• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

நாணங்களும் எதற்காக? 10

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
67
321
83
Chennai
நாணங்களும் எதற்காக? 10


சஞ்சய் தேசாய், அவனது தந்தை, மருத்துவமனையின் இன்னும் இரு பங்குதாரர்கள், பிரபலமான சீனியர் மருத்துவர்கள் சிலர் என நிகழ்ச்சியை ஏற்பாடு‌ செய்தவர்களுடன் கை‌குலுக்கி, நன்றி தெரிவித்த சிங்கபிரான்‌, மேடைக்குப் பின்னே சென்றான்.

பாலாமணி நாகமணி மற்றும் அவரது கணவருடன் அவர்களது காரிலேயே வீட்டுக்குச் சென்றிருந்தார்.
கூட்டம் பெரும்பாலும்‌‌ கலைந்திருக்க, இன்னும் சிலர் வண்டிகளுக்காகக் காத்திருந்தனர்.

நாதம் மியூசிகா குழுவினர் எப்போதும் அணிவதற்கு வசதியான, நாகரிகமான, கண்ணை உறுத்தாத‌ உடைகளையே நிகழ்ச்சிகளுக்கு அணிவதால், உடை மாற்றும் அவசியம் இல்லை.

வாரக்கணக்கிலான பயிற்சி, இந்த நாளின் தயாரிப்புகள், வழக்கமான கால அளவைத் தாண்டி இன்றைய மூன்று மணி நேர நிகழ்ச்சி நிறைவாக முடிந்ததில் இறுக்கம் தளர்ந்து, காஃபியுடன் இன்றைய நிகழ்ச்சி பற்றிய அவரவரது கருத்து, பாராட்டு, மேடையில் நடந்த சில சுவாரஸ்யங்கள் என சற்றுத் தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டு இருந்தனர்.

சிங்கபிரான் உள்ளே வந்ததும் “ஹே…” என்ற ஆரவாரம் எழுந்தது.

“தேங்க் யூ கைய்ஸ்… எக்ஸலன்ட் டீம் ஒர்க். செம கோஆர்டினேஷன். பிசிறில்லாத‌ துல்லியமான சவுண்ட் சிஸ்டம். ஸ்மூத்தா போச்சு கான்ஸர்ட்” என‌ ஒவ்வொருவரிடமும் கை‌ குலுக்கினான்.

“ஜோயல், இன்னிக்கு ட்ரம்ஸ்‌ வேற லெவல்டா”

“கிருஷ்ணா… கிடார் அன்ட் ராக் பேண்ட்… what a precision man! கேசவ் அண்ட் டீம்” என கட்டை விரலை உயர்த்திக் காட்டியவன், அவர்கள் மூவரையும் அணைத்து விடுவித்தான்.

ஜோயல் “த்ரீ சியர்ஸ் ஃபார் நாதம் மியூஸிகா…எனவும், எல்லோரும் மூன்று முறை ஹிப் ஹிப் ஹுர்ர்ர்ரே” என கோஷம் எழுப்பினர்.

குழுவினரும் உதவியாளர்களும் குழுவின் இசைக்கருவிகளையும், மற்ற மின் கருவிகளையும் ட்ரக்கில் ஏற்றச்‌ சென்றனர். இவர்களது ஸ்டாலில் வைத்திருந்த பொருள்கள் அனைத்தும் விற்றுத்‌ தீர்ந்திருந்தன.

“கிட்டத்தட்ட பதிமூணு லட்சம் சேல்ஸ்” என்றான், ஸ்டால் மேனேஜர் கிரண்.

“நாளைக்கே ஒரு லெட்டரோட ஹாஸ்பிடலுக்கு டிடி அனுப்பிடு கிருஷ்ணா” என்றான் சிங்கபிரான்.

“டன்”

“கேர்ள்ஸ், கிளம்புங்க. தனியா போறவங்க ரீச் ஆயிட்டு கால் பண்ணுங்க. பை”

பரபரப்பான பத்து நிமிடங்களில் இத்தனையும் நடக்க, நண்பர்கள் மூவருக்கும் காஃபி வர, தனியே சென்றனர்.

கிருஷ்ணன் மேனன் “ஜோயல், இன்னிக்கு சிங்கம் சும்மா கர்ஜிச்சு… அல்லே?”

ஜோயல் “அதுவும் புல்புலைப் பார்த்து…”

“டேய்… ஏங்கடா?” என்ற சிங்கபிரானின் முகமும் காது நுனிகளும் மெலிதாகச் சிவந்தது ஃப்ளட் லைட் வெளிச்சத்தில் நன்றாகவே தெரிந்தது.

“கேசவ், இங்க வா… சிங்கம் சிவந்து…” என்ற ஜோயலின் வாயைப்‌ பொத்திய சிங்கபிரானுக்கு, விடலைப் பையன் போல் நண்பர்களின் கேலிக்கு வெட்கப்படுவதே வெட்கமாக இருந்தது.

மேகம் கூடி, குளிர் காற்று வீச, மழைத்துளிகள் விழத் தொடங்கியது.

“தேங்க் காட்! ப்ரோக்ராம் முடிஞ்சதும் மழை வந்ததே” என்றபடி, பாலாமணியை அழைத்த‌ சிங்கபிரான் “போய் சேர்ந்தாச்சாம்மா?” என விசாரித்தவன், அடுத்து சின்மயி அனுப்பிய ஹார்ட்டீன்களைப் பார்த்துப் புன்னகைத்தபடி அழளை அழைத்தான்.

“ஹலோ… புல்புல்”

“...”

“அதுக்குள்ள தூங்கிட்டியா புல்…. ஏன்டீ பேச மாட்டேங்கற…. ஏய், அழறியா‌…‌ ம்ப்ச்…, வெய்ட், நான் வரேன்”

அழைப்பை துண்டித்த சிங்கபிரான், மேடையில் நின்றிருந்த‌ கேசவை அழைத்து, “பார்க்கிங்ல இருந்து வண்டி‌ கொண்டு வரச் சொல்லு. க்விக்”

“கிருஷ்ணா, ஜோ, ஸாரி டா, நான் கிளம்பறேன். நாளைக்குப் பேசலாம்” என்றபடி திடலின் வாயிலை நோக்கி ஓடினான்.

இரவு நேரம் என்பதால், போக்குவரத்து‌ குறைந்திருக்க, பதினோரு கிலோமீட்டரை பதினைந்தே நிமிடங்களில் கடந்திருந்தான்.

அபார்ட்மென்ட் செக்யூரிடியிடம் “டாக்டர் சின்மயி” என, அவர்கள் கை காட்டிய திசையில்…

ஒரு கட்டிடத்தின் தூணில் சாய்ந்தபடி, மெலிதான சாரலில் நனைவதைக் கூட உணராமல், வெற்றுப் பார்வையுடன் நின்றிருந்த சின்மயியைக்‌ கண்ட சிங்கபிரானுக்குப் பதறியது.

பயமுறுத்தாத தொலைவில் காரை நிறுத்தி, மழையில் இறங்கி ஓடினான்.

“புல்புல்?”

பேசுவதே புரியாதது போல் பார்த்தவளின் கண்கள் மாதாடியது.

“என்னாச்சு புல் புல், ராத்திரி ஒண்ணே கால் மணிக்கு இங்க ஏன் நிக்கற?”

“...”

“புல்புல்” உலுக்கினான்.

“ச்சிங்கா… கதவு‌ பூட்டி இருக்கு ச்சிங்கா”

“உங்கிட்ட‌ ஸ்பேர் கீ‌ இல்லையா… உங்கப்பா உள்ளதானே இருக்கார், பெல் அடிக்க வேண்டியதுதானே…”

“சாவி‌ இருக்கு. ஆனா, தாப்பா போட்டுண்டு தெறக்க மாட்டேங்கறார் டா”

“வாட்?... ஓ… என் ப்ரோக்ராம், நான்தான் பாடறேன்னு‌ அவருக்குத்‌ தெரியுமா?”

“இன்னிக்கு சாயங்காலம் நான்‌ கிளம்பும்போது ‘அவன் பாடறதைக்‌ கேட்கப் போனா அப்படியே போயிடுன்னார்…”

“அர்ரகன்ட் பாஸ்டர்ட்” என‌‌ அடிக்குரலில்‌ சபித்தவன், “ஹரிக்கு‌ தெரியுமா?”

“ம்ஹும். அவனுக்கு பேசினேன். எடுக்கலை. அப்பதான் உன் கால் வந்தது”

“எப்ப இருந்து கீழ இருக்க?”

“நிறைய தரம் தட்டிப் பார்த்தேன்.‌ நடுராத்திரி வேற. அப்பவே எதிர் வீட்டு ஆள் ரெண்டு தரம் கர்ட்டனை திறந்து பாத்துட்டு போனான். காரிடார்ல‌ நான் நிக்கறது சிசிடிவில‌ வேற தெரியும். அதான் வந்துட்டேன்…”

“ஹரி மேல வரலையா புல்புல்… உங்கப்பாவைப் பத்தி இன்னுமா உங்களுக்குப்‌ புரியல?”

“குழந்தை தூங்கிட்டான்னு
போய்ட்டான்”

காவலாளிகள் ரோந்து‌ போவதைப் போல்‌ வந்து நோட்டம் பார்க்க, சிங்கபிரான் மௌனமானான்.

சிங்கபிரானின்‌ கேள்விகளும் அவன் கேட்பதும் இயல்புதான்… நியாயம்தான். ஆனால், நள்ளிரவில்‌ ஆதரவற்று, யாரும் இல்லாதவளைப் போல் வெளியில்‌ நிற்க நேர்ந்ததில், தந்தையின் ஆணவத்தைத் தனியாக எதிர்கொண்டதில் மிகுந்த பதட்டத்தில் இருந்த சின்மயி‌, மெலிதாக நடுங்கினாள்.

என்னதான், நட்பு, நெருக்கம் என்றாலும் தந்தையின்‌ செயலை, தன்னை நினைத்து அவமானமும் கழிவிரக்கமும்‌ அவளை வாட்டியது. வரம்பு கட்டி நின்றது கண்ணீர். நிறைய அழுது, துடைத்திருந்த தடம் தெரிந்தது.

‘உனக்கு‌ ஏன்‌ புல்புல்‌ இது?’

“இந்த பில்டிங்தானா?”

“ம். மூணாவது மாடி”

“சரி வா, போகலாம்”

“இல்ல… நான் வரலை”

“ம்ப்ச்… எங்கூட வாடீன்னா…”

“...”

“நைட் முழுக்க இங்கயே நிக்க முடியாது புல்புல். மழை வேற வலுக்கறது. சொன்னா கேளு”

“...”

சின்மயியிடம்‌ கெஞ்சிக் கூத்தாடி‌ வெகுவாக சமாதானம் செய்து, ஒரு வழியாகக் காரில்‌ ஏற்றி, அப்பார்ட்மென்ட் வளாகத்தின் வாயிலைக் கடக்கையில் செக்யூரிட்டிகளின் பார்வையில் இருந்த ஆர்வமும் ஆவலும் பரிதாபமும் சிங்கபிரானுக்கே உறுத்தியது. சின்மயி தலை குனிந்து, கண் மூடி அமர்ந்திருந்தாள்.

காரை செலுத்திக்கொண்டே, இடக்கையால் ‌சின்மயியின் வலக்கையில் தட்டியவன் கைகளைக் கோர்த்துக் கொண்டான்.

“புல் புல்… விடுடா, பாத்துக்கலாம்”

ஐந்தே நிமிடங்களில் அவன் வீட்டில் இருந்தனர். கதவைத் திறந்த பாலாமணிக்கு அந்த நேரத்தில் சின்மயியுடன் வந்து நின்ற மகனைப் பார்த்த அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை. அமைதியாக வழிவிட்டு, வீட்டினர் புழங்கும் உள் கூடத்தில் இருந்த ஊஞ்சலில் போய் அமர்ந்துகொண்டார்.

கதவைப் பூட்டி விட்டு வந்த சிங்கபிரான் “ரெண்டே நிமிஷம் புல் புல்” என மேலே அவன் அறைக்குச் சென்றான்.

எதுவும் செய்யவோ சொல்லவோ தயங்கி, தர்மசங்கடமாக, கூச்சமாக, அவமானமாக உணர்ந்த சின்மயி Embarrassment என்ற ஆங்கில பதத்திற்குப் பொருளாக நிற்பது போல்‌ உணர்ந்தாள்.

‘ச்சிங்கா‌ சொன்னதைக் கேட்காம ஹரியோட வீட்டுக்கே போய் இருக்கலாமோ?’

நல்லவேளையாக, நாகமணியும் அவள் கணவரும் அவர்களது‌ வீட்டிற்குச் சென்றிருந்தனர். எவ்வளவு பழக்கமான, நெருங்கிய உறவினர் என்றாலும், நடந்ததை தெரிந்து கொள்வதற்கும், நேரில் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறதே!

தன்னை சுதாரித்துக்கொண்டு “இங்க வா சின்மயி” என்ற பாலாமணியின் அழைப்பில் உள்ளே வந்தாள்.

அதற்குள்‌ உடைமாற்றி, ஈர மினுமினுப்புடன் தடதடவென கீழிறங்கி வந்த சிங்கபிரான் “புலபுல், முதல்ல நீ போய் ஃப்ரெஷ்‌ ஆயிட்டு‌ வா. …ம்மா… அவளுக்கு மாத்திக்க ட்ரெஸ் ஏதாவது குடும்மா”

பாலாமணி “என்னோட வா” என்று தன் அறைக்கு‌ அழைத்துச் சென்றவர், ஒரு புதிய நைட்டியை எடுத்துக் கொடுத்தார். தயங்கியவளின் தோளில் போட்டவர்

“எதையும் யோசிக்காத சின்மயி. மழைல நனைஞ்சதுல புடவை ஈரமா இருக்கு பாரு. சீக்கிரமா வா” என்றபடி‌ அறைக்கதவை‌ சாத்திவிட்டு வெளியேறினார்.

சமையலறையிலிருந்து வெளிச்சமும் புது டிகாக்ஷனின் மணமும் வர, பாலாமணி சிங்கபிரானைத்‌ தேடிச் சென்றார்.

ஒரு அடுப்பில் பால் இருக்க, சிங்கபிரான் ஸ்டோர் ரூமில் நின்று‌ எதையோ ஆராய்ந்து‌ கொண்டிருந்தான்.

“சிங்கம், ஏதானும் சாப்ட்டியாடா… சின்மயி சாப்ட்டாளா… தோசை வார்க்கட்டுமா?”

“வேண்டாம்மா, மேகி பண்றேன்”

“இந்த நேரத்துலயா?”

“சூடா சாப்பிட்டா மழைக்கு, இதமா இருக்கும் மா. சின்மயிக்குப் புடிக்கும்”

சிறிது நேரம் அவன் வேலை செய்வதை வேடிக்கை பார்த்த பாலாமணி “என்னடா பிரச்சனை?”

“வழக்கம்போல மிஸ்டர் பரசுராம்தான் பிரச்சனை. வேறேன்ன?”

“...”

“சிங்கபிரானோட பாட்டைக் கேட்டுட்டு வந்ததால புல்புல்லுக்கு வீட்டுக்குள்ள நோ என்ட்ரி”

“மனுஷனாடா அவன்?”

“நான் எப்பம்மா அப்படி சொன்னேன்… ஆனாலும், இந்த புல்புல் இருக்காளே… அவ அப்பா மேல அசாத்ய நம்பிக்கை அவளுக்கு”

“இவ ஹரியோடதானே போனா… அவன் கூட என்னை விசாரிச்சு நல்லதனமா பேசினானே”

“பேசறதுக்கு என்னம்மா… காசா, பணமா?‌”

ஒரு நொடி நிதானித்த பாலாமணி, கேள்வியை கவனமாகக் கோர்த்தார்.

“சிங்கம், இப்டி ராத்திரில‌ சின்மயி உங்கூட இங்க வந்தது தெரிஞ்சா பிரச்சனை இன்னும் பெருசா ஆகாதாடா?”

“ஆகட்டும். ஆகணும். அதுக்குதான் மீ வெயிட்டிங்”

“அதுக்கில்லடா சிங்கம்… என்ன இருந்தாலும், ஹரி அவ‌ அண்ணா…”

“அதை உரைக்கிற மாதிரி யாராவது அவனுக்கு சொன்னா‌ தேவலை”

“...”

“...ம்மா, சும்மா போய்‌ சேர்ந்தாச்சான்னு கேட்கதான் கால் பண்ணினேன். பேச‌ முடியாம அழறா. அப்டியே விட சொல்றயா… புல்புல் மா”

“...”

“மழை பெய்யறது. அர்த்த ராத்திரில‌ தனியா கீழ நிக்கறா. செக்யூரிட்டி‌‌ எல்லாம் வேடிக்கை பாக்கறான். ஒரு மாதிரி நெர்வஸா ஆயிட்டேன். I felt jittery மா, you know”

மகனைப் புரிந்து கொள்ள முடிந்தாலும், பாலாமணி பின் விளைவுகளை எண்ணிக் கவலைப்பட்டார்.

பாலாமணியிடம் “அம்மா, உனக்கு மேகி?”

“கண்ட நேரத்துல எனக்கு எதுவும் வேண்டாம். பிள்ளையார் சதுர்த்தி வேற”

“அடுத்த நாள்‌ வந்தாச்சும்மா. மணி பாரு”

சின்மயி வந்தபோது தலையில் கொத்தமல்லி இலை தூவி ஒரு ஸ்பூன் பட்டருடன் ஆவி பறக்கும் மேகியும் காஃபியும்‌ தயாராக இருந்தது.

முகத்தில் மறுப்பு தெரிய நின்றளை சோஃபாவிற்கு ‌இழுத்து‌ அருகில் அமர்ந்து “சாப்பிடு புல்புல்” எனக்‌ கையில் திணித்தான்.

“...”

சிங்கபிரான்“எனக்குப் பசிக்கறது புல்புல்” என்றதில்
சின்மயி அமைதியாக சாப்பிடத் தொடங்கினாள். ஒரு வாய் பருகியவள், காஃபியின் சுவையில் முகம் மாறினாள்.

சிரித்த சிங்கபிரான்,
“கசப்பு நல்லது புல் புல். மைன்டை க்ளியர் பண்ணும்”

அவர்கள் உண்டு முடிக்கும் வரை காத்திருந்த பாலாமணி
“சிங்கம். லாங் டே. போய்ப் படு. சின்மயி என்னோட படுத்துப்போ” என்று எழுந்தார்.

“ஓகே மா, குட் நைட். நீ போ, அவ வருவா”

பாலாமணி எதுவும் பேசாது எழுந்து அறைக்குள் சென்றார்.

“தூங்கு புல் புல். எதானாலும் பார்த்துக்கலாம்”

சின்மயி “ஸாரி ச்சிங்கா… லாங் பிஸி‌ டே உனக்கு. நான் உன்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்… ச்…ச்சிங்…கா!!!

சின்மயி பேசப்பேச அவள் அவளை மிக நெருங்கி இறுக்கி அணைத்திருந்தவன் “கொயட் புல் புல்”

முதன் முறையாகத் தன் சிறுவயது தோழனிலிருந்து வேறான புதியதொரு சிங்கபிரானை, அவனது வாசனையை, தொடுகையை, அவன் தரும் பாதுகாப்பை உணர்ந்த சின்மயி அந்தச் சூழலின் கனம் தாங்காது உடைந்து அழுதாள்.

சத்தம் கேட்டு எட்டிப் பார்த்த பாலாமணி, பூஜையறையில் தெரிந்த காலையில் பூஜை செய்த களிமண் பிள்ளையாரிடம் ‘இந்த வருஷம்‌ உன்னை கரைக்காம வெச்சுக்கறேன். என் விக்னத்தை நீ கரைச்சுடு கணேசா’ என்ற‌ அவசர வேண்டுதலுடன் வந்த சுவடு தெரியாது, திரும்பிச் சென்றார்.

*********************

அடர்ந்து மழை பெய்து கொண்டிருக்க, எட்டு மணிபோல் சிங்கபிரான் இறங்கி வந்தபோது, பாலாமணி தேங்காய் துருவித் கொண்டிருந்தார் .

சீரகம், சோம்பு, வெந்தயம், கருஞ்சீரகம், பட்டை ஆகியவற்றை இரவே ஊறவைத்திருந்த தண்ணீரை மஞ்சள் பொடி சேர்த்து மைக்ரோவேவ் அவனில் வைத்து சுருக்கென்ற சூட்டில் எடுத்து வந்த சிங்கபிரான், அம்மாவின் எதிரே அமர்ந்து கொண்டான்.

காத்திருந்தது போல் “அவ இன்னும் தூங்கறா. கொஞ்ச நேரத்துல கேசவ் வேற வருவான். ஒன்னும் புரியலடா சிங்கம்”

“கவலைப் படாதம்மா. ட்ரூப்புக்கு இந்த வாரம் பிரேக். கேசவ் இனிமே நாளைக்குதான் வருவான்”

“நல்லதா போச்சு”

“பை தி வே, புல்புல்க்கு ராத்திரி காஃபில ஆன்ட்டிஹிஸ்டமைன் மாத்திரை குடுத்திருக்கேன். அவ தூங்கட்டும்”

“ஐயோ… ஏன்டா?”

“அவ இருந்த நிலமைல தானா தூங்கி இருப்பான்னு தோண்றதாம்மா உனக்கு?”

“அதுவும் சரிதான்… பாவம்டா‌ அவ. இப்ப என்ன செய்யணும்னு யோசிச்சயாடா சிங்கம்?”

“ம்… அவ எழுந்தாதான் எல்லாம். ஹாஸ்பிடலுக்கு லீவ் சொல்லணும். ஹரி கிட்ட பேசணும். அந்தாளை நம்பி இவளை அங்க அனுப்ப முடியாது”

சிங்கபிரான் சொன்ன விதத்தில் பாலாமணி பக்கெனச் சிரித்தார்.

“என்னம்மா சிரிக்கற?”

“டேய்… ராத்திரி வேளைல அவர் பொண்ணை கூட்டிண்டு வந்துட்டு, அவ அப்பாவை நம்ப முடியாதுன்னதும்‌ சட்டுனு சிரிப்பு வந்துடுத்துடா… ம்… இதுக்கு என்னமோ சொல்லுவாளே… ஹான்…நகைமுரண்”

“யூ மீன் Irony?”

“அதேதான்”

சின்மயியின் ஸ்லிங் பேக் சோஃபாவில் கிடக்க, அதனுள்ளே இருந்த அவள் மொபைல் ஒலித்தது.

‘சின்மயி ஒரு டாக்டர். ஹாஸ்பிடலில் ஏதாவது அவசரம் என்றால்… குழந்தைகள் வேறு’ என்ற எண்ணத்தில் எடுத்துப் பார்க்க… ஹரி!

சிறிது தயக்கத்துடன் “நான் சிங்கபிரான்” என்றதில் மறுமுனையில் குழப்பமும் அதிர்ச்சியும்.

“ஹலோ”

“நீ சரியாதான்‌ கேட்ட ஹரி. சிங்கபிரான்தான் பேசறேன். சின்மயி இப்ப எங்க கூடதான் இருக்கா” என்றவன், விவரம் சொன்னான்.

“சின்மயி எங்க, ஃபோனை அவகிட்ட குடு”

“கஷ்டப்பட்டு ரொம்ப லேட்டா தூங்கி இருக்கா. எழுந்ததும் பேசச் சொல்றேன்”

“ஓகே”

சிங்கபிரான் “காஃபி குடும்மா”

பாலாமணி அடுக்களைக்குள் செல்ல, சிங்கபிரான் உறங்கும் சின்மயியை பார்க்கச் சென்றான். காஃபியை குடித்தவன் “இதோ வரேன்” என வெளியேறினான்.

*********************

சின்மயிக்கு தூக்கம் கலைந்தும் விழிப்பு வரவில்லை. கண்கள் இரண்டும் விளிம்புகளில் ஒட்டப்பட்டது போல் தாமாகவே மூடிக்கொண்டன. மிகுந்த பிரயாசையுடன் பக்கத்தில் தேட, மொபைலைக் காணோம்.

சடக்கென எழுந்து அமர்ந்தவள் சூழல் மாற்றத்தை உணர்ந்தாள். முந்தைய தின நிகழ்வுகள் அனைத்தும் நினைவுக்கு வந்துவிட, ஜன்னலுக்கு மேல் இருந்த கடிகாரம் மணி பத்தாக இன்னும் நான்கு நிமிடங்கள் இருப்பதாகச் சொன்னது. தலைக்குள் காலியாக, உடலே பறந்தது.

‘ச்சிங்கா‌ காஃபில‌ எதையோ கலந்து‌ குடுத்திருக்கான். அதான் அத்தனை கசப்பு. இல்லாட்டா இத்தனை hallow வா இருக்காது’

கண்டு பிடித்து விட்டாள். டாக்டர் ஆயிற்றே!

‘ஐயோ… ஹாஸ்பிடலுக்கு நேரமாச்சு. லீவும் சொல்லலை. காஷ்!’

‘டயமாறது. சீக்கிரம் கிளம்பணும். எத்தனை நேரம்‌ இங்க இருக்க முடியும்?’

‘போகணும், சரி. எங்க போவ?’

கண்ணோரங்கள் கரிக்கவும், மீண்டும் அழ‌ விருப்பமின்றி ஓய்வறைக்குள்‌ நுழைந்த சின்மயி , கண்ணாடியில் தெரிந்த தன்னைப் பார்க்க, ஒரு‌ நாள் இரவின் அனுபவத்தில் யாரோ போல் தெரிந்தாள்.

பற்பசையைக் கையில் எடுத்தாள்.‌ ‘கடைசியா விரலால பல் தேய்ச்சது எப்போ?’

பாலாமணியின் “எழுந்துட்டயா சின்மயி?” கேட்டது.

“வரேன் மாமி” என்று குரல்‌ கொடுத்தவள், படுக்கையைத் தட்டிச் சரி‌ செய்துவிட்டு வெளியில் சென்றாள்.

காஃபியுடன் வந்த பாலாமணி “ஓரளவு தூங்கினயாம்மா?”

“ம்…”

“...”

“ஸாரி மாமி”

“எதுக்குடீ இந்த ஸாரி, நீ என்ன‌ தப்பு பண்ணின?”

சின்மயி சோஃபாவில் கிடந்த தன்‌ மொபைலை எடுக்கப் போக, பாலாமணி

“ஹரி கால் பண்ணினான். சிங்கம்தான் எடுத்துப் பேசினான். உன்னோட பேசணும்னு கேட்டான்”

“...”

ஹரியும் பவானியும் அழைத்திருந்தனர்.

‘ஓ, விஷயம் கொல்கத்தா வரை போயாச்சா?!’

சின்மயிக்கு ஹரியிடம் என்ன பேசுவது, இப்போது எங்கே செல்வது, சிங்கபிரானோடு ஏன் போனாய் என்றால் என்ன சொல்வது என்று புரியாமல்‌ பஜ்ஜென்று குழப்பமாக இருந்தது.

கார் வந்து நிற்கும் சத்தம் கேட்ட சில நொடிகளில், வேக நடையில் சிங்கபிரான் உள்ளே வந்தான். கையில் புதிய, பெரிய ஜிப் வைந்த ஜுட் பை இருந்தது.

“ஓ, எழுந்துட்டியா புல்புல்…‌ குட் மார்னிங். ஃபீலிங் பெட்டர்?”

“ம்…‌குட் மார்னிங் ச்சிங்கா”

“அத்தனை அவசரமா எங்கடா சிங்கம் போன… இதென்ன பை?”

“சொல்றேன். புல்புல், இதுல உனக்கு‌ ரெண்டு, மூணு செட்‌ ட்ரெஸ் இருக்கு. போய்‌ ரெடி ஆயிட்டு வா”

சின்மயி திகைத்து விழிக்க, பாலாமணி “இவளைப் பார்த்ததும் இப்பத்தான் எனக்கு, இவளுக்கு குளிச்சா மாத்திக்க ட்ரெஸ் இல்லையேன்னு நினைவு வந்தது. நல்ல காரியத்தை செஞ்சேடா சிங்கம். நீ போ சின்மயி”

சிங்கபிரான் “அதுக்கு முன்னால நா இப்ப என்ன செய்யணும்னு சொல்லிட்டுப் போ”

“...”

இந்த இடத்தில் இருந்துகொண்டு, அடுத்த அடியை முடிவு செய்ய வேண்டியது தான்தான் எனத் தெரிந்தாலும், சின்மயிக்கு ஏனோ, சிங்கபிரான்‌ தன்னைத் தனித்து விட்டுவிட்டதாகத் தோன்றியது.

அவள் முகத்தில் தெரிந்த கலக்கத்தை சரியாகப் புரிந்துகொண்ட பாலாமணி,

“ஏன்டா, ராத்திரி வேளைல அவளைக் கூட்டிண்டு வந்துட்டு, விடிஞ்சதும் நீயே முடிவு செய்ன்னா என்ன அர்த்தம்?”

“ம்.. அவ ஏதாவது ஒரு பக்கமா டிஸைட் பண்ணனும்னு அர்த்தம். அதுக்காக அவ முடிவை நான் அப்படியே ஒத்துப்பேன்னு அர்த்தம் இல்லை”

“அடப் போடா”

“ம்மா… அவ இங்கே, நம்மோடயே இருக்கேன்னா எனக்கு டபுள் ஓகே. அவளுக்கு ஓகே யான்னு கேளு. என்ன, புல்புல்?”

அம்மா, பிள்ளை விவாதத்தின் இடையில் விவகாரம்‌ பேசுபவனைக் கண்டு சின்னதாகச் சிரித்த சின்மயி‌ அறைக்குள் சென்றாள்.

ஹரி வீட்டுக்குப் போவதா, தன் வீட்டுக்குப் போவதா, தனியே செல்லலாமா, அப்பா இன்று என்ன சொல்லுவார்… பவானி வேற என்ன சொல்லுவாளோ?

பல வித கேள்விகளுடன் குளித்து, சிங்கபிரான் வாங்கி வந்தவற்றை உடுத்த எடுத்தவளுக்குத் திகைப்பு, வியப்பு, ஆச்சர்யம், சிரிப்பு, கூச்சம்…

ஒரு ஒயிட் டாப்,
ஒரு இன்டிகோ ஸ்கர்ட், இரண்டு ஜெக்கின்ஸ், இரண்டு குர்த்திகள் எல்லாம் நாலு செட் உள்ளாடைகளுடன் இருந்தன.

சின்மயி இது வரை அத்தனை விலை கொடுத்து உள்ளாடைகளை வாங்கியதில்லை.‌ கச்சிதமான அதன் அளவுகள் கூச்சத்தைத் தர, அவற்றை அணியவே தயங்கினாள். சிங்கபிரானை நினைத்து கொஞ்சம் பயமாகக் கூட இருந்தது.

ஒரு வழியாக வெளியில் வந்தவளைப் பார்த்த பாலாமணி, தன் மனதில் இருந்த ‘இன்னர்ஸ் இல்லாம எப்படி… இந்தப் பயல் எங்கிட்ட சொல்லிட்டுப் போனாத்தான் என்ன?’ என்ற கேள்விக்கு விடை கிடைத்து விட, சிரிப்புடன் தலையை ஆட்டிக்கொண்டே,
“சாப்பிடலாம் வாங்கோ” என்றபடி டைனிங் ஹாலுக்குள் சென்றுவிட, அவரது பார்வையில் சின்மயிக்கு எங்காவது ஓடிவிடலாம் போல இருந்தது.

அவளைக் கடந்து உள்ளே‌ சென்ற சிங்கபிரான் “ஏன் ஸ்கர்ட், டாப் போடலை?” என முணுமுணுப்பாகக் கேட்டதில் கை விரல்களை மடக்கி, முஷ்டியால் அவன் முதுகில் அழுத்தித் திருகினாள்.

“குட்… அப்டியே மேல இருந்து கீழ் வரைக்கும் ஸ்பைன் முழுக்க அமுக்…ஏய்…என் முடிய விடுடீ”

“கொன்னுடுவேன் டா உன்னை”

“டூ இட். நீ சும்மாவே அதான் செய்யற”

“எதான்?”

“போடீ…”

சின்மயி இருவருக்கும் பொதுவில் “அங்கயே போறேன். எப்படியும் போகாம தீராது. ஹரி கிட்ட சொல்லிட்டேன். நேர அங்க வந்துடுவான்”

சின்மயி புறப்பட, பாலாமணி “உங்கப்பாதான். ஆனாலும் சொல்லாம இருக்க முடியலடீ. அவர் என்ன செஞ்சாலும், அழாம, தைரியமா இரு. ரொம்பப் பேசினா கிளம்பி இங்க வந்துடு” என்றார்.

சின்மயி மொபைலில் வண்டி புக் செய்யப் பார்க்க, பிடுங்கிய சிங்கபிரான் “நான் இல்லாம போயிடுவியா நீ?”

“வேண்டாம் ச்சிங்கா… அவர் உன்னை ஏதாவது சொல்லிட்டா…”

“நான் இன்னும் அதே சின்னவயசு boyish, naive சிங்கபிரான் இல்லை புல்புல். வா, போகலாம்”

“ச்சிங்கா… இப்ப என் மேல இருக்கற ஆத்திரம் வேற… அவர் என்ன சொல்லவும் தயங்க மாட்டார்டா.

“சொல்லட்டும் புல்புல். சொல்லணும். பதினஞ்சு வருஷமா அதுக்காக ஐ’ம் வெயிட்டிங். கம், லெட்’ஸ் கோ”

மௌனமான பதினைந்து நிமிட பயணத்தில் இருவருமே மீண்டும் ஸ்ரீரங்கம் சென்றிருந்தனர்.

********************

பதினெட்டு வயது நிறையாத சிங்கபிரான், சென்னை ஐஐடியில் சேர்ந்து , ஃபர்ஸ்ட் செமஸ்டர் தேர்வுகள் முடிந்து, அப்போதுதான் முதல் முறை ஊருக்குத் திரும்பி வந்திருந்தான்.

கோவிலில் வைகுண்ட ஏகாதசி களை கட்டி இருக்க, பகல் பத்து உத்சவம் நடந்து கொண்டிருந்தது. சும்மாவே கலகலக்கும் ஊர். இப்போது விழா வேறு.

சிங்கபிரானுக்குத்தான் விடுமுறையே தவிர, மற்ற குடித்தனக் காரர்களின் பிள்ளைகளுக்கு பள்ளி, கல்லூரிகளில் இன்னும் கிறிஸ்துமஸ் விடுமுறை விடவில்லை.

சின்மயிக்கு அரையாண்டுத் தேர்வுகள் நடந்தன. இதை மீறி, ஊர் முழுவதும் அநேக வீடுகளில் எப்படியாவது சொர்க்கவாசலை மிதித்து விடும் ஆசையில் உறவினர் கூடி இருந்தனர்.

ஆறு மாதப் பிரிவிற்குப் பின் சிங்கபிரானைப் பார்த்த மகிழ்ச்சியில் இருந்த சின்மயி அவனோடே நேரம் செலவிட்டாள். அவன் சொன்ன கேம்பஸ் கதைகள், அங்கு சுற்றும் மான்கள், குரங்குகள், ஹாஸ்டல் வாழ்க்கை என சலிக்காது கேட்டாள்.

‘ச்சிங்கா, இன்னும் ஃபோர்டீன் டேஸ், ட்வெல்வ் டேஸ்’ என அவன் இங்கிருக்கப் போகும் நாள்களை தினமும் எண்ணுவாள்.

சிங்கபிரான் இங்கு வந்தது முதல் அதுவரை சின்மயி அவனுடனோ, அவன் வீட்டினருடனோ நெருங்கிப் பழகுவதற்கு பரசுராம் எதுவும் சொன்னதில்லை.‌ இரவில் வெகு நேரம் அவன் வீட்டில் இருந்தாள் என, சில‌ சமயம் சத்தம் போட்டிருக்கிறார். ஒரு முறை சேர்ந்து சினிமா பாட்டுப் பாடியதற்கு அவளை அடித்திருக்கிறார்.

அவர் வீட்டுக்குள் கத்துவது, வேலை எதுவுமின்றி இருப்பதில் அவரது‌ பெற்றோர், உடன் பிறந்தோருடன் அடிக்கடி சண்டை‌ வருவது, அவரால்‌ கல்யாணி‌ வருந்தி, அழுவது, வீட்டில் இருந்த வயசுப் பெண்களையும் பையன்களையும் சந்தேகமாகவே பார்ப்பது, சீட்டாடுவது, கடன் வாங்கியவர்களை சமாளிக்க மேலும் கடன் வாங்குவது என சுவாரஸ்யமான கதைகள் உலவும் நடமாடும் வில்லன் அவர். இதைப் புரிந்த வயதில் இருந்த சிறியவர்கள் எல்லோரும் பொதுவாக அவரைத் தவிர்த்து, ஒதுங்கிச் சென்றுவிடுவர்.

எதற்கும் லாயக்கில்லா விட்டாலும், ‘நான்‌ ஆண்’ என்ற அகந்தை தலைக்கு ஏறிக் கிடந்த பரசுராமுக்கு தனியொரு பெண்ணாக, வேலைக்குப் போய், குடும்பத்தை, குழந்தைகளை சரிவரப் பராமரிக்கும் வங்கி அதிகாரியான பாலாமணியை முதலில் இருந்தே பிடிக்காது.

பின்னே… தான் செய்ய வேண்டிய கடமைகள் எதையும்‌ செய்யாது ஓசியில் உடல் வளர்த்தவரால், சொந்தக் காலில் நிற்கும் ஒரு பெண்ணின் நிமிர்வை, எப்படி ஏற்க முடியும்?

தானும் உழைக்காது, தொடக்கத்தில் மனைவி கல்யாணியின் முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டை போட்டவராயிற்றே!

இதில் பாலாமணி, தான் வேலைக்குப் போவதால், ஆண் பிள்ளைகள் எனத் தனிச் சலுகை எதுவும் கொடுக்காது, வீட்டு வேலைகளில் உதவ இருவரையுமே பழக்கி இருந்தாள்.

சிங்கபிரானுக்கும் ரவிக்கும் அந்த வயதிலேயே நம் வேலைகளை நாமே செய்வதில் கீழ்மை எதுவுமில்லை என்ற தெளிவு இருந்தது.

அவர்கள்‌ இருந்த பகுதியின் நுழை வாயில் பொதுக் கூடத்தில் இருந்தாலும், தனிப்பட்ட குளியலறை மற்றும் கழிவறை, தண்ணீர் வசதிகள் எல்லாம் இவர்களது வீட்டுக்குள்ளேயே இருந்ததால் மட்டுமே பாலாமணி இங்கு குடிவந்தார். புழக்கடைப் பக்கம்‌ செல்வதற்குத் தனி‌வாசலும்‌ இருந்தது.

சரி, தவறு என்ற விவாதங்களை, தனிப்பட்ட‌ விருப்பத் தேர்வுகளை, கொள்கைகளைத் தாண்டி பொதுவான சில நடைமுறைகள் அங்கு இருந்தது.

அவற்றில் முக்கியமானது பெண்கள் மாதவிலக்கானால் தனியாக இருப்பது. இதற்கு வயது வித்தியாசம் இல்லை. அதற்கென்று வீட்டின் புழக்கடையில் தனியாக‌ ஒரு அறையும் இருந்தது.

மற்றவரது பழக்கத்தை மதிக்க வேண்டும் என்றோ, அல்லது நம்பியோ நம்பாமலோ அவர்களும் அதையே பின்பற்றியதாலோ எல்லோரும் அதற்கு உடன்பட்டனர். அதை இயல்பாகவும் கடந்தனர். அந்த‌ நாளில், அவர்களது பழக்கம், நடைமுறை‌ அதுதான்.

பாலாமணி, பிள்ளைகள் சிறியவர்கள் என்பதாலும், தனிப்பட்ட வசதிகள் உடைய வீடு என்பதாலும் தன் வீட்டுக்குள்ளேயே ஒதுங்கி இருப்பார்.

அந்த நேரத்தில் தங்களை சமாளித்துக்கொள்ள, சமைக்க, மகன்கள் இருவரையும் பழக்கி இருந்தார். ஒரு வயது வந்ததும் அரைகுறையாகத் தெரிந்து கொண்டு கேள்வி கேட்ட பிள்ளைகளுக்குத் தகுந்தபடி, இது இயற்கை… அவசியம் ஆனால் அவஸ்தை. வலி என்பதால் ஓய்வு‌தேவை என்பதை நாசூக்கான வார்த்தைகளில் புரிய வைத்தார். மீதியை அவர்கள் வயதும் விளம்பரங்களும் புத்தகங்களும் கற்றுத் தந்தன.

மறுநாள் விடிந்தால் வைகுண்ட ஏகாதசி. அன்று கோவிலில் மோகினி அவதாரம்.

ஆண்கள் வேலைக்கும், பிள்ளைகள் பள்ளி, கல்லூரிகளுக்கும் சென்றிருக்க, பெண்கள் ஒன்றாகச் சேர்ந்து அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி இருக்கும் நம்பெருமாளின் நாச்சியார் திருக்கோலத்தைக் காணச் சென்றிருந்தனர்.

வீட்டில் யாராவது இருந்தால் யாரும் கண்ணுக்குத் தென்படவில்லை. பாலாமணி வங்கிக்கும் ரவிசோமன் பள்ளிக்கும் சென்றிருக்க, விடுமுறையில் இருந்த‌ சிங்கபிரான், அவனது வீட்டிற்குள் தொலைக்காட்சியில் மூழ்கி இருந்தான்.

வாசலில் ஷு சத்தமும் “அம்மா” என்ற சின்மயியின் அழுகைக் குரலும் கேட்டு ‘என்னாச்சு புல்புல், எக்ஸாம் கஷ்டமா இருந்துதா, ஏன் அழற?’ என்றபடி வேகமாக வெளியில் வந்த சிங்கபிரான், அவளைக் கண்டு திகைத்தான்.

பன்னிரெண்டரை வயது சின்மயி தமிழ்த் தேர்வின் நடுவே பூப்பெய்தி இருந்தாள்.

முதலில் கடுமையான வலியைப் பொறுத்துக்கொண்டு எப்படியாவது பரீட்சை எழுதி முடிக்க வேண்டும் என நினைத்தவளால், ஒரு கட்டத்துக்குப் பின் அடி வயிற்றைச் சுருட்டி இழுத்ததில், வெகுவாக சோர்ந்து போனாள்.

அடிவயிற்றில் இருந்து பின்பக்கம், தொடைகள், பிறப்பு உறுப்பின் நரம்புகள் எல்லாம் வலியில் இழுக்க, உள்ளே ஏதோ வெடித்தது போன்ற உணர்வு. தாங்க முடியாத வலி என்று இல்லைதான். ஆனாலும் வலித்தது. பரீட்சையில்‌ கவனம் செலுத்த முடியாததில் அழுகையாக வந்தது.

அம்மாவும் பவானியும் சொல்லித் தந்த‌ விவரங்கள் எதுவும் முதலில் நினைவிற்கு வரவில்லை. எடுத்ததுமே வேகமாக வெளி வந்த உதிரப்போக்கையும், அது தந்த‌ அசௌகர்யமான உணர்வையும் சமாளித்தபடி எழுதியவள், தன் கால் வழியே வழிந்த செந்நிறத் திரவத்தில்‌ விஷயம் புரிந்து விட, ஆணும் பெண்ணுமாக இருந்த வகுப்புத் தோழர்களுக்கு இடையே இப்படி நடந்ததில் அவமானமாக இருந்தது. கண்காணித்த ஆசிரியையிடம்‌ எப்படிச் சொல்வதென்று தெரியாமல் அழுதுவிட்டாள்.

இவள் எழுதி முடித்ததும் அந்த டீச்சரே உடன் வந்து, வழக்கமான‌ அவளது ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்தார்.

சிங்கபிரான் என்ன செய்வது, எப்படிப் பேசுவது எனத் தயங்கி நின்றது சில நொடிகளே.

“இட்ஸ் ஓகே புல்புல். உனக்கு என்னன்னு தெரியும்தானே?”

“ம்…”

“அழாம வா”

“அம்மா எங்க ச்சிங்கா?”

“கோவிலுக்கு போய் இருக்கா. நீ போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக்கோ”

“நான் வீட்டுக்குள்ள போகலாமா… எனக்குத் தனியா இருக்க வேண்டாம் ச்சிங்கா. பயமா இருக்கும்”

“நீ முதல்ல உள்ள வா” என தன் வீட்டுக்குள் அனுப்பி, தன் அம்மா வைத்திருந்த சானிடரி பேடை தந்து…

“Do you know how to use it?”
(உனக்கு அதை எப்படி‌ உபயோகிக்க வேண்டுமெனத் தெரியுமா?)

“ம்”

“வெறுமே தாளிட்டு இருந்த சின்மயியின் போர்ஷனுக்குள் நுழைந்து அவள் குறிப்பிட்ட இடத்தில் இருந்த அவள் கேட்ட உடைகளை எடுத்துக்கொண்டு சிங்கபிரான் வெளியே வருகையில் சரியாக பரசுராம் உள்ளே நுழைந்தார்.
​
 

Goms

Member
Apr 28, 2025
79
4
18
Chennai
அருமை 😲 சிங்கா உன் புல் புல்லுக்கு எல்லாம் பார்த்து பார்த்து பண்ணிட்டு நடுவில சில(பல?) வருஷங்கள் ஏண்டா அவளை தவிக்க விட்டுட்ட? பாவம் இப்போ எந்த முறையில் உன்னை நெங்குவதுன்னு அவளுக்கு புரியல.
 
Jun 19, 2024
25
32
18
Trivandrum
😍😍😍

"கொன்னுடுவேன் டா உன்னை"

"டூ இட், நீ சும்மாவே அதான் செய்யுற."

உன் பார்வையில் என்னை
கொன்றுவிடு பெண்ணே
உன் கூந்தலில் என்னை
புதைத்து விடு பெண்ணே

கொல்வதற்கு முன்னே ஒரு முத்தமிடு
பெண்ணே அதை மறக்காதே
ஒரு பார்வையில் ஒரு வார்த்தையில் ஒரு தீண்டலில் நான் மீண்டும் பிறப்பேனே...

 
  • Love
Reactions: VedhaVishal

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
67
321
83
Chennai
😍😍😍

"கொன்னுடுவேன் டா உன்னை"

"டூ இட், நீ சும்மாவே அதான் செய்யுற."

உன் பார்வையில் என்னை
கொன்றுவிடு பெண்ணே
உன் கூந்தலில் என்னை
புதைத்து விடு பெண்ணே

கொல்வதற்கு முன்னே ஒரு முத்தமிடு
பெண்ணே அதை மறக்காதே
ஒரு பார்வையில் ஒரு வார்த்தையில் ஒரு தீண்டலில் நான் மீண்டும் பிறப்பேனே...

❤️❤️❤️
 
Jun 19, 2024
25
32
18
Trivandrum
❤️❤️❤️
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்
இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்
இளமை இளமை பாதித்தேன்
கொள்ளை கொண்ட அந்த நிலா
என்னைக் கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே