நிழலாக துணையாக... 2
வாங்கிய காசுக்கு வஞ்சனையின்றி கெட்டிமேளம் கொட்டிய நாயனக்குழுவினர் வாசித்த ஆனந்தத்தின் ரேகை சிறிதுமின்றி, இறுகிய முகத்துடன் தேவசேனாதிபதி அலர்மேல்வள்ளியின் கழுத்தில் திருப்பூட்டினான்.
தன் நிலை, வயது வித்தியாசம், காத்திருக்கும் கடமை, இது ஒரு அவசர மற்றும் கட்டாயத் திருமணம் போன்ற அவனது காரணங்கள் அனைத்தும் மறுக்கப்பட்டது.
“நீ லவ் பண்ணலைன்னா, உனக்கு சம்பந்தமில்லைன்னா, சரியா அலர் நின்ன இடத்துக்கு அந்நேரத்துல நீ ஏன் போன? ஒருவேளை, நேரங்காலம் இல்லாம ரோடு ரோடா போய் பொண்ணுங்களைப் பாக்கறதுதான் ஒன் வேலையோ?”
தேவசேனாதிபதிக்கு வாசல் படியில் அமர்ந்து நகத்தை ஆராய்ந்தவளைப் பார்க்கப் பார்க்கப் பற்றிக்கொண்டு வந்தது.
‘யாரோ எப்படியோ போகட்டும்னு போகாம, இவளைக் கூட்டிட்டு வந்தேன்ல… தேவைதான் எனக்கு’
‘இந்த ஊருக்குத் திரும்பி வந்து வருஷம் ரெண்டாகப் போகுது. எல்லாம் விட்டுப் போச்சு, உனக்கு வேணாம்னா எனக்கும் வேண்டாம்னு விலகித்தானே இருக்கேன், இப்ப எதுக்கு இந்தக் க்ராஸிங்?’
“அவளை ஏம்பா முறைக்கிற, உன்னை விட எட்டுக் குத்துக்கு சின்னவ, நீ குடுத்த நம்பிக்கைலதானே வீட்டை விட்டுக் கிளம்பி இருக்கா?”
“அவ உன்னைப் பார்க்க வரலைன்னா, நல்ல வரனை உதறிட்டு, அதுவும்
கல்யாணத்தைன்னைக்கு ஏன் ஓடறா?”
“அதானே, நீ இல்லைன்னா அப்ப எங்க பொண்ணு காதலிச்சது யாரை?”
“உன்னை நம்பி ஒரு பொம்பளப்புள்ளை, கல்யாணத்தை நிறுத்திட்டு ஓடி வந்திருக்கு, அவளுக்கு இருக்கற தெகிரியம் கூடவா உனக்கில்லை?”
“அவங்க வீட்டுக்கும் பெத்தவங்களுக்கும் அவமானம் வரும்னு தெரிஞ்சும் இத்தனை பேத்துக்கு முன்னால ஒன்னத்தான் காதலிக்கிறேன்னு உரக்கச் சொல்லுறா, எந்தப் பொண்ணாவது இதுபோல விஷயத்துல பொய் சொல்லுவாளா?”
‘இவுரு பெரிய்ய்ய நாட்டாம! யோவ், அதான் ஏன்னு புரியாம நானே வாலன்டியரா வண்டில ஏறிட்டு முழிக்கறேனே’
கட்சி இல்லை, தேர்தல் இல்லை, ஓட்டுக்குப் பணம் இல்லை, ஆனால் அத்தனை பேரும் பஞ்சாயத்துத் தலைவராகவும் நாட்டாமையாகவும் மாறி வாத, பிரதி வாதங்களை முன் வைத்துத் தீர்ப்பும் வழங்கினர்.
இவன் ஏதோ அந்த அபலைப் பெண்ணை நீண்ட நெடிய வருடங்கள் காதலித்து, ஏமாற்றியது போலப் பேசவும், ஒரு கட்டத்தில் அவனது விளக்கங்கள் அனைத்தும் அவனுக்கே அர்த்தம் இல்லாததாகத் தோன்றிவிட்டது.
அபிராமி வள்ளியம்மையிடம் “அத்தை, எங்கண்ணன் மகனை…” எனத் தொடங்கும் முன்னரே, அவரது அண்ணி “ஏன், என் பையனைப் பாத்தா உனக்கு எப்படி தெரியுது? மரியாதையா பொண்ணைக் கேட்டபோது திருப்பிக்கிட்டுப் போன… ஏதோ, எங்க நல்ல நேரம், மானம் மருவதியோட எம் மவன் தப்பிச்சான்”
பேசியது வயதில் மூத்த ஒரு பெண், சொந்தத் தாய் மாமனின் மனைவி என்ற யோசனை சிறிதுமின்றி “ஏய்..” என்று எகிறிக்கொண்டு சென்றான் குமரன்.
வள்ளியம்மை “என்னடா சிவா, பேச விட்டு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கீங்க, வள்ளியம்மை பேத்தி அத்தனை சல்லிசா போய்ட்டாளா இல்ல, அவளைக் கூட்டிக்கிட்டு வந்து
கல்யாணத்தையும் நிறுத்திப்போட்டு கையை உதறிக்கிட்டுப் போனா சும்மா வுட்டுருவமா, ஐயரே, போய் புகையப் போடுங்க நல்ல நேரம் போற முன்ன, தாலியக் கட்டட்டும். மத்த சடங்கெல்லாம் பின்னால செஞ்சுக்கலாம்”
சிவராஜ் “இத்தனை அவசரப் படணுமாம்மா, வேற நல்ல இடமா பார்த்து…”
“அதான் நாம பார்த்த பையன உதறிட்டு நல்ல இடமா அவளே பார்த்துட்டாளே. இதுக்கும் மேலயும் ஊர் சிரிக்கணுமா?”
சிவராஜ் தம்பதியினரிடம் தெரிந்த மெலிதான மறுப்பைத் தவிர, மற்ற யாரும் வாய் திறக்கவில்லை.
தோய்க்காத ஜீன்ஸும், கொள்ளு வாசனையுமாய் நின்ற தேவசேனாதிபதிக்குக் குளிக்கக் கூட அவகாசம் தராது, கிடைத்த பட்டு வேட்டியை உடுக்கப் பணித்து, குதிரைக்குப் பிரசவம் பார்த்த கையோடு மணமேடையில் அமர்த்தித் தாலியைக் கையில் கொடுத்தனர்.
ஓடிப்போன மணப்பெண் திரும்பி வந்ததும், மாப்பிள்ளை மாறியதும், நடந்த கலவரத்தில் முஹூர்த்த நேரம் முடிய ஏழெட்டு நிமிடங்களே மீதமிருக்க, கமல் படத்தின் க்ளைமேக்ஸ் சீன் போல் ஃபாஸ்ட் ட்ராக்கில் அவசர அவசரமாகத் திருமணம் நடந்த விதமும் வழக்கத்தை விட அதிக சுவாரஸ்யத்தைத் தர, அங்கே
கூடியிருந்த சுற்றமும் நட்பும் ஹெவியான காலை உணவைக் கூட ம(து)றந்து இடத்தை விட்டு அசையாது அமர்ந்து வேடிக்கை பார்த்தனர்.
குறைந்தபட்ச சடங்குகள் நடக்கும் வரை பொறுத்த தேவசேனாதிபதி, அலரிடம் திரும்பி “நான் புறப்படறேன், நீ வரதுன்னா வரலாம்”
மாப்பிள்ளையான மறு கணமே உடைந்த உறவு ஒட்டிவிடுமா என்ன? இருப்பினும் கடிய முடியாது, சிவராஜும் மணிராஜும் பிராண்ட் நியூ மருமகனைத் திட்டுவதற்கு நாகரிகமான வார்த்தைகளைத் தேடித் தடுமாறினர்.
வள்ளியம்மை “அப்படியே அப்பன் குணம்! போகட்டும் விடுங்க. மணி, உம் மவ அவளாத் தேடிக்கிட்ட வாழ்க்கை, காப்பாத்திக்க வேண்டியது அவதான். நாளபின்ன அது சரியில்ல, இது சரியில்லன்னு கொற சொல்லிக்கிட்டு இங்க வந்து நிக்கக் கூடாது, சொல்லிட்டேன். நல்ல நேரத்துல புறப்படச் சொல்லு,”
“...”
“கதவைத் தொறக்கக் கூட ஆளில்லாத வீடு. போய் ஆலம் சுத்தி, பால் பழம் கொடுத்துட்டு வாங்க” எனவும் சிவராஜையும் அவர் மகன் செல்வராஜையும் தவிர அனைவரும் கிளம்பி விட்டனர்.
வள்ளியம்மை தன் தீர்ப்பை முடிப்பதற்குள் தேவசேனாதிபதி புல்லட்டை கிளப்பி இருக்க, அலர்மேல்வள்ளி அவசரமாகச் சென்று ஏறிக்கொண்டாள்.
‘சேனாதிபதி ஆர்ச்சர்ட்ஸ்’ ன் உள்ளே நுழைந்து வலப்புறம் ஓடிய பாதையில் பயணித்த புல்லட்டும் அதைத் தொடர்ந்த மூன்று கார்களும்
Dr (Major) S Devasenathipathi என்ற பெயர்ப் பலகை வரவேற்ற
அளவான, அழகான அந்த வீட்டின் முன்னே வந்து நின்றது.
இடப்புறம் இருந்த கராஜில் ஒரு ஓப்பன் ஜீப்பும் நீலநிற ஹோண்டா சிட்டி காரும் நின்றது.
சத்தம் கேட்கவும் பின் இருபதுகளில் இருக்கும் ஒரு பெண் வந்து கதவைத் திறக்க, அவளைத் தாண்டிக்கொண்டு “டாடீ” என்ற கூவலுடன் ஓடிவந்த மூன்று வயதுப் பெண்குழந்தையைக் கைகளில் அள்ளிக்கொண்ட தேவசேனாதிபதி, பொதுவில்
“இது நேஹா, இது உத்ரா” என மொட்டையாக அறிமுகம் செய்ய, அலர்மேல்வள்ளி உள்பட அனைவரும் அதிர்ந்து நின்றனர்.
*******************
ராதாவும் அபிராமியும் கையோடு எடுத்து வந்த பொருட்களை வைத்து ஆரத்தி கரைத்து மணமக்களை வரவேற்றுப் பால்பழம் கொடுத்தனர்.
திவ்யாவும் லீலாவும் நேஹா யாராக இருக்கும் என்ற ஆய்வை முனைவர் பட்டம் தருமளவு கற்பனை செய்தனர்.
நேஹா என்ற அந்தப் பெண் நடப்பதை திகைப்புடன் பார்த்து நிற்க, தேவசேனாதிபதியின் மடியில் அமர்ந்திருந்த உத்ரா கேட்ட கேள்விகளில் நிறைய ஹிந்தியும் ஆங்கிலமும் ஏராளமான மழலையும்.
“நீ எங்க டாடி போன, இவங்க எல்லாம் யாரு, இங்க ஏன் வந்திருக்காங்க, ஏ க்யா ஹே, கேலா (வாழைப்பழம்) வை ஏன் மில்க்ல போட்ருக்கு, எனக்கும் கைல தூத் வேணும்…”
தேவசேனாதிபதி அங்கு அவனையும் உத்ராவையும் தவிர, வேறு யாரும் இல்லை என்பது போல் வெகு பொறுமையாக பதில் சொன்னான்.
“விளக்கேத்தணும் தம்பி, பூஜை ரூம்…” என்ற ராதாவின் கேள்வி , தேவசேனாதிபதியின் பார்வையில் இருந்த
‘ஏன், இந்த வீடு உங்களுக்குப் புதுசா, முன்னப் பின்ன நீங்க பார்த்ததே கிடையாதா?’ எனும் கேள்வியில் தடைபட்டது.
“நேஹா, இன்கோ மந்திர் லே ஜானா, ஜோ சாஹியே தேதோ” எனவும், அதுவரை சிறிது ஆராய்ச்சிப் பார்வை பார்த்த அலர்மேல்வள்ளியின் மனக்குரல்
‘ஓ, இது ஸ்டார் ப்ளஸ்ஸா, ஆள் கலரையும் பாடி ஸ்ட்ரெக்ச்சரையும் பாத்தபோதே நினைச்சேன். இவ இந்த வீட்டுக்குள்ள என்ன செய்யறா?”’
உத்ரா “நான்தான் டாடி, நான்தான்” என இறங்கி ஓடினாள்.
அபிராமி தேவசேனாதிபதியிடம் “நீ… நீங்களும் வரணும்” எனத் தடுமாறினார்.
“எல்லாருமே வரலாம்” என அழைப்பு விடுத்தபடி தேவசேனாதிபதி முன்னே நடந்தான்.
பூஜை அறைக்குச் செல்லும் வழியில் ஒரு பக்கச் சுவரில் மாட்டப்பட்டிருந்த தன் இரட்டையும் தேவாசேனாதிபதியின் தாயுமான சாந்திமணியின் படத்தைக் கண்டதும் மணிராஜ் அங்கேயே அயர்ந்து நின்று விட்டார்.
வெளியில் வந்தவர்களுக்கு டீ, பிஸ்கட்டுடன் ஆரஞ்சு, பப்பாளி, அத்தி, கொய்யா, பேரிக்காய் என நறுக்கிய பழத்துண்டுகளும் தயாராகக் காத்திருந்தன. உபசரிப்பை ஏற்றுக்கொண்டனர்.
உத்ரா நேஹாவை தீதீ (அக்கா) என்று விளித்ததிலும், நேஹாவும் தேவகி என்ற இன்னொரு உள்ளூர் பெண்ணும் இணைந்து வீட்டு வேலைகளை பகிர்நாது செய்ததிலும் நேஹா மீதான சந்தேகம் விலகியது.
தயங்கினாலும் மணிராஜ் “தேவா… இந்தக் குழந்தை உத்ரா யாரு?”
“எம் பொண்ணு. ஏன், அவ டாடீன்னு கூப்பிட்டதைக் கேக்கலையா?”
துணுக்குற்ற அலர்மேல்வள்ளி திகைப்புடன் பார்த்திருக்க, மற்ற பெண்கள் அதிர்ந்து நிற்க, குமரன் “அப்பவே ஏன்டா சொல்லலை, சின்னப் பொண்ணோட மனசைக் கலைச்சு, நாங்க அசந்த நேரம் பார்த்துத் தூக்கிட்டல்ல?” என மீண்டும் சேவசேனாதிபதியின் மீது பாய,
“குமரா, அவனை விடு” என்ற மணிராஜ் தளர்ந்து அமர்ந்துவிட்டார்.
அபிராமி “தம்பி, குமரனை விடுங்க, ஆனா அவன் கேட்டது சரிதானே, உங்களுக்குக் குழந்தை இருக்கற விஷயத்தை ஏன் மறைச்சீங்க?” என்றார் அழுகையுடன். சீரும் சிறப்புமாக வளர்த்த மகள் இப்படித் தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொண்ட வேதனை அவரிடம்.
“என்னை எங்க பேச விட்டீங்க, உங்க பொண்ணோட சம்மதத்தைக் கேட்டு மாப்பிள்ளையை முடிவு செஞ்சீங்களான்னு எனக்குத் தெரியாது, அவ ஏன் கல்யாணத்தை நிறுத்திட்டு வீட்டை விட்டு வெளில போனான்னு நீங்க யாருமே உங்க பொண்ணைக் கேட்கல, பஸ் ஸ்டாண்டுல வம்பு செஞ்ச பசங்ககிட்ட மாட்டிக்கிட்டு நின்னவளை, தெரிஞ்ச முகமா இருக்கேன்னு காப்பாத்திக் கூட்டிட்டு வந்தவனை அடிச்சுப் புடிச்சு தாலி கட்ட வெச்சுட்டு, இப்ப வந்து என்னைக் கேட்டா?”
குமரன் “டேய், நீ இங்க வந்ததுல இருந்து இந்தக் குழந்தை இருக்கறதே வெளில தெரியாம மறைச்சு வெச்சு ஊரை ஏமாத்திட்டு நல்லவன் வேஷம் போட்டுட்டு சுத்தி இருக்க”
“ஸ்கூல் கூடப் போகாத குழந்தை வீட்லதான் இருக்கும். நான் எங்க போறேன், என்ன செய்யறேன், உத்ராவை அழைச்சிக்கிட்டு ஊரை சுத்தறதை உங்கிட்ட சொல்றது அவசியமா என்ன?” ஏன், இத்தனை வேவு பாத்த உனக்கு உத்ரா பத்தி தெரியலையா?”
ராதா “அதுக்காக குழந்தையோட இருக்கற நீ…. உத்ரா உன் மகள்னா, உன் பொண்டாட்டி எங்க தேவா, உயிரோட இருக்காளா இல்ல, டிவோர்ஸ் ஆயிடுச்சா?”
“உத்ரா என் பொண்ணு. இதோ, இதான் என் பொண்டாட்டி. முழுசா உயிரோடதான் இருக்கா. டிவோர்ஸ் ஆகலை. ஹான்… இன்னைக்குதான் கல்யாணம் ஆச்சு” என அலர்மேல்வள்ளியைக் கை காட்டியவனின் குரலில் தெறித்த நக்கலும் அலட்சியமும்!
திசையறியா மௌனத்தைக் கலைத்து எழுந்த மணிராஜ் “நாங்க புறப்படறோம். நாளைக்கு வந்து மறுவீட்டுக்கு…”
இடைமறித்த தேவசேனாதிபதி “இப்ப எதுவும் வேண்டாம். இதுக்கெல்லாம் நான் தயாரா இல்லை”
“அலரோட சமான்கள், ட்ரெஸ் மட்டுமாவது அனுப்பி விடறோம்”
திரும்பி அவளைப் பார்த்தவன் “சரி”
அபிராமி “சாப்பாடு அனுப்பலாம்ல?”
“தேவையில்ல”
குமரன்“ஊரே அங்க கல்யாண விருந்து சாப்பிடுது…”
“அது என் கல்யாணத்துக்காக சமைச்சது இல்ல”
மணிராஜ் அயர்ந்து நிற்க, அபிராமியும் ராதாவும் அலர்மேல்வள்ளியை விசனத்துடன் பார்த்தனர். மருமகனின் இறுக்கத்தில் இப்போதுதான் மகளின் காதலையே சந்தேகித்தனர்.
அபிராமி மகள், மருமகனின் உடல்மொழி, பார்வைகள், பத்து வயது இடைவெளி, அலரின் விளையாட்டுப் புத்தி, கூர்மையும் கம்பீரமுமான தேவசேனாதிபதி என இருவருக்குமான வித்தியாசங்களைத் தேடித் தேடிக் கவலைப்பட்டார் எனில், மணிராஜ் தங்கையின் நினைவில் ஆழ்ந்திருந்தார்.
தேவசேனாதிபதிக்குத் திருமணம் ஆகவில்லை என்பது தெரிந்திருந்தும், அந்த வீட்டில் சர்வ சுதந்திரமாக வளையவந்த நேஹாவின் இருப்பும், உத்ராவின் “டாடீ” என்ற அழைப்பும், அவன் அவளைத் தன் மகள் என்றதும் தேவசேனாதிபதியை நகலெடுத்தது போன்ற அவளது சாயலும் அவர்கள் எல்லோரையுமே உறுத்தியது.
‘இவுரு ஒரு வடக்கத்திப் பொம்பளையை வெச்சிருக்கறதாகவும் ஒருபுள்ளை கூட இருக்குன்னும் கேள்விப்பட்டேனே?’ எனக் காலையில் கூட்டத்தில் யாரோ சொன்னது நினைவுக்கு வந்தது.
இதற்குமேல் தேவசேனாதிபதியை நெருக்கிக் கேட்கும் நிலையும் நெருக்கமும் தைரியமும், அவனது பதிலைத் தாங்கும் திடமும் இப்போது அவர்களிடம் அறவே இல்லை.
குமரன் சற்றே வேகத்துடன் எழுந்து “ போகலாம்ப்பா”
தேவசேனாதிபதியால் “நிர்மல்” என விளிக்கப்பட்டவன், தீடீரென உதயமாகிப் புதிதாகப் பறித்த தோட்டத்துப் பழங்கள் நிறைந்த கூடை ஒன்றக் காரில் வைக்க,
“பார்த்து சூதானமா இருந்துக்க அலர்” என்றபடி புறப்பட்டனர்.
***********************
தொழில் தொடர்புகள் அனைவரும் முந்தைய தினமே வரவேற்புக்கு வந்து சென்றிருக்க, இன்று பெரும்பாலும் உறவும் நெருங்கிய நட்பும் மட்டுமே.
மாப்பிள்ளை மாறினால் என்ன, மணமகள் ஓடினால் என்ன, இவருக்கு பதில் இவர் என்பதைப்போல் யாரோ ஒருவரோடு திருமணமாகி விருந்து பரிமாறப்பட, வழக்கம்போல் பந்திக்கு முந்தினர்.
மூன்று வகை பாயாசங்களை உறிஞ்சிக் கொண்டே ‘என்ன இருந்தாலும் முறைப்பையன், அதுவும் சொந்தப் பேரன் இருக்கையில வள்ளியம்மை வெளில சம்பந்தம் பண்ண ஏற்பாடு செஞ்சது தப்புதானே, அதான் தட்டித் தூக்கிட்டான்”
“பாக்க பச்சப் புள்ளையாட்டம் இருந்துக்கிட்டு இந்த அலர் புள்ள செஞ்ச வேலையைப் பார்த்தியா, இந்தக் காலத்துப் பொண்ணுங்களை நம்பவே கூடாது”
“நம்பிப் போனவன் முறைப் பையன்றதால பிரச்சனை இல்லாம போச்சு, இதுவே வேற யாரையும் நம்பி ஏமாந்து போயிருந்தா, பதில் சொல்லுறது யாரு?”
“என்னதான பெரிய தொழில் செஞ்சாலும் எந்தனை சம்பாரிச்சாலும் இந்த சிவராஜ், மணிராஜ் ரெண்டு பேருக்குமே விவரம் பத்தாது. பசங்களும் முரட்டுப் பீஸாவே இருக்குறானுங்க, என்ன நாஞ் சொல்றது?”
“சரியாச் சொன்ன போ, அதேபோல வள்ளியம்மை ஆச்சியோட சாமர்த்தியத்துல கால்வாசி கூட மருமகளுங்க கிட்ட இல்லை”
வெற்றிலையோடு சேர்த்து வள்ளியம்மை குடும்பத்தையும் மென்று தின்றனர்.
‘என்ன செய்யறேன் பாரு, நல்லாக் கேட்டு வுட்ருவேன். எல்லாம் இந்த அலரால வந்தது. ஆளாளுக்கு செல்லம் குடுத்துக் கெடுத்துட்டீங்க’ எனக் கொதித்த செல்வராஜை சிவராஜ்தான்
“அதுல மொத ஆளே நீதான், எல்லார் முன்னாலயும் போன மானம் போதும், கொஞ்சம் பேசாம இரு” என்று அடக்கினார்.
இந்தத் தலைமுறையில் வீட்டின் ஒரே பெண் வாரிசான அலர்மேல்வள்ளி எஸ்லோருக்குமே செல்லம்தான். அபிராமியின் அண்ணன் மகனைத் தவிர்த்து கோவையின் வியாபாரக் குடும்பத்தின் ஒரே வாரிசான பிரகாஷ் சிவராஜ் பார்த்த மாப்பிள்ளைதான்.
சிசிடிவியும் ஆள் நடமாட்டமும் கண்காணிப்பும் கவனமும் நிறைந்த உறவுகளின் நடுவே பாதுகாப்பாய் வளர்க்கப்பட்ட அலர்மேல்வள்ளி விடிந்தால் திருமணம் என்ற நிலையில் ஓடிப்போனது முதல் அதிர்ச்சி என்றால், அவள் அந்தப்பயல் தேவசேனாதிபதியுடன் வந்து நின்றது பேரதிர்ச்சி.
அவனைப் பார்த்தே பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஒரு வருடமாக இங்குதான் இருக்கிறான் என்று தெரியும்தான். ஆனாலும் இதுவரை தற்செயலாகக் கூடப் பார்க்க நேரவில்லை. ஒரு மூன்று மணி நேர அவகாசத்தில் இன்று வீட்டு மாப்பிள்ளையாகி, சிவராஜின் மனக்கணக்குகளை எல்லாம் சிதறடித்து விட்டான்.
இன்னுமே இருவருக்கும் காதல் என்பதை அவரால் நம்ப முடியவில்லை.
‘அந்தப் பய ஏதோ சொல்ல வந்தான். இந்த அலர் பொண்ணு தான் காதலிக்கறேன்னு கையப் புடிக்கவும் மண்டைய பலமா ஆட்டிட்டான்’
‘படிப்பு முடிஞ்சதுல இருந்து அலர் வீட்லதான் இருக்கா. இந்த ஏரியா முழுக்க அவ எங்க போனாலும், யாரைப் பார்த்தாலும் நமக்குத் தெரியாம போகாது. அது மாதிரி யாரோடயும் பழகற பொண்ணும் இல்ல. இதுல ரெண்டு பேரும் எங்க, எப்போ பார்த்துப் பழகினாங்கன்னு குழப்பமா இருக்கு. ம்… போகப் போகப் பார்த்துக்கலாம்’
சிறிது நேரம் அங்கேயே அமர்ந்து உறவுகளுடன் பேசிக் கொண்டிருந்த வள்ளியம்மை, “இருந்து சாப்பிடுங்க, பேசுவோம். சிவா, இங்க கவனிச்சுக்கப்பா. மணி வந்தா வரச்சொல்லு” என்றபடி எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.
சற்று நேத்தில் சென்றவர்கள் திரும்பி வர, அங்கு நடந்ததைக் கேட்ட சிவராஜ் ‘திமிர் புடிச்சவன்’ என முணுமுணுத்தார்.
*******************
இளைய மகனின் முகவாட்டம் புரிய “வருத்தப்படாத மணி, எதிர்பாராம என்னென்னவோ நடந்து போச்சு. இந்த மட்டுக்கு ஆள் யாரு, எப்படி என்னன்னு தெரியாம நம்ம சாந்தியோட மகனாப் போனதும் ஒரு வகையில நல்லதுதான். என்ன, இந்தக்காலத்துப் புள்ளைங்க
மாதிரி இல்லாம வயசுதான் கொஞ்சம் கூட”
அபிராமி “அண்ணியோட ஃபோட்டோவை பார்த்ததுல அவர் கொஞ்சம் ஃபீல் ஆகிட்டார் அத்த”
“இருக்காதா, ரெட்டைப் புள்ளைங்களாச்சே. சிவா, மணி ரெண்டு பேத்துக்குமே சாந்தின்னா அத்தினி இஷ்டம்” என்று பெருமூச்செறிந்தவரின் குரலும் தழதழத்துதான் போயிற்று.
அபிராமியிடம் அங்கு நடத்ததை மேலும் துருவித் துருவிக் கேட்ட வள்ளியம்மை நேஹாவையும் உத்ராவையும் பற்றிக் கேள்விப்பட்டதும் யோசனையுடன் முகம் சுளித்தார்.
‘அவசரப்பட்டுட்டோமோ?’ என சிறிது மறுகினார்.
“அலரையா இதான் எம் பொண்டாட்டின்னு சொன்னான்?” என திரும்பத் திரும்பக் கேட்டவர், பின் சமாதானமாக “அதெப்படி பொண்டாட்டி இல்லாம புள்ளை மட்டும் வானத்துல இருந்து குதிக்குமா, இதுல என்னவோ இருக்கு. நம்ம அலரே வெளில கொண்டு வந்துருவா பாரு”
சுதாரித்துக்கொண்டவர் “சரி விடு, இச்சணம் பழசப் பேசி எதுவும் ஆவப் போறதில்ல. ரொம்ப வருசமா பொழங்காத வீடாச்சே, சாமான் செட்டெல்லாம் இருக்கா?”
“பழசு, புதுசுன்னு எல்லாம் கலந்து முன்ன விட சூப்பரா நீட்டா பளபளப்பா இருக்கு அத்த. ஒரு காரு, ஒரு ஜீப் இருக்கு. பல விதமான பறவைங்க, ரெண்டு நாய், பசு மாடு ரெண்டு, ஏன், ஒரு குதிரை கூட இருக்குன்னா பாருங்களேன்.
“குதிரையா?”
“ஆமாங்கறேன். தேவா தம்பி மிலிட்டரி உடுப்புல இருக்குற ஃபோட்டோ ஒண்ணு இருக்கு. நம்ம லீலாவ விட்டு படம் புடிக்க சொன்னேன். இங்க பாருங்க”
“எம் பேரனுக்கென்னடீ, எந்த உடுப்புலயும் நல்லாத்தேன் இருப்பான்”
ஆச்சியின் குரலில் வழிந்த பெருமிதத்தில் மணிராஜுமே மெலிதாகப் புன்னகைத்தார்.
“எல்லாம் சரிதாம்மா. அண்ணன்தான் கொஞ்சம் கோவமா இருக்காப்பல. அந்த பிரகாஷோட அப்பா ஃபோன்ல சிவா அண்ணனை ரொம்ப பேசிட்டார் போல. எப்படி சமாதானம் செய்யறதுன்னு தெரியல”
“விடு, வாரம் பத்து நாள் ஆனா, தானே சரியாயிடுவான். ஆமா, தேவா அலர்கிட்ட சிரிச்சுப் பேசுறானா?”
சிறிதே தயங்கிய அபிராமி “எனக்கு எதுவும் புரியல அத்த.. நாம கேட்டதெல்லாம் எடுத்துக் கொடுத்து, டீ, பழம்னு தந்து கவனிச்சிக்கத்தான் செஞ்சாரு. இருந்தாலும், அந்தத் தம்பி இன்னும் இறுக்கமாதான் இருக்கு. முகத்துல துளி சிரிப்பில்லை. சாப்பாடு அனுப்பறேன்னதுக்கு இது என் கல்யாண சாப்பாடு இல்லைன்னுட்டாரு. மறுவீடெல்லாம் வேணாமாம். அலரோட சாமானை அனுப்ப மட்டும் ஒத்துக்கிட்டாரு”
“ரோஷக்காரன்”
“ஆனா ஒரு பெரிய கூடை நிறைய விதவிதமா பழம் குடுத்து வுட்டாரு”
“கவலப்படாத அபிராமி, சேர்வராயன் அவங்களை சேர்த்து நல்லா வாழ வைப்பார்”
எப்போதும் அதட்டலும் அதிகாரமுமாகப் பேசும் மாமியாரின் ஆறுதலான வார்த்தைகள் தந்த மகிழ்வுடன் அபிராமி மகளின் பொருட்களைக் கொடுத்து அனுப்பச் சென்றார்.
கலவையான உணர்வுகளின் பிடியில் இருந்த வள்ளியம்மை ஆச்சி யாசிப்பும் யோசனையுமாகக் கட்டிலில் சாய்ந்தார்.