது
இந்த சத்திய லோகத்தில் தான். கருவறைக்கு முன் உள்ள மண்டபத்திற்கு
ரங்கமண்டபம் என்று பெயர். இதை காயத்ரி மண்டபம் என்றும் சொல்வர்.
இதில் 24 தூண்கள் உண்டு காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களாக
இதைக்கூறுவர்.

Author: siteadmin
Article Title: திருவரங்கம் - பாகம் - 3
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.