• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

தோற்ற மயக்கங்கள் 12

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
66
289
83
Chennai
தோற்ற மயக்கங்கள் 12 (Pre Final Episode)

ரே நேர்கோட்டில் ஒடுவதற்குத் தயார் நிலையில் நின்ற ஆறு பெண்களும் விசில் சத்தம் கேட்டதும், ஒற்றை வில்லில் இருந்து புறப்பட்ட ஆறு அம்புகளைப்போல் சீறிப்பாய்ந்து, ஓட்டம் முடிந்ததும் அதில் ஒரு பெண் ஒரு பாட்டிலில் இருந்த பானத்தை அண்ணார்ந்து வாயில் சரித்துக் கொண்டாள். ஒரு பையன் டைவிங் போர்டிலிருந்து ஐந்து முறை குட்டிக்கரணம் போட்டு ஸ்விம்மிங் பூல் தண்ணீரில் மல்லார்ந்து விழுந்து அப்படியே பட்டர்ஃபிளை ஸ்ட்ரோக்கில் நீந்தினான். இரண்டு சிறுமிகள் தரையிலேயே ஓடி வந்து மூன்று முறை சுழன்று பின் குதித்துக் கைகளை விரித்து நேராக நின்றனர், பாரின் மீது குதித்து, பின் நின்று, வௌவாலைப் போலத் தொங்கிச் சுற்றினர். பின்னணியில் புல்லாங்குழலில் ஜெய ஜெய ஜெய ஜெய ஹே! ஒலிக்க, பாரத நாட்டின் தேசியக்கொடி இறங்குவதும் ஒரு குரல் “........” ஃப்ரம் ஈன்ட்யா (from India) என, வெற்றி
எண் மேடையில் ஏறி நின்று இந்திய வீரர்களும் வீராங்கனைகளும் பதக்கங்களைப் பெற்றுக்கொள்ள, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் பெயர் அவுட் ஆஃப் ஃபோகஸில் தொலைவாகத் தெரிய, வீரர்களின் ஷூ, ஜெர்ஸி, அந்தப்பெண்ணின் கையில் இருந்த வாட்டர்பாட்டில் என பளிச்சிட்ட அந்தப் பன்னாட்டு மருந்து நிறுவனத்தின் பெயர் லோகோ, கடைசியாகத் திரையின் வலது மூலையில் தெரிய, ‘சக் தே இன்டியா!’ என்ற எழுத்துகளுடன் விளம்பரம் முற்றுப் பெற்றது.

முப்பதே விநாடிகள்தான்! எத்தனை எழுச்சியும் உத்வேகமும் கொடுத்ததோ, அதே அளவு அந்த நிறுவனத்தின் பெயர் மனதில் பதியும் வண்ணம் இருந்தது விளம்பரம்.

அபர்ணா கணவனிடம் “பக்கா சர்ரகேட் ஆட்… இந்தக் கம்பெனி ஒன்னும் வாட்டர் பாட்டிலும், ஷூவும் விக்கல. ஆனா அவங்க பேரையும் லோகோவையும் மனசுல பதிய வைக்கற மாதிரியான விளம்பர யுக்தி. நாட்டுக்காக சர்வதேச விளையாட்டுப் போட்டிகள்ல கலந்துக்கறவங்களே பயன் படுத்தறாங்கன்னா அது எவ்வளவு தரமானதா இருக்கணும்னு நம்பிக்கை தர்றதும், அதை உபயோகிக்க தூண்டறதும்… பர்ஃபெக்ட்!”

“அதெப்படி அப்பு… மருந்து கம்பெனியோட பேர் தெரிஞ்சதால பெருசா என்ன ஆயிடும்?”

“கம்பெனி லாவும்
பிஸினஸ் மேனேஜ்மென்ட்டும் படிச்ச உங்களுக்குத் தெரியாததா… ஒரே கம்பெனி செய்யற ரெண்டு வெவ்வேற பென்சிலுக்கே பேரையும் நிறத்தையும் வெச்சு எது நல்லா எழுதும்னு சண்டை போடற குழந்தைங்க இல்லையா? எல்லாம் ஒரு கவன ஈர்ப்பு… வியாபார உத்திதான்”

“ம்…. செம விளக்கம் போ”

“இதெல்லாம் ஆன்லைன் அட்வர்டைஸிங்க்கு ஸ்டார்ட் அப் ஆரம்பிச்சதுல கத்துண்டதுதான்”
என்றவள் அமைதியாகி விட்டாள்.

இது இங்கே, இதோடு முடியப்போவதில்லை. இந்த ஸ்பான்ஸர்ஷிப் எந்த திமிங்கிலத்தையோ பிடிக்கவென தூண்டிலில் மாட்டப்பட்ட ஒரு மீன் துண்டு மட்டுமே என்றது அவளது உள்ளுணர்வு.

ஷூட்டிங் எடுப்பதற்கு ஆன நேரம் கூட விளம்பரத்திற்கான ஒளிபரப்புக்கு முன்னான பல்வேறு தர மற்றும் தணிக்கை சான்றிதழ் பெறத் தேவைப்படவில்லை. பணம் பாயும் வேகம்!

விளம்பரம் எடுக்கப்பட்டபோதே அதன் சில பகுதிகளும், அகாடமியின் படங்களும் சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் மற்றும் ஷார்ட்ஸாக வைரலாகி இருந்தது.

போன வாரமே ஊர் திரும்பி இருந்த புருஷோத்தமன், இன்று அன்புநேசனை நேரில் வரச்சொல்லி இருந்தார். ஐயாரப்பன் மனைவி மக்களுடன் வெகு பதமாக அலைபேசுகிறானே தவிர, நேற்று வரை ஆளைக் காணோம். ‘அந்த’ வீட்டுப்பக்கம் நடமாடுகிறானா என்று அறிய யாரிடமும் கேட்க இவனுக்கு விருப்பமில்லை. நடந்ததைப் பற்றித் தந்தையிடம் பேசுவது திருடனிடமே திருட்டை விசாரிப்பது போல என்று நினைக்க, வெறுப்பாக இருந்தது.

மீண்டும் அழைப்பு வர… ‘அப்பா’

“ம்ப்ச்… வரேன்னு சொல்லு” என்று சலித்தவனின் கன்னத்தைத் தாங்கிய அபர்ணாவிடம் வேகமாக “என்ன?” எனவும், அவள் கையை விலக்கிக்கொள்ள, “அதில்லடீ, இவ வேற…” என்று அவள் கையை இழுத்து முகத்தில் பொத்திக்கொண்டான்.

சரியோ தப்போ, எப்போதும் தன்னிச்சையாக முடிவெடுத்து, செயல்படுத்தி, அவள் கேட்டாலும் தான் விரும்புவதை , விரும்பினால் மட்டுமே அவளிடம் தெரிவிப்பவனுக்கு, சமீபமாக வில்லங்கமான தன் குடும்பம், அகாடமி மற்றும் அரசியல் விஷயங்களை வழக்கத்தை விட அதிகம் பகிர்வதும் அவள் ஆறுதலும் விளக்கமும் தருவது இதமாகவும் அதே நேரம் இம்சையாகவும் இருந்தது.

“ வீட்டுக்குதானே போறேன், நீயும் வா, போய் கிளம்பு”

“நானா?”

“என்ன நானா, தனியா வீட்ல இருந்து என்ன பண்ணப்போற?” என்றவன், கப்போர்டைத் திறந்து நீல நிற சந்தேரி சில்க் புடவையை உருவி அவள் மீது போட்டு “சீக்கிரம்”

அவன் உருட்டியதில் கலைந்த புடவை அடுக்கை ஆயாசமாகப் பார்த்தவளிடம் “எனி ஹெல்ப்?” என்றான் கிண்டலாக.

*****************

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் உயர்குழுக் கூட்டத்திற்குச் செல்லவிருக்கும் மகனை ஆர்ப்பாட்டமாக வரவேற்றார் புருஷோத்தமன்.

தன் முயற்சி, சாதனை என எதுவுமின்றி, என்னதான் கன்வீனர் என்றாலும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த என்னை எப்படி என்ற கேள்வி உள்ளிருக்க, அன்புநேசன் எதனாலோ தான் செலுத்தப்படுவது போல் உணர்ந்தான்.

தந்தையும் மகனும் தலைவர், தேர்தல், கட்சி எனப் பேசத்தொடங்கினர். செய்வதறியாது முழித்த அபர்ணா உள்ளே உறங்கிக்கொண்டிருந்த மாமியார் துளசி எழுந்து வரவும், மாமனார் கேட்ட ஃபில்டர் காஃபியை போடும்
சாக்கில் சமையலறையைத் தேடிப் போனாள்.

இரண்டு தொழில்முறை சமையல் கலைஞர்கள் முழுநேரப் பணியில் இருக்கும் இடத்தில் அவளுக்கென்ன வேலை? சமையல் சஞ்சீவிடம் ஆர்டர் கொடுத்துவிட்டுப் பின்புறத் தோட்டத்திற்குச் சென்றாள். முன்பக்கம் மா மரங்கள் இருக்க, இரண்டு புறமும் தென்னையும், பின்னால் கொய்யா, அரைநெல்லிக்காய், சப்போட்டா, எலுமிச்சை மரங்களும் மருதாணியும் மற்ற பூச்செடிகளும் நிறைந்திருக்க, அடுக்குமல்லி மணத்தது.

இரண்டைப் பறிக்கவுமே முன்பக்கம் கார்வந்து நிற்கும் ஓசை கேட்டது. எட்டிப்பார்க்க, பொன்னியும் ஐயாரப்பனும்!

‘பெருமாளே, இந்த சீன்ல என்னை ஏன்டா கோர்த்து விடற?’

சஞ்சீவ் “மேடம், காஃபி ரெடி” என அழைத்தான்.

“அக்கா, மாமாக்கு?”

“சேர்த்துதான் மேடம் கலந்திருக்கேன்”

பறித்த பூவை வீணாக்க மனமின்றித் தலையில் சொருகிக்கொண்ட அபர்ணா சாப்பாட்டு அறையில் இருந்த டைனிங் மேஜை மேல் ட்ரேயில் இருந்த காஃபி கோப்பைகளை கீழே விழாதபடி சமநிலையில் வைத்து, ஹாலுக்குள் பிரவேசிக்கும் முன் வெளியே பார்த்தாள்.

பொன்னி அன்று இருந்த சோகம், கோபம், ஆத்திரத்தின் சாயல் எள்ளளவும் இன்றி, வழக்கமான நிமிர்வுடன் இருக்க, ஐயாரப்பன் பால் வடியும் முகத்துடன் படு பவ்யமாக அமர்ந்திருந்தான். புருஷோத்தமன் அவர்களிடம் பேசியபடி இருக்க, அலட்சியமான தோரணையுடன் காணப்பட்ட அன்புநேசன் உண்மையில் ஆழ்ந்த யோசனையில் இருப்பது புலப்பட்டது. இவள் ட்ரேயைக் கையில் எடுக்க,

துளசி “அன்பு, உள்ள வாடா” என, சட்டென எழுந்த அவர்கள் நால்வரும் மாமனார்- மாமியாரின் அறையை நோக்கி நகரவும், அங்கே போவதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் தயங்கி நின்றவளை அறைக்குள் நுழையும் முன் அதிசயமாகத் திரும்பிப் பார்த்த அன்புநேசன், ‘வா’ என்று தலையசைத்தான்.

‘கொஞ்ச நாளாவே இவருக்கு என்னமோ ஆயிடுத்து!’

******************

பணம் அதிகமாக, ஆக உணவும் எளிமையான ஆடம்பரத்தைப் பறைசாற்றுகிறது. வெள்ளரி, கேரட், மூன்று நிற குடைமிளகாய், ஆப்பிள், மாதுளை, மாங்காய், வேகவைத்த வெள்ளைக் கொண்டைக்கடலை, பிரட் க்ரோட்டனஸ் (Bread croutons) கொத்தமல்லி, பச்சை மிளகாய், மிளகுத்தூள், உப்பு, எலுமிச்சை சாறு கலந்து, பார்க்க சாதாரண சாலட்தானே என்று தோன்றும் அந்த காய்கறி மற்றும் பழக் கலவையின் உட்பொருள்களை வாங்கினால் மட்டுமே அதன் விலைமதிப்பு தெரியும்!

அதைத் தவிர, புதினா, கொத்தமல்லி சட்னியுடன்
ஆளுக்கு இரண்டிரண்டு இட்லி மட்டுமே. பெரியவர்களுக்கு கட்டப்பட்ட பல் என்பதால் வெறும் இட்லிதான். சாலடுடன் எழுந்துவிட்ட அன்புநேசனுக்கு நிச்சயம் பசிக்கும்.

இரவு உணவுக்குப் பின் அங்கிருந்து புறப்பட்ட இருவரும் அமைதியாக வீடு வந்தனர்.

புராணங்களில் வரும் தேவர்கள் தங்கள் மனம்போனபடி நடந்துகொள்வதைப் போல்தான் கயவர்களும் என்கிறது வள்ளுவம்.

பொன்னி கணவனைப் பற்றிப் புகார் கூறியதுமே அபர்ணாவின் மனதில் வந்தது இதுதான்.

கிழிந்த சட்டையை கோட் போட்டு மறைப்பதைப் போல், ஐயாரப்பனின் இரண்டாவது கிளை, புருஷோத்தமனால் வெகு சுலபமாக இயல்பாக்கப்பட்டு, அவட்சியப்படுத்தப்பட்டு, அது ஒரு விஷயமே இல்லை என்பதாகப் புறந்தள்ளப்பட்டதில் காபியுடன் கயமையையும் விழுங்கினர்.

“பொன்னி, விடும்மா… உன் கிட்ட மாரியாதையும் அன்பும் இருக்கறதாலதான் இத்தனை நாள் உனக்குத் தெரியவரலை. நான் சொல்றது சரிதானே ஐயாரப்பன்?”

அவன் பூம்பூம்மாடு போல் தலையை ஆட்டினான்.

“வெறும் பொம்பளை விவகாரம்னாலாவது தொடுப்பை வெட்டிவிடலாம். பத்து வயசுல பையன் வேற இருக்கான்… இந்த விஷயம் இதுவரை யாருக்கும் தெரியாது. சண்டை போட்டு பெருசு பண்ணி, இதை நீயே ஊரறிய செய்யப் போறியா பொன்னி? ஊருக்கே தெரிஞ்ச புருஷோத்தமனோட மகளும் மருமகனும் சண்டை போட்டு அத்துக்கிட்டு நின்னா நல்லாவா இருக்கும்?”

“...”

“உனக்கு ரெண்டுமே பொம்பளை பசங்க. பெரிய பாப்பா இப்பதான் படிப்பை முடிச்சிருக்கா. இன்னும் வரன் பார்க்கணும் . கல்யாணம் பண்ணனும். எத்தனை இருக்கு?”

“...”

“என்னதான் தாத்தா, மாமாவெல்லாம் இருக்கோம்னாலும், நாளைக்கு அப்பா இல்லாம உன்னால சபைல நிக்க முடியுமா சொல்லு?”

“அப்பா…”

“இப்ப சண்டை போட்டு டைவோர்ஸ் வாங்கித் தனியா நிக்கற வயசோ, இல்ல இன்னோரு கல்யாணம் கட்டிக்கற நிலமைலயோ நீ இல்ல”

“அப்பாஆஆ…!”

“அவசரப்படாத பொன்னி. பொறுமையா யோசி. நீ என்ன முடிவு செஞ்சாலும் எனக்கு சரிதான். உனக்கு எப்பவும் அப்பா நான் இருக்கேன் மா”

பொன்னி உணர்ச்சிவசப்பட்டுக் கண்கலங்க, புருஷோத்தமன் தொடர்ந்தார்.

“தேர்தல் வரப்போகுது. இந்தமுறை மாப்பிள்ளைக்கு ஸீட் கேட்கலாம்னு இருக்கேன். நாளைக்கே அவர் என்னை மாதிரி மந்திரியா கூட ஆகலாம். இப்ப இதையெல்லாம் பேசித் தேரை இழுத்து தெருவுல விட்டீன்னா, நம்ம கௌரவம் என்னாறது?”

“அதுக்காக…”

“இரும்மா… நான்பேசி முடிச்சிடறேன். எனக்குத் தெரிஞ்சு மாப்பிள்ளை ஏதோ ஒரு இக்கட்டான சூழல்லதான் இதுல மாட்டி இருக்கணும். மத்தபடி, ஒரு வார்த்தை பல்லு மேல நாக்கை போட்டு அவரைக் குறை சொல்ல முடியுமா சொல்லு?”

“...”

“இதுக்கு மேல நீங்கதான் சொல்லணும் ஐயாரப்பன்”

“நீங்களேதான் சரியா சொல்லிட்டீங்களே மாமா. ஏதோ என் நேரம்… புத்தி கெட்டுப் போயிட்டேன். முழுசா நிறுத்த முடியாத போனாலும் போக்குவரத்தைக் கொறைச்சுக்கறேன் மாமா. அவனும் எம் மகன்தானே?”

பொன்னி “போக வர இருக்க நான் என்ன கெஸ்ட் ஹவுஸாப்பா நடத்துறேன். நாமதான் யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கோம். இப்பவே எத்தனை பேருக்குத் தெரியுமோ?”

“பொன்னம்மா…”

‘தழுதழுக்கும் ஐயாரப்பனுக்கு ஒரு ஆஸ்கர் பார்ஸல்!’ என்றது அபர்ணாவின் மைன்ட் வாய்ஸ்.

அவனோ அசராது தொடர்ந்தான்…

“சந்தனமும் சாக்கடையும் ஒண்ணா மாமா? என் பொன்னியோட கால் தூசுக்கு வருவாளா அந்த ஜமுனா? அவளை எங்க, எப்படி வைக்கணும்னு எனக்குத் தெரியாதா மாமா?”

‘அதானே, ஈஸிஆரில் ட்யூப்ளக்ஸ் வீட்டில் வைக்கணும்!’ - இது அந்தப் பெண்ணின் அட்ரஸ் தெரிந்து, வீட்டைக் கண்டுபிடித்த அன்புநேசனின் மை. வா.

தன் குட்டை வெளிப்படுத்தாத மாப்பிள்ளையைத் தாங்கிப் பிடித்த கணவர் புருஷோத்தமன் மீது கோபம் வந்தாலும், நடைமுறை கருதி துளசி அமைதி காக்க, பொன்னி வந்தபோது இருந்த நிமிர்வு போய், சிந்தனையில் தொலைந்திருந்தாள்.

பிறகு, உணவின்போது பொதுவான சில பேச்சுக்களுடன் பொன்னி தம்பதிக்கு முன்பே அங்கிருந்து புறப்பட்டுவிட்டனர்.

அபர்ணா எதிர்பார்த்தது போலவே, வீட்டிற்குள் நுழைந்ததுமே அன்புநேசன் “பசிக்குதுடீ, ஏதாவது செய், ப்ளீஸ். பச்சையா திங்க நான் என்ன மாடா, இந்த அம்மாக்கும் அறிவில்ல. எனக்கு எப்டிடீ ரெண்டு இட்லி பத்தும்?”

“உப்புமா…”

“உதை விழும்”

காவேரியை அழைத்து ஆப்பம் செய்யச்சொல்லித் தேங்காய் சட்னியுடன் எடுத்து வந்தாள்.

“நீயும் சாப்பிடு. அப்புறம் உன் பையன் வரும்போதே ‘ஏம்மா ஒல்லியாயிட்ட, பார்க்க மாட்டீங்களாப்பான்ன்னு என்னைத்தான் கேப்பான்‘

உண்மைதான். முதல்முறை மகனை ஹாஸ்டலுக்கு அனுப்பிவிட்டு, அந்த ஏக்கத்திலேயே கணிசமாக இளைத்திருந்தவளைக் கண்ட அருள்மொழி ‘நீ ஏன் அம்மாவைக் கவனிக்கலை?’ என்று தந்தையைக் கேட்டான்தான்.

தொலைக்காட்சியின் வெளிச்சத்தில், அன்புநேசன் “அந்தாளுக்கு என்ன தெனாவட்டு பாத்தியா அப்பு. எல்லாம் இந்த அப்பா கொடுக்கற இடம். உன்னால நான் கெட்டேன்… என்னால நீ கெட்டேன்ற மாதிரி ஆகிப்போச்சு. சல்லிப் பசங்களோட சகவாசம் வெச்சுக்கிட்டா இப்படித்தான். பெத்த பொண்ணுக்கு துரோகம் செஞ்சுட்டு வந்தவனுக்கு கை குடுத்து, காஃபி குடுத்து, கண்ணாடி காட்டி உபசரிக்கறதெல்லாம்… இதுல தப்பிக்க ஐடியா வேற இலவசம். atrocious!”

“...”

“பாவம் அக்கா. அவளோட கொஞ்ச நஞ்ச தைரியத்தையும் இவரே கெடுத்துடுவார் போல”

அபர்ணாவும் அதையேதான் சற்றே மாற்றி நினைத்தாள். உண்மையாகவே ஆதரவு தர, தனக்கென நிற்கத் தயாராக இருந்த அவளது தந்தைக்கு சூழல் சரியில்லை. எல்லா அதிகாரமும் இருந்தும் சுய ஒழுக்கம் கேள்விக்குறியானதில் புருஷோத்தமன் பம்மி விட்டார்.

ஆனாலும் ஒரு தேர்ந்த வக்கீலாக, பக்கா அரசியல்வாதியாக, பேச்சுவார்த்தை, கட்டப்பஞ்சாயத்துகளின் அனுபவஸ்தராக, தெளிவான ஆணாதிக்க சிந்தனையை வெளிப்படுத்தி, மாப்பிள்ளையின் பக்கம் நின்று பேசிய மாமனாரை எண்ண, அபர்ணாவிற்கு ஆச்சரியமாகவும் அசூசையாகவும் இருந்தது.

‘வெற்றியும் பதவியும்தான் எத்தனை பெரிய போதை!’

அபர்ணா “அவர்… ஐயாரப்பன் நிஜமாவே எலக்ஷன்ல நிக்கப் போறாரா?”

அன்புநேசன் “அதுவும் டீல்ல இருக்கோ என்னவோ… மந்திரி ஆவானாம். ம*****வான்”

“...”

**************

புதிதாகத் தைக்கப்பட்ட இரண்டு ஃபுல் சூட், ஒரு பிளேசர், நாலு டை, ஒரு லெதர் ஜாக்கெட்… என ஒரு பெரிய சூட்கேஸ் நிரம்பி வழிந்தது.

போவதென்னவோ ஆறு நாளைக்குதான். ஆனாலும், ஜானவாச மாப்பிள்ளைபோல் ஏகப்பட்ட ஜோடனை.

அபர்ணா இங்கே பேக் செய்து கொண்டிருக்க, அழைப்பு வரவும் “அப்பு, அப்பா வரச்சொல்றாங்க. நான் போய் பார்த்துட்டு வந்துடறேன்” என்று போயிருக்கிறான்.

இன்று இரவு நியூஸிலாந்தை நோக்கிப் பயணம். ஆனால், அரசாங்க ரீதியாகச் செல்வதால் இங்கிருந்து டெல்லி சென்று, டைப் டி (Type D) எனப்படும் டிப்ளோமேடிக் (Diplomatic) பாஸ்பார்ட், விசா மற்றும் அடையாள அட்டைகள், மாநாட்டுக்குத் தேவையான மற்ற விவரங்களை விளையாட்டு மற்றும் வெளியுறவுத் துறையிலிருந்து பெற்றுக்கொண்டுதான் செல்ல வேண்டும்.

யோசனையுடன் வீடு திரும்பியவனிடம் அபர்ணா “என்னாச்சு?”

“அங்க, நியூஸிலாந்துல அந்த மருந்து கம்பெனியோட சிஇஓ வந்து என்னை மீட் பண்ணுவாராம். கவனமா பேசச் சொன்னார்”

“மொத்த எம்என்சிக்கும் சிஇஓ வா?”

“ம்”

“எதுக்காம்?”

“நோ ஐடியா. ஆனா, ஒய் மீ?”

கிளம்பியவனிடம் விபூதியை நீட்ட, மறுக்காமல் கீற்றாக இட்டுக்கொண்டான். அபர்ணாவால் முடிந்தது, சிறிய ஹனுமான் சாலிஸா புத்தகத்தைப் அவனது பெட்டியின் அடியில் போட்டாள்.

*******************

நியூஸிலாந்து உலகின் அதி அழகான, அமைதியான, குறைவான மக்கள்தொகை கொண்ட சிறியதொரு நாடு. இங்கு கணசமான அளவில் இந்தியர்கள் வசிக்கின்றனர். பூமிப்பந்தின் தென்புலத்தில் இருப்பதால் மே மாத முதல் வாரத்தில் இலையுதிர்காலம் முடிந்து குளிர்காலத்தின் ஆரம்ப அறிகுறிகள் தெரிந்தன.

தூரத்தில் தெரிந்த படர்ந்த பனி மலைகளும், கடலும் சூழ, எங்கெங்கும் புல்வெளிகளும், நீலவானமும் சற்றே குளிரான சீதோஷ்ணமுமான வெலிங்டன் நகரின் அமைதியானதொரு பகுதியில் இருந்த அந்த நட்சத்திர விடுதியில்தான் உயர்மட்டக்குழு கூட்டத்திற்கு வந்த மூவரும் தங்க வைக்கப்பட்டனர். இதேபோல் வேறுநாடுகளைச் சேர்ந்தவர்களும் அங்கே இருந்தனர். இன்னும் மூன்று வெவ்வேறு ஹோட்டல்களிலும் தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இன்னும் இரண்டு முழு நாள்கள் கழித்தே மாநாடு தொடங்குவதால், ஜெட்லாக் முடிந்தபின் சொகுசு வேன்களில் ஊரைச்சுற்றிக் காட்டினர். என்ன ஒன்று, இந்திய உணவு என்று இருந்தாலுமே, அது ஒன்றைத் தவிர, சொர்க்கமேதான்.

மூன்று நாள் கூட்டமும் சிறப்பாகவே சென்றது. சென்றிருந்த மூவரில் வெளிநாட்டுப் படிப்பும் அங்கு பேசும் ஆங்கிலமும் சுலபமாகக் கைவரப்பெற்ற அன்புநேசன் நம் நாட்டின் சார்பாக கருத்துகளை தெளிவாகவே எடுத்துரைத்தான்.

சரியாகக் காலை ஒன்பதரைக்குத் தொடங்கி இடையில் முப்பது நிமிட இடைவெளியுடன் ஒரு மணிக்கெல்லாம் மாநாடு முடிந்துவிட்டதில் மதியம் முழுதும் ஓய்வுதான்.

உண்மையில் அமைதியான, குளிரான சூழலில் அன்புநேசனுக்கு போரடித்தது. விருந்தினர்கள் அனைவரும் மாலையானால் பார், டின்னர் என நேரம் செலவிட்டனர்.

மூன்றாம் நாள் மதியம் மாநாடு, பிரிவுபச்சாரம், மொமென்ட்டோ, விருந்து, எல்லாம் சிறப்பாக முடிந்தது. சிலர் அன்றே தங்கள் நாடுகளை நோக்கிப் பயணப்பட, அன்புநேசனுக்கு மறுநாள் இரவுதான் விமானம்.

அவன் அறைக்கு வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் அலைபேசி ஒலித்தது. முதல்நாளே, இன்று அவனைச் சந்திக்க நேரம் வாங்கிக்கொண்ட அந்த நிறுவனத்தின் சிஇஓ, அந்த ஹோட்டலில் சிறப்பு விஐபி அறையொன்றில் மாலை ஆறு மணிக்கு அவனுக்காகக் காத்திருப்பதாகச் சொன்னார்.

பெரும்பாலானவர்கள் உடனடியாகப் புறப்பட்டுக் கொண்டிருக்க , விடுதி காற்று வாங்கியது. முன்பே பரவலாகத் தங்கி இருந்ததில் கூட்டத்தில்தான் சந்தித்தனர். இப்போது ஆளரவமற்ற தனிமையும் சுதந்திரமும்.

துல்லியமாக ஆறு மணிக்கு காத்திருந்த நபரை சந்திக்கச் சென்றான். மின்னசோட்டாவைச் சேர்ந்த தியோடர் ஜோன்ஸ் ஒரு சம்பிரதாய அமெரிக்கனாக, முதலாளித்துவத்தின் பிரதிநிதியாக இருந்தான். அவனுடன் இருந்த இருவர் அறை வாயிலுக்குச் சென்றனர். பவுன்ஸர்கள் போலும்!

அறிமுகம் செய்துகொண்டு கை குலுக்கினர். தாமதிக்க விரும்பாத அன்புநேசன் எடுத்ததுமே “என்னால் உங்களுக்கு என்ன ஆக வேண்டும்?” என்று கேட்டுவிட்டான்.

தியோடருமே நேரடியாக விஷயத்திற்கு வந்தான். அவனது கோரிக்கைகளை, தேவைகளைச் சொன்னான்.

“ஸீ மிஸ்டர் ஜோன்ஸ், இது எதுவும் என் கையில் இல்லை”

“தெரியும். ஆனால், உங்களால் இது குறித்துப் பேசவும், கேள்வி எழுப்பவும்,, விவாதங்களை உருவாக்கவும் சிபாரிசு செய்யவும் முடியும் மிஸ்டர் அன்புநேசன்”

“நான் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவன். முடிவு செய்யும் அதிகாரம் என்னிடம் இல்லை மிஸ்டர் ஜோன்ஸ்”

“உங்கள் ஒருவரைத்தான் நாங்கள் தொடர்பு கொண்டிருப்போம் என்று நினைக்கிறீர்களா, மிஸ்டர் அன்புநேசன்?”

“இல்லைதான்”

“இதற்காகத்தான் உங்கள் அகாடமியைத் தேர்ந்தெடுத்து ஸ்பான்ஸர் செய்தோம். பழுத்த அரசியல்வாதியான உங்கள் தந்தையிடம் பேசினோம். காரணமின்றிக் காரியங்கள் இல்லை மிஸ்டர் அன்புநேசன். எங்கள் அமெரிக்காவில் ‘There is no such thing as a free lunch (எதுவும் இலவசம் இல்லை) என்றொரு பழமொழி உண்டு”

சற்றே ஆத்திரம் தூண்டப்பெற்ற அன்புநேசன் “ஸ்பான்ஸர் செய்த தொகையைப் பல மடங்காகத் திருப்பித் தரும் விளம்பரஙகள் எடுக்கப்பட்டு விட்டன” என்றான் வேகமாக.

சட்டென்று தணிந்த தியோடர் “புதிய தேசத்தில் நிறுவனம் காலூன்றும் நேரத்தில் இதெல்லாம் சகஜம்தான். உங்களால் ஆனதைச் செய்யுங்கள்”

“உறுதியாக எதுவும் சொல்வதற்கில்லை. இது குறித்தான எங்கள் நாட்டின் சட்டதிட்டங்களைப் பொறுத்து முயற்சிக்கிறேன்”

“நன்றி மிஸ்டர். அன்புநேசன். அதுவே போதும்”

சில நொடிகள் அமைதியாய் கடக்க, தியோடரே “உங்கள் மனைவி, குடும்பம் பற்றி…”

சிரித்த அன்புநேசன் “ஆராயமலா வந்தீர்கள்?” என்றபடி எழுந்தான்.

உடன் எழுந்த தியோடர் “விரைவில் உங்களிடமிருந்து நல்ல செய்தியை எதிர்பார்க்கிறேன் மிஸ்டர் அன்புநேசன். ஆல் தி பெஸ்ட், என்ஜாய் யுவர் ஸ்டே” என்று கண்ணைச் சிமிட்டினான்.

எதிரே இருந்த மின்தூக்கியில் நுழைந்து ‘ஊஃப்’ என்று வாயைக் குவித்து ஊதிய அன்புநேசன், நேரே கீழ்த்தளத்தில் இருந்த நீச்சல் குளத்தை நோக்கி நடந்தான். குளிரில் யாரும் நீந்தவில்லை. ஆனால், ஒருசிலர் விருப்பமான பானங்களுடன் தனியாகவும் ஜோடியாகவும் கரையில் அமர்ந்திருந்தனர்.

சந்திப்பு என்னவோ இருபதே நிமிடங்கள்தான். ஆனால், அவனுக்கு ஏனோ ஒவ்வாமையாக இருந்தது.

அன்புநேசன் மது அருந்தாதவன் இல்லை. ஆனால், பொது வெளியில், குறிப்பாகக் கட்சி ஆள்களுடன் கண்டிப்பாக அருந்துவதில்லை என்ற கொள்கை வைத்திருந்தான். அப்படியே அருந்தினாலும் கல்லூரி, வெளிநாட்டில் உடன் படித்த மிக நெருங்கிய நண்பர்கள் மூவருடன்தான். அதற்குத் தன்னை அறியாது எதையேனும் வெளியிட்டு விடுவோமோ என்ற எச்சரிக்கை உணர்வு ஒரு முக்கியக் காரணம்.

இன்று யாரும் உடன் இல்லை. மனம் தியோடருடனான பேச்சை அசைபோட விரும்பியது. சற்றுநேரம் வெட்டவெளியில் நின்றவன், வழியில் இருந்த ஓய்வறையை உபயோகித்தபின், அவன் இதுவரை செல்லாத எலைட் பாரை நோக்கிச் சென்றான்.

நான்கு அல்லது ஆறு பேர் அமரக்கூடிய கியூபிகிள்களாக தடுக்கப்பட்டிருந்த அந்த மதுச்சாலையின் அமைப்பு மிக அழகாக இருந்தது. ஒன்றில் மட்டும் வெள்ளையாக இருந்த மூவர் அமர்ந்திருக்க, மற்றபடி யாருமில்லை.

ஓரமான ஒரு தடுப்பினுள் சென்று அமர்ந்த இரண்டாவது நொடி ஒரு பார்டெண்டர் பிரசன்னமானான்.

“ ஷிவாஸ் ரீகல் ஒன் ஸ்மால்”

வெல்வெட் துணி மீது வைக்கப்பட்ட டி கேன்ட்டரில் விஸ்க்கி, ஐஸ் பக்கெட், இடுக்கி, க்ரிஸ்டல் கிளாஸ் சகிதம் இருந்த ட்ரேயை சீர் தட்டைப் போல் சுமந்து வந்தான் அந்தப் பார்டெண்டர்.

‘எத்தனை நாளாச்சு!’

அன்புநேசன் சுற்றுப் புறத்தை அளந்தபடி மெதுவே ரசித்து அருந்த, கோப்பை காலியானது. இரண்டாவது ரவுண்டில் தன் மொபைலில் மூழ்கிப்போக, திடீரென எதிரே நிழலாடியது. நிமிர்ந்து பார்த்தவன் யாரென்று தன் மூளை கடத்திய செய்தியில் வியப்பும் திகைப்பும் புன்னகை முகமுமாகப் பார்த்திருக்க…

தன் கரகரப்பான, ஹஸ்கியான, ஆழமான குரலில் “மே ஐ ஜாயின் யூ எம்பி ஸர்?” என்று அனுமதி கோரினாள், இந்தியாவின் தலை சிறந்த மாடலும், நடிகையும், சில வருடங்களுக்கு முன் ‘மிஸ் இந்தியா சிரிப்பழகி’ பட்டம் பெற்றவளும், சென்ற வருடம் சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கியவளுமான காமினி பட்டாச்சார்யா. கேரமல் நிறத்தழகி. முத்துப் பல்லழகி. அவள் சிரிப்புக்கு சில்லறை என்ன, சொத்தையே எழுதி வைக்கலாம்.

தன்னிச்சையாக எழுந்து நின்றவன் “ஒய் நாட், ப்ளீஸ்… ஆப் பைட்டியே” என்றான் நட்பாக.

“என்ன சாப்பிடுகிறீர்கள்?” என்றவன், அவள் கேட்ட ஒயினை வரவழைத்தான். பொதுவான பல்வேறு விஷயங்களைப் பேசினர்.

சிறிது நேரத்தில் மனதை உறுத்திய அந்தக் கேள்வியைக் கேட்டே விட்டான்.

“என்னை எப்படித் தெரியும்?”

“நம் தேசத்தின் இளமையான, செல்வாக்கான எம்பியைத் தெரியாது போகுமா என்ன?”

மேலும், தனிமையும் இனிமையும் நிம்மதியும் தேடி, சந்தடியில்லாத நியூஸிலாந்துக்கு வந்ததாகச் சொன்ன காமினி, வெகு அழகாகப் புன்னகைத்தவள், முன்னே குனிந்து அவன் கையைப் பற்றினாள்.

அன்புநேசன் அநிச்சையாகச் சுற்றிலும் பார்க்க, முன்பு தொலைவில் அமர்ந்திருந்த அந்த மூவரும் இப்போது இடம் மாறி, இவர்களுக்கு எதிர் வரிசையில், சற்றுத் தள்ளி இருந்த தடுப்பில் இருந்தனர். சற்றே எச்சரிக்கையானவன், கையை உருவிக்கொண்டு பேசியபடியே இயல்பாக நேரத்தைப் பார்த்தான்.

“ஈவினிங் ஈஸ் ஸ்டில் யங் எம்பி ஸர். நாம ஏன் சேர்ந்து டின்னர் சாப்பிட்டு ஒன்றாக நேரம் செலவழிக்கக் கூடாது?” என்றாள் காமினி.

ஒரு பக்குவமான ஆணாக, முகம் தெரிந்த அரசியல்வாதியாக, ஒரு இந்தியப் பெண்ணுக்கு கடல் கடந்த அயல்தேசத்தில் தன் நட்பையோ உதவியையோ தருவதில் அன்புநேசனுக்கு ஆக்ஷேபணை எதுவுமில்லைதான். ஆனால், அவள் பிரபலமானவள் என்பதும், யதேச்சையாகத் தெரிந்தாலும், அவள் குறிப்பாகத் தன்னைத் தேடி வந்து, மாய்ந்து, மறித்துப் பேசுவது மனதில் நெருடியது.

அவனது, அவளது பிரபலத்தில் ஒருவரை ஒருவர் தவிர்ப்பது எப்படி நாகரிகம் இல்லையோ, இந்த பேச்சை, ஊடாட்டத்தைத் தொடர்வதும் விபரீதம்தான்.

‘இவள் ஏன், எப்படி இங்கே?’

அன்புநேசனுக்கு இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு ஆங்கிலப் பத்திரிகையின் பேட்டியில் தனக்குப் பிடித்த ஆழகான, திறமையான நடிகை யார் என்ற கேள்விக்கு, காமினி பட்டாச்சார்யா என்று பதிலளித்தது நினைவு வர, ‘சக்’கென அதிர்ந்தான்.

‘அப்போ… ஹனி ட்ராப்பா (Honey trap) இவ?’

‘அடப்பாவி, எவனோ என் சரித்திரத்தையே நோண்டி நொங்கெடுத்துருக்கானே!’

‘ஆமா, நான் எலி, இவ மசால் வடை… யாருகிட்ட?’

“அன்பு ஸார், என்ன யோசிக்கிறீங்க, பசிக்குது”

‘விட மாட்டா போலயே. சரி, டின்னரோட கழட்டி விட்ரலாம்’

எழுந்து காமினி நீட்டிய கையைத் தவிர்த்து, மரியாதையான இடைவெளியில் டைனிங் ஹாலை நோக்கி நடந்தான்.

மங்கலான வெளிச்சம் பரவி இருந்த ஹாலுக்கு கண்கள் பழகியதும், சூபர்வைஸர் காட்டிய இருவருக்கான ஒருபக்க இருக்கையைத் தவிர்த்து, நால்வர் அமரும் வட்ட மேஜையில் எதிர்ப்பக்கம் கை காட்டினான்.

வந்த மெனு கார்டை அவளிடம் கொடுத்தவன், சத்தமில்லா நோட்டிஃபிகேஷன்களின் எணணிக்கையைக் கண்டு மொபைலைத் திறக்க, காமினி அவன் கைகளைப் பிடித்தபடி பேசியது அதற்குள் வைரலாகி, பத்தாயிரம் பார்வைகளைத் தாண்டி இருந்தது.

“எனி ப்ராப்ளம் ஸர்?”

“...”

காமினி தனக்கென ஐஸ் போட்ட மெலனும், எக் சான்ட்விச்சும், காஃபி பாட்டும் ஆர்டர் செய்தாள்.

“ஆப் கேலியே?”

‘அதான் ஆப்பு வெச்சிட்டியே’

“லெட் மீ ஸீ” என்றவன், மெனுகார்டை படிக்கும் சாக்கில் அவளைத் தவிர்க்கும் வழிகளை யோசிக்க, யாரோ அவனது இடது கையை அணைத்து மேலே உரசியபடி அருகே அமர… மிகப் பரிச்சயமான தொடுகை!

விருட்டெனத் திரும்ப “எங்க இருக்கேன்னு சொல்லிட்டு வரமாட்டியா நேசா?’ என்றாள் அபர்ணா.
 
Author: VedhaVishal
Article Title: தோற்ற மயக்கங்கள் 12
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Kayes1280

New member
Feb 9, 2026
5
5
3
USA
Super, indha nesa vida!!!!! Nalla velai indha appu vanthuchu…I like appu’s character, beau strong nd resilient!!! Nesa ippothan real a maruraan

indha mathiri yemathara iyrappan mathiri purushothaman mathiri, ninchai;ay verupu varuthu… enna kodumai ithu…
 
Last edited:

Thani

New member
Jun 7, 2026
17
5
3
Deutschland
அவங்க போட்ட ஃப்ளானை அசால்டா அபர்ணா முறியடித்து விடுவாள் போலவே😀
அடி தூள் அபிம்மா😀
 
S HEMA

Member
Mar 18, 2026
15
12
13
CHENNAI

Ada ada ada... I was about to type viboothi and Hanuman will take care, end word top notch out of the world.. nesaa flat
 
  • Love
Reactions: VedhaVishal