• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

மாயத்துணி

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
41
134
53
Chennai
மாயத்துணி

ச்சரிக்கை: இந்தக்கதை, டைம் டேபிள் போட்டுச் சுறுசுறுப்பாக வீட்டு வேலைகளைச் செய்து முடிக்கும் பர்ஃபெக்ஷன் ஸிண்ட்ரோம் (Perfection Syndrome) வாய்க்கப்பெற்ற மக்களுக்கானது அல்ல. அவர்கள் இதைப் படித்தால் வரக்கூடிய பக்கவிளைவுகள் ஏராளம்.(எ.கா) டென்ஷன், கோபம், ஹை ப்ளட்பிரஷர் போன்றவை.

இது தலைவர் கூறியதுபோல், என்னைமாதிரி ஸிஸ்டம் சரி இல்லாதவர்களுக்காக. (டிக்ஷ்னரியைப் பார்த்தால் ' சோம்பேறி' என்று போட்டிருக்கும். இனி கதை அல்லது ஒரு மனப் பகிர்வு (?!).

என்ன? டிஸ்க்ளெய்மரைப் (Disclaimer) பார்த்ததும் இது என்ன புது டிசைன்னு யோசிக்கிறீங்களா? போ போ தெ. (போகப் போகத் தெரியும்).

முதல்ல நான் எங்க இருந்து பேசறேன்னு சொல்றேன். அது தெரிஞ்சாதான் என் ஃபீல் உங்களுக்குப் புரியும்.

வழக்கமா, நம்ம எல்லார் வீட்லயும் ஒரு நாற்காலியோ, டேபிளோ , டீப்பாயோ ஒரு பழைய உடைஞ்ச ஒத்தை சோபாவோ ஏதாவது ஒரு ரூம்ல ஒரு ஓரத்துல போட்ருக்கும். கொஞ்சம் ஜூம் (zoom) பண்ணிப் பார்த்தீங்கன்னா அதுக்கு மேல காயவைச்சு மடிக்கவேண்டிய துணிகள் இருக்கும்.

என்ன கூகுள் இப்போ சுத்தாம நான் எங்க இருக்கேன்னு காட்டுதா? இன்னும் கொஞ்சம் யோசிச்சு, உத்துப் பாத்தீங்கன்னா கூகுள் இல்லாமயே ஒரு போர்த்துணிகளுக்கு நடுவுல நான் மலைச்சுப் போய் உட்கார்ந்திருக்கறது தெரியும்.

எனக்கு சின்ன வயசில இருந்தே டிரெஸ் வாங்கறதுன்னா ரொம்ப இஷ்டம். புதுசு புதுசா உடுத்திக்க அதைவிட இஷ்டம். துணி சம்பந்தமா இந்த ரெண்டு விஷயந்தாங்க எனக்குப் பிடிக்கும்.

இந்த தைக்கிறது, தோய்க்கிறது, மடிக்கிறதுன்னு இதுபோல தினசரி வேலைகள்னாலே எனக்கு அலர்ஜி. ஏதோ எங்க பாட்டி, அம்மா ஏன் சில நேரம் அப்பா தயவுலயும், புண்ணியத்துலயும் கல்யாணம் வரைக்கும் ஓட்டிட்டேன்.

கல்யாணத்துக்கு முன்னால எங்கப்பா கூட "நான் வேணா உனக்கு வாஷிங் மெஷின் வாங்கித் தரவா?" ன்னு கேட்டார். (அப்பவே சரின்னு சொல்லி இருக்கலாம்)

கல்யாணமெல்லாம் முடிஞ்சு என்னைக் கொண்டு போய் மாமியார் வீட்ல விட்டாங்க. ராத்திரி எல்லாம் சந்தோஷமாதான் போச்சு. போனாப் போவுது முதல்நாளாச்சேன்னு காலையில சீக்கிரமே ( அட! நிசமாதாங்க!) எந்திரிச்சுப் பார்த்தா அஞ்சரை மணிக்கே மாமியார், பெரிய மாமியார், ரெண்டு நாத்தனார், ஒரு அத்தை ஒரு ஓரகத்தின்னு மற்றும் நம் உறவெல்லாம் ஆளுக்கொரு மூட்டையைத் தோச்சு, உலர்த்திக் குளிச்சு முடிச்சிருந்தாங்க. என் சந்தேகமெல்லாம் அவங்க எல்லாரும் நைட் ஃபுல்லா தூங்காம துவைச்சாங்களோன்னுதான்?.

இதுல என்னைக் கொண்டுவிட வந்த எங்க சித்தி ஒரு பெரிய பையைக் கொடுத்து "இதெல்லாம் கல்யாணத்துல நீ போட்டது. துவைச்சிக்க" என்றார்.

புதுக் கணவனோ, என்னமோ அவர் துணியத் தோய்க்கதான் கல்யாணம் கட்டிக்கிட்ட மாதிரி அவர் பங்குக்கு ஒரு மூட்டையைக் கொடுத்தார். ஒருவழியா(கி) செய்து முடித்தேன்.

சித்தியும் சித்தப்பாவும் கிளம்புகையில் அழுதேன். அவங்க அதை பிறந்தவீட்டை விட்டுப் போறத்துக்குன்னு தப்பா நினைச்சுக்கிட்டு ஆறுதல் சொன்னாங்க.

நானும் அவரும் மேப்பில் டில்லிக்கு மேல இருக்கற ஒரு ஊருக்குப் போய்த் தனிக்குடித்தனம் ஆரம்பிச்சோம். அவர் ஒரு ராணுவ அதிகாரிங்கறதுனால யூனிஃபார்ம் உண்டு. அதுலயும், வெயிலுக்கு, குளிருக்கு, பார்ட்டிக்கு, பரேடுக்குன்னு விதவிதமான யூனிஃபார்ம்.

நல்லவேளையா ஒரு டோபி (சலவைத் தொழிலாளர்)யும் உண்டு. அதுல கொஞ்சம் என் கவலை தீர்ந்தாலும் வீட்ல போடற ஷார்ட்ஸ், டீஷர்ட், நைட்டி, பூமர், நாயுடுஹால்னு அதுவே இரண்டு பக்கெட் துணி வரும். அதுக்கு வாஷிங் மிஷினை வாங்கி, கலர், வெள்ளைன்னு ஒரு பக்கத்துல ஓடுது.

தெய்வம் நின்னு கொல்லும்னு சும்மாவா சொன்னாங்க? சும்மா இருக்காம, சொன்னபேச்சைக் கேக்காம இந்த ஆதாமும் ஏவாளும் ஆப்பிளைத் தின்னு, 'நமக்கு நாமே ஆப்பு' திட்டத்தைக் கண்டுபுடிச்சாங்க.
தினம் ஒரு ஆப்பிளைச் சாப்பிட்டா டாக்டர் வேண்டாமாம். அந்த ஒரு ஆப்பிளைத் சாப்பிடாம இருந்திருந்தா இந்த சமையல், கல்யாணம், குழந்தை, குட்டி அதோட சைட் எஃபெக்ட்டான துணி, பாத்திரம் எதுவுமே வேண்டாம்.
உலகத்தோட முதல் 'ஹென் பெக்டு' ஹஸ்பெண்ட் ஆதாம்தான்னு நினைக்கறேன்.

'எங்கெங்குக் காணினும் துணிகளடா- அதில் எத்தனை எத்தனை ரகங்களடா?'
ஒரு சினிமால நம்ம கவுண்டமணி 'கிழிஞ்சது, கிழியாததுன்னு' கத்திக்கிட்டே வருவார். அதுபோல, துவைச்சது, துவைக்க வேண்டியது, மடிச்சது, மடிக்க வேண்டியது, அயர்ன் பண்ண வேண்டியது, அயர்ன் ஆகி வந்தது (இதை உள்ள வைக்காம அதுல இருந்தே உருவி, உருவி, திரும்பவும் கூட அயர்ன் செஞ்சிருக்கோம்😊), டிரை க்ளீன் போக வேண்டியதுன்னு ஏகப்பட்டது. இதுல கையாலதான் துவைக்கணும்னு ஒரு மூட்டை. சாக்ஸ், கைப்பிடித்துணி (மொத்தம் 7 வகைப்படும்) மாப்பு, டோர் மாட்டுன்னு லிஸ்ட் ரொம்பப் பெரிசுங்க.

இதுல பீரோவுல ( 2 பீரோ, 3 பெட்ரூம்லயும் கப்போர்டு ) வகை வகையாய் ஒருஒருத்தருக்கும்.

1டெய்லி போடறது.
2 பட்டு( கல்யாணத்துக்கு)
3 பார்ட்டி வேர்
4 காஷுவல் வேர்
5 சந்திரலேகா மாதிரி, கொஞ்சம் புதுசு, கொஞ்சம் பழசு
6 தைத்த பூதுசு,
7 தைக்காத புதுசு,
8 ரெடிமேட்
9 உள்ளாடைகள்(4 மாசத்துக்கு ஒருமுறை 8,000- 10,000ஆகுது)
10 யாராவது கிஃப்ட் குடுத்து உபயோகிக்க முடியாதவை
11 ஐந்து நவராத்ரிகளாக ஊரைச்சுற்றும் பிட் ரவிக்கைத் துணிகள்

12 யூனிஃபார்ம்- ஆபீஸ், ஸ்கூல், ஸ்போர்ட்ஸ் ,இத்யாதி
13 பெட்ஷீப் தலையணை உறை, டேபிள்கிளாத், குஷன் கவர் , கர்ட்டன்னு, டெகரேடிவ் ஐட்டம்ஸ்.

13 வின்டர் க்ளோத்திங் எனப்படும் கம்பளி ஆடைகள், (வட இந்திய வாசம்)
14 எப்பவோ போற வெளிநாட்டுக்கு வாங்கின கோட்டு

15 கடைசியா Target dresses .இலக்கு உடைகள்(தமிழாக்கம்:கூகுள்) அதாவது என்றாவது ஒருநாள் இளைத்து விடுவோம் என்ற நம்பிக்கையில் வாங்கப்பட்ட அல்லது வாங்கி போறாமல் போன, தானம் செய்ய மனசுவராத உடைகள்.

இதுல இன்னும் சில பல சென்டிமென்ட்டுகளும், வரலாறுகளும் இணைந்த வெளியில் சொல்ல முடியாத உடைகள் (ஐயோ, வெக்க வெக்கமா வருதே). இவ்வளவு ஏன், ஸ்டாக் எடுத்ததுல கிச்சன் டவலே பதினாறு இருக்கு, புதுசா!

சேலையில வீடு கட்டலாம், ஜாக்கெட்ல ஜன்னல் வைக்கலாம், எங்க வீட்டுத் துணில ஒரு வீட்டுவசதி வாரியமே கட்டலாம்.

வெறும் நைட்டிலேயே காலம் ஒடுறப்போ, எதுக்கு இனிமே புதுப்புடவை, சல்வாரெல்லாம்?னு ஒளிவட்டம் தெரியுற அளவுக்கு யா(ஞா)னைப்பால் குடிச்சாச்சு.

ஏதோ, வாஷிங் மிஷின், சர்வென்ட்டு, லாண்டரி பையன் டிங்க்குன்னு கௌரவமா போய்க்கிட்டிருந்த என் சலவை சரித்திரம், கொரோனா வந்ததில கோக்கு மாக்கா ஆகிப்போச்சு.

'வலது கை குடுக்கறது இடது கைக்குத் தெரியாத' மாதிரி லாக் டவுன்ல ஷார்ட்ஸ், நைட்டி, டீஷர்ட்டு, பசங்களுக்கு ஒருநாளைக்கு ஒரு டிரஸ்ஸுன்னு லிமிடெட் நம்பர்ல டெய்லி துவைச்சாலும் மடிக்கும்போது , அந்த வேதனை இருக்கே, அந்த வேதனை!

என் பையன் சொல்றான், "அம்மா, ரெண்டு பாஸ்கெட்ல எல்லார் டிரெஸ்ஸையும் போடாம, நாலு கூடை வாங்கி ஆளுக்கு ஒண்ணா போடும்மா"ன்னு.

ஒரு மெடிக்கல் மிராக்கிளா எல்லாத்தையும் துவைச்சு, மடிச்சு அலமாரில வச்சா, அவர் சொல்றார், "என்னடி கூடையில ஒரு துணியைக்கூடக் காணும்"னு. இந்தக் கோராமைய நான் எங்க போய்ச் சொல்ல?

ஆளாளுக்கு ஐடியா குடுக்கறாங்களே, யாராவது மடிக்கலாம்ல? எங்க? மயான வைராக்கியம் மாதிரி இனிமே புது டிரெஸ்ஸே வாங்கப்போறது இல்லைன்னு உறுதி எடுத்துக்கிட்டு, காலண்டரைப் பார்த்தா, ஆனி மாசம் பத்து தேதியாச்சு.

இப்ப என் எக்கச்சக்கசக்கமான கவலையெல்லாம் சிநேகாவும், அருள் அண்ணாச்சியும் வந்து, "போலாமா?" ன்னு ஆடிக்கழிவுக்கு அழைப்பாங்களா? மாட்டாங்களா?
 

Author: VedhaVishal
Article Title: மாயத்துணி
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

saki

New member
Nov 8, 2024
1
2
3
Mumbai
அன்றாட அவஸ்தை நயத்துடன் நகைச்சுவையுடன் விவரித்தது அருமை.
இன்னும் ஒரு மாற்றமும் இருக்கே....
அப்படி மடிச்சு வச்சு துணியை தனக்கு வேணும் என்கிற டிரஸ் எடுக்கும் போது பரபரனு கலைச்சு போட்டுட்டு உருவி கந்தர்கோளமா ஆக்கி வச்ச வார்ட்ரோபை காணும் போது ஏறுமே பிபி ... ..அப்புறம் கோபம் , ஆதங்கம் ....ஹூம். .அத விவரிக்க வார்த்தைகளே இல்லை
 

Goms

Member
Apr 28, 2025
77
15
18
Chennai
Wow. Superb👏👏
Surprise Short Stories / Sharing
ஒவ்வொரு வீட்லயும் இது அப்பப்போ நடக்கிற நிகழ்வுகள். உங்களோட ஸ்டைல்ல அருமையா பதிவு பண்ணியிருக்கீங்க 😄😃😛😁
 
  • Love
Reactions: VedhaVishal