தோற்ற மயக்கங்கள் 7
விருந்தினர் அனைவரும் சென்றபின், பெரியவர் புருஷோத்தமனும் துளசியும் கீழ் அறையில் உறங்கச் செல்ல, கேடரர்கள், பணியாள்கள் எல்லோரும் அவரவர் வேலை முடிந்து செல்லும் வரை குமாருடன் தோட்டத்தில் நின்றிருந்த அன்பு நேசன், மாடிக்கு வந்து, மகள் தூங்கிவிட்டதை உறுதிப்படுத்திக்கொண்டு, தங்கள் அறைக்கு வந்து, அந்நேரத்திலும் குளித்து, உடை மாற்றிக் கனமான ரஜாய்க்குள் அரைத் தூக்கத்தில் சுருண்டிருந்த மனைவியை பின்னிருந்து இறுக்கினான்.
“நே…சா, ப்ளீஸ்”
“அப்பு, ப்ளீஸ்”
அபர்ணாவைத் தன்புறம் திருப்பி, பெட் சைட் விளக்கின் வெளிச்சத்தில் அவள் முகத்தைப் பார்த்தான்.
“என்ன்… ன?”
“அப்புகுட்டிக்கு குளுர்ல முகமே செவந்து போச்சுடீ “
“தூங்கலாங்க, நாளைக்கு ஊருக்குப் போகணும்”
“ஊருக்கு போய் தூங்கிக்கடீ” என்றவனின் நெருக்கத்தில் சோப் மணமும் சருமக் குளிர்ச்சியும் தாக்கியதில், மனைவி தன்னை ஆழ்ந்து சுவாஸித்ததில் கிறங்கியவன்,
“...”
“அப்…பூ”
“ஷ்…”
“...”
“நே… சா”
அபர்ணா தன் இணக்கத்தில் உன்மத்தம் கொண்ட கணவனைப் புரிந்து ஆதரித்து, அனுசரித்து, தஞ்சமளித்ததில் தண்(ன்)மையாகித் தளர்ந்தவன்,
“அப்பு, எங்கூட இங்கேயே இரேன்”
“...”
“ஏய், அப்புக்குட்டீ…”
நிமிடங்களில் ஆழ்ந்து உறங்கிவிட்டவளைக் கண்டவனின் புன்னகையில் எதையோ சாதித்துவிட்ட பெருமிதம். அவனுக்கே அவனுக்கு உரிமையான மனைவிதான். இருப்பினும் அன்புநேசனைப் பொறுத்தவரை வருடங்கள் கடந்தும் தன்னிடம் அவள் தடுமாறும் தருணங்கள் அத்தனை நிறைவானவை.
அபர்ணாவின் கன்னத்தில், நெற்றியில் முத்தமிட்டவன், ஓசையின்றி ஒளிர்ந்து அதிர்ந்த அவளது அலைபேசியைக் கண்டான்.
‘நடுராத்திரி ரெண்டு மணிக்கு யாரு?’
அவனது கேள்வி முடியும் முன்னரே மொபைல் மீண்டும் வைப்ரேட் ஆனது. எடுத்துப் பார்க்க, ராகவன்.
‘இவன் எதுக்கு நேரங்கெட்ட நேரத்துல கால் பண்றான், எல்லாம் இவளால. எதா இருந்தாலும் லெட் இட் வெய்ட்’
அன்புநேசனை அசதியும் தூக்கமும் மெலிதான கோபமும் அழுத்தியதில், அவளது அலைபேசியை மொத்தமாக அணைத்தே விட்டான்.
*******************
காலை மணி ஒன்பது இருபது.
தாயும் மகளும் தயாராகி, அன்பு நேசன் எழுவதற்குக் காத்திருந்தனர்.
குளிருக்கு இதமாக தந்தையின் ஒருபக்க ரஜாய்க்குள் அமர்ந்திருந்த அமுதா அவ்வப்போது தந்தையை உரசுவதும் உலுக்குவதுமாக இருந்தாள்.
ஆங்காங்கே பரவி இருந்த பொருள்களைப் பெட்டியில் திணித்தபடி கடைசி நிமிட பேக்கிங்கில் இருந்த அபர்ணா,
“அம்மு, அந்த ரூம்ல உன் புக்ஸ் எதுவும் இருந்தா போய் எடுத்துட்டு வா. இங்கயே விட்டு வந்தேன்னா எக்ஸாம் கோவிந்தாதான். லேப்டாப், மவுஸ், சார்ஜர்… “
அமர்ந்த குரலில் மனைவி சொன்னதைக் கேட்டபடி எழுந்து மகளை அணைத்துக் கொண்டவன் “எம்பொண்ணை ஏன்டீ திட்டற?” என்றபடி மனைவியைப் பார்த்துக் கண் சிமிட்டினான்.
பின் மாலையில்தான் விமானம் என்பதால், “ஒரே ஒரு நாள் என் கூட ஸ்பென்ட் பண்ணுங்க டாடீ” என்ற அம்முவின் ஆசையை நிறைவேற்ற புதுதில்லியை காரில் இருந்தபடியே சுற்றிவிட்டு, நட்சத்திர ஹோட்டலில் மதிய உணவை முடித்துக்கொண்டு அம்மாவையும் பெண்ணையும் விமான நிலையத்தில் ஏற்றி விடுவதாகத் திட்டம்.
தட்டப்பட கதவை ஒருக்களித்துத் திறந்த அபர்ணாவிடம், குமார் “அண்ணனை ஐயா கூப்பிடறாருங்க” என்றான்.
“பத்து நிமிஷத்துல வரேன்னு சொல்லுடா” என்று குரல் கொடுத்த அன்புநேசன், மகளிடம் “பட்டுகுட்டி, ஸ்வெட்டர் போட்டுக்கடா, குளிருது” என்றபடி எழுந்து ஓய்வறைக்குள் சென்றான்.
விரைவில் தயாராகி வெளியில் வந்து “அப்பு, நான் போய் அப்பாவை பார்த்துட்டு வரேன். நீ பிரேக் ஃபாஸ்ட்டை இங்கேயே கொண்டு வரச்சொல்லு. அமைதியா சாப்பிடலாம்டீ”
“ம்…”
காஞ்சீபுரத்தைச் சேர்ந்த சமையல் கலைஞர் நாகேஷ் ஃபிப்ரவரி மாத டெல்லி குளிரிலும் தோசை, இரண்டுவகை சட்னி, காந்த போஹே (வெங்காய அவல் உப்புமா), இஞ்சி டீ, உண்ணும் தட்டு, தேக்கரண்டி, முள்கரண்டி என நிச்சயத்திற்கு சீர் வைப்பது போல் வைத்துவிட்டுப் போனார்.
அமுதா “மாம், பசிக்குது”
“நீ சாப்பிடு அம்மு, வா”
“இல்ல, டாடீ வரட்டும்”
“அப்ப அமைதியா இரு” என்ற அபர்ணா அங்குமிங்கும் எதையோ தேடினாள்.
“என்னம்மா தேடற?”
“என் மொபைல். நீ பாத்தியா அம்மு”
“நோ சான்ஸ் மாம்”
இருபது நிமிடங்கள் சென்று வந்த அன்புநேசனின் முகம் மலர்ந்து, ஆனால் யோசனையுடன் இருந்தது.
“அப்பு, பசிக்குதுடீ. நேத்தி முழுசும் நான் சரியாவே சாப்பிடலை. நடுவுல நீ மட்டும் நல்லா இருக்குன்னு கட்டாயப்படுத்தி அந்த சூப்பும் ஒரு சப்பாத்தி ரோலும் குடுக்கலைன்னா எதுவுமே சாப்பிட்டிருக்க மாட்டேன்”
இது போன்ற தனிமை, குடும்பத்துடனான நிதானமான பொழுதுகள் வாய்ப்பது அரிதென்பதால், மூவரும் பேசிச் சிரித்தபடி உண்டனர்.
அன்பு நேசனிடம் வெளிப்படும் இயல்பிலும் வேடிக்கைப் பேச்சிலும் ‘இவர் இப்டியே எப்போதும் இருக்கக் கூடாதா?’ என அபர்ணாவை ஏங்க வைக்கும் பொழுதுகள் அவை.
அருள்மொழியுடன் வீடியோ காலில் பேசினர். முந்தைய தினம் நடந்த விருந்து குறித்தும், தலைவர் என்ன சொன்னார், எப்படி இருக்கிறார் என்றும் மகன் விசாரித்ததில் அன்புநேசனுக்கு உச்சி குளிர்ந்து போனது,
அபர்ணா “GATE எக்ஸாம்க்கு படிக்கிறியாடா, நல்ல யூனிவர்ஸிடிக்கு போகணும். உழைச்சாதான் பலன் கிடைக்கும்”
அன்புநேசன் ‘கொஞ்சம் சும்மாதான் இரேன்’ என மனைவிக்கு சைகை செய்தான்.
தலையைத் தலையை ஆட்டிய மகனிடம் அபர்ணா “சாப்ட்டியாடா அருள், டெல்லில இருந்து உனக்கு என்ன வாங்கிட்டு வரட்டும்?”
“எனக்கு ரெண்டு புக்ஸ் வேணும்மா. அதோட, சில திங்க்ஸ் வேணும். திபெத்தியன் மார்க்கெட்ல, ஜன்பத்ல ஈஸியா கிடைக்குமாம். வாட்ஸ்ஆப்ல டீட்டெயில்ல் அனுப்பறேன்.
“ஒகே டா” என்றவள் மகனைக் கூர்ந்தாள்.
“என்னம்மா அப்படிப் பாக்கற?”
“யாருக்குடா இதெல்லாம்?”
“ஏன், எனக்குதான்”
“ஆஹான்…”
“நம்பும்மா” என்ற மகனின் கெஞ்சலில் அபர்ணா வாய்விட்டுச் சிரித்தாள்.
அடுத்த அரை மணிக்குள் பெட்டிகளை டிக்கியில் ஏற்ற அனுப்பிவிட்டு, அபர்ணாவும் அமுதாவும் மீதமிருத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்காக டெல்லியிலேயே தொடரப்போகும் பெரியவர்களிடம் சொல்லிக்கொண்டு வந்தனர்.
“அம்மு, செக் யுர் ரூம் ஒன்ஸ் அகெய்ன்” என்று மகளுக்கு வேலை கொடுத்து அனுப்பிய
அன்புநேசன் “அப்பு, இந்தா உன் மொபைல்” என ரஜாய்க்கு அடியில் துழாவி, எடுத்து நீட்டினான்.
அபர்ணா அணைக்கப்பட்டிருந்த மொபைலை உயிர்ப்பிக்க, நல்லவேளையாக, பேட்டரி ஃபுல்லாகவே இருந்தது. ராகவனின் தவறிய அழைப்புகளைக் கண்டவள் நெற்றி சுருக்கினாள்.
“ஓவர் ரியாக்ஷன் உடம்புக்கு ஆகாதுடீ. நான்தான் ஸ்விட்ச் ஆஃப் செஞ்சேன்”
“நீங்களா, ஏன்?”
“ராத்திரி ரெண்டே முக்கால் மணிக்கு கால் பண்றான். நல்லவேளை ஃபோன் வைப்ரஷன் மோட்ல இருந்தது. இல்லைன்னா, வந்த கோபத்துக்கு தூக்கிப் போட்டு உடைச்சிருப்பேன்”
“ம்ப்ச்… என்னதிது, என்ன அவசரமோ. ராகவன்லாம் தேவை இல்லாம கால் பண்ணவே மாட்டான்”
“அப்டி என்ன தலைபோற அவசரம், அப்படியே இருந்தாலும் அதைப் பார்க்கத்தானே அவனுக்கு சம்பளம் குடுக்கற?”
“வாங்கற சம்பளத்துக்கு சொன்ன வேலையை செஞ்சுட்டுதான் கால் பண்ணி இருப்பான். என்னை எழுப்பி இருக்கலாம்ல?”
பேன்ட் பெல்ட்டை இறுக்கியபடி அருகே வந்த அன்புநேசன் சடாரென அபர்ணாவை அணைத்து அவசரமாக இதழில் பதிந்து விலகியவன்,
“எங்க, மேடம்தான் நேசான்ன மறு நிமிஷம் அசந்து போய் தூங்கிட்டீங்களே” எனக் கண்ணைச் சிமிட்டினான்.
மன, முகச் சிவப்பை மறைக்க “இருங்க என்னன்னு கேட்டுட்டு வரேன்” என வெளியில் சென்று சில நிமிடங்களில் திரும்பியவளின் முகம் சிந்தனையில் இருந்தது.
நேற்று, இன்று, என்றில்லாதபடி இதிகாச, புராண காலம்தொட்டு பாரதத்தின் தலைநகராக அறியப்படும், எத்தனையோ போர்களையும் மாவீரர்களையும், தலைவர்களையும் கண்ட பெருமைமிகு டெல்லியின் பிரதானமான சாலைகள், இந்தியா கேட், நாடாளுமன்றம், யமுனா நதி என கீழிறங்காது, வண்டியில் அமர்ந்தபடியே பட்டினப் பிரவேசம் செய்து, ஜன்பத்தில் அருள்மொழி கேட்டவற்றையும், அமுதா கை நீட்டியவைகளையும் வாங்கிக்கொண்டு, அந்த பிரம்மாண்டமான நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்றனர்.
பணம், பதவி, பிரபலம், பாதுகாப்பு போன்ற பல காரணங்களால் உணவுக்காக எப்போது வெளியில் சென்றாலும் இது போன்ற இடங்கள்தான் என்றாலுமே, ITC மௌர்யா மிரட்டலாக இருந்தது.
அபர்ணாவும் அன்புநேசனும் முன்பே சில முறை இங்கு வந்திருந்தாலும், அமுதாவிற்கு முதல் முறை என்பதோடு, இப்போது பார்ப்பதை கிரஹித்துப் புரிந்துகொள்ளும் வயதும் வந்து விட்டதில் பிரமித்தாள்.
“செமையா இருக்கு டாடீ”
“ஒபாமா, புடின்லாம் வந்தபோது இங்கதான் தங்கி இருந்தாங்கடா”
சட்டென தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டவள் “அப்போ ரொம்ப ரொம்ப காஸ்ட்லியாப்பா?”
தங்களின் வசதியும் உயரமும் புரிந்தும் ‘அப்பாவால் முடியுமா?’ என்ற மகளின் வெகுளித்தனமும் அக்கறையும் இனித்ததில், பதிலளிக்காது மகளை தோளோடு அணைத்தபடி ஒரு சின்ன சிரிப்போடு மனைவி, மகளுடன் உணவகத்தினுள் சென்று, வெயிட்டர் வழிகாட்ட, முன்பதிவு செய்யப்பட்ட மேஜையில் சென்று அமர்ந்தான்.
சூப், ஸ்டார்ட்டர் என ஆர்டர் கொடுத்துவிட்டுக் காத்திருந்த வேளையில் அமுதா “அம்மா, வாஷ்ரூம்” எனவும் அபர்ணா எழுந்திருக்க, தடுத்த அன்புநேசன், அங்கிருந்த பெண் சூபர்வைஸரை அழைத்து வழிகாட்டச் சொல்லி “போய்ட்டு வா அம்மு” என மகளை அனுப்பி வைத்தான்.
எப்போதும் பொதுவிடங்களில் மகளைத் தனியே விடாத அபர்ணா கணவனை முறைத்தாள்.
“கமான் அப்பு, மே மாசம் வந்தா அம்முக்கு பதினெட்டு வயசு. பழகிக்கட்டும் விடு”
அபர்ணா “காலைல இருந்து கார்ல கூட அவ கையை விடாம புடிச்சுட்டு சுத்தினது நானா, நீங்களா? ஓகே, அவுட் வித் இட். உங்களுக்கு எங்கிட்ட என்ன சொல்லணும்?”
சிரித்த அன்பு நேசன் “தட்’ஸ் மை புத்திசாலிப் பொண்டாட்டி”
“...”
“மார்ச் இருபத்தி மூணு, ஏப்ரல் ஆறு - இந்த ரெண்டு நாளும் உன் கச்சேரி வேணும்னு பிரைம் மினிஸ்டர் ஆஃபீஸ்ல இருந்து அப்பா கிட்ட கேட்டாங்களாம். ஒன்னு சென்னைல. இன்னொன்னு விசாகப்பட்டினத்துல. ஏதோ உச்சி மாநாடாம். ஃபாரின் டெலிகேட்ஸ்லாம் வராங்களாம். உன்னை கான்டாக்ட் பண்ணுவாங்க. வேற எதுவும் வேலை இருந்தா அதை கேன்ஸல் பண்ணிட்டு, அவங்க பேசினா சரின்னு சொல்லிடு, புரியுதா?” என்றவனின் குரல் தொடக்கத்தில் சன்னமாகத் தழைந்து, பின் மென்மையாகி, சமனாகி, முடிவில் இறுக்கமாக ஒலித்தது.
அந்த நாளின் இனிமை அனைத்தும் விடை பெற்றுக் கொண்ட உணர்வு அபர்ணாவிடம்.
“அபூ என் பொண்ணுங்கறதுக்காக சொல்லலை. மூணு வயசுல இருந்து குழந்தை பாட்டு கத்துக்கறா. கத்துக்கறவா எல்லாருக்கும் பாட்டு வரும் வராது. அசுர சாதகமும் சரஸ்வதி கடாக்ஷமும் இருந்தாத்தான் இப்படிப் பாட முடியும். வருஷக் கணக்கா அசாத்திய உழைப்பைப் போட்டு கத்துண்ட வித்தை. அவளை வீட்டோட முடக்கிடாதீங்கோ, ப்ளீஸ்”
தன் உறவு, நட்புகளுக்கு ஆத்திர, அவசரத்திற்கு உதவிக்கரம் நீட்டி, பிரச்சனைகளுக்குத் தீர்வு தரும், உத்தியோகத்தில் இருக்கும் மனைவி, அழகான, அறிவான இரண்டு பெண்களின் தந்தை, வயதான தாயை அன்பும் மரியாதையுடன் பராமரிக்கும் மகன், வங்கி அதிகாரி, என அவரது வட்டத்தில் மதிப்பான இடத்தில் இருந்த தன் தந்தை ஸ்ரீநிவாஸன், தன் மகளைத் திருமணம் செய்து கொண்டவன், மாப்பிள்ளை என்ற ஒரே காரணத்திற்காகத் தன்னில் பாதி வருடங்கள் இளைய அன்பு நேசனிடம், கை கூப்பி மன்றாடியது, அபர்ணாவின் மனதில் நேற்றுப் போல் நிழலாடியது.
அபர்ணா- அன்பு நேசன் இருவருக்கும் திருமணமான புதிது. அப்போது அன்புநேசனின் பெற்றோருடன் எல்லோரும் ஒரே குடும்பமாகத்தான் இருந்தனர்.
புகுந்த வீட்டின் தினசரி நியதிகள், பாரம்பரியமான அரசியல் குடும்பத்தின் நடைமுறைகள், கணவன் பக்க உறவுகளின் ஆராய்ச்சிப் பார்வைகள், விமரிசனங்கள், அதுவரை தொலைக்காட்சியிலும் செய்தியிலும் மட்டுமே பார்த்திருந்த அரசியல் பிரபலங்களின் சகஜமான வருகை, நாத்தனார் பொன்னியின் மூலம் ஐயாரப்பன் கொடுக்கும் சிறுசிறு குடைச்சல்கள், தன் கல்லூரிப் படிப்பு என, அபர்ணா சமாளிக்க வேண்டியவற்றின் பட்டியல் மிகப் பெரிது.
காதல், பெற்றோர் பார்த்த வரன், தெரிந்தவன், திடீர்க் கல்யாணம் போன்ற எந்த வகையிலும் சேராது திணிக்கப்பட்டத் திருமணமாக இருந்ததில், அபர்ணா அந்தச் சூழலை ஏற்கத் திணறினாள். மூச்சு முட்டுவதுபோல் இருந்தது.
கடைசி வருடம், அதிக நாள்கள் ப்ராஜெக்ட்டிலேயே செல்ல, பெரும்பாலும் வீட்டிலேயே இருந்தவள், செப்டம்பர் முதல் வாரத்தில் நடந்த முகுந்தன்- ஹேமா திருமணத்திற்கே, பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் இடையே பாயின்ட் டு பாயின்ட் வண்டியைப் போல் ஷட்டில் (Shuttle) சர்வீஸ் செய்தாள்.
பிறந்த வீட்டுக்குச் சென்று தங்கவென தலை தீபாவளியைப் பெரிதும் எதிர்பார்த்தாள். ஆனால், அன்புநேசன் அவள் வீட்டில் அரைநாள் கூடத் தங்கவிடாது கையோடு கிளப்பிக்கொண்டு வந்துவிட்டான்.
அன்பு நேசனுக்கு கேப் டவுனில் தொடங்கிய தேநிலவு மனநிலை இந்தியா வந்தும் தொடர்ந்ததில்,
“வாரத்துல ஒரு நாள் நான் எங்காத்… எங்க வீட்டுக்கு போய்ட்டு வருவேன். நீங்க ‘நோ’ சொல்லக் கூடாது” என அபர்ணா வைத்த கோரிக்கையை ஏற்றவன்,
“நைட் நீ எங்கிட்ட திரும்பி வந்துடணும்” என்ற நிபந்தனையோடு பலமாகத் தலையாட்டி இருந்தான்.
அந்த செமஸ்டர் முடிந்ததும் தொடர்ந்து நான்கு நாள்கள் தன் வீட்டில் இருந்தவளை, பாட்டி ராஜலட்சுமியும் அம்மா சீதாவும் கணவனுடன் அவன் சந்தோஷமாக இருக்கிறாளா என வெவ்வேறு விதமாகக் கேள்வி கேட்டனர்.
அபர்ணா புகுந்த வீட்டின் சில அடிப்படை பழக்கங்கள் குறித்த கேள்விளைத் தவிர்த்தது தந்தை ஸ்ரீநிவாஸனுக்கு நிம்மதி அளித்தது. எல்லாம் இரண்டாவது நாள் காலை வரை நன்றாகத்தான் போனது.
வெள்ளிக்கிழமை என்பதால் மிளகும் ஒரு வர மிளகாயும் சிட்டிகை மஞ்சள்பொடியும் போட்டுக் காய்ச்சிய நல்லெண்ணெயை, கை பொறுக்கும் சூட்டில் பேத்தியின் தலையில் பரபரவென தேய்த்த பாட்டி கேட்ட கேள்வியில், அபர்ணா தன் கட்டுப்பாட்டை இழந்து விசித்து அழத் தொடங்கினாள்.
“இப்ப என்னத்துக்குடீ கண்ணே அழற, தினமும் ரெண்டு கீர்த்தனையாவது பாடறயான்னுதானே கேட்டேன்?”
“பாட்டீ… பா…ட்..டீ” என அழுதவள்,
“அந்த வீட்ல எங்க, எப்ப, எப்டி பாடறதுன்னே தெரியல பாட்டீ. புதுசா பேச்சு வந்த சின்னக் குழந்தை மாதிரி, யாராவது கெஸ்ட் வந்தா, பார்ட்டின்னா என்னைப் பாடச் சொல்றா. சில பேர் நான் பாட ஆரம்பிச்சதுமே சினிமா பாட்டு பாடு, ஹிந்தில பாடுன்னு கேக்கறா. நானும் வேற வழி இல்லாம பாடறேன்”
“...”
“அவாளோட ரசனையை நான் தப்பா சொல்லலை பாட்டீ. எனக்கும்தான் சினிமா பாட்டு புடிக்கும். நானுமே சினிமால பாடி இருக்கேனே, ஆனாலும், எனக்கு, என் சங்கீதத்துக்கு அங்க மதிப்பில்லையோன்னு மனசை உறுத்தறது”
சீதா “எப்பவோ வர கெஸ்ட்டுக்காக நீ பாடாமயே இருப்பியா அபூ, பாடப் பாடத்தானேடீ ராகம்?”
“என்னை என்னம்மா பண்ணச் சொல்ற?”
பாட்டி “அபூ, முன்னாடி சொன்னதுதான் இப்பவும். ஒவ்வொரு விஷயத்துலயா சமரசம் பண்ணிண்டு நீ இப்படி விட்டுக் கொடுத்துண்டே போனா, சித்த முன்ன அழுதியே, அதுபோல அழுதுண்டே இருக்க வேண்டியதுதான்”
“...”
“தொட்டதுக்கெல்லாம் அழறதால. உன் தைரியமும் தன்னம்பிக்கையும் குறையும்ங்றதைத் தவிர, வேற எந்த லாபமும் கிடையாது. அங்கத்தி சூழல்ல மனசு பாவாம நீ தவிக்கறது எனக்குப் புரியறது.
மாப்பிள்ளையை எப்படி ஏத்துண்டயோ, அதேபோல அவரைச் சேர்ந்ததையும், அவரோட மனுஷாளையும் ஏத்துக்கோ”
“...”
“உன் ரூம்ல, தனியா இருக்கும்போது நாள்ல ரெண்டு பாட்டாவது பாடறதுல உனக்கு என்ன சிரமம்?”
“நீ பாடும்போது அங்க யாராவது வாய மூடுன்னு சொன்னா, எங்கிட்ட சொல்லு, என்ன செய்யணும்னு அப்ப சொல்றேன்”
“ம்…”
“தைரியமா இருக்கணும்டி பொண்ணே. உன்னை சண்டை போடச் சொல்லலை. எதிர்த்துப் பேசச் சொல்லலை, எடுத்துச் சொல்லுன்னு சொல்றேன், புரியறதா?”
“ம்…”
“பாத்ரூமுக்குள்ள போ. சீயக்காயோட வரேன்”
மதியம் சிறிது நேரம் உறங்கி எழுந்தவளை ஸ்ருதி பாக்ஸோடு உட்கார வைத்து “பாடு” என்றதுதான், அபர்ணாவிற்குத் தெரியும்.
மதகு திறந்த மழைக்கால வெள்ளமாய் புரண்ட சங்கீதத்தில், பல மாதங்களுக்குப் பின் அபர்ணாவின் பாட்டைக் கேட்டு, அக்கம் பக்கத்து வீட்டிலிருந்து கூட வந்து இசையை ரசித்தனர்.
மத்யமர்கள் நிறைந்த அந்த சபையில் இருந்த பெரியவர்கள் அனைவரும் சொன்னது ஒன்றே ஒன்றுதான்.
“பாட்டை, பாடறதை விட்டுடாத அபர்ணா”
புறப்படும் நேரம் அபர்ணாவின் அம்மா சீதா “நீ அங்க நடக்கறதை, உன்னால சமாளிக்க முடியறதை எங்க கிட்ட சொல்ல வேண்டாம் அபூ. ஆனா, அங்க எல்லாம் சரியாகற வரை வாரத்துல ஒரு நாள் இங்க வந்து இப்படி வாய் விட்டுப் பாடிட்டு போ. அழுத்தம் தாங்காம நீ அழுததைப் பார்த்து நான் பயந்தே போயிட்டேன்டீ”
பெற்றோரும் உற்றோரும் சொன்னதை அபர்ணா விடாது கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.
அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்த தன் பாட்டு மாமியிடம் பேசியவள், அன்புநேசனிடம் பாட்டு வகுப்பைத் தொடரப்போவதாகச் சொன்னாள்.
“நீயே பெரிய பெரிய கன்சர்ட் குடுக்கற. அமெரிக்கா, கனடா, லண்டன்னு போய்ப் பாடற. இன்னும் என்னத்துக்கு பாட்டு கிளாஸ்?”
கணவனின் கேள்வியில் அபர்ணா சிரித்தாள்.
“சச்சின், திராவிட், கங்குலிக்கு எல்லாம் கிரிக்கெட் விளையாடத் தெரியாதா, அவங்க ஏன் ப்ராக்டீஸ் பண்றாங்க?”
“ஸ்போர்டஸ் அகாடமி வெச்சிருக்கற உங்களுக்கு டெய்லி பிராக்டீஸ் எத்தனை முக்கியம்னு தெரியாதா?”
“சும்மாவே இருந்துட்டு, திடீர்னு பாடினா பஞ்சவர்ணம் ரேவதி மாதிரி வெறுங் காத்துதேன் வரும்”
“நல்லாப் பேசுறடீ. அதை விடு. உன்னை விடப் பிரபலமான சீனியர் யார் கிட்டயாவது போய் பாட்டு கத்துக்கிட்டாலாவது ஓகேன்னலாம். டீச்சர் யார்னு கேட்டா உன் பாட்டு மாமி ஒரு கச்சேரி கூட பண்ணினது இல்லைன்ற”
அபர்ணா “வாய்ப்பு கிடைக்காதவங்க எல்லாம் திறமை இல்லாதவங்கன்னு அர்த்தமா?”
“நான் அப்படி சொல்லலை அப்பு”
“ம்ப்ச்… இது பத்தி இதுக்கு மேல பேச வேண்டாம் விடுங்க”
அத்தனை பெரிய அரசியல் குடும்பத்தில், அன்பு நேசனின் அம்மாவே ஒரு புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவராக இருக்கையில், ஒரு பாட்டு கிளாஸுக்குப் போக அவன் இத்தனை தர்க்கம் செய்வான் என அபர்ணா சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
மனைவியின் முக வாட்டம் பிடிக்காது, சற்று நேரத்திற்கெல்லாம் வந்து நின்றவன் “அப்பு, நீ வேணா அவங்களை நம்ம வீட்டுக்கு வரச் சொல்லேன்”
“...”
“உங்கிட்டதான்டீ பேசறேன்”
“உண்மைய சொல்லட்டுமா?”
“ம்”
“என்னாலயே இந்த வீட்டுல ஃப்ரீயா பாட முடியலை. பாட்டு மாமி வயசானவா. அவா இடத்துலன்னா நான் பாடறதுல இருக்கற குறை, தப்பை சுதந்திரமா சுட்டிக் காட்டறதோட, அதை எங்க, எப்படி இம்ப்ரூவ் பண்றதுன்னு சொல்லுவா”
“...”
“சில நேரம் ஹை பிட்ச் (Pitch) , அதாவது உச்சஸ்தாயில பாட வரதுக்காக ஆ… ஈ… ஊ… ஓ…ன்னு மட்டுமே ரொம்ப நாழி ஆலாபனை பண்ண வைப்பா. சின்ன வயசுல, பாடற எனக்கே சிரிப்பா வரும். புது இடத்துல ஃப்ரீயா பாட முடியாம பழக்கம் இல்லாதவா யாராவது கேட்டு சிரிச்சுட்டா… மாமி பாவம். குருவை கூப்பிட்டு சங்கடப் படுத்தறதுல எனக்கு விருப்பம் இல்லை. வேண்டாம். நான் போகலை. லீவ் இட்”
விலகிச் சென்றவளை இழுத்துப் பிடித்தவன் “என்னைக்கு, எப்ப போகணும்னு சொல்லு, முதல் நாள் நானே கூட்டிட்டு போறேன்”
“நிஜமாவா நேசா?” என்றவளின் கலங்கிய கண்கள் அன்புநேசனை கட்டிப்போட்டன.
அவள் கண்களை ஊடுருவியவன் “இந்தப் பாட்டுக்காக நீ எங்கிட்ட சரியா பேசக்கூட இல்லைல?”
பாட்டு வகுப்பு தொடங்கிய பிறகும் ஒவ்வொரு நிலையிலும் போராட்டம்தான். அந்த வருடம் டிஸம்பர் சீஸன் சமயம் கருத்தரித்திருந்தாள். பிறகு இறுதி செமஸ்டர் தேர்வுகள். அடுத்த வருடம் கையில் இரண்டு மாத அருள்மொழி.
இருப்பினும் பாட்டு வகுப்பையும் பாடுவதையும் தொடர்ந்தாள் அபர்ணா.
இதற்கிடையில் அன்புநேசன் தீவிர அரசியலில் இறங்கியதை ரசிக்காத ஐய்யாரப்பன் ஏதோ சொல்ல, அன்புநேசனும் பதில் பேசி விட, பொன்னி அழத் தொடங்கினாள். இதுபோல் அடிக்கடி நடக்கவும், அன்புநேசனின் பெற்றோர்களே மகனையும் மருமகளையும் வேறு வீட்டில் தனிக்குடித்தனம் வைத்துவிட்டனர்.
மூன்றாவது வருடம் சங்கீத சீஸனுக்கு கணிசமான நாட்கள் இருக்கும்போதே, மகளின் இசைக்கு இனிமேலும் இடைவெளி விடக்கூடாது என்று எண்ணிய ஸ்ரீநிவாஸன் அன்புநேசனிடம் வந்து பேசினார்.
பெற்ற அப்பாவிடமே “அவளை யார்னு நினைச்சீங்க, எங்க வீட்டு மருமக, கோவில்ல, பொது சபைல போய் பாட்டு பாடப் போனா நல்லாவா இருக்கும்?” என்றதைக் கேட்ட அபர்ணா தந்தையை விட அதிகம் அதிர்ந்தாள்.
தந்தையின் எதிரே கணவனை எதிர்ப்பது இருவரையுமே சங்கடத்துக்கு உள்ளாக்கும் என்பதால், தந்தையிடம் சமாதானமாக “விடுங்கோப்பா, அப்புறம் பாத்துக்கலாம்” என்றவளின் குரலில் மருந்தளவு கூட நம்பிக்கை இல்லை.
தன் பொறியியல் படிப்புக்கான வேலை எதையும் பார்க்க முடியாது என்பது முன்பே தெரிந்ததுதான். ஆனால், பாட்டுக்கும் அதே கதி என்பதை ஏற்க இயலாது தவித்தாள்.
“நான் வரேன்” என்று புறப்பட்ட ஸ்ரீநிவாஸன், சட்டென கைகளை கூப்பியபடி, தனக்காகத் தன் கணவனிடம் இறைஞ்சியதைத் தாள முடியாத அபர்ணா “போறும்பா, நீங்க ஜாக்கிரதையா ஆத்துக்குப் போங்கோ” என்றாள், அழுகையினூடே.
நடப்பது புரியாது வேடிக்கை பார்த்த பேரனைத் தூக்கி முத்தமிட்டவர் “புத்தியோட, தைரியமா இரு அபூ. கணடதையும் யோசிக்காம குழந்தையைப் பார்த்துக்கோ. நான் வரேன்” என வெளியேறினார்.
எவ்வளவோ இயல்பாக இருக்க முயன்றும் அன்புநேசனிடம் சகஜமாகப் பேச முடியாது அபர்ணாவை எதுவோ தடுத்தது.
மிகுந்த சிரமத்துடன் மூன்று நாள் வரை பொறுத்தவன், நாலாம் நாள் விடியும் முன்பே தொடங்கி விட்டான்.
“உங்கப்பா வந்து வக்காலத்து வாங்கின தெனாவெட்டுலதானே இப்படிப் பேசாம, பாக்காம அலட்சியமா சுத்திக்கிட்டு இருக்க?”
அபர்ணா அமைதியாக விலகிச் செல்ல, வலிந்து இழுத்துத் தன்னோடு அணைத்துக் கொண்டவன்,
“என்னைப் பார்த்தா உனக்கு எப்டிடீ இருக்கு, ரெண்டு நாளா தொடக் கூட விட மாட்டேங்கற. சும்மா பக்கத்துல வந்தாலே, கேடயம் மாதிரி இந்த அருள் பயல தூக்கி வெச்சுக்கற”
அவனிடமிருந்து விடுபடத் திமிறியவள், இயலாது போக, நிமிர்ந்து நேர்ப் பார்வையாகப் பார்த்தாள்.
“யெஸ். எங்கப்பா எனக்கு சப்போர்ட் பண்ணினதுல எனக்கு ரொம்பவே தெனாவட்டுதான். கர்வம்தான். பொண்ணுங்கறதாலயே படிக்க அனுப்பாம, எந்த சுதந்திரமும் தராம, பயமுறுத்தி வீட்டுக்குள்ளேயே அடைச்சு வைக்காம, எங்களைப் படிக்க வெச்சு, எங்க திறமையை வளர்த்து, அதை சரியான பாதைல கொண்டு போற எங்கப்பா, உங்களோட குடும்பத்தோட பவர் தெரிஞ்சும் எனக்காக வந்து பேசறதுல, நான் கர்வப்படாம, பெருமைப்படாம இருந்தாத்தான் தப்பு”
“...”
“உங்க வீட்டு மருமக கோவில், சபால கச்சேரி பண்றதை கேவலமா நினைக்கற நீங்க, அதே சபால பாடின என்னை ஏன் ஊரெல்லாம் லவ்வுன்னு பொய் சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?”
“ஏய்…” என்ற அன்புநேசனின் இறுக்கத்தில் அபர்ணா திணறினாள். பதினைந்து மாத மகன் அருள்மொழி ஏதோ விளையாட்டு போல எனப் பார்த்திருக்க, அபர்ணாவின் தாவாங்கட்டையை ஒற்றைக் கையால் பிடித்து அழுத்திய அன்புநேசன் வன்மையாக அவள் இதழில் பதிந்து, நீண்ட நிமிடங்கள் சென்று விலகியவன்,
“நீ பாடு, ஆடு. ஆனா, என் லவ்வை குறை சொல்ற வேலையெல்லாம் வேணாம்” என்ற எச்சரிக்கையுடன் அவளை விடுவிக்க, அபர்ணாவுக்கு சாறெடுத்த கரும்புச் சக்கை போலான உணர்வு.
ஹாலுக்குச் சென்று குறுக்கும் நெடுக்கும் நடந்தவன், திரும்பி வந்து “நான் வேணாம்னு சொன்னா அதுக்கு ஒரு காரணம் இருக்கும்னு யோசிக்க மாட்டியா?”
“...”
“காஷ்! நான் என்ன சொல்லி உனக்குப் புரிய வைப்பேன். எனக்கு நீ… எனக்கு ரொம்ப பொஸஸிவா இருக்குடீ, புரிஞ்சுக்கோயேன்”
“...”
“அப்பு…”
இதற்கு என்ன சொல்வாள், என்ன சொல்ல முடியும்?
ஒரு மனைவியாக “நீ உரிமை கொண்டாட, உடமைப்படுத்த நான் ஒன்னும் உனக்கு மட்டும் சொந்தம் இல்லை’ என்றா சொல்ல முடியும்?”
அழகான பொம்மையைப் பார்த்ததும் அது எனக்குதான் என்று அடம் பிடித்து வாங்கி வந்து, விளையாடி முடித்ததும் மூலையில் எறிவதற்கு அபர்ணா ஒன்றும் பொம்மையில்லையே?
இவளிடம் எகிறிவிட்டு சோகமாக , கோபமாக சுருண்டு கிடந்தவனை, அபர்ணாதான் கெஞ்சிக் கொஞ்சி, சமாதானப் படுத்தி சாப்பிட வைக்க வேண்டியதாயிற்று. ஒரே வீட்டில் ஒரே அறையில் ஒரே படுக்கையில், ஒரு இரண்டரை நாள், அவள் சற்றே விலகி இருந்ததற்கு வட்டி போட்டு வசூலித்தான் அன்புநேசன்.
அவளைத் தனித்துவிடும் எண்ணம் அவனுக்கும், முரண்டுபிடிக்கும் சுபாவம் அவளுக்கும் இல்லையாதலால், அடுத்து வந்த நாட்களில் சண்டை நலிந்து சமாதானம் வலுத்தது.
திடுதிப்பென அந்த வருடம் பொங்கல் தில்லைஸ்தானம் கிராமத்தில் என அறிவித்த மாமனார் புருஷோத்தமன் செய்து டெல்லியில் இருந்து ப சென்னை வர,அவரது திடீர் விஜயத்திற்குக் காரணம் இருந்தது.
பொங்கல் விழா முடிந்த மறுநாள், திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு ஸ்ரீ தியாகராஜரின் ஆராதனையைத் தொடங்கி வைக்க, துணை ஜனாதிபதி வருவதாக இருந்ததால், தொகுதி MP என்ற முறையில், புருஷோத்தமனும் அதில் கலந்துகொள்ள இருந்தார்.
முன்னதாகவே குடும்பமாய் ஊருக்குச் சென்றனர். கிராமத்து, பண்ணை வீட்டுப் பொங்கல் அபர்ணாவிற்குப் புது அனுபவத்தைத் தந்தது. அன்புநேசன் அவளுக்குச் சொந்தமானதில் எத்தனை முறையுள்ள உறவுப் பெண்களின் பொறாமையை சம்பாதித்திருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொண்டதில், எப்போது என்று தெரியாமலே ‘நேசா ஈஸ் மைன்’ என்ற உணர்வில் தவித்தவளை, எளிதாக இனம் கண்டுகொண்டான் கணவன்.
‘எங்க ஊர் விழா’ என்று பெருமை பேசிய புருஷோத்தமன் “வைஸ் பிரஸிடண்ட் முன்னால நீ பாடுறதுக்கு ஏற்பாடு பண்ணி இருக்கேன் மா” என ஏதோ அவர்தான் பெருந்தன்மையுடன் முதன் முதலில் அபர்ணாவிற்கு சான்ஸ் வாங்கித் தந்ததுபோல் பேச, கணவனின் முகத்தில் தெரிந்த சம்மதத்தையும் சந்தோஷத்தையும் அபர்ணா ரசிக்கவில்லை.
‘இவாளோட அரசியல் ஆதாயத்துக்காக நான் பாடணுமா, இதுல நானும் என் சங்கீதமும் எங்க இருக்கோம்?’
தன் வீட்டிற்கு அழைத்துப் பேச, ஸ்ரீநிவாஸன் “அபூ, அங்க இருந்துண்டு எப்படியும் உன்னால அடிக்கடி கச்சேரி பண்ண முடியாது. இதை ஒரு வாய்ப்பா நினைச்சுக்கோ. பார்க்கலாம். ஆல் தி பெஸ்ட்” என்றார்.
விழாவில் மூன்றரை வருட இடைவெளிக்குப் பிறகும் சாதகத்தை விடாத அபர்ணா, பாடியது இரண்டே கிருதிகள் என்றாலும், வெகு சிறப்பாகப் பாடியதோடு, ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டையும் வரவேற்பையும் பெற்றதில், இரண்டாவது முறையாக அதே தியாகராஜ ஆராதனைவிழாவில் அபர்ணாவின் இசைப்பயணம் (சிலபல நிபந்தனைகளுடன்) தொடர்ந்தது.
அதற்கு தேசியத் தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பும், சமுக வலைத்தளங்களும் அபர்ணாவை உடனடியாக வைரலாக்கி இருந்தது ஒரு காரணமெனில், அபர்ணாவையும் அன்புநேசனையும் சூழ்ந்துகொண்டு கேள்விகளால் துளைத்த செய்தியாளர்களே அதி முக்கியக் காரணம்.
“மூணு வருஷ இடைவெளி ஏன் மேடம்?”
“திருமணம் உங்க பாட்டுக்குத் தடையா இருந்ததா மேம்?”
“உங்க மனைவி மீண்டும் பாட வந்ததுல உங்க பங்களிப்பு என்ன ஸார்?”
“இனிமே தொடர்ந்து பாடுவீங்களா மேம்?”
“உங்க கணவருக்கான ஸ்பெஷல் பாட்டு ஏதாவது?”
“மேடம், அடுத்த கச்சேரி எப்போ, எங்க?”
சிலவற்றிற்கு அபர்ணா பதிலளிக்க, அன்புநேசனே “விரைவில் அறிவிப்பு வரும், நன்றி” என செய்தியாளர் சந்திப்பை முடித்து வைத்தான்.
அதைத் தொடர்ந்து மாத, வாரப் பத்திரிகைகளும் பேட்டிக்காக முற்றுகையிட்டதில், அபர்ணாவிற்கு கச்சேரிக்கான அழைப்புகள் வரத்தொடங்கின. கூடவே கணவனின், புகுந்த வீட்டினரின் நிபந்தனைகளும்.
‘சின்னச் சின்ன சபாக்கள், சீஸன் முழுவதும் பாடுவது, கோவில் கச்சேரிகள், அதிகமான பயணங்கள் கூடாது. விஜபிக்கள், சமூகத்தில் அந்தஸ்தான இடத்தில் இருக்கும் பெரிய மனிதர்கள், முக்கியமான வெளிநாட்டு நிகழ்ச்சிகள், மற்றும் அரசு விழாக்களில் பாடலாம்’ போன்ற நிபந்தனைகளுடன் அபர்ணா பாட அனுமதிக்கப்பட்டாள்.
மொத்தத்தில் அதிகாரமும் ஆளுமையும் மிக்க high profile மனிதர்களுக்கெதிரே பாடுவதற்கு அனுமதி கிடைத்தது. அவர்கள் சங்கீதத்தை ரசித்தால், அது அபர்ணாவின் அதிர்ஷ்டம்.
பாட்டியும் பெற்றோரும் “இது இப்டியே போகாதுடீ அபூ. பாடவே கூடாதுங்கற இடத்துல இருந்து இங்க வந்திருக்க. நாளடைவுல இதுலயும் மாற்றம் வரும்னு நம்பிக்கையோட வர சான்ஸை மிஸ் பண்ணாம, சரியா யூஸ் பண்ணிக்கோ” என்றனர்.
“மா…ம், எங்க யோசனை, டாடீ என்ன ஆர்டர் பண்ணி இருக்காங்கன்னு பாரு, இது பேரு கட்டல் கபாப். பேபி ஜாக் ஃப்ரூட்ல (பலாமுசு) செஞ்சதாம். கேன் யூ பிலீவ், சூப்பரா இருக்கு டாடீ”
அன்புநேசன் “அப்பு, ஆ ஊன்னா டயம் மிஷின்ல ஏறி நிக்க வேணாம், சாப்பிடு” என மிக அருகில் புன்னகைத்தான்.
‘அந்த அல்பாவைப் பத்தி ராகவ் சொன்னதை இவர் கிட்ட எப்டி சொல்றது? நான் சொன்னா இவர் நம்பணுமே. உனக்கு யார் சொன்னா, நீ ஏன் அவளை ஸ்டாக் (stalk) பண்றன்னு ஆயிரெத்தெட்டு கேள்வி கேப்பாரே’
உணவு முடித்து எழுந்து ஓய்வறை சென்று ஃப்ரெஷ் ஆகி வந்து வெளியேறும் முன் இடப்புறம் இருந்த கோல்ஃப் பாரின் (Golf Bar) திறந்து மூடப்பட்ட கதவு வழியே கையில் உயர்தர க்றிஸ்டல் கிளாஸ்களில் ஐஸ் கட்டிகள் மிதந்த பொன்னிற- செந்நிற திரவத்துடன், கவர்ச்சியான உடையணிந்த அல்பா லால்வாணியுடன் பேசிக்கொண்டிருந்த ஐய்யாரப்பனைக் கண்ட அபர்ணாவும் அன்புநேசனும் ஒருவரையொருவர் பார்த்த பார்வையில் ஆயிரம் வோல்ட் அதிர்ச்சி.

Author: VedhaVishal
Article Title: தோற்ற மயக்கங்கள் 7
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.