நிழலாக துணையாக… 1
சேர்வராயன் மலைத்தொடரில் உறைந்திருந்த ஜனவரி மாதத்தின் அதிகாலைக் குளிரையும் நிசப்தத்தையும் கிழித்துக்கொண்டு எழுந்த அந்தக் குரல் வலியை எதிரொலித்தது.
“இன்னும் கொஞ்சம்தான், கிவ் எ லிட்டில் மோர் புஷ் பேபி”
“யே….ஸ், யேஸ்…, யே..ஸ்ஸ்ஸ், அவ்ளோதான்… குட் ஷோ மா, ரிலாக்ஸ்…”
அபூர்வமாக ரெட்டைக் குட்டியைப் பிரசவித்த அந்தக் குதிரையின் முதுகில் தட்டி வருடிய தேவசேனாதிபதி, தாயையும் குட்டிகளையும் பரிசோதித்து, அவற்றைப் பராமரிக்கும் முறைகளைக் கூறித் தன் சிகிச்சையை முடித்துத் தேவைப்பட்டால் அழைக்கக் கூறிவிட்டு, வாங்கி ஒரு வாரமே ஆன தன் புத்தம் புதிய ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 யில் ஆரோகணித்துக் கிளம்பினான்.
வழியனுப்பிய குதிரை அதிபரின் முகம் ‘இந்தக் குளிர்ல எவனாவது பைக்ல போவானா?’ என்ற கேள்வியை ஒளிபரப்பியது இருளிலும் தெரிந்தது.
இன்று ஞாயிற்றுக்கிழமை. ஆனாலும் இனித் தூங்க முடியாது. போகும் வழியில் தோட்டத்துக்குப் போய் பழ லோட் போய்விட்டதா என்று பார்க்க வேண்டும். பிறகு சேலத்தில் தவிர்க்க முடியாத ஒரு திருமணம். அங்கு செல்லும் முன் நாளை மறுநாள் வரும் தைப்பூசத்திற்கு சேலம் கந்தக்கோட்டத்திற்குக் காய்கறி, பழங்களைக் கொடுக்க வேண்டும். நல்ல வேளையாக லேட் முஹூர்த்தம். விடுமுறை என்பதால் உத்ரா இல்லாமல் போக முடியாது.
மனதிற்குள் அன்றைய நிகழ்ச்சி நிரலைப் பட்டியல் இட்டபடி அந்த எஸ்டேட்டில் இருந்து வெளியே வந்து ஏற்காடு நகரத்திற்குள் புகுந்து பேருந்து நிலையத்தைத் தாண்டுகையில், ஒரு இளம்பெண் இரண்டு ஆடவர்கள் மற்றும் ஒரு காவலருடன் தர்க்கித்த படி நிற்பதைக் கண்டான்.
அலட்சியம் செய்து அரை கிலோ மீட்டருக்கு மேல் கடந்துவிட்டவனுக்கு தலையோடு போர்த்தி இருந்த ஷாலின் இடைவெளியில் தெரிந்த அந்தப் பெண்ணின் முகம் வெகு பரிச்சயமானதாகத் தோன்றியது. கூடவே எதுவோ சரியில்லை என மனம் முரண்டியதில், U டர்ன் அடித்து அவர்களுக்கு வெகு அருகே வந்து உராய்வது போல் வண்டியை நிறுத்தினான்.
“யாருய்யா நீ, ஆள் நிக்கறது கண்ணு தெரியல, விட்டா வண்டிய மேலேயே ஏத்திருவ போல?” என அந்தக் காவலர் எகிறத் தொடங்கும் முன்பே, அந்நேரத்திற்கே பட்டுப்புடவையும் கனமான கழுத்துச் சங்கிலியுமாய் நின்ற அந்தப் பெண்ணை அடையாளம் கண்டு கொண்ட தேவசேனாதிபதி ஒருகணம் அதிர்ந்துதான் நின்றான். அவளுமே இவனைப் பார்த்து மிரள்வதும் அதே வேகத்தில் சுதாரிப்பதும் தெரிந்தது.
‘அடிப்பாவி, இன்னும் ஒரு மணி நேரத்துல கல்யாண சடங்கெல்லாம் தொடங்கிடும், இந்நேரத்துல இவ எங்க இங்க?’
முதலில் அவளைப் பார்த்துத் தயங்கிய தேவசேனாதிபதி, பின் நிலைமையை அவதானித்து, அந்த நடுத்தர வயது போலீஸ் கான்ஸ்டபிளிடம் பேச வாக்கியத்தை அமைக்கும் முன்பே,
“ஸார், நான்தான் அப்பவே
இவங்களை எனக்கு யாருன்னே தெரியாது, என் கிட்ட வம்பு பண்றாங்க, தப்பா பேசறாங்க, நான் என் மாமாக்காக வெய்ட் பண்றேன்னு சொன்னேன்ல, அவரே வந்துட்டாரு பாருங்க” என்றவள், அவன் எதிர்பாராத நொடியில் சட்டென அவன் பின்னே புல்லட்டில் ஏறி அமர்ந்து “போலாம் மாமா” என்றதில் வண்டி குலுங்கியதோ இல்லையோ, ஒரு கணமேனும் தேவசேனாதிபதி குலுங்கினான்.
‘என்னடா நடக்குது இங்க?’
கான்ஸ்டபிள் “இந்தப் பொண்ணு சொல்றது உண்மையா, பார்த்தா படிச்சவரு மாதிரி இருக்கீங்க, இந்நேரத்துல இவங்களைத் தனியா வரச் சொல்லி காக்க வெச்சுருக்கீங்க, எதுவும் திருட்டுக் கல்யாணமோ?”
ஹெல்மெட்டைக் கழற்றி, தன் ஜெர்கினைத் தளர்த்திய தேவசேனாதிபதி, பர்ஸில் இருந்து தன் விஸிட்டிங் கார்டை எடுத்து நீட்டி, தணிந்த குரலில் “ப்ரின்ஸ் எஸ்டேட்ல ஒரு எமர்ஜென்ஸி வேலை வந்ததால கொஞ்சம் லேட் ஆயிடுச்சு ஸார். சொந்தக்கார பொண்ணுதான். நல்ல சமயத்துல நீங்க இங்க வந்தீங்க. ரொம்ப நன்றி ஸார்”
அலைபேசி விளக்கின் உதவியுடன் கார்டைப் படித்த காவலர் “நம்ம ட்யூட்டி தானே சார். பத்திரமா கூட்டிட்டுப் போங்க” என்றதோடு ஒரு சல்யூட்டையும் கொடுத்து அனுப்பி வைத்தார்.
அந்தப் பெண் “நிறுத்துங்க, வண்டியை நிறுத்துங்க, ப்ளீஸ்” என்று கத்திக்கொண்டே வந்ததைப் பொருட்படுத்தாது,
கோம்பைக்காடை நோக்கிப் பறந்த புல்லட், நேரே போய் நின்றது பின்னால் அமர்ந்திருந்த பெண்ணின் வீட்டின் அருகில்.
மறுப்பாய், கலவரமாய் நின்றவளைப் பார்த்து உள்ளே செல்லுமாறு சைகை செய்தபடி வண்டியை உதைத்தவனைச் சுற்றிலும் தபதபவென ஆள்கள் வந்து சூழ்ந்து கொண்டனர்.
******************
‘ராஜ் காஃபி ரோஸ்ட்டர்ஸ்’ - அடக்கமான சிறிய எழுத்துகள் அம்புக்குறி இட்டு அடையாளம் காட்டிய அந்த மீடியம் சைஸ் பங்களாவின் வாயிலை அடைத்துப் போடப்பட்ட ஷாமியானா பந்தல், பல வண்ணங்களில், வடிவங்களில் மினுக்கிய சீரியல் விளக்குகள், நல்வரவு போர்டு, குளிரைப் பொருட்படுத்தாது தண்ணீர் தெளித்துப் போடப்பட்ட மெகா சைஸ் கோலம், வாழை மரம், தோரணங்கள் தவிர ஸ்ட்ரீமர்ஸ், பளபளப்பான பாம்பாம்கள், டிஸ்கோ விளக்குகள், மண மேடையின் கீழே களையப்பட்டு, குவித்து வைக்கப்பட்டருந்த முந்தைய மாலை வரவேற்பு நிகழ்ச்சியின் அலங்காரப் பொருட்கள், மேடை அலங்காரத்தை நிறுத்திவிட்டு ஓரமாக அமர்ந்திருந்த டெகரேட்டர்ஸ்…
இன்னும் எழுந்தும் எழாத உறவினர்கள், பட்டுப் புடவைகளின் சரசரப்பு, அடுத்தது ‘அந்தக் கலர்தான்’ என்ற தீர்மானங்கள், பூ மாலைகள், பூப்பந்துகளின் மணம், தங்களுக்கென போடப்பட்ட மேடையில் உறை பிரிக்காது அமர்ந்து வேடிக்கை பார்த்த நாயனக் குழுவினர், ஐந்தடித்ததும் டாணென்று தயாராகி வந்துவிட்ட இரண்டு ஐயர்கள், தொடங்கிய காஃபி ஸ்டாலைத் தொடர்வதா வேண்டாமா எனக் குழம்பிய கேடரர்ஸ் மற்றும்…
மாடியிலிருந்து எப்போது வேண்டுமானாலும் தயாராகி இறங்கி வரக்கூடிய மாப்பிள்ளை வீட்டினர் எனக் கல்யாண வீட்டின் பரபரப்புத் தீ சிம்மில் (sim) வைக்கப்பட்டிருக்க,
உள்ளே வள்ளியம்மை ஆச்சியின் அறையில்…
கவலையுடன் நின்ற சிவராஜ், அவர் மனைவி ராதா, அழுகையுடன் நின்ற மணிராஜின் மனைவி அபிராமி, சீற்றத்துடன் அங்குமிங்கும் நடந்த செல்வராஜ், உள்ளுக்குள் பொங்கும் மகிழ்ச்சியைக் கஷ்டப்பட்டு மறைத்தபடி, உலகக் கவலையை எல்லாம் முகத்தில் காட்டிய அவன் மனைவி திவ்யா மற்றும் குமரனின் மனைவி லீலா…
ஆளுக்கொரு பாவமும் பாவனையும் இருந்தாலும், கல்யாணப் பெண்ணைக் காணாததில் பதட்டமானி தன் உச்ச வரம்பைத் தாண்டி நின்றதில் மலைக்குளிர் கூடக் கொஞ்சம் குறைந்துதான் போனது.
சிவராஜ் “அவ மொபைலுக்குக் கால் பண்ணிப் பார்த்தீங்களா?”
திவ்யா “அலரோட மொபைலே இங்கதான் மாமா இருக்கு . பாஸ்வேர்ட் கேட்குது. வேற வேற போட்டு ட்ரை பண்ணினதுல இன்னும் ரெண்டு நாளைக்கு ஓபன் பண்ண முடியாதுன்னு வருது”
தபதபவென ஓடிவந்த குமரன்,
“அவ நேத்து ரிஸப்ஷனுக்கு போட்டிருந்த நெக்லஸ் டப்பாக்குள்ள இது இருந்துச்சு” என்று தொடங்கிய வேகத்தில் சூழல் உணர்ந்து குரலைத் தழைத்துக் கொண்டு தன் முஷ்டியை இறுக்கித் தங்கைக்கு பதில் உள்ளே இருந்த காகிதத்தைக் கசக்கினான்.
“என்னவாம்?”
“எவனையோ லவ் பண்றாளாம், தேட வேணாம், திரும்ப வரமாட்டே.…”
“இந்தக் கல்யாணம் வேணாம்னு அவதான் அப்பவே சொன்னாளே” என்ற அபிராமி இப்போது வெளிப்படையாகவே அழத் தொடங்க,
“அப்போ அவ யாரையோ விரும்பறது உனக்குத் தெரியும், அப்படித்தானே?”
“இல்லத்த, சத்தியமா இல்லத்த. அலர் யாரையும் விரும்பலத்த. எனக்கு நிச்சயமா தெரியும்”
“என்ன தெரியும், வளர்க்கத் தெரியாம பொண்ணை வளர்த்துட்டு, இப்ப என்ன அழுகை கேக்கறேன், அவளைக் கேட்டுதானே எல்லாம் முடிவு செஞ்சோம். அப்பல்லாம் சரி சரின்னு சொல்லிட்டு, இதென்ன… ஓடுகாலிக் கழுதை”
“...”
“அவளுக்கு விருப்பம் இல்லைன்னா, நேத்து நடந்த நிச்சயத்துலயும் வரவேற்புலயும் மாப்பிள்ளையோட ஏன் நின்னா? இப்ப அவங்களுக்கு என்ன பதில் சொல்றது?”
“பெத்தவதானே நீ, காலம் இருக்கற இருப்புல, அவளுக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு தெரிஞ்சும் நைட் அவளைத் தனியா படுக்க விட்டு இருக்க. நான் போய்க் கூட இருக்கலாம்னா அந்தச் சிறுக்கி என்னோட பேச மாட்டா. அபிராமி மட்டுமில்ல, இதைப் பாக்குறத விட நீங்க எல்லாரும் என்னத்தை வெட்டி முறிச்சீங்க?”
“...”
‘எனக்கும் இதற்கும் சம்பந்தமல்லை, நான் ரொம்ப நல்ல பொண்ணாக்கும்’ என்ற பாவனையைக் காட்டிய பேரன்களின் மனைவிகளைக் கண்டு கொண்டார் வள்ளியம்மை.
“நாத்தனாருக்குக் கல்யாணம்னதும் அவளோட கல்யாணப் பட்டு விலைக்கே புடவை வாங்கவும் கண்ட கண்ட களிம்பை மூஞ்சில அப்பிக்கவும் ம***ப் பு***வும் ரோக்கு ரோக்கா பணத்தை செலவழிக்கத் தெரியுதில்ல, அந்த அக்குசை வீட்லயும் கொஞ்சம் காட்டுறது”
பழைய பிரம்பு நாற்காலியில் அமர்ந்தபடி, சகட்டுமேனிக்கு எல்லோரையும் விளாசிக் கொண்டிருந்தார்
எழுபத்தாறு வயதில் திடமாக, உரமாக, நிமிர்வாக இருந்த வள்ளியம்மை!
அறைக்கதவு தட்டப்பட, மணிராஜ் தலையைக் குனிந்தபடி சோர்வுடன், ஆனால் பதற்றமாக உள்ளே வந்தார்.
“ஏன்டா மணி என்னவோ போல இருக்க, அவளைப் பத்தி ஏதாவது தகவல் வந்துச்சா, கிடைச்சாளாடா?”
“மோசம் போய்ட்டோம்மா, நீங்களே வந்து பாருங்க”
வெளியில்…
மாப்பிள்ளை, மாயண்ணன் மற்றும் அவன் உறவுகளெல்லாம் பட்டும் பகட்டுமாய் முஹூர்த்தத்திற்குத் தயாராகிக் கீழே வந்து நிற்க, ஏழெட்டு ஆள்கள் பின்னே ஓடி வர, கேட்டுக்குள் நுழைந்து பந்தலின் நடுவே நின்று படபடத்து அடங்கிய புல்லட்டில் இருந்து நிதானமாக இறங்கினாள் அலர், அலர்மேல்வள்ளி.
மகளைப் பார்த்த வேகத்தில் ஆத்திரமும் அழுகையும் மேலிட “எங்கடீ போன. யாருடீ இவன்?” என்றபடி மகளை நெருங்கிய அம்மா அபிராமியைத் தள்ளிக்கொண்டு தங்கையை அடிக்கப் பாய்ந்த செல்வராஜ் மட்டுமின்றி வண்டியிலிருந்து இறங்கி வைஸருடன் கூடிய ஹெல்மெட்டைக் கழற்றியவனைக் கண்டு மொத்த வீடுமே அதிர்ந்துதான் நின்றது.
“தேவா, நீயா?” என்று வீறிட்ட செல்வராஜ், தங்கையை மறந்து தேவசேனாதிபதியின் ஸ்வெட் ஷர்ட்டைப் பிடித்தான்.
“உன் வயசென்ன, அவ வயசென்னடா? போயும் போயும் இவன் கூடவாடீ ஓடப்பாத்த? ஏய், இவன் குடும்பத்தோட சங்காத்தமே வேணாம்னு ஐயனும் ஆச்சியுமே விலக்கி வெச்ச பொறவு அவனோட உனக்கென்னடீ உறவு?”
நல்ல உயரமும் அகலமுமாய் நின்று கழுத்தை உலுக்கிய செல்வராஜிடம் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ளப் போராடிய தேவசேனாதிபதி “அது… டேய் செல்வா, என்னைப் பேச விடுடா… “
அதற்குள் அருகே நெருங்கி இருந்த சிவராஜ் “ பேசறத்துக்கு சான்ஸ் குடுக்க இங்க என்ன கட்சி மாநாடா நடக்குது? நம்ம வீட்டுப் பொண்ணை அவ கல்யாணத்தன்னிக்கே தூக்கி இருக்கான். என்னடா மணி பாத்துக்கிட்டு சும்மா நிக்குற?” என்றவர் தேவசேனாதிபதியை பொளேரென்று ஒரு அறை விட, செல்வராஜும் குமரனும் இணைந்து கொண்டு சரமாரியாக அடிக்க, முதலில் தடுக்க மட்டுமே முயற்சித்தவன், பிறகு எதிரில் நின்ற குமரனின் தாடையில் வெடித்தான். இடது முழங்கையால் செல்வராஜின் நெஞ்சில் குத்த அந்த இடமே குத்துச் சண்டை மைதானமாக மாறியது.
அந்தக் குடும்பத்தில் சற்றே தப்பிப் பிறந்த அமைதியான மணிராஜ், மகளையும் அவளை மணக்கக் காத்திருக்கும் மாப்பிள்ளையையும், அவளோடு வந்து நின்று, அவளுக்காக அடி வாங்குபவனையும் மாறி மாறிப் பார்த்து முகம் கசங்கினார்.
“ஊர் சிரிக்கறாப்பல ஏன்டீ இப்டி செஞ்ச?” என்ற அபிராமி, பட்பட்டென மகளை அடிக்க, அங்கே கூடி இருந்த மாப்பிள்ளை வீட்டினர், உறவினர்களோடு மற்றவர்களுக்கும் இப்போது பின்னணி புரிந்துவிட, விமர்சனத்துடன் வேடிக்கை பார்க்கத் தொடங்கினர்.
“அப்பிடித்தான், போடு சொல்றேன் நல்லா”
“தெரிஞ்சவன்தான் போல. செல்வராஜோட சிநேகிதனா இருக்குமோ”
“செல்வாக்கு சிநேகிதன்னா முப்பத்துக்கு மேல இருக்காது?”
“வயசுப் பசங்களை வீட்டுக்குள்ள விட்டா இப்படிதான்”
“இது ஏற்காடு மாட்டு டாக்டர் இல்ல?”
வீட்டில் சகஜமாகப் புழங்கி வேலை பார்க்கும் ஈஸ்வரி “இந்தப் பொண்ணு நாய்க்கு சுகமில்லன்ற சாக்குல இவரைப் பார்க்கத்தான் போயிருக்கு போல”
“இவன் நம்ம ஆளா, இல்ல…”
“வள்ளியம்மைக்கும் சிவராஜுக்கும் தேவைதான்”
“என்ன தேவை, உனக்கு இந்தத் தம்பிய யாருன்னு தெரியாதா? வள்ளியம்மை ஆச்சியோட சொந்த மக வயித்துப் பேரன் பா!”
“அப்ப முறைன்னு சொல்லு… அப்புறம் ஏன்?”
மிக மெலிதாகப் பரவத் தொடங்கி இருந்த வெளிச்சத்தோடு கூடவே, பலதரப்பட்ட கருத்துகளும் விமரிசனங்களும் பரவ, அதற்கு மேல் அங்கே இருப்பது சரியாகப் படாததில் மாப்பிள்ளைப் பையனின் தந்தை படபடத்தார்.
“இன்னும் என்னத்துக்குடா நாம இங்க நிக்கணும், பிரகாஷ், முதல்ல நீ போய் வண்டில ஏறு. லக்ஷ்மி, திலீப், செந்தில், ஆளுங்களை கூட்டிட்டு மேல போய் சாமான்களை அள்ளிட்டு வந்து வண்டில ஏத்துங்க” என்றார் ஆத்திரத்துடன்.
ஓங்கி ஒலித்த சம்பந்தி மனிதரின் குரலில் சற்றே பிடியைத் தளர்த்திய சகோதரர்களிடம் இருந்து விலகிக் கைகளை உயர்த்தி நெட்டி முறித்த தேவசேனாதிபதிக்கு, இத்தனைக்கும் காரணமான அந்தப் பெண் தன்னையே முறைத்தபடி நிற்பதைக் கண்டதில் ஆச்சரியமும் ஆயாசமும் எழுந்தது.
‘மிஞ்சிப் போனா ஒரு இருபத்திரெண்டு, இருபத்துமூணு வயசு இருக்குமா, இவளுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை, எதுக்கு இத்தனை ஆட்டிட்யூட்?
யாரை எதிர்பார்த்து அந்நேரத்துல அங்க நின்னா? ஒருவேளை இவளைக் காப்பாத்தறதா நினைச்சு நான்தான் ததப்பு செஞ்சுட்டேனோ?’
அவரைத் தொடர்ந்து மாப்பிள்ளையின் தாய் மாமா, சித்தி, அக்கா, அவள் கணவன், மற்ற உறவுகள் எனத் தலைக்குத் தலை ஆக்ரோஷமாகக் கத்தினர்.
இதற்குள் தன்னை மீட்டுக்கொண்ட வள்ளியம்மை “என்ன பிரச்சனைன்னு கேட்போம். எங்க பேத்தியை அந்தப் பையன் கடத்திட்ட மாதிரி தெரியுது. கொஞ்சம் பொறுமையா இருங்க சம்பந்தி, சிவா, மணி இங்க வாங்க” என சேதத்தைக் குறைக்கும் முயற்சியில் இறங்கினார்.
‘கடத்தலா, நானா, சரிதான். போனாப் போவுது, கல்யாணப் பொண்ணாச்சேன்னு கொண்டு வந்து விட்டதுக்கு… தேவைதான் எனக்கு’
பணமும் பதவிசும் நிறைந்த மாப்பிள்ளையின் தாய் “எத்தனையோ யோசனைக்குப் பிறகுதான் இந்தக் கல்யாணத்தை முடிவு செஞ்சோம். உங்க பொண்ணுக்கு சம்மதம் இல்லாதபோது இத்தனை செலவும் ஏற்பாடும் என்னத்துக்கங்க? “
“...”
“பரவாயில்லைன்னு கட்டிக்க இதென்ன புடவையா சொல்லுங்க, நாளைக்கு அவங்க வாழ வேணாங்களா? இதுவே நல்லவேளை, தாலி கட்டலை. இல்லைன்னா வக்கீல், கோர்ட், டிவோர்ஸுன்னு அதுக்கு வேற அலையணும்”
“...”
“உங்க விருப்பம்போல பொண்ணு பாருங்கன்னு சொன்ன புள்ளைங்க அவன். எனக்குத்தான் மனுஷங்களைப் படிக்கத் தெரியலை போல. இதே உங்க பொண்ணுக்கு நடந்திருந்தா இத்தனைக்குப் பிறகும் இப்படி சமாதானம் பேசுவீங்களா?”
“ம்ப்ச், விடும்மா, இப்ப என்ன, அழாதம்மா”
அவரது கலக்கத்தைப் பார்த்து மேலும் கத்தத் தொடங்கிய தன் உறவுகளை அமைதி காக்குமாறு வேண்டிய மாப்பிள்ளை(?) பிரகாஷ் “உங்க பொண்ணு நிக்கிற தோரணையைப் பார்த்தா அவதான் அவரைக் கடத்திட்டுப் போன மாதிரி தெரியுது. என்னோட ஃபோன், மெஸஜ்னு எதுலயுமே அவ ஆர்வம் காட்டாம இருந்தப்பவே நான் சுதாரிச்சிருந்து இருக்கணும்”
“...”
“புடிக்கலை, இந்தக் கல்யாணம் வேணாம்னு என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா, இப்படி முஹூர்த்தம் வரைக்கும் வர விட்டிருக்க மாட்டேனே?”
“...”
“ரெண்டுமாசம் முன்னால எங்கேஜ்மென்ட், நேத்து நிச்சயம், நலங்கு, ரிஸப்ஷன்னு எத்தனை ஃபோட்டோ, வீடியோ… இதுல என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வேற பாட்டு, டான்ஸு, கிண்டல், கேலின்னு… இதோ, இன்னும் அஞ்சு, பத்து நிமிஷத்துல முஹூர்த்தத்துக்கு வந்துடுவாங்க”
“...”
“ஆசையா, உண்மையா இந்தக் கல்யாணத்தை எதிர்பார்த்த எனக்கும், எங்க குடும்பத்துக்கும் எதுக்குங்க இந்தத் தேவையில்லாத அவமானம்?”
இக்கட்டான அந்தச் சூழலிலும் அந்தக் குடும்பத்தின், பையனின் தகுதியும் தன்மையும் கண்டு வியந்த தேவசேனாதிபதி “ஒரு நிமிஷம் நில்லுங்க ஸார்…”
“ஏய்… என்ன… தா****” என நாக்கை மடித்துக் கெட்ட வார்த்தையில் திட்டியபடி பாய்ந்த செல்வராஜ் மீண்டும் அடிக்கத் தொடங்க, தேவசேனாதிபதி செல்வராஜின் முகத்தில் ரத்தம் கன்றுமளவு ஓங்கிக் குத்தினான்.
என்னதான் ஆத்திரம் என்றாலும், தவறாகப் பேசியது தங்கள் வீட்டுப் பெண்ணை என்றதால் “டேய் செல்வா” என்ற அதட்டல் எல்லா பக்கமும் எழுந்தது.
அபிராமி “செல்வா, குமரா, அடிக்கறதை நிறுத்திட்டு, அந்தப் பையன் சொல்லுறதையும் கொஞ்சம் கேளுங்களேன்”
மணிராஜ் “வாய மூட்றி, பெத்த பொண்ணு என்ன செய்யுறான்னு கூடப் பார்க்காம இருந்துட்டு அவனைக் கேக்கணுமாம், அப்ப இதெல்லாம் உனக்குத் தெரிஞ்சுதான் நடக்குதா?” என்று சீறியதில் அபிராமியின் அண்ணன்கள் எகிறிக்கொண்டு வந்தனர்.
செல்வராஜைப் பிடித்து ஒரே தள்ளாகத் தள்ளிய தேவசேனாதிபதி, மீண்டும் பிரகாஷ் மற்றும் அவனது பெற்றோரிடம் “மன்னிச்சுடுங்க ஸார், நீங்க நினைக்கற மாதிரி…”
யாரோ தன் இடக்கையை அணைத்தபடி பற்றியதில் தேவசேனாதிபதி திடுக்கிட்டுத் தன் பேச்சை நிறுத்த,
“ஏன் மாமா பொய் சொல்ற, அவங்க நல்லவங்கதான். அதுக்காக என்னை விட்டுக் கொடுத்துடுவியா?”
அலர்மேல்வள்ளியின் அதிரடியில் அந்த அங்கணம் முழுவதும் அதிர்ச்சி, அவமானம், ஆத்திரம், ஆக்ரோஷம் எனப் பலவித உணர்வுகள் பெருக்கெடுத்து ஓட.
தேவசேனாதிபதி ‘லவ்வ்வ்வா, அடிப்பாவி! இவளை நான் பார்த்ததே மூணு மாசத்துக்கு முன்னாலதான். இவ யாருன்னே ஒரு மாசமாதான் எனக்குத் தெரியும் ” என வாயைப் பிளந்து நிற்க, எண்ணிக்கையில் எண்பது பேர் வரை இருந்த மாப்பிள்ளை வீட்டினர் மளமளவென இரண்டே நிமிடங்களில் வெளியேறினர்.
போர்நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.