• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

நிழலாக துணையாக...10 FINALE

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
71
276
53
Chennai
நிழலாக துணையாக...10
“உத்ரா என் மகள்னு எத்தனை தரம் சொல்றது ஆச்சி?”

“அவ உன் பொண்ணாவே இருக்கட்டும், நீ அவ தாடியாவே இரு. அவ யாரு, அவங்கம்மா யாருன்னு சொல்லு”

“ம்ப்ச்”

“தேவா, உனக்கு ஒரு குழந்தை இருக்கு. ஜாடைல உன்னையே உரிச்சு வெச்சிருக்கு. உனக்கு கல்யாணம் ஆகலைன்னு சொல்ற, அப்ப அந்தக் குழந்தையோட அம்மா யாரு? யாரும் பெக்காம மரத்துல காய்ச்சு, நீ பறிச்சிக்கிட்டு வந்தியா?”

“ஆச்சீ…:

“என் வீட்டுப் பொண்ணைக் கட்டி இருக்க தேவா. அந்தக் குழந்தை யாரு, உனக்கும் உத்ராக்கும் என்ன சம்பந்தம்னு தெரிஞ்சுக்கற உரிமை அலருக்கு உண்டுதானே? அவ உனக்கே பொறந்திருந்தாலும் பரவாயில்ல, உத்ரா யாரு”

“...”

அலர்மேல்வள்ளி “வேணாம் ஆச்சி, எனக்கு தெரியலைன்னா பரவாயில்ல. சொல்லணும்னா மாமாவே சொல்ல மாட்டாங்களா?”

“ஆச்சி, நீங்க இத்தனை தூரம் அழுத்தம் கொடுக்கறதால , வள்ளிக்கு உண்மை தெரியணுங்கறதுக்காக உங்க ரெண்டு பேரையும் நம்பி சொல்றேன். யார்கிட்டயும் சொல்ல மாட்டீங்கன்னு ப்ராமிஸ் பண்ணுங்க”

“நம்புங்க மாமா”

“உத்ரா என் தங்கை. எங்கப்பாக்கும், அவரோட ரெண்டாவது மனைவிக்கும் பிறந்த குழந்தை”

ஆச்சி “இதை ஒரு மாதிரி நான் எதிர்பார்த்தேன்” என்றார்.

தேவசேனாதிபதி “என் வாயப்புடுங்கி, வார்த்தையை வாங்கிட்டு… ஏன் சொல்லமாட்ட?”

“அது இருக்கட்டும், அவ எப்படி உனக்கு மகளானா?”

“கோவிட் சமயத்துலதான் உத்ரா பொறந்திருக்கா. எத்தனையோ கவனமா இருந்தும் பிரசவத்துக்குப் பிறகு அவரோட மனைவி தொற்று வந்து இறந்துட்டாங்க. கைக்குழந்தையோட தனியா ஒரு வருஷம் ரொம்ப கஷ்டப்பட்ட அப்பாவுக்கும் ரெண்டாவது அலைல கொரோனா. அப்பதான் எனக்கு ஃபோன் செஞ்சு கூப்பிட்டார். ஆனா, அருணாச்சல்ல இருந்த நான் பயணம் செய்ய அனுமதி கிடைச்சு மைசூர் வரதுக்குள்ள அப்பா…”

தேவசேனாதிபதி மேலே பேச முடியாது தொண்டை அடைக்க, இடது கையை மேலே உயர்த்திக் காட்டினான். அவன் முகத்தில் அத்தனை வேதனையும் இறுக்கமும்.

“தேவா…”

தேவாவின் கையைப் பிடித்துக்கொண்ட அலர் “வேணாம் மாமா, நீங்க எதுவும் சொல்ல வேணாம். ஆச்சி, எல்லாம் உன்னாலதான்” என்றாள்.

தேவசேனாதிபதி “இந்த ஒருமுறை முழுசா பேசி முடிச்சுடறேன். ஒரு வயசுக் குழந்தை உத்ரா. கவனிக்க ஆள் இல்லாம அந்த வீட்ல தனியா இருக்கா. அப்பா செத்து நாலஞ்சு நாள் ஆச்சு. பக்கத்து வீட்ல இருந்த ஒரு அம்மாதான் இரக்கப்பட்டு பாத்துக்கிட்டாங்க. நான் வந்தா குடுக்க சொல்லி, ஒரு லெட்டர், என் ஃபோட்டோ, அவரோட மொபைல் எல்லாம் ஹாஸ்பிடல் போற முன்னாலயே அந்தம்மா கிட்ட கொடுத்துட்டுப் போய் இருக்கார்”

“...”

“அந்த மொபைல்ல “என்னை மன்னிச்சுடு தேவா. இது உத்ரா. அநாதையா விட்டுடாதன்னு ஒத்த வரி வாய்ஸ் ரெக்கார்ட் பண்ணி வெச்சிருந்தாரு”

“...”

“என்னைப் போல அதிர்ஷ்டம் இல்லாம யாருமே இருக்க மாட்டாங்க ஆச்சி. தம்பி, அம்மா, அப்பான்னு என்னைச் சேர்ந்தவங்க எல்லாரும் போய், அவங்க முகத்தைப் பாக்கக் கூட எனக்குக் குடுத்து வைக்கல. அழுது, அழுது இப்பல்லாம் அழக் கூட வரலை ”

தேவாவின் குரலில் இருந்த வெறுமையில் அலர்மேல்வள்ளி அருகில் நெருங்கி, அவன் முதுகை வருட, தேவா “ஆச்சிடீ” என முனகினான்.

மெலிதாகக் கனைத்த ஆச்சி “சொத்து பத்திரமெல்லாம்…”

“ரெண்டாவது அஞ்சு வருஷத்துக்கு குத்தகைக்கு விட்டபோது, அப்பா நம்ம வாசுதேவனோட அப்பாகிட்டதான் பொறுப்பை குடுத்திருந்தார். கூடவே, எல்லாத்தையும் என் பேர்ல மாத்தி ஒரு உயிலும் எழுதி வெச்சிருந்தார். குத்தகை பணம் மட்டும் அவரோட அக்கவுன்ட்டுக்குப் போயிருக்கு”

“என் ரத்தம்னு சொல்லிக்க இப்ப உத்ராவைத் தவிர யாரும் இல்லை. இத்தனை சொத்தும் சுகமும் அவளுக்கும்தானே ஆச்சி சொந்தம்?”

“...”

“அவ எங்கிட்ட வந்தபோது பேச்சு கூட வரலை. ஒரு கார்டியனாத்தான் தூக்கிட்டுப் போய் குவார்ட்டர்ஸ்க்கு குடி போனேன். ஆனா, அவ சொன்ன முதல் வார்த்தையே அப்பா தான். அதைக் கேட்டு உள்ள ஒரு மாதிரி ஆயிடுச்சு. சரி, அப்பாவாவே இருந்துடுவோம்னு முடிவு பண்ணிட்டேன். நேஹாவோட பசங்களைப் பாரத்துப் பார்த்து இப்பதான் டாடீன்னு சொல்றா”

அலர்மேல்வள்ளி “சர்ட்டிஃபிகேட்ல…”

“இப்பதானே நமக்குக் கல்யாணம் ஆகி இருக்கு. உனக்கு இருபத்தஞ்சு வயசு ஆனதும் சட்டப்படி தத்து எடுத்துப்போம். உனக்கு ஓகேதானே?”

****************

இரவு…

“ஆச்சி தூங்கிட்டாங்களா வள்ளி?”

“ம், படுத்துட்டாங்க மாமா. உத்ரா ரூம்லதான் படுப்பேன்னு பிடிவாதமா படுத்திருக்காங்க”

“வள்ளி, உண்மைய சொல்லுவியா?”

“எந்த உண்மைய மாமா?”

“நீ ஏன் வீட்டை விட்டுப் போன?”

“உங்களுக்காகதான் மாமா”

“வள்ள்ளீ…”

“அதான் மாமா உண்மை”

“அடியேய்”

“நம்பினா நம்புங்க”

“சரி, உன் காதல் கதையை சுருக்கமா, உருக்கமா சொல்லு, கேட்போம்”

“கடைசியா ஒருநாள் உங்க க்ளீனிக்குக்கு , மூடற நேரத்துல வந்திருந்தேன், நினைவிருக்கா?”

“ம்…”

“நான் வெளில வெயிட் பண்ணும்போது நீங்க யாரோடயோ பேசிக்கிட்டு இருந்தீங்க”

“ஒட்டுக் கேட்டியாடீ?”

“நீங்க வேற, நீங்க பேசின எதுவுமே எனக்குக் கேட்கல. ஆனா, கதவைத் திறந்து வெளில போனது வாசு அண்ணா”

“ஓ… அதனால?”

“நீங்க என் அத்தைப் பையன்னே அன்னிக்குதான் எனக்குத் தெரியும். குமரன்தான்
“இவனை விட்டா வேற டாக்டரே கிடைக்கலையான்னு திட்டிக்கிட்டே நீங்க யாருன்னு சொன்னான்”

“எனக்கும் அன்னிக்கிதான், அதுவும் குமரனைப் பார்த்ததும்தான் நீ யாருன்னு தெரியும்”

“நான் மறுநாளே வாசு அண்ணா கிட்டப் போய் நின்னேன். எத்தனை கேட்டும் அவர் ஒண்ணும் சொல்லலை”

“ஐயோ பாவம்”

“மா..மா, அப்புறம் நேரா ஆச்சி கிட்டயே போய்ட்டேன்”

“அடிப்பாவி, ஒரு மாசத்துல கல்யாணத்தை வெச்சுக்கிட்டு…”

“ஆச்சியும் இதையேதான் சொன்னாங்க. ஆனா, அவன் ஒரு பொறுக்கி மாமா. வெவ்வேற டேட்டிங் ஆப்ல பல விதமா ஃபோட்டோ போட்டு, பொண்ணு, பையன் வித்தியாசம் இல்லாம பல பேரோட சுத்தறான். ஆனா, நல்லவன் மாதிரி பேசறான். அவங்க வீட்ல இருக்கறவங்களுக்கு எதுவும் தெரியாது போல”

“உனக்கெப்படித் தெரியும்?”

“காலேஜ் க்ரூப்ல எங்கேஜ்மென்ட் ஃபோட்டோ போட்டதுமே ஆல் டீட்டைல்ஸ் வந்துடுச்சு”

“உன் ஃப்ரெண்ட் எல்லாம் டேட்டிங் ஆப்ல சுத்தறாங்கன்னு சொல்லு. நீ எப்டி?”

“போனாப் போவுது, முறை மாமாவாச்சே, தனியா இருக்கீங்களேன்னு, வயசாளின்னு கூடப் பாக்காம வாழ்க்கை கொடுத்தா… தேவைதான் மாமா எனக்கு”

அதுவரை சிரிப்புடன் பேசிக் கொண்டிருந்த தேவசேனாதிபதியின் முகம் இறுகியது.

“என்னாச்சு மாமா?”

“எனக்கு உன் பரிதாபமோ அனுதாபமோ தேவையில்லை”

“ரொம்பத்தான். உங்களைப் பார்த்ததுமே புடிச்சுப் போய் சைட் அடிக்கதான் புதுப்புது நாயா வாங்கிட்டு க்ளீனிக் வந்தேன். அத்தை பையன்கறதெல்லாம் அப்புறம்தான், போதுமா? நடுவுல அந்தப் பிரகாஷ் மண்ணு லாரி வேற குறுக்க வந்து, பெரியப்பாவோட சண்டை போட்டு. அவன் அவ்வளவு மோசமானவன்னு ஆதாரத்தோட சொல்லியும் அவர் ஒத்துக்கலையே…”

“ம்….”

“ஆச்சி உங்களை நினைச்சு அடிக்கடி புலம்புமா, உன் பேரனோட சேர கடைசி வாய்ப்புன்னு ஆச்சி மண்டையைக் கழுவி, அவங்க உதவியோடதான் வெளில வந்தேன். வெளிச்சம் வந்ததும் இந்த வீட்டுக்குதான் வந்திருப்பேன்”

“இது வேறயா?”

“நீங்க அங்க வந்ததும், அன்னிக்கே நம்ம கல்யாணம் நடந்ததும் என் லிஸ்ட்லயே இல்லை. அதென்ன சொல்லுவாங்க, ஹான், பழம் நழுவி பால்ல விழுந்தாப்போல”

“விழும்டீ, விழும் சக்கரவள்ளிக் கிழங்கு”

“போய்யா சேனைக்கிழங்கு”

*******************

மூன்று வருடங்களுக்குப் பிறகு…

தேவசேனாதிபதி- அலர்மேல்வள்ளி தம்பதி உத்ராவை சட்டபூர்வமாக மகளாக ஸ்வீகரித்துக் கொண்டனர்.

சக்கரவள்ளிக்கிழங்கும் சேனைக்கிழங்கும் சேர்ந்து நிமலன் என்றொரு உருளைக்கிழங்கை உற்பத்தி செய்திருந்தன(ர்).

தேவசேனாதிபதி டீயை விட்டு முழுநேர ஃபில்டர்காஃபி அபிமானியாகி விட்டான்.

அலர்மேல்வள்ளிக்கும் உத்ராவிற்கும் ஆச்சி வீட்டிலிருந்து அசைவம் வருகிறது.

தேவசேனாதிபதியின் ஆழ்மன ஏக்கங்களுக்கு மருந்தாக, அவனது நிழலாக, துணையாக அலர்மேல்வள்ளி…
 
Mrs Beenaloganathan

Active member
Mar 21, 2025
234
13
43
46
Bangalore
நிழலாக துணையாக.....

நிழலாக நின்றவளை
நெருங்கி வந்தவன்
நல்லது செய்ய போக
நினையாத
நிகழ்வாக
நிஜமான துணையாக
நடந்தேறிய திருமணம்......

பிரிந்த குடும்பம்
பல வருடம் கழித்து
பேத்தி காதல் என
பேரனுடன் சேர....

பாட்டியின் பேச்சில்
பழைய
பிணக்குகள் கரைந்து
பந்தம் புதிதாய் மலர....

பிள்ளையுடன் நிற்கும் பேரன்
புரியாத மர்மம் போல
பழைய காயம் மறைத்தும்
புதிய வாழ்க்கை
பாட்டியின் கேள்வியும்
பேத்தியின் நம்பிக்கையும்
பேரனின் நிலையும்
பரிதாபமே....

பெண்களின் பெண்ணியம் பேசும் பாட்டியும்
பெற்ற அன்னையின்
பாசமும்
பொண்டாட்டியின் புரிதலும்
பிரமாதம்......

தனித்து நிற்கும் தலைவனுக்கும்
துணையாக வரும் துணைவி தான்
நிழலாக துணையாக....

சக்கரவள்ளி கிழங்கும்
சேனைக்
கிழங்கும்
உருளைக்கிழங்கும்
அற்புதம்....

Jun 19, 2024
36
54
18
Trivandrum
😍😍😍

சக்கரை வள்ளிக்கிழங்கும், சேனைக்கிழங்கும் சேர்ந்து எப்படி உருளைக்கிழங்கை உற்பத்தி செய்ய முடியும்? 🤔😁

தேவா & அலர்...❤️❤️❤️

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
71
276
53
Chennai
😍😍😍

சக்கரை வள்ளிக்கிழங்கும், சேனைக்கிழங்கும் சேர்ந்து எப்படி உருளைக்கிழங்கை உற்பத்தி செய்ய முடியும்? 🤔😁

தேவா & அலர்...❤️❤️❤️

💖💖💖💖
 
Cross breeding🙈🙈😍
 
S HEMA

New member
Mar 18, 2026
18
13
3
CHENNAI
😍😍😍

சக்கரை வள்ளிக்கிழங்கும், சேனைக்கிழங்கும் சேர்ந்து எப்படி உருளைக்கிழங்கை உற்பத்தி செய்ய முடியும்? 🤔😁

தேவா & அலர்...❤️❤️❤️

எனக்கும் அதே doubt தான்
நிழலாக துணையாக...10
“உத்ரா என் மகள்னு எத்தனை தரம் சொல்றது ஆச்சி?”

“அவ உன் பொண்ணாவே இருக்கட்டும், நீ அவ தாடியாவே இரு. அவ யாரு, அவங்கம்மா யாருன்னு சொல்லு”

“ம்ப்ச்”

“தேவா, உனக்கு ஒரு குழந்தை இருக்கு. ஜாடைல உன்னையே உரிச்சு வெச்சிருக்கு. உனக்கு கல்யாணம் ஆகலைன்னு சொல்ற, அப்ப அந்தக் குழந்தையோட அம்மா யாரு? யாரும் பெக்காம மரத்துல காய்ச்சு, நீ பறிச்சிக்கிட்டு வந்தியா?”

“ஆச்சீ…:

“என் வீட்டுப் பொண்ணைக் கட்டி இருக்க தேவா. அந்தக் குழந்தை யாரு, உனக்கும் உத்ராக்கும் என்ன சம்பந்தம்னு தெரிஞ்சுக்கற உரிமை அலருக்கு உண்டுதானே? அவ உனக்கே பொறந்திருந்தாலும் பரவாயில்ல, உத்ரா யாரு”

“...”

அலர்மேல்வள்ளி “வேணாம் ஆச்சி, எனக்கு தெரியலைன்னா பரவாயில்ல. சொல்லணும்னா மாமாவே சொல்ல மாட்டாங்களா?”

“ஆச்சி, நீங்க இத்தனை தூரம் அழுத்தம் கொடுக்கறதால , வள்ளிக்கு உண்மை தெரியணுங்கறதுக்காக உங்க ரெண்டு பேரையும் நம்பி சொல்றேன். யார்கிட்டயும் சொல்ல மாட்டீங்கன்னு ப்ராமிஸ் பண்ணுங்க”

“நம்புங்க மாமா”

“உத்ரா என் தங்கை. எங்கப்பாக்கும், அவரோட ரெண்டாவது மனைவிக்கும் பிறந்த குழந்தை”

ஆச்சி “இதை ஒரு மாதிரி நான் எதிர்பார்த்தேன்” என்றார்.

தேவசேனாதிபதி “என் வாயப்புடுங்கி, வார்த்தையை வாங்கிட்டு… ஏன் சொல்லமாட்ட?”

“அது இருக்கட்டும், அவ எப்படி உனக்கு மகளானா?”

“கோவிட் சமயத்துலதான் உத்ரா பொறந்திருக்கா. எத்தனையோ கவனமா இருந்தும் பிரசவத்துக்குப் பிறகு அவரோட மனைவி தொற்று வந்து இறந்துட்டாங்க. கைக்குழந்தையோட தனியா ஒரு வருஷம் ரொம்ப கஷ்டப்பட்ட அப்பாவுக்கும் ரெண்டாவது அலைல கொரோனா. அப்பதான் எனக்கு ஃபோன் செஞ்சு கூப்பிட்டார். ஆனா, அருணாச்சல்ல இருந்த நான் பயணம் செய்ய அனுமதி கிடைச்சு மைசூர் வரதுக்குள்ள அப்பா…”

தேவசேனாதிபதி மேலே பேச முடியாது தொண்டை அடைக்க, இடது கையை மேலே உயர்த்திக் காட்டினான். அவன் முகத்தில் அத்தனை வேதனையும் இறுக்கமும்.

“தேவா…”

தேவாவின் கையைப் பிடித்துக்கொண்ட அலர் “வேணாம் மாமா, நீங்க எதுவும் சொல்ல வேணாம். ஆச்சி, எல்லாம் உன்னாலதான்” என்றாள்.

தேவசேனாதிபதி “இந்த ஒருமுறை முழுசா பேசி முடிச்சுடறேன். ஒரு வயசுக் குழந்தை உத்ரா. கவனிக்க ஆள் இல்லாம அந்த வீட்ல தனியா இருக்கா. அப்பா செத்து நாலஞ்சு நாள் ஆச்சு. பக்கத்து வீட்ல இருந்த ஒரு அம்மாதான் இரக்கப்பட்டு பாத்துக்கிட்டாங்க. நான் வந்தா குடுக்க சொல்லி, ஒரு லெட்டர், என் ஃபோட்டோ, அவரோட மொபைல் எல்லாம் ஹாஸ்பிடல் போற முன்னாலயே அந்தம்மா கிட்ட கொடுத்துட்டுப் போய் இருக்கார்”

“...”

“அந்த மொபைல்ல “என்னை மன்னிச்சுடு தேவா. இது உத்ரா. அநாதையா விட்டுடாதன்னு ஒத்த வரி வாய்ஸ் ரெக்கார்ட் பண்ணி வெச்சிருந்தாரு”

“...”

“என்னைப் போல அதிர்ஷ்டம் இல்லாம யாருமே இருக்க மாட்டாங்க ஆச்சி. தம்பி, அம்மா, அப்பான்னு என்னைச் சேர்ந்தவங்க எல்லாரும் போய், அவங்க முகத்தைப் பாக்கக் கூட எனக்குக் குடுத்து வைக்கல. அழுது, அழுது இப்பல்லாம் அழக் கூட வரலை ”

தேவாவின் குரலில் இருந்த வெறுமையில் அலர்மேல்வள்ளி அருகில் நெருங்கி, அவன் முதுகை வருட, தேவா “ஆச்சிடீ” என முனகினான்.

மெலிதாகக் கனைத்த ஆச்சி “சொத்து பத்திரமெல்லாம்…”

“ரெண்டாவது அஞ்சு வருஷத்துக்கு குத்தகைக்கு விட்டபோது, அப்பா நம்ம வாசுதேவனோட அப்பாகிட்டதான் பொறுப்பை குடுத்திருந்தார். கூடவே, எல்லாத்தையும் என் பேர்ல மாத்தி ஒரு உயிலும் எழுதி வெச்சிருந்தார். குத்தகை பணம் மட்டும் அவரோட அக்கவுன்ட்டுக்குப் போயிருக்கு”

“என் ரத்தம்னு சொல்லிக்க இப்ப உத்ராவைத் தவிர யாரும் இல்லை. இத்தனை சொத்தும் சுகமும் அவளுக்கும்தானே ஆச்சி சொந்தம்?”

“...”

“அவ எங்கிட்ட வந்தபோது பேச்சு கூட வரலை. ஒரு கார்டியனாத்தான் தூக்கிட்டுப் போய் குவார்ட்டர்ஸ்க்கு குடி போனேன். ஆனா, அவ சொன்ன முதல் வார்த்தையே அப்பா தான். அதைக் கேட்டு உள்ள ஒரு மாதிரி ஆயிடுச்சு. சரி, அப்பாவாவே இருந்துடுவோம்னு முடிவு பண்ணிட்டேன். நேஹாவோட பசங்களைப் பாரத்துப் பார்த்து இப்பதான் டாடீன்னு சொல்றா”

அலர்மேல்வள்ளி “சர்ட்டிஃபிகேட்ல…”

“இப்பதானே நமக்குக் கல்யாணம் ஆகி இருக்கு. உனக்கு இருபத்தஞ்சு வயசு ஆனதும் சட்டப்படி தத்து எடுத்துப்போம். உனக்கு ஓகேதானே?”

****************

இரவு…

“ஆச்சி தூங்கிட்டாங்களா வள்ளி?”

“ம், படுத்துட்டாங்க மாமா. உத்ரா ரூம்லதான் படுப்பேன்னு பிடிவாதமா படுத்திருக்காங்க”

“வள்ளி, உண்மைய சொல்லுவியா?”

“எந்த உண்மைய மாமா?”

“நீ ஏன் வீட்டை விட்டுப் போன?”

“உங்களுக்காகதான் மாமா”

“வள்ள்ளீ…”

“அதான் மாமா உண்மை”

“அடியேய்”

“நம்பினா நம்புங்க”

“சரி, உன் காதல் கதையை சுருக்கமா, உருக்கமா சொல்லு, கேட்போம்”

“கடைசியா ஒருநாள் உங்க க்ளீனிக்குக்கு , மூடற நேரத்துல வந்திருந்தேன், நினைவிருக்கா?”

“ம்…”

“நான் வெளில வெயிட் பண்ணும்போது நீங்க யாரோடயோ பேசிக்கிட்டு இருந்தீங்க”

“ஒட்டுக் கேட்டியாடீ?”

“நீங்க வேற, நீங்க பேசின எதுவுமே எனக்குக் கேட்கல. ஆனா, கதவைத் திறந்து வெளில போனது வாசு அண்ணா”

“ஓ… அதனால?”

“நீங்க என் அத்தைப் பையன்னே அன்னிக்குதான் எனக்குத் தெரியும். குமரன்தான்
“இவனை விட்டா வேற டாக்டரே கிடைக்கலையான்னு திட்டிக்கிட்டே நீங்க யாருன்னு சொன்னான்”

“எனக்கும் அன்னிக்கிதான், அதுவும் குமரனைப் பார்த்ததும்தான் நீ யாருன்னு தெரியும்”

“நான் மறுநாளே வாசு அண்ணா கிட்டப் போய் நின்னேன். எத்தனை கேட்டும் அவர் ஒண்ணும் சொல்லலை”

“ஐயோ பாவம்”

“மா..மா, அப்புறம் நேரா ஆச்சி கிட்டயே போய்ட்டேன்”

“அடிப்பாவி, ஒரு மாசத்துல கல்யாணத்தை வெச்சுக்கிட்டு…”

“ஆச்சியும் இதையேதான் சொன்னாங்க. ஆனா, அவன் ஒரு பொறுக்கி மாமா. வெவ்வேற டேட்டிங் ஆப்ல பல விதமா ஃபோட்டோ போட்டு, பொண்ணு, பையன் வித்தியாசம் இல்லாம பல பேரோட சுத்தறான். ஆனா, நல்லவன் மாதிரி பேசறான். அவங்க வீட்ல இருக்கறவங்களுக்கு எதுவும் தெரியாது போல”

“உனக்கெப்படித் தெரியும்?”

“காலேஜ் க்ரூப்ல எங்கேஜ்மென்ட் ஃபோட்டோ போட்டதுமே ஆல் டீட்டைல்ஸ் வந்துடுச்சு”

“உன் ஃப்ரெண்ட் எல்லாம் டேட்டிங் ஆப்ல சுத்தறாங்கன்னு சொல்லு. நீ எப்டி?”

“போனாப் போவுது, முறை மாமாவாச்சே, தனியா இருக்கீங்களேன்னு, வயசாளின்னு கூடப் பாக்காம வாழ்க்கை கொடுத்தா… தேவைதான் மாமா எனக்கு”

அதுவரை சிரிப்புடன் பேசிக் கொண்டிருந்த தேவசேனாதிபதியின் முகம் இறுகியது.

“என்னாச்சு மாமா?”

“எனக்கு உன் பரிதாபமோ அனுதாபமோ தேவையில்லை”

“ரொம்பத்தான். உங்களைப் பார்த்ததுமே புடிச்சுப் போய் சைட் அடிக்கதான் புதுப்புது நாயா வாங்கிட்டு க்ளீனிக் வந்தேன். அத்தை பையன்கறதெல்லாம் அப்புறம்தான், போதுமா? நடுவுல அந்தப் பிரகாஷ் மண்ணு லாரி வேற குறுக்க வந்து, பெரியப்பாவோட சண்டை போட்டு. அவன் அவ்வளவு மோசமானவன்னு ஆதாரத்தோட சொல்லியும் அவர் ஒத்துக்கலையே…”

“ம்….”

“ஆச்சி உங்களை நினைச்சு அடிக்கடி புலம்புமா, உன் பேரனோட சேர கடைசி வாய்ப்புன்னு ஆச்சி மண்டையைக் கழுவி, அவங்க உதவியோடதான் வெளில வந்தேன். வெளிச்சம் வந்ததும் இந்த வீட்டுக்குதான் வந்திருப்பேன்”

“இது வேறயா?”

“நீங்க அங்க வந்ததும், அன்னிக்கே நம்ம கல்யாணம் நடந்ததும் என் லிஸ்ட்லயே இல்லை. அதென்ன சொல்லுவாங்க, ஹான், பழம் நழுவி பால்ல விழுந்தாப்போல”

“விழும்டீ, விழும் சக்கரவள்ளிக் கிழங்கு”

“போய்யா சேனைக்கிழங்கு”

*******************

மூன்று வருடங்களுக்குப் பிறகு…

தேவசேனாதிபதி- அலர்மேல்வள்ளி தம்பதி உத்ராவை சட்டபூர்வமாக மகளாக ஸ்வீகரித்துக் கொண்டனர்.

சக்கரவள்ளிக்கிழங்கும் சேனைக்கிழங்கும் சேர்ந்து நிமலன் என்றொரு உருளைக்கிழங்கை உற்பத்தி செய்திருந்தன(ர்).

தேவசேனாதிபதி டீயை விட்டு முழுநேர ஃபில்டர்காஃபி அபிமானியாகி விட்டான்.

அலர்மேல்வள்ளிக்கும் உத்ராவிற்கும் ஆச்சி வீட்டிலிருந்து அசைவம் வருகிறது.

தேவசேனாதிபதியின் ஆழ்மன ஏக்கங்களுக்கு மருந்தாக, அவனது நிழலாக, துணையாக அலர்மேல்வள்ளி…
வள்ளி vs வள்ளி செம்ம combo... But கதை சடார்னு முடிஞ்ச feel