நாணங்களும் எதற்காக ? 13
“வாட்?”
சிங்கபிரான் கோபத்தில் முகம் இறுகிச் சிவக்க, தொலைக்காட்சியில் கேட்ச்சைத் தவற விட்ட கிரிக்கெட் வீரர் ம்யூட்டில் கத்துவதைப் போல் சத்தமின்றி வார்த்தையை உதிர்த்தான்.
ஆத்திரம் அடங்காது விஸ்தாரமான அந்த பக்கவாட்டு பால்கனியில் குறுக்கும் நெடுக்கும் நடந்தான்.
சட்டெனத் திரும்பித் தூணில் சாய்ந்து நின்ற சின்மயியின் அருகே வந்து அவள் வலது தோளை இறுக்கிப் பிடித்து ஆட்டியவன்,
“உங்க குடும்பத்துல யாருக்கும் அறிவே கிடையாதாடீ?”
“...”
பிரம்பு ஜூலாவில் அமர்ந்திருந்த பாலாமணி “சிங்கம், முதல்ல அவளை விடு சொல்றேன், அநாவசியமா வார்த்தைய விடாத ” என அதட்டினார்.
“பின்ன என்னம்மா, அப்பா ஹோமுக்கு போறாராம். அண்ணா ஆன்சைட் போறானாம். இவ ஹாஸ்டலுக்கு போவளாம். மூணு நாளா கூடவே இருந்துட்டு இப்ப வந்து சொல்றா பாரு…”
“...”
“இவ அப்பாதான் பிரம்மரிஷி… புள்ளைவரம் குடுத்துட்டு உலக சிந்தனையே இல்லாத
பரமஞானி..”
சிங்கபிரானின் குரலில் ஆத்திரத்தை மீறிய நக்கல். சின்மயியைக் கண் காட்டிய பாலாமணி “ டேய் சிங்கம், நீ இப்ப நிறுத்தப் போறியா இல்லையா?”
“பரவாயில்ல மா, அவதான் பேச மாட்டா…என் திருப்திக்கு நானாவது கத்திட்டுப் போறேன்”
‘உரிமையை தராத, இல்லாத உணராத இடத்துல என்ன பேசறது… ஏன் பேசணும்?’
சிங்கபிரான் அடங்க மறுத்துத் தொடர்ந்தான்.
“சரி, ஹரி குடும்பத்தோட ஆன்சைட் போறான். நல்ல சான்ஸ். அவன் சுயநலமா இருக்கறதை நான் தப்புன்னு சொல்லலை, போகட்டும். கூடவே அவன் வீட்டையுமா கையில தூக்கிண்டு போகப் போறான்? ஏன், அவன் குடும்பத்தைத் தவிர யாரும் அங்க இருக்கக் கூடாதா? இதையே அவன் மாமனார், மாமியார் கிட்ட சொல்லுவானா?”
“...”
“ஏன், புல்புல் அவன் ஃபேமிலி இல்லையா? தங்கை… அதிலயும் கல்யாணம் ஆகாத தங்கை, அந்த வீட்ல இருந்தாதான் என்ன?”
“...”
“என் வீட்டுக்கு வான்னு கூப்ட்டு ஒரு மாசத்துல வெளில போன்னு சொல்லாம சொல்லுவானா?”
“...”
“அப்படியே ஒரு சான்ஸை மிஸ் பண்ணினாதான் என்ன… எனக்கென்னவோ இவளை வெளில அனுப்பதான் ஆன்சைட் போறாளோன்…”
பாலாமணி “சிங்கம், போறும்டா. அவளுக்கு நேரமாறது பாரு. பவானி வேற நாலஞ்சு தரம் கால் பண்ணிட்டா. கொண்டு போய் விட்டுட்டு வா”
“நான் போக மாட்டேன். ஹாஸ்டலுக்கு போறேங்கறா… இங்க இருக்கற திலக்நகருக்கு போகத் தெரியாதா?”
தனக்காகத் தன் வீட்டினரைத் திட்டிய சிங்கபிரானின் கோபத்தில் சின்மயி வருத்தத்தை மீறிய ஆறுதலை உணர்ந்தாள். மொபைலைத் திறந்து ஆட்டோ புக் செய்தவள்,
“பரவாயில்ல மாமி. ஈவினிங்தானே… நானே போயிடுவேன். ச்சிங்கா வர வேண்டாம். அவனும்தானே ட்ரைவ் பண்ணிண்டு வந்தான்”
சின்மயியின் மொபைலைப் பிடுங்கியவன் “நான் வருவேன், வா” என அவளை இழுக்க, சின்மயி சற்றே பயமும் சங்கடமுமாக பாலாமணியைப் பார்த்தாள்.
‘இடம் பார்த்து ஷிஃப்ட் பண்ற வரைக்கும் நான் பேசாம இவன்கிட்ட சொல்லாமலே இருந்திருக்கலாம்’
காரில் ஏறிய சிங்கபிரான் “என்ன, இவன் கிட்ட சொன்னதே தப்புன்னு தோண்றதோ?”
“...”
அதன் பிறகு பயணம் முழுவதும் அமைதி மட்டுமே.
********************
ஆணுக்கு இருபத்தெட்டு, பெண்ணுக்கு இருபத்திநாலு வயதில் திருமணம். மூன்று வருடங்களுக்குள் முதல் குழந்தை. இரண்டாவது குழந்தை ஆப்ஷனல். நல்ல பள்ளி, பாட்டு, நடனம், ஓவியம், கிடார், மிருதங்கம், கிரிக்கெட், டென்னில் அல்லது செஸ். தப்பினா இன்ஜினீயரிங், தவறினா மருத்துவம். எம்என்சி அல்லது கார்ப்பரேட்டில் வேலை. ரிப்பீட். மறுபடி முதல் வரியிலிருந்து படிக்கவும்.
வெண்ணை , ஜாம் அல்லது ஊறுகாயை தயாரிப்பது, பாட்டிலில் அடைப்பது, சீல் செய்வது என தொழிற்சாலை போன்ற வாழ்க்கை.
அப்பா, அம்மாவே அவசியத்திற்குதான் எனில் உடன்பிறப்புகள் எல்லாம் உபத்திரவம்தானே?
எட்டாவது அதிசயமாக சிங்கபிரான் கேட்டதையே பவானியும் ஹரியிடம் கேட்டாள்.
“ஏன் டா, நீங்க போனா வீடு சும்மா பூட்டிதானே கிடக்கப் போறது? அதுக்கு சின்மயி இங்கயே இருந்தா என்ன? வீட்டையும் புழங்கினா மாதிரி இருக்கும். அவசியம்னா எதிர் வீட்டுலயே பத்மினியோட அம்மா, அப்பா இருக்கா… நீ என்ன சொல்ற ஹரி?”
“ம்… நீ சொல்றதும் ஒரு விதத்துல சரிதான். ஆனா…”
ஹரி வாக்கியத்தை முடிக்காது மனைவியைப் பார்த்தான். எங்கே, இன்னும் காணுமே என்று நினைத்த கேள்வி… இதோ, வந்தே விட்டது.
எங்கே, பத்மினிதான் எழும் முன்பே அந்த எண்ணத்தை முறித்திருந்தாளே?
“நாம யுஎஸ் போனாலும், உன் தங்கை இங்க இருக்கறதெல்லாம் சரியா வராது ஹரி. அவ எப்ப ஹாஸ்பிடல் போறா, எப்ப வரா, வீட்டை சரியா பூட்டினாளான்னு வயசான காலத்துல எங்கப்பா, அம்மாவால பார்க்க முடியாது. அது போறாதுன்னு இப்ப அந்த சிங்கபிரானோட சகவாசம் வேற… நம்ப மரியாதையைக் கெடுத்துக்க முடியுமா சொல்லு, ஹரி?”
திருமணத்திற்கு முன் காதலின் பெயரால் அதே அமெரிக்காவில் ஒன்றரை மாதங்கள் தன்னுடன் ஒரே வீட்டில் வசித்ததை வசதியாக மறந்த மனைவியின் வாய்ஜாலத்தை வாயில் ஜலத்தோடு பார்த்த ஹரி,
நட்சத்திரக் குறியுடன் ‘நிபந்தனைகளுக்கு உட்பட்டது’ என்ற எழுத்துக்கள் கண்ணுக்குத் தெரியாததைப் போல், “சிங்கமும் சின்மயியும் நல்ல ஃப்ரெண்ட்ஸ் பத்மினி” என்றது, அவனுக்கே கேட்கவில்லை.
“என்ன சரி… இத்தனை பெரிய வீட்ல சின்மயி சமைச்சு, சாப்ட்டு, க்ளீன் பண்ணி… தனியா திண்டாடுவாளேன்னு நாங்க அங்க இருந்து கவலைப்பட முடியுமா? இல்ல, ஏதானும்னா உடனே ஓடி வரத்துக்கு பக்கத்துலதான் இருக்கா?”
சிரித்த பவானி “எப்டி பத்மினி… உன் வீட்ல இருந்தா தனியா… பிஜில, ஹாஸ்டல்ல இருந்தா, சின்மயியப் பத்திக் கவலைப்பட வேண்டாம்… அப்டியா?”
எப்போதும் ஆதரிக்கும் நாத்தனாரின் நறுக் கேள்வியில், பத்மினி முகம் மாற, குற்றவுணர்வில் தடுமாறிய ஹரி அதைக் கொல்லும் முயற்சியில் இறங்கினான்.
“இப்டி செஞ்சா என்ன, அப்பா எப்படியும் ஹோமுக்குதான் போகப் போறார். சின்மயி அந்த வீட்லயே இருந்தா?” என்றான்
சின்மயி மறுப்பாகத் தலையசைத்தாள்.
“பாக்கறவாளுக்கு தப்பு யார்மேலங்கறது தெரியாது. தெரிஞ்சாலும் மறந்து போயிடும். வயசான அப்பாவை ஏதோ வேணும்னே முதியோர் இல்லத்துக்கு அனுப்பிட்டு, நான் ஜாலியா இருக்கற மாதிரிதானே தோணும். ஏன், அந்த வீட்ல இருந்தேன்னா, எனக்கே கூட அப்டிதான் ஃபீல் ஆகும்”
“சின்மயி…” - பவானி.
“விடு பவா, பார்த்துக்கலாம். உனக்கு ஃப்ளைட் எப்ப? பண்டிகை நேரத்துல குழந்தைகளை தனியா விட்டுட்டு… பாவம் டீ”
“ஒரு தரம்தானே. நான் சொல்லச் சொல்ல ஸ்ரீயே பாயசம் வெச்சு சரஸ்வதி பூஜை பண்ணிட்டா தெரியுமோ?”
திடீரென பத்மினி “சிங்கபிரான் வீட்டில் நவராத்திரி கொண்டாடலையா?”
“பாட்டு பாடறவா, அத்தனை மியூஸிக் இன்ஸ்ட்ருமென்ட்ஸை வெச்சுண்டு சரஸ்வதி பூஜை பண்ணாமலா? மைசூர் புறப்படற முன்னாடியே ஸ்டூடியோல பூஜை பண்ணியாச்சு”
சின்மயி சாப்பிட்டதுமே போய் படுத்துவிட்டாள். காலையில் வேலைக்குப் போக வேண்டும். நேற்று இரவு முழுதும் தூங்கவில்லை. இன்றும் காரில் சிறிது கண்ணசந்ததோடு சரி. வலிந்து கண்களை மூடினாள்.
**********************
சின்மயிக்கு அதிகாலையிலேயே முழிப்பு வந்துவிட, அலைபேசியில் நேரம் பார்க்க ஐந்து என்றது. சிங்கபிரான் ஆன்லைனில் இருப்பதைப் பார்த்தவள், உடனே மொபைலை அணைத்துவிட்டாள்.
‘பார்த்திருப்பானோ?’
அன்றிரவு சிங்கபிரானின் நாம கல்யாணம் பண்ணிக்கலாமிலும் அதிரடியான முத்தத்திலும் செயலிழந்த சின்மயி, மொத்தமாக அமைதியாகிப் போனாள்.
அதன் பிறகு, அவனுமே ஐஸ்க்ரீமும் காஃபியும் வாங்கிப் பகிர்ந்து கொண்டு, வேறு எதையோ பேசியபடி ஹோட்டலுக்கு அழைத்து வந்துவிட்டான்.
நான்கு பேர் தங்கக் கூடிய ஃபேமிலி ரூம் என்பதால், சின்மயி சிங்கபிரான், மற்றும் பாலாமணியுடனேயே தங்கி இருந்தாள்.
பாலாமணி உறங்கி இருக்க, அறையின் இருளை வெளியுலகின் வெளிச்சங்கள் ஊடுருவி இருந்தது.
“புல்புல்”
“ம்”
“எதையும் யோசிக்காம தூங்கு, என்ன?”
“??”
‘மூளையை மரக்க அடிச்சுட்டு யோசிக்காதே வேறயா?’
“சும்மா முறைக்காம போடீ”
அப்போது இருந்த அசதியில் உறங்கிவிட்டாள். சின்மயி காலையில் எழுந்தபோது சிங்கபிரான் இசைக் கருவிகளோடு குழுவினர் பெங்களூருக்குப் புறப்படுதைப் பார்க்கச் சென்றிருந்தான்.
அவர்களோடே கேசவும் கிளம்பி இருக்க, இவர்கள் மூவரும் சாமுண்டீஸ்வரியை தரிசித்துவிட்டு பெங்களூரு திரும்பினர்.
பாலாமணி கொடுத்த பூஸ்ட்டை குடித்துவிட்டு வீட்டுக்குச் செல்லப் புறப்பட்டவளிடம் சிங்கபிரான் “இப்பயாவது என்னன்னு சொல்லு புல்புல், what is bugging you?”
இதில் அவனிடம் மறைக்க எதுவுமில்லை என்பதோடு, எப்படியும் தெரியத்தானே போகிறது?
ஹரியும் பத்மினியும் ஆன்சைட் போவதில் தொடங்கி பவானி வந்திருப்பது, தந்தையைப் போய்ப் பார்த்தது, பரசுராமின் நிபந்தனைகள் வரை மளமளவென ஒப்பித்து விட்டாள். இறுதியில்
“ஒரு பிஜி யோ, ஹாஸ்டலோ பார்க்கணும். இல்ல, சிங்கிள் பெட்ரூம் வீடுன்னாலும் தேவலை…”
சிங்கபிரான் கோபத்தில் படபடத்துவிட, பாலாமணிக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.
‘இந்தப் பெண் இன்னும் இன்னும் எத்தனையைதான் பார்க்கும்?’
ஒரு நாள் முழுவதும் எதையும் யோசிக்காது கடந்த சின்மயிக்கு, நல்ல உறக்கத்துக்குப் பின்னான அமைதியான அதிகாலையில் சிங்கபிரானின் கேள்வியும் முத்தமும் நினைவாடியது.
சின்மயிக்குத் தன் வயதும் படிப்பும் அனுபவமும் இந்த விஷயத்தில் தனக்குத் தேவையான முதிர்ச்சியைத் தரவில்லையோ என்று தோன்றியது.
குழம்பிய மனதினுள்ளே முட்டி மோதிய கேள்விகளை மீறி, இடது கணுக்காலின் உள்புறத்திலிருந்து பின்னங்கால், தொடைகள் முதுகின் கீழ்பக்கம் வரை பயணித்த குறுகுறுப்பு உணர்வில் போர்வைக்குள் ஒடுங்கிக் கைகளைக் கட்டிக்கொண்டாள்.
ஒரு மருத்துவராக டிபியல் நரம்பின் உணர்ச்சித் தூண்டல் புரிந்தாலும், சின்மயிக்கு சிறிது பயமாகவும் சற்றே பரவசமாகவும் இருந்தது.
‘இதென்ன டீன் ஏஜ் பொண்ணு மாதிரி?‘
**********************
சிங்கபிரான், கிருஷ்ணன் மேனன், விக்ரம் ஜோயல் மூவரும் அவர்களது அலுவலகத்தில் படு பிஸியாக இருந்தனர். நாதம் மியூஸிகாவோடு சேர்ந்து அவர்களது ஸ்டார்ட்அப் கம்பெனியும் வளர்ந்திருந்தது.
மாத இறுதியில் நிதி அறிக்கை சமர்ப்பித்து, ரிடர்ன் ஃபைல் செய்வதற்கான பணி ஒருபுறம், கையில் இருக்கும் ப்ராஜக்ட்டுகள் ஒருபுறம் என பரபரப்பாக இருந்தனர்.
நவம்பரில் ஆஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்பர்னில் கான்ஸர்ட் இருக்கிறது.
சிங்கபிரான் இந்த முறை டிஸம்பர் சீஸனில் சென்னை மியூஸிக் அகாடமியிலும் நாரதகான சபாவிலும் இரண்டு முழுமையான கர்நாடக இசைக் கச்சேரிகளுக்கு வேறு ஒத்துக் கொண்டிருக்கிறான்.
அந்த அலுவலகம் என்பது சற்றே பெரிதான ஒரு இரண்டரை பெட்ரூம் ஃப்ளாட்தான். வேலை பார்ப்பதும் சுத்தம் செய்து, டீ, காஃபிபோட்டுத் தரும் தனுஷோடு சேர்த்தே பதினோரு பேர்தான்.
வசதியான ஃபர்னிச்சர்கள் உண்டு. காலை நீட்டிக்கொண்டு வேலை செய்யவென ஒரு அறையில் தரையில் மெத்தை போட்டு வைத்திருந்தனர்.
சிங்கபிரான் எதிரே இருந்த கணினித் திரையை இலக்கின்றி வெறித்ததைக் கவனித்த ஜோயல்,
“மச்சான் என்னடா, அப்பப்ப ஏன் ஆஃப் ஆற?”
“நத்திங். ஸ்க்ரீன்ல இருக்கற நம்பர்லாம் டான்ஸ் ஆடற மாதிரி இருக்கு. தூங்கினா சரியாயிடும்… தனுஷ் குரு, காஃபி கொட்றீ”
மனதில் சின்மயியே இருக்க, மூன்று மணிக்கே எழுந்து விட்டான். காரில் ஏறி சின்மயியை அழைக்க, ஸ்விட்ச்ட் ஆஃப் என்றது. ஏதேனும் சர்ஜரிக்கு உடன் இருப்பாளாக இருக்கும். அப்போதுதான் மொபைலை அணைத்து வைத்திருப்பாள்.
உள்ளே நுழைந்ததுமே
“என்னடா சிங்கம், வர ராத்திரி ஆகும்னு சொன்ன…” என்ற பாலாமணி, அவனது லஞ்ச் பேகைக் கையில் எடுக்க, கனத்தது.
பதில் சொல்லாது “அம்மா… இங்க வந்து உக்காரேன்” என ஊஞ்சலுக்கு இழுத்துச் சென்றான்.
“எதா இருந்தாலும் நீ முதல்ல சாப்பிடு. அப்புறம் பேசலாம்”
“...ம்..ம்மா…”
“சூடு பண்ணவா?”
“வேண்டாம், நீ சாப்ட்டியா?” என்றவன், வேகமாக உண்டு முடித்தான்.
“அம்மா…” என்ற சிங்கபிரான், வார்த்தைகளைத் தேடுவது தெரிய, பாலாமணி காத்திருந்தார்.
“...ம்மா…”
“சொல்லு சிங்கம்”
“எனக்கு புல்புல்லை உடனே கல்யாணம் பண்ணிக்கனும். அதுக்கு என்ன செய்யணும்னு சொல்லு”
ஒரு மாதிரி இதை எதிர்பார்த்த பாலாமணி “முதல்ல உன்னைக் கல்யாணம் பண்ணிக்க புல்புல் சம்மதிக்கணும்”
“ம்ப்ச்… விளையாடாதம்மா… அதுக்கெல்லாம் இப்ப நேரமில்லை. நான் சொன்னதை அவ கேட்டதானே…”
“நல்ல கதையா இருக்கே, அதுக்காக கட்டாயக் கல்யாணமா பண்ணிக்க முடியும்?”
“அவளை ஹாஸ்டலுக்கு எல்லாம் அனுப்ப முடியாதும்மா. சும்மா இங்க வந்து இருன்னா வர மாட்டா…”
“நானே அதுக்கு ஒத்துக்க மாட்டேன்டா சிங்கம். அவளுக்கும் சரி, உனக்கும் சரி, கல்யாணம் ஆகணும். நம்ம பேரை நாமே கெடுத்துக்கறதா, சொல்லு”
“அதனாலதான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்றேன்”
“இது பத்தி சின்மயி கிட்ட பேசினியா, என்ன சொன்னா?”
“ஒண்ணும் சொல்லலை” என்றவனின் குரலில் வெளிப்பட்ட கடுப்பில் பாலாமணி சிரித்துவிட அதற்கும் ஆத்திரப்பட்டான்.
“சிரிக்காதம்மா…”
“சரி, சிரிக்கல. ஒருக்கால், உன்னைக் கல்யாணம் பண்ணிக்க அவளுக்கு விருப்பம் இல்…”
“அப்டி சொல்லிடுவாளா அவ…” என்று குரலை உயர்த்தியவன், சட்டெனத் தணிந்து “பயமுறுத்தாதம்மா, ப்ளீஸ்”
“சரி, சின்மயியை நெக்குவாட்டுல நிறுத்தின மாதிரி கட்டாயப் படுத்தக் கூடாது. சரின்னா பேசலாம்”
“...மா…, நீ எனக்குதான் அம்மா. என்னைத்தான் நீ சப்போர்ட் செய்யணும்”
சிரித்தவர் “சிங்கம்… சின்மயியோட பயமே, கல்யாணம்னு ஆயிட்டா இப்ப உன்கிட்ட இருக்கற சிநேகமும் சுதந்திரமும் இல்லாம போயிடும்ங்கறதாதான் இருக்கும்”
“நீ வேற குழப்பாதம்மா. கல்யாணம் ஆனா, உறவும் உரிமையும் அதிகமாகாதா? நாங்க இன்னும் க்ளோஸா ஆக மாட்டமா?”
“அதைப் புரிய வைக்க வேண்டியது நீதான். மோர்ஓவர், கல்யாணம் ஆனா பொறுப்பும் கடமையும் கூடவே வரும் டா”
“அஃப்கோர்ஸ், ஐ நோ மா… “ என்றவன், கையோடு ஹரியை அழைத்திருந்தான்.
“ஹாய் ஹரி”
“சொல்லு சிங்கம்”
“மீட் பண்ணலாமா?”
“ஷ்யூர். எப்போ?”
“நாளைக்கு டின்னர் அட் வெஸ்ட் என்ட். வித் ஃபேமிலி”
ஹரி “பவானி வந்திருக்கா…”
“கமான் ஹரி, ஃபேமிலின்னா எல்லாரும்தான். உன்னோட குட்டிப் பொண்ணு மஸ்ட் கம். ஸீ யூ டுமாரோ”
அழைப்பைத் துண்டித்தவன், “சரியான… க்ராக்பாட். நல்ல வேளை, சின்மயி இருக்கான்னு சொல்லாம போனானே”
*******************
இரவு பத்து மணிக்கு வந்தவளிடம் ஹரி “சின்மயி, சிங்கம் நம்ம எல்லாரையும் நாளைக்கு நைட் டின்னருக்கு கூப்பிட்டு இருக்கான். உனக்கு ஏன்னு தெரியுமா…ஏதாவது சொன்னானா? ”
“டின்னரா… தெரியாதே, எங்க?”
“வெஸ்ட் என்ட்”
“நோ ஐடியா ஹரி”
சின்மயி உறங்கச் சென்றுவிட, மற்ற மூவருக்கும் இது எதற்கு என ஒரு அனுமானம் இருந்தது.
*****************
சின்மயி மருத்துவமனைக்குள் நுழைகையில் சிங்கபிரான் அழைத்தான்.
“சொல்லு ச்சிங்கா”
“டின்னர் பத்தி ஹரி சொன்னானா?”
“ம்… என்ன திடீர்னு?”
“ஜெனரல் ஹேப்பினஸ். அதை விடு. உன்னை எங்க வந்து பிக் அப் பண்ணிக்கனும்?”
“...”
“புல்புல்…”
“நான் ஹரியோடயே வரேன்”
“க்ளீனிக்?”
“போனா பாதில வர முடியாது. ஜூட்தான்”
********************
முன்பதிவு செய்யப்பட்ட மேஜைகளில் எல்லோரும் அமர்ந்திருந்தனர். ஹரியின் மகள் சிங்கபிரான் தந்த பார்பி டால் ஹவுஸைப் பார்ப்பதும், அவனைப் பார்த்து வெட்கத்துடன் சிரிப்பதுமாய் இருந்தாள்.
பாலாமணி ஹரி, பத்மினியுடன் அளவலாவ, பவானி சின்மயியுடன் பேசிக்கொண்டிருந்த
சிங்கபிரானை ஆராய்ந்தாள்.
அங்கே வந்திருந்தவர்களில் சிங்கபிரானை அடையாளம் கண்ட பலரும் சுயமி எடுக்கவும் பேசவும் அவனை அணுகினர். சின்மயிக்கு இது பழகி இருந்ததில் இயல்பாக இருந்தாள்.
ஸ்ரீரங்கத்து வீட்டிற்கு சிறுவனாகக் குடிவந்த சிங்கபிரான், அப்போதே பதின் பருவத்தில் இருந்த பவானியை அதிகம் ஈர்க்காததில் வியப்பேதும் இல்லை.
ஆனால், அவனது பாட்டையும், பொறுப்பையும் சொல்லிச் சொல்லியே பவானி உள்பட அங்கிருந்த எல்லா வயது பிள்ளைகளையும் பெரியவர்கள் ஒப்பிட்டனர்.
சிங்கபிரான் ப்ளஸ் டூவில் ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்ததும், ஐஐடியில் சேர்ந்ததும் தனிக் கவனம் பெற்றான். பிறகு ஆறே மாதத்தில், ஏதேதோ நடந்து போனது. அப்போதுமே பவானிக்கு அதுபற்றி பெரிதான அபிப்பிராயம் எதுவும் இருந்ததில்லை.
இருந்தாலும், தான் சின்னப் பையனாகப் பார்த்தவன், ஆறடி உயரமும் அதற்கேற்ற பருமனும், காதில் ஸ்டட்டும், பிடரி போன்ற சடையுடன், புகழ் வளையத்தில் இருப்பதைக் காண மகிழ்ச்சியாகவும் வியப்பாகவும் இருந்தது.
இவர்களுக்கான சூப்பும் ஸ்டார்ட்டர்களும் வரவுமே, பாலாமணி பளிச்செனக் கேட்டுவிட்டார்.
“சிங்கத்துக்கு சின்மயியைக் கேக்கறேன் ஹரி. அவனுக்குப் புடிச்சிருக்கு. சின்மயிக்கும் உங்களுக்கும் சம்மதம்னா, சீக்கிரமே கல்யாணத்தை வெச்சுக்கலாம். யோசிச்சு சொல்லுங்கோ”
ஒரு மாதிரி எதிர்பார்த்ததுதான் என்றாலும், ஹரிக்கு என்ன சொல்வதென்று புரியாமல் தலையை ஆட்டி வைத்தான். பவானி சிங்கபிரானையும் சின்மயியையும் திரும்பிப் பார்க்க, அவன் தீவிரமாக பனீர் கார்ன் கபாபை சின்மயிக்குப் பரிமாறியதைக் கண்டாள்.
*******************
ஹரி “வாயத் திறந்து சரின்னு சொல்லு சின்மயி. ஏன், அவன் எதுக்கு எங்களை சாப்பிடக் கூப்பிடறான்னு உனக்குத் தெரியாதா… தினமும் பேசற உங்கிட்ட கேட்காமலா இருந்திருப்பான்?”
பவானி “ஹரியும் பத்மினியும் எப்ப வேணா அமெரிக்கா கிளம்பலாம். நீயும் தனியா இருக்க வேண்டாம். நமக்குத் தெரிஞ்சவா. உன்னோட க்ளோஸ் ஃப்ரெண்டு. வேறென்ன வேணும்?”
ஹரி “உண்மைல உன்னைத் தனியா விட்டுப் போக கொஞ்சம் கில்ட்டியா இருந்தது சின்மயி. இந்தக் கல்யாணம் நடந்தா, நான் நிம்மதியா இருப்பேன்”
பவானியும் ஹரியும் சொன்ன இரண்டு விஷயங்கள்தான் சின்மயியைக் குடைந்தது.
********************
“கருத்த குழலொடு நிறுத்த மயில் சிறகினை இறுக்கி அமைத்த திரத்திலே
கான மயிலாடும் மோனக்குயில் பாடும் நீல நதியோடும் வனத்திலே”
யாருமில்லாத ஸ்டூடியோவில் கண்களை மூடி, தம்பூராவை மீட்டியபடி ஏகாந்தமாய் ஒலித்த சிங்கபிரானின் குரலில் கட்டுண்டு, கதவருகிலேயே நின்றவளை உணர்ந்தது போல், கண்களைத் திறந்து ‘வா’ என்று தலையசைத்தான்.
சின்மயி எதிரே வந்து தரையில் அமர, சிங்கபிரான் ‘பாடு’ எனக் கை காட்ட, திகைத்தாலும் இணைந்து கொண்டாள்.
“காளிங்கன் சிரத்திலே கதித்த பதத்திலே
கனவு நனவினொடு பிறவி பிறவி தொரும்
கனிந்துருக வரம் தருக பரங்கருணை…
பால் வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம்
பரவசமிகவாகுதே - கண்ணா”
பாட்டு முடிந்த பின்னும் சிங்கபிரான் தம்பூராவை மீட்டுவதை நிறுத்தவில்லை. சிறிது பொறுத்தவள்
“க்ளீனிக் போகணும் ச்சிங்கா”
“போ”
“ச்சிங்கா…”
“பின்ன என்னடீ… உன்னைப் புடிக்கலை, நீ வேண்டாம்னு சொல்லு, நான் எதுவும் கேட்க மாட்டேன்”
“...”
சின்மயியின் மிரண்ட பார்வையில் தணிந்தவன் “இதான்… இதுக்குதான் அமைதியா இருக்கேன்…”
“...”
“நானும் மெது மெதுவா எத்தனை தரம் சொல்லி இருப்பேன்?”
“...”
“உனக்குத் தெரியுமா, புல்புல்… நீ எங்க இருக்க, என்ன செய்யற, உனக்குக் கல்யாணம் ஆச்சா, ஆகலையா… எதுவுமே அப்ப எனக்குத் தெரியாது”
“...”
“ஃபர்ஸ்ட் ஆல்பம் ரிலீஸ் ஆனதும் எங்கம்மாவோட புடிவாதத்துல ஒரு பொண்ணைப் போய் பார்த்தேன்”
“??!”
“என்னால அவளோட சகஜமா பேசவே முடியல. எத்தனையோ ஃப்ரெண்ட்ஸ், கூட பாடற, படிச்ச, வேலை பாக்கற, ஃபேனா இருக்கற பெண்களோட எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல”
“...”
“பட், நெருக்கமா பழக, பர்ஸனலா பேச என்னால முடியல. உங்கிட்ட ஃபீல் பண்ணின அந்த கம்ஃபர்ட், இயல்பா இருக்கறது வேற யார் கிட்டயும் வரலை. வரவும் வராது. இதுக்கு மேல உன் இஷ்டம்”
“ச்சிங்கா”
“இப்ப என்ன, உனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம். அவ்ளோதானே… அக்ரீட்… நீ இப்ப க்ளீனிக் போ”
“இல்ல ச்சிங்கா… நாம கல்யாணம் பண்ணிக்கலாம்”
எழுந்து முட்டியால் நகர்ந்து அவள் அருகில் வந்தவன் “ரியலி? நிஜமாதானே புல்புல்?”
“நிஜமாதான்”
சின்மயியை எழுப்பித் தோளோடு அணைத்துக் கொண்டான்.
“ச்சிங்கா!”
“ஒன்னு கேக்கட்டுமா?”
“கேளு”
“என் மேல பரிதாபப்பட்டு நீ என்னைக் கல்யாணம்…”
“கல்யாணம் கேன்ஸல். நான் அடிக்கறதுக்குள்ள நிக்காம ஓடிப்போயிடு”
*********************
பெங்களூரின் பிரபலமான வின்ட்ஸர் மேனரின் ரீஜன்ஸி ஹாலில் கர்நாடக, திரை, பிரபல இன்டி க்ரூப் குழுவைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள், பிரபலமான மற்றும் வளர்ந்து வரும் இளம் பாடகர்கள், மியூஸிக் டைரக்டர்கள், உறவினர்கள், சின்மயியின் ஹாஸ்பிடல் மருத்துவர்கள், செவிலிகள் மற்றும் உதவியாளர்கள் என தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னூறு பேர் குழுமி இருந்தனர். அது சின்மயி, சிங்கபிரானின் திருமண வரவேற்பு விருந்து.
இருவருக்கும் அன்று காலையில்தான் நெருங்கிய உறவினர்களும் நாதம் மியூஸிகா இசைக் குழுவினரும் சூழ மண்டபம் எதுவும் கிடைக்காததால் அவர்கள் வழக்கப்படி , சிங்கபிரானின் வீட்டிலேயே திருமணம் நடந்தது.
கதிரி கோபால்நாத் ஆங்காங்கே மறைந்திருந்த ஒலிபெருக்கிகளின் வழியே மென்மையாகக் கசிந்தார்.
சின்மயி ஒயின் நிற செல்ஃப் பார்டர் காஞ்சிப்பட்டிலும் வெண்ணிற சிக்கன்காரி குர்த்தாவில் சிங்கபிரானும் விருந்தினர்களுடன் சென்று அளவலாவினர். பஃபே முறையில் உணவு பரிமாறப்பட்டது.
சிங்கபிரானின் கையைப் பிடித்துக்கொண்டு கூடவே சுற்றினாள் கோல்டி.
அவள் சிங்கபிரானை ‘டாடி’ என்றதைப் பார்த்துத் திகைத்த பத்மினி, அவன் சின்மயியியைக் காட்டி “இது மம்மி” என்று பதிய வைத்ததில் ஓடியே விட்டாள்.
பத்தே நாள்களில் திருமணம் என்றபோதும், ரவியும் ஜனனியும் முன்றாவது நாள் இங்கிருந்தனர்.
சின்மயியியுடன் ‘எங்கண்ணா… எனக்குதான் அவன் அண்ணா’ என்று சண்டை போட்ட ரவி போய்,
‘சின்மயி, ரொம்ப வருஷம் கழிச்சு சிங்கத்தை இவ்வளவு குஷியா பாக்கறேன். இனிமே அண்ணா ஈஸ் ஆல் யுவர்ஸ். உனக்கே உனக்குதான்” என்றான் சிரிப்புடன்.
பாலாமணி “மன்னின்னு சொல்லுடா ரவி”
“அட போம்மா, மன்னின்னா யாரோ போல இருக்கும். இது நம்ப சின்மயிம்மா”
“ஹி ஈஸ் ரைட்” என்றாள் சின்மயி.
வந்த பிரபலங்களை, விருந்தினர்களை இயல்பாக எதிர்கொள்ளும் புது மணத் தம்பதியை, விழா நடக்கும் விமரிசையைப் பார்த்தபடி தன் சகோதரர்களுடன் அமைதியாக அமர்ந்திருந்தார் பரசுராம்.
பரசுராம்? ஆம், அவரேதான்.
அத்தனை பேசிய அவர்தான் அவர் பெண்ணை தனக்குத் தாரை வார்த்துத் தர வேண்டும் என்ற சிங்கபிரானின் பிடிவாதத்தில், மொத்த குடும்பமும் நெருக்க, ஹரியும் பவானியும் கிட்டத்தட்ட மிரட்டிப் பணிய வைத்திருந்தனர்.
********************
உறவினர்கள் அதிகம் இல்லை எனினும், வீட்டிலேயே திருமணம் நடந்ததில் சிங்கபிரானின் வீடே களேபரமாக இருந்தது.
நமஸ்கரித்தவர்களை “எப்பவும் போல சிநேகமா, சந்தோஷமா இருங்கோ” என்றார் பாலாமணி.
“எல்லாருக்கும் கீழதான் படுக்கை” என்று அறிவித்த ரவிக்கு மகளை அவளது டாடியிடமிருந்து பிரித்து இழுத்து வருவதுதான் கடினமாக இருந்தது.
சிங்கபிரான் “கோல்டி இங்கதான் இருக்கட்டுமே டா” என்றான்.
ரவி “சிங்கம், கொஞ்சம் திரும்பி சிம்மவாஹினியா மாறத் தயாரா இருக்கற
சின்மயியைப் பாருடா” எனவும் சின்மயி பக்கெனச் சிரித்து விட்டாள்.
அறைக் கதவைத் தாழிட்டு அருகே நெருங்கி “புல்புல்” என்ற சிங்கபிரான், சின்மயியை அணைக்க… நெளிந்தாள். இறுக்கினான்.
“ச்சிங்கா”
அவளை ஆழ்ந்து சுவாஸித்தவன் “நீ முன்னால எல்லாம் இப்டி வாசனையா இருக்க மாட்டடீ. இப்பதான் என்னை எனனவோ பண்றடீ புல்லூ ”
“ச்சிங்கா”
“ம்…”
“ கூச்சமா, குழப்பமா என்னவோ போல இருக்கு ச்சிங்கா. நாம கொஞ்ச நாள் ஃப்ரெண்ட்ஸாவே …”

Author: VedhaVishal
Article Title: நாணங்களும் எதற்காக ? 13
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.