பகலிரவு பல கனவு - 29
“டேய்! சித்திரைக்கு அப்பன் தெருவிலேன்னு சொல்லுவாங்க.”
அப்பத்தாவின் பேச்சு ஏற்படுத்திய கோபத்துடன் தடதடவென மாடிப்படி ஏறிய பிரபாகரன் அங்கே கதவைத் திறக்காமல் ஏதோ யோசனையில் நின்று கொண்டிருந்த சம்யுக்தாவைக் கண்டு மேலும் எரிச்சல் அடைந்தான்.
“இவள…” என்று பல்லைக் கடித்தபடி அருகில் சென்றான்.
“கதவையே பாத்துகிட்டு நின்னா அது தானா திறந்திடுமா? நீ கொஞ்சம் நகரு.” அவளை ஒரு கையால் வேகமாகப் தள்ளி நிறுத்திவிட்டு தன்னிடம் இருந்த சாவியால் கதவைத்திறந்து உள்ளே சென்றான்.
அப்பத்தா சொன்ன ஆடி மாதத்தில் பெற்றோரின் நினைவில் உழன்று கொண்டிருந்த சம்யுக்தாவுக்கு பிரபாகரனின் கோபத்தின் காரணம் புரியவில்லை. ஒரு புறம் தாய் வீட்டுக்குச் செல்ல முடியாது என்பது வருத்தம் அளித்தாலும் மறுபுறம் பணம், நகை என்று வாழ்நாள் முழுவதற்குமான சீதனங்களைக் கொடுத்து மகளது உறவை முறித்துக் கொண்டதும் ஞாபகம் வந்தது. “அந்தப் பணமும் நகையும் அம்மா, அப்பாவ ரிபிளேஸ் பண்ணுமா?” என்று விரக்தியுடன் வாய்விட்டுச் சொன்னவள் மெதுவாக உள்ளே சென்றாள்.
மூலைக்கொன்றாகச் சிதறி இருந்த செருப்புகள் பிரபாகரனின் கோபத்தின் அளவைக் காட்டி அவளைப் பயமுறுத்தியது. அவனிடம் வாயைக் கொடுத்து மேலும் கோபப்படுத்தினால் என்ன நடக்கும் என்பதை சில நாட்களுக்கு முன்பு தான் உணர்ந்து கொண்டிருந்தாள். அதனால் அமைதியாக செருப்புகளை ஒழுங்கு படுத்திவிட்டு மாற்றுடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் சென்றாள். திரும்பி வந்து ஃப்ரிட்ஜில் இருந்து பாலை எடுத்துச் சென்று இருவருக்கும் காப்பி கலந்து வந்தாள்.
“பிரபா! காப்பி குடிங்க” என்று அவன் முன் டம்ளரை நீட்டினாள்.
அவள் எதிர்பார்த்தது ஒன்றாக இருக்க நடந்தது முற்றிலும் வேறாக இருந்தது.
தனிக்குடித்தனம் வந்த நாள் முதல் காப்பியைக் கடகடவென்று கஷாயம் குடிப்பது போலக் குடித்துவிட்டு டம்ளரை நீட்டுவது அவனது வழக்கமாக இருந்தது. “என்ன இருந்தாலும் எங்க அம்மா காப்பி மாதிரி இல்ல” என்று ஒவ்வொரு முறையும் முகம் சுளித்து அவளுக்கு பிபி ஏற்றிவிடுவான்.
“அய்ய.. காப்பி பாயாசம் மாதிரி இருக்கு”, “இதென்ன வேப்பங்காய ஜுஸ் போட்டது மாதிரி இருக்கு”, “இப்படிக் கொதிக்கக் கொதிக்க குடிச்சா என் நாக்கு வெந்து போயிடும்”, “காப்பி பொடி காலியா? காப்பி ஏன் இப்படி தண்ணி மாதிரி இருக்கு?” என்று ஏதோ ஒரு கோளாறு சொல்லாமல் குடிக்கவே மாட்டான்.
‘ஹலோ மிஸ்டர்! என்ன நக்கலா? அதே காப்பி பொடி, அதே பால் நீங்க சொன்னது மாதிரி தான் மிக்ஸ் பண்ணி இருக்கேன். உங்க அம்மா கையால காப்பி வேணும்னா அங்கே போய் கேளுங்க. இங்கே வந்து அது மாதிரி இல்லேன்னு சொல்லக் கூடாது’
ஒவ்வொரு முறையும் சம்யுக்தா மனதுக்குள் கவுன்டர் கொடுப்பாளே தவிர வாய்விட்டு எதையும் சொன்னதில்லை.
ஆனாலும் அவளது கண்களில் தெரியும் பாவனையில், “ஓகே! ஓகே! காப்பி சூப்பர்! போதுமா?” என்று சரண்டர் ஆகிவிடுவான். இன்றும் அதுபோல ஒன்றை அவள் எதிர்பார்க்க, அவனது கவனம் இங்கே இல்லை.
“பிரபா! என்ன யோசனைல இருக்கீங்க? ஆச்சி சொன்னதை நினைச்சு வருத்தமா இருக்கீங்களா?” என்று அவனது முன்னே வர, “கொஞ்சம் பேசாம இருக்கியா?” என்று அவன் எழுந்த வேகத்தில் அவளுக்கு காப்பி அபிஷேகம் நடந்துவிட்டது. சூடான காப்பி அவளது கையைப் பதம் பார்க்க கீழே விழுந்த டம்ளர் பிரபாகரனை யோசனையில் இருந்து வெளியே அழைத்து வந்தது.
“அச்சோ! சம்யூ என்ன ஆச்சு?” என்று பதறியவன் அவளை அழைத்துச் சென்று முதலுதவி செய்தான். சற்று நேரம் கழித்தே அங்கே நடந்தது என்ன என்பது அவனது கருத்தில் பதிந்தது. மற்றவை மறந்து போக ஒரு குறும்புப் புன்னகையுடன் மனைவியைப் பார்த்துக் கண்ணடித்தான்.
“வாவ்! இன்னைக்கு நான் கஷாயத்துல சே.. காப்பில இருந்து கிரேட் எஸ்கேப்பா?” என்று குதூகலித்தான்.
அவனை முறைத்தபடி சென்று உடைமாற்றி வந்தாள் சம்யுக்தா. பிரபாகரன் மீண்டும் கடைக்குக் கிளம்ப, ஆடிமாதம் பற்றிய அப்பத்தாவின் பேச்சு சற்று பின்னுக்குத் தள்ளப்பட்டது.
இரவு ஒன்பது மணியளவில் இவன் கடையில் இருந்து வரும் போதும் வாசலில் காத்திருந்த அப்பத்தா மறுபடியும் ஆடி மாதப் பேச்சை எடுக்க, பதிலேதும் பேசாமல் அவரை முறைத்து விட்டு மேலே வந்தான். இவனது புல்லட் சத்தம் கேட்டு வெளியே வந்த சம்யுக்தாவும் அப்பத்தாவின் பேச்சைக் கேட்டிருந்தாள். இருவரும் தனக்குள் யோசித்தார்களே தவிர வெளியே எதுவும் பேசவில்லை. அன்றைய இரவு அமைதியாகக் கழிந்தது.
மறுநாள் காலை இனிதே விடிய ஆடி மாதமும் பிறந்தது. பிரபாகரன், சம்யுக்தா இருவரது நாளும் வழக்கம் போல ஆரம்பித்தது.
“என்ன பிரபா, டல்லா இருக்கிற மாதிரி தெரியுது? ஆடி மாசம் பொறந்தாச்சே, வைஃப் அம்மா வீட்டுக்கு போயிட்டாங்களா?” என்று வைனரியில் ஒருவர் கேட்டிருக்க, சம்யுக்தாவும் அதே போன்ற கேள்வியை தோழிகளிடம் எதிர்கொண்டிருந்தாள். இதில் விஞ்ஞானம் பேசும் பலரும், “முன்னோர்கள் முட்டாள் அல்ல” என்று ஏகத்துக்கும் பேசியிருக்க அதன் விளைவாக ஒரு கேள்வி கேட்டு வைத்தாள்.
“நான் வேணும்னா ஆடி மாசம் பூராவும் ஹாஸ்டல் போயிடவா பிரபா?”
“ஏய்! லூசாடி நீ? இப்போ எதுக்கு ஹாஸ்டல் போகணும்னு சொல்ற? ஆடி, ஆவணி எல்லாம் பத்தி எனக்கு அக்கறை இல்லை. அட்வைஸ்ன்ற பேருல யாரவது ஏதாவது சொல்லிட்டு தான் இருப்பாங்க. அது தான் நம்ம ஊரு டிசைன், அதுக்கெல்லாம் கவலைபபட்டா நாம வாழமுடியாது. ஹாஸ்டல் போறாளாம், நான் எங்கே போக?”
“அதுக்கில்ல பிரபா…”
“என்னைக் கைநீட்ட வச்சிடாத. கம்முனு படு.”
விசுவாமித்ரனாகச் சீறிய அவனது கோபத்தைத் தணிக்க மேனகையாக மாறினாள் சம்யுக்தா. ஆடி மாதம் என்பது எல்லாம் காற்றோடு போனது.
******
அன்று காலையில் பல் துலக்கும் போதே வயிற்றைப் பிரட்டியது சம்யுக்தாவுக்கு. என்ன காரணம் என்று யோசிக்க நேரமில்லாமல் கல்லூரிக்குக் கிளம்பிவிட்டாள். காலையில் முதல் வகுப்பே பிணக்கூறாய்வு செய்யும் பிராக்டிகல் வகுப்பாக இருக்க, காலை உணவை மறந்து விட்டு வேகமாக ஓடினாள். அங்கிருந்த வாசனை அவளுக்கு குமட்டலை வரவழைத்தது. கஷ்டப்பட்டு இரண்டு மணி நேரமும் சமாளித்தவள்
வகுப்பு முடித்து வெளியே வந்ததும் தலை சுற்றிப் போனாள்.
கல்லூரி வராண்டாவில் திடீரென்று சாய்ந்த சம்யுக்தாவை முதலில் கவனித்தது அவள் வகுப்புத் தோழி நந்தினி.
“சம்யூ! ஏய் சம்யூ!” என்று குலுக்கிக் கூப்பிட்டாள். கண்கள் மூடியபடியே இருந்த சம்யுக்தாவை அருகில் இருந்த வகுப்பில் படுக்க வைத்து பேராசிரியர் ஒருவர் பரிசோதனை செய்தார். அவளது நாடியைச் சோதித்தவர், யோசனையுடன் அவளைப் பார்த்தார். அவள், திருமணம் ஆனவள் என்பதை அறிந்தவர்.
“பெட்டர், obg போய் ஒரு செக் பண்ணுங்க” என்று அறிவுரை வழங்கினார். அவர் சொன்னதன் பொருள் விளங்க சம்யுக்தாவுக்கு ஆடி மாதம் ஞாபகத்தில் வந்து பயமுறுத்தியது.
மருத்துவம் படிக்கும் மாணவியாக தனது நிலை என்னவாக இருக்கும் என்று புரிந்தாலும் தனியாக obg செல்லத் தயக்கமாகவும் பயமாகவும் இருந்தது. தோழிகளிடம் பகிர்ந்து கொள்ளவும் விருப்பம் இல்லை.
அன்று வைனரியின் முதல் கட்ட தயாரிப்பு கொடைக்கானலில் இருந்த ஒரு ஹோட்டலுக்கு அனுப்பப்பட இருந்தது. பாதுகாப்பான பேக் செய்யப்பட்ட நூறு பெட்டிகளை மறுபரிசீலனை செய்து கொண்டிருந்த நேரத்தில் பிரபாகரனின் மொபைல் அழைத்தது. இந்த நேரத்தில் யார் என்று எரிச்சலுடன் பார்த்தவன் சம்யுக்தா என்றதும் உடனே அழைப்பை ஏற்றான்.
“பிரபா! காலேஜுக்கு வர முடியுமா?” அவள் குரலில் இருந்த சோர்வு அவனைப் பதற வைத்தது.
“என்ன ஆச்சு சம்யூ? உடம்புக்கு முடியலையா? என்ன செய்யுது?”
“நத்திங். கொஞ்சம் டயர்டா இருக்கு. வீட்டுக்குப் போகணும். நீங்க வாங்க.”
“ம்ம்.. வைனரில ஃபர்ஸ்ட் லோட் ஏறுது. அதை அனுப்பிட்டு வரவா?” மிகுந்த தயக்கத்துடன் தான் கேட்டான். தொழிலில் ஒரு முக்கியமான தருணம், என்றும் இல்லாமல் சோர்வுடன் அழைக்கும் மனைவி. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தான்.
“ஓ.. அதை மறந்தே போயிட்டேன். அனுப்பிட்டே வாங்க, ஒன்னும் அவசரம் இல்லை. நான் நம்ம கடையில இருக்கேன்.” அழைப்பைத் துண்டித்து விட்டு கடையை நோக்கி நடந்தாள்.
பசித்தது ஆனால் எதைச் சாப்பிடுவது என்று தெரியவில்லை. கல்லூரி வளாகத்தில் இருந்த பிரபாகரனின் ஜுஸ் கடையில் சென்று அமர்ந்தாள்.
“அண்ணி! என்ன இந்த நேரத்தில.. என்ன குடிக்கிறீங்க?” என்று கேட்ட கடைப்பையனுக்கு அவள் முகத்தில் இருந்த சோர்வு புதிதாகத் தெரிய பிரபாகரனுக்கு அழைத்து விட்டான்.
“அண்ணே! எங்க இருக்கீங்க? அண்ணி கடைக்கு வந்திருக்காங்க. அவங்க முகமே சரியில்ல, நாலு நாள் பட்டினி கிடந்தது போல இருக்காங்க.” அவனது செய்தியில் பதட்டம் அடைந்த பிரபாகரன் வைனரி பொறுப்பை கதிரேசனிடம் ஒப்படைத்துவிட்டு புல்லட்டைப் பறக்கவிட்டான்.
கையில் மாதுளை சாறுடன் எந்த மருத்துவரை அணுகுவது என்று யோசித்துக் கொண்டிருந்தாள் சம்யுக்தா. தாய் பாரதியின் நினைவு வந்தது. திருமண நாளன்று பார்த்தது. மூன்று மாதங்களுக்கு மேலாகிறது. ஒரே ஊரில் இருக்கும் பெற்றோரை ஒரு முறை கூட கண்ணால் காணவில்லை. பாரதியிடம் மகளாகத் தானே போகக் கூடாது, மருத்துவம் பார்க்கப் போகலாமே என்ற நினைப்பு வந்தது அவளுக்கு.
அதே யோசனையுடன் இருந்தவள் சோர்வுடன் மேசை மீது தலைசாய்த்து உறங்கி விட்டாள். அரைமணி நேரத்தில் ஐம்பது கிலோ மீட்டர் தொலைவைக் கடந்து வந்த பிரபாகரன் அவளது நிலை கண்டு வேகமாக அருகில் ஓடினான்.
“சம்யூ!” என்று பதட்டத்துடன் அழைத்த அவனது குரல் அவனுக்கே கேட்கவில்லை.
“அண்ணே! பதறாதீங்க. அண்ணி தூங்கறாங்க.”
“ம்ம்..” என்று அவளை எழுப்ப மனமில்லாமல் அருகில் கவலையுடன் அமர்ந்து கொண்டான். சில நொடிகளில் அவனது கற்பனைக் குதிரை எங்கெங்கோ பறந்து சென்றது.
சற்று நேரத்தில் கண்விழித்த சம்யுக்தா அருகில் அமர்ந்திருவனைக் கண்டு உற்சாகமானாள்
“பிரபா! வந்துட்டீங்களா? டாக்டர்.பாரதி கண்ணன் கிட்ட ஒரு அப்பாயின்ட்மென்ட் வாங்குங்க. சாயங்காலம் போகணும்.’
‘இவளுக்கு என்ன ஆச்சு, டாக்டர் கிட்ட போகணும்னு இப்படி சந்தோஷமா சொல்றா’ என்று கவலையுடன் பார்த்தவனுக்கு பாரதி கண்ணன் யார் என்று ஞாபகம் வந்தது. கூடவே கோபமும் வந்தது.
“இப்போ எதுக்கு அவங்களைப் பார்க்கணும்?” வரும் போது இருந்த கவலை, பதட்டம் எல்லாம் மறைந்து போய் வார்த்தையில் அனல் தெறித்தது.
“கோபப்படாதீங்க பாஸ். ஊருக்குள்ள அவங்க தான் கைராசியான லேடி டாக்டர். ஹன்ட்ரட் பர்சன்ட் நார்மல் டெலிவரி தான்” என்று கண்ணடித்தவளை விநோதமாகப் பார்த்தவனுக்கு சற்று நேரம் கழித்தே விஷயம் விளங்க, “சம்யூ!! இது நிஜமா?” என்றான்.
“ம்ம்.. அப்படித்தான் நினைக்கிறேன். எதுக்கும் டாக்டர் கிட்ட போய் கன்ஃபர்ம் பண்ணிட்டா நல்லது.”
“சரி வா.. வீட்டுக்குப் போகலாம். ஆமா..
நீ.. இப்போ பைக்குல வரலாமா?”
“அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்லை. போகலாம். சீக்கிரம் வீட்டுக்கு போய் எதையாவது செஞ்சு தாங்க.
எனக்குப் பசிக்குது. எதையாவது உள்ள போட்டா வாமிட் வருமோன்னு பயமா இருக்கு.”
“இது வேறயா.. என் சமையல் திறமையை காட்ட ஒரு எலி சிக்கி இருக்கும் போது விடுவேனா? ஒரு வழி பண்ணிடறேன் வா” என்று அழைத்துப் போனான்.
சம்யுக்தாவின் ஆசைப்படி பாரதியிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்க வேண்டும் என்று மருத்துவமனைக்கு
அழைத்த பிரபாகரன் அங்கேயிருந்து கிடைத்த தகவலை மனைவியிடம் எப்படிச் சொல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றான்.

Author: SudhaSri
Article Title: பகலிரவு பல கனவு - 29
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.