“ லண்டனில் ஒரு முனியப்பன்!!”. கிரிஷிகா அம்மு.
லண்டன் மாநகரமே குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தது. ஆனால், அந்தப்பெரிய நட்சத்திர ஓட்டலின் தரைத்தளத்தில் இருந்த கழிவறைக்குள் நம்ம முனுசாமிக்கு மட்டும் வேர்த்து விறுவிறுத்துக் கொண்டிருந்தது. கையில் ஒரு நைந்துப்போன மாப்குச்சி, இடுப்பில் ஒரு பினாயில் பாட்டில், வாயில் ஒரு பாட்டு என முனுசாமி படுபிஸியாக இருந்தான். அவன் மனசுக்குள் ஓடிக்கொண்டிருந்த எண்ணங்கள் எல்லாம் லண்டன் இளவரசர்களுக்கே வராதவை.
"எப்படியாவது இந்த கக்கூஸ் கழுவுறதுலயிருந்து உள்ள இருக்க டைல்ஸ்க்கு மாப் போடுறளவுக்கு முன்னேறனும்.. அந்த அளவுக்கு நான் இனிமேல் வேலை பார்த்தால் தான் சீக்கிரம் முன்னேற முடியும்.." என்று முனுசாமி தனக்குத்தானே பேசிக்கொண்டான். அவன் பார்வையில் அந்த கழிவறை வெறும் கழிவறை அல்ல, அது அவன் முன்னேற்றத்திற்கான படிக்கட்டு. "நான் கக்கூஸ் கழுவ ஆரம்பித்தால் கண்ணாடி போல பளபளன்னு இருக்கும். இனிமே யாராவது இங்க வந்தா, அந்த அழகைப் பார்த்துட்டு எந்திருச்சு வெளில போக முடியாத அளவுக்கு நான் துடைக்கப்போறேன்.." என்று சபதம் எடுத்தபடி, தரையைத் தேய்த்துத் தேய்த்துப் மின்ன வைத்தான்.
சரியாக அந்த நேரம், ஓட்டலின் ஹால் வழியாக அவசரமாக ஓடி வந்தாள் ஜெசிகா. அவள் பார்ப்பதற்கு அப்படியே ஆப்பிள் பழத்தை இங்கிலீஷ் பேப்பரில் சுருட்டி வைத்தது போல அவ்வளவு அழகு. ஆனால், அவள் முகத்தில் இருந்த பதட்டம் அவளுக்கு 'இயற்கையின் அழைப்பு' (அவசரம்) மிக அதிகமாக இருக்கிறது என்பதைக் காட்டியது. முனுசாமி தன் வேலையை முடித்துவிட்டு நிமிர்ந்து வெளியே வரவும், ஜெசிகா உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.
முனுசாமியைப் பார்த்ததும் ஜெசிகா நின்றாள். அவளுக்குத் தவிப்பு தாங்கவில்லை. அவசரத்தில் அவள் கத்தினாள், "ப்ளீஸ் கோ டு அவுட்சைட்... வெரி அர்ஜென்ட் மீ!"
முனுசாமிக்கு அப்படியே உச்சி மண்டையில் கோபம் ஏறியது. "இங்க பாருமா... கோடு போடுற வேலையெல்லாம் நான் இங்க பார்க்கிறதுக்கு வரல. நான் வந்தது கக்கூஸ் கழுவுற வேலைக்கு. உங்க இஷ்டத்துக்கு எல்லாம் என்னால கோடு போட முடியாது. போதாக்குறைக்கு என்னைப் பார்த்து 'அர்ஜென்ட் நீ' (அர்ஜுன் நீ) அப்படின்னு பேர் மாத்தி கூப்பிடுற? என் பேரு முனுசாமிடி! இங்கிலீஷ்ல பேசுனா என்ன வேணா சொல்லுவியா? நான் போய் முதலாளி கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன் ஜாக்கிரதை!" என்று பொரிந்து தள்ளினான். ஜெசிகாவுக்குத் தமிழ் ஒரு சொட்டுத் தெரியாது. இவன் ஏதோ பயங்கரமாகத் திட்டுகிறான் என்று மட்டும் புரிந்தது.
அவள் மீண்டும் தன் நிலையை விளக்க முயன்றாள். "நோ, நோ! ஐ ஹேவ் எ ஸ்டொமக் அப்செட்! ஜஸ்ட் மூவ்!" (இல்ல, இல்ல! என் வயிறு சரியில்ல! கொஞ்சம் நகருங்க!).
முனுசாமிக்கு இப்போது இன்னும் பயங்கர வெறி வந்துருச்சு. "என்னது? 'ஸ்டொமக்ல அப்பளம் செட்'டா? ஏய்... லண்டன்ல வந்து கக்கூஸ் கழுவுறவன் வயித்துல அப்பளம் தான் இருக்கும்னு கிண்டல் பண்றியா? நான் என்ன வெறும் அப்பளத்தையா திங்குறேன்? நான் ஊர்ல கறிச்சோறு சாப்பிடுறவன்டா! அதுவும் இல்லாம என்னைப் பார்த்து 'மூதேவி' (Move) அப்படின்னு திட்டுற? உன்னை இன்னைக்கு விடமாட்டேன்!" என்று மாப் குச்சியை அவளுக்கு நேராக நீட்டினான்.
ஜெசிகா அழுதுகிட்டே, "நோ... நோ... ஐ ஆம் இன் பெயின்! ஹெல்ப் மீ!" (இல்ல... நான் வலியில இருக்கேன்! காப்பாத்துங்க!) அப்படின்னு கத்துனா.
முனுசாமிக்கு "பெயின்"ங்கிற வார்த்தை "பெயிண்ட்" (Paint) மாதிரி கேட்டுச்சு. "பெயிண்ட்டா? ஏய்... நான் டைல்ஸ் துடைக்கிறவன்தான், அதுக்காக இங்க பெயிண்ட் அடிக்கச் சொல்றியா? அதுக்கும் மேல என்னைப் பார்த்து 'ஹெல்ப் மீ' (Help me) அப்படின்னு நக்கலா கேக்குறியா? நான் என்ன உன்கிட்ட ஹெல்மெட் (Helmet) கேட்டுட்டு இருக்கேனா? போடி அங்கட்டு!" அப்படின்னு கையை வீசுனான். ஜெசிகா பயந்துபோய் அங்கிருந்து அலறிக்கொண்டு ஓடிவிட்டாள்.
சிறிது நேரம் கழித்து முனுசாமிக்கு பசி எடுக்க, அவன் ஹோட்டல் கேன்டீன் பக்கம் போனான். அங்கே ஜெசிகா ஒரு மேஜையில் அமர்ந்து காபி குடித்துக்கொண்டிருந்தாள். முனுசாமிக்கு அந்தப் பொண்ணைப் பார்த்ததும் ஒரு நப்பாசை. "இவள்ட்ட போய் நம்ம இங்கிலீஷ் பவரை காட்டி இம்ப்ரெஸ் பண்ணுவோம்" என்று முடிவு செய்தான். தன் காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு அவளிடம் போனான்.
"ஹலோ மேடம்! கோடு போடுறீங்களா? இல்ல சும்மா சைட் அடிக்கிறீங்களா?" என்று மீண்டும் வம்பு இழுத்தான். ஜெசிகா திடுக்கிட்டு, "ஓ மை காட்! இட்ஸ் யூ அகெய்ன்! ப்ளீஸ், லீவ் மீ அலோன்!" (கடவுளே! திரும்பவும் நீங்களா! தயவுசெஞ்சு என்னைத் தனியா விடுங்க!) என்று கத்தினாள்.
முனுசாமிக்கு "லீவ்" (Leave) என்ற வார்த்தை "லீவு" (விடுமுறை) என்று கேட்டது. "லீவா? ஏய்... நான் இங்க வேலைக்குச் சேர்ந்தே ரெண்டு நாள் தான் ஆகுது. அதுக்குள்ள லீவு கேட்கிறீயா? நான் என்ன முதலாளியா? ஊர்ல என் அம்மா எனக்காகக் காத்துட்டு இருக்காங்க, நான் லீவு போடாம வேலை பார்க்கணும்னு! என்னைப் பார்த்து லீவு கேட்கிற?" என்று மாப் குச்சியை மேஜையில் தட்டினான்.
கேன்டீனில் இருந்தவர்கள் அனைவரும் இவர்களைப் பார்க்க ஆரம்பித்தனர். ஜெசிகா மீண்டும் கெஞ்சினாள். "ப்ளீஸ், டோன்ட் ஷவுட்! பீப்பிள் ஆர் லுக்கிங்! ஐ ஜஸ்ட் வான்ட் டு ஈட் மை லஞ்ச்!" (தயவுசெஞ்சு கத்தாதீங்க! மக்கள் பார்க்குறாங்க! நான் என் மதிய உணவைச் சாப்பிடணும்!).
முனுசாமிக்கு "லஞ்ச்" என்ற வார்த்தை "லஞ்சம்" என்று கேட்டது. "லஞ்சமா? ஏய்... நான் கக்கூஸ் கழுவுற வேலையை லஞ்சம் குடுத்தா வாங்கினேன்? என் திறமையால கிடைச்ச வேலைடி இது! என்னைப் பார்த்து லஞ்சம் குடுத்தவன்னு சொல்ற?" என்று கத்தினான். ஜெசிகா பயந்துபோய் அங்கிருந்த தண்ணீரை அவன் மேல் ஊற்ற முயல, முனுசாமி தன் தயிர் சாதப் பையைத் தலையில் கவிழ்த்துக்கொண்டான். தயிர் முகம் முழுக்க வழிய, "பாத்தியா, என் இங்கிலீஷ் அறிவைப் பார்த்து பயந்து தயிர் ஊத்துறா!" என்று அங்கிருந்தவர்களிடம் பீற்றிக்கொண்டான்.
அடுத்ததாக இருவரும் ஒரு லிஃப்ட்டுக்குள் (மின் தூக்கி) மாட்டிக்கொண்டனர். ஜெசிகா பயத்தில் நடுங்கிக்கிட்டே, "ப்ளீஸ்... டோன்ட் கம் நியர் மீ! ஐ ஆம் வெரி ஸ்கேர்ட்!" (தயவுசெஞ்சு என் பக்கத்துல வராதீங்க! நான் ரொம்ப பயந்துப்போயிருக்கேன்!) அப்படின்னு கத்துனா.
முனுசாமிக்கு "ஸ்கேர்ட்" (Scared) அப்படின்ற வார்த்தை, நம்ம ஊரு "ஸ்கர்ட்" (Skirt) மாதிரி கேட்டுச்சு. "என்னது? ஸ்கர்ட்டா? ஏய்... நான் கக்கூஸ் கழுவுறவன் தான், அதுக்காக பொம்பளைங்க போடுற ஸ்கர்ட்டையா போடுவேன்? என்னைப் பார்த்து எகத்தாளம் பண்றியா? என் கெத்தைப் பத்தி உனக்குத் தெரியாது! என் இங்கிலீஷ் அறிவைக் கேட்டு இந்த லிஃப்டே ஆடும் பாரு!" அப்படின்னு மாப் குச்சியை சுத்தி சுத்தி சுழற்றுனான்.
ஜெசிகா லிஃப்ட் ஓரமா போய் ஒண்டிக்கிட்டு, "ஸ்டாப் இட்! யூ ஆர் மேக்கிங் மீ கிரேஸி! லெட் மீ அவுட்!" (நிறுத்துங்க! நீங்க என்னை பைத்தியமாக்குறீங்க! என்னை வெளில விடுங்க!) அப்படின்னு அழுதுக்கிட்டே சொன்னா. முனுசாமிக்கு "கிரேஸி" (Crazy) அப்படின்ற வார்த்தை "கரைசி" (Karaisi) மாதிரி கேட்டுச்சு. "என்னது? கக்கூஸை நானே கரைச்சு ஊத்திட்டேன்னு கவலைப்படுறியா? கவலைப்படாதே மேடம்... நான் இன்னும் நிறைய பினாயில் கரைச்சு வச்சிருக்கேன்!" அப்படின்னு பீட்டர் விடுறான்.
ஜெசிகாவுக்கு மூச்சே திணற ஆரம்பிச்சிருச்சு. "ஓ மை காட்! ஐ கான்ட் பிரீத்! ஓப்பன் தி டோர்!" (கடவுளே! என்னால மூச்சு விட முடியல! கதவைத் திறங்க!) அப்படின்னு கத்துனா. முனுசாமிக்கு "பிரீத்" என்பது "பிரிட்ஜ்" என்று கேட்டது. "பிரிட்ஜா? என்னது லிஃப்ட்டுக்குள்ள பிரிட்ஜ் இருக்குமா? வேணும்னா என் பையில ஒரு பழைய பிரிட்ஜ் தண்ணி பாட்டில் இருக்கு, வேணுமா?" என்று பையைத் திறக்க, அவள் ஏதோ வெடிகுண்டு எடுக்கிறான் என்று நினைத்து அலறிக்கொண்டு லிஃப்ட் கதவு திறந்ததும் ஓடினாள்.
அவள் ஓடும் அவசரத்தில் தன் ஹேண்ட் பேக்கை அங்கே விட்டுச் சென்றாள். முனுசாமி அதை எடுத்துக்கொண்டு அவளைத் தேடி ஹோட்டல் தோட்டத்திற்கு (கார்டன்) சென்றான். அங்கே ஜெசிகா ஒரு பெஞ்சில் உட்கார்ந்து அழுதுகொண்டிருப்பதைப் பார்த்து, "ஹலோ மேடம்! உங்க பார்சல் இங்க இருக்கு!" என்றான்.
ஜெசிகா திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தா. அவ பயந்துபோய், "ஓ மை காட்! யூ ஸ்டோல் மை பேக்? கிவ் இட் பேக்!" (கடவுளே! என் பேக்கைத் திருடிட்டீங்களா? அதைத் திரும்பக் குடுங்க!) அப்படின்னு கத்துனா. முனுசாமிக்கு "ஸ்டோல்" (Stole) அப்படின்ற வார்த்தை, நம்ம ஊரு "ஸ்டூல்" (Stool) மாதிரி கேட்டுச்சு. "என்னது? ஸ்டூலா? ஏய்... நான் கக்கூஸ் கழுவும்போது ஸ்டூல்ல உக்காந்துக்கிட்டா வேலை பார்க்கிறேன்? நின்னுக்கிட்டுத் தான் வேலை பார்க்கிறேன்!" என்று எகிறினான்.
ஜெசிகா கோபத்தில், "ஐ ஹேவ் எ டெரிபிள் ஹெடேக்! லீவ் மீ!" (எனக்கு பயங்கர தலைவலி! என்னை விட்டுடுங்க!) என்று கத்தினாள். முனுசாமிக்கு "ஹெடேக்" என்பது "ஹெட் கேக்" (தலையில் கேக் வெட்டுவது) என்று கேட்டது. "ஹெட் கேக்கா? என்னது தலையில கேக் வெட்டணுமா? இன்னைக்கு உன் பிறந்தநாளா? இரு, இந்த மாப் குச்சியாலயே கேக் வெட்டுறேன்!" என்று ஓங்கினான்.
ஜெசிகா அலறிக்கொண்டு, "ஐ வாண்ட் ஜஸ்டிஸ்!" (எனக்கு நீதி வேணும்!) என்று கத்த, முனுசாமிக்கு அது "ஐஸ் டீ" என்று கேட்டது. "தலைவலிக்குதுன்னு சொல்லிட்டு ஐஸ் டீ கேக்குறியா? போய் சூடா இஞ்சி டீ குடிடி மூதேவி!" என்று கத்த, ஜெசிகா அங்கிருந்த தண்ணீர் ஊற்றுக்குள் குதித்து மறுபக்கம் ஓடி மறைந்தாள்.
முனுசாமி அங்கேயே நின்னு யோசிச்சான். "இந்த பொண்ணு ஏன் இப்படி ஓடுது? ஒருவேளை என் இங்கிலீஷ் அறிவைப் பார்த்து பயந்துடுச்சோ? இல்ல... என் மேல காதல்ல விழுந்துடுச்சோ?"னு அவனுக்குள்ள ஒரு சின்ன சந்தேகம். ஆரோக்கியம் பக்கத்துல வந்து, "என்ன மச்சான்... அந்தப் பொண்ணு மிரண்டு போயிருக்கு"ன்னான்.
முனுசாமி காலரைத் தூக்கி விட்டுக்கிட்டு, "டேய் ஆரோக்கியம்... அவ மிரளலடா, மயங்கிட்டா! இங்கிலீஷ்ல நான் 'அர்ஜென்ட்'னு (Urgent) சொன்னது அவளுக்கு 'அர்ஜுனன்'னு (Arjunan) கேட்டுருக்கு. நான் தான் அவளுக்கு வில் வித்தைக்காரன்னு நினைச்சுட்டா. இவளை மட்டும் நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா, அப்புறம் லண்டன்ல நான் தான் ராஜா! இந்த மாப் குச்சியும் வேண்டாம், பினாயிலும் வேண்டாம். வாடா அவளைப் போய்ப் பிடிப்போம்!"னு சொல்லிட்டு அவ பின்னாடியே ஓடுனான்.
ஜெசிகா ஒரு பூங்காவுல (Garden) உக்காந்து மூச்சு வாங்கிட்டு இருந்தா. முனுசாமி மெதுவா அவ பக்கத்துல போய், "ஹலோ மேடம்! டோன்ட் பியர்... முனுசாமி இஸ் ஹியர்!" (பயப்படாதீங்க, முனுசாமி இங்க இருக்கான்!) அப்படின்னு ஒரு பிட்டைப் போட்டான். ஜெசிகா அவனைப் பார்த்ததும், "மறுபடியுமா?"ங்கிற மாதிரி தலையில அடிச்சுக்கிட்டா.
ஜெசிகா: "ப்ளீஸ்... லீவ் மீ அலோன்! ஐ ஹேவ் நோ எனர்ஜி டு ஃபைட் வித் யூ!" (தயவுசெஞ்சு என்னை விடுங்க! உங்ககூட சண்டை போட எனக்குத் தெம்பு இல்லை!)
முனுசாமிக்கு "எனர்ஜி" அப்படின்ற வார்த்தை "இஞ்சி" மாதிரி கேட்டுச்சு. "இஞ்சியா? ஏய்... நான் என்ன டீக்கடை வச்சிருக்கேனா இஞ்சி தட்டிப்போட? இங்க பாருமா... நான் உனக்கு என் குடும்ப வரலாறைச்சொல்ல வந்திருக்கேன். என் பரம்பரை பத்தி தெரிஞ்சா நீயே மயங்கிடுவ!" அப்படின்னு சொல்லிட்டு, அவ பக்கத்துல உட்கார்ந்து இங்கிலீஷ்ல தன் 'பஞ்சாங்கத்தை' ஆரம்பிச்சான்.
"மேடம்... மை ஃபாதர் இஸ் 'பெரிய தல' (Village Head). ஹி ஹேவ் 'டூ மாடு' (Two cows). ஒன் மாடு பிளாக்... ஒன் மாடு ஒயிட்! மை வில்லேஜ் நேம் இஸ் 'கக்கூஸ்பட்டி'. வெரி பியூட்டிபுல் பிளேஸ்!" ஜெசிகா புரியாம முழிச்சா. முனுசாமிக்கு "கௌஸ்" (Cows) அப்படின்ற வார்த்தை "காசு" (Cash) மாதிரி கேட்டுச்சு. "காசா? ஏய்... எங்க அப்பாகிட்ட நிறைய காசு இருக்குடி! எங்க ஊர்ல நாங்க தான் பெரிய புள்ளி! எங்க தாத்தா ஒரு காலத்துல 'வெள்ளை யானை' மேல ஏறி வந்தவர் தெரியுமா? மை தாத்தா... ரைடிங் 'ஒயிட் எலிபெண்ட்'!"
ஜெசிகா வாயைப் பொத்திக்கிட்டு, "யுவர் கிராண்ட்பாதர் ரோட் ஆன் எ ஒயிட் எலிபெண்ட்? ஆர் யூ ஜோக்கிங்?" (உங்க தாத்தா வெள்ளை யானை மேல வந்தாரா? ஜோக் பண்றீங்களா?). முனுசாமிக்கு "ஜோக்கிங்" என்பது "சொக்கிங்" (Choking) மாதிரி கேட்டுச்சு. "சொக்கிங்கா? ஏய்... நான் பேசுற இங்கிலீஷைக் கேட்டு உனக்கு மூச்சுத் திணறுதா? அது அப்படித்தான் இருக்கும்! என் இங்கிலீஷ் பவர் அப்படி!"
முனுசாமி விடாம தொடர்ந்தான்: "மேடம்... மை அம்மா... குக்கிங் 'பிளாக் மீன்' (Dry fish). வெரி ஸ்மெல்... வெரி டேஸ்ட்! யூ கம் டு மை ஊர்... ஐ கிவ் யூ மீன் குழம்பு! யூ அண்ட் மீ... மேரேஜ்... நோ கக்கூஸ் ஒர்க்... ஒன்லி ஹனிமூன் ஒர்க்!"
ஜெசிகாவுக்குத் தலை சுத்த ஆரம்பிச்சிருச்சு. "ஹனிமூன்? மேரேஜ்? ஆர் யூ அவுட் ஆஃப் யுவர் மைண்ட்? ஐ வில் கால் தி போலீஸ்!". முனுசாமிக்கு "மைண்ட்" என்பது "மண்ணு" (Mud) மாதிரி கேட்டுச்சு. "மண்ணா? ஏய்... எங்க ஊர் மண்ணு தங்கம் விளையுற மண்ணுடி! போலீஸைக் கூப்பிடுறதுல உனக்கு என்ன அவ்வளவு ஆசை? பாலிஷ் (Police) போடத்தானே கூப்பிடுவ? நான் வேணா என் மாப்குச்சியால உனக்கு 'பாலிஷ்' போட்டுவிடுறேன்!" அப்படின்னு மாப்குச்சியைத் தூக்கி அவ முன்னாடி ஆட்டுனான்.
ஜெசிகா அழுதுகிட்டே, "ப்ளீஸ்... ஸ்டாப் திஸ் டார்ச்சர்! ஐ வாண்ட் டு கோ ஹோம்!". முனுசாமிக்கு "டார்ச்சர்" (Torture) என்பது "டார்ச் லைட்" (Torch light) மாதிரி கேட்டுச்சு. "டார்ச் லைட்டா? ஏய்... லண்டன்ல இப்போ தான் வெளிச்சமா இருக்கு, அதுக்குள்ள எதுக்குடி டார்ச் லைட் கேக்குற?" அப்புறம் ஒரு படி மேலப்போய் அவ கையைப் பிடிக்கப்போனான். "மேடம்... ஐ லவ் யூ... யூ லவ் மீ... மை கக்கூஸ் இஸ் யுவர் கக்கூஸ்! வி வில் பில்ட் எ நியூ கக்கூஸ் இன் லண்டன்!"
ஜெசிகாவுக்குத் தாங்க முடியல. "திஸ் இஸ் இன்சேன்! ஐ ஆம் லீவிங் ரைட் நவ்!". முனுசாமிக்கு "இன்சேன்" என்பது "இன்சூரன்ஸ்" (Insurance) மாதிரி கேட்டுச்சு. "இன்சூரன்ஸா? ஏய்... கல்யாணத்துக்கு முன்னாடியே இன்சூரன்ஸ் பத்திப்பேசுறியே? கவலைப்படாதே... நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் உனக்கு எல்லா இன்சூரன்ஸும் நான் எடுத்துத் தர்றேன்!"
ஜெசிகா அலறி அடிச்சுட்டு பூங்காவை விட்டு ஓடுனா. முனுசாமி விடாம பின்னாடியே மாப்குச்சியோட ஓடிப்போய், "ஏய்... ஓடாதே! நான் இன்னும் எங்க மாமனார் வரலாறைச் சொல்லவே இல்லையேடி! எங்க மாமனாருக்கு 'மூணுகண்ணு' இருக்குன்னு சொல்ல வந்தேனே!"னு லண்டன் தெருவுல கத்துனான்.
ஜெசிகா ஓடுன ஓட்டத்துல அவ செருப்பே கழண்டு விழுந்துருச்சு. முனுசாமி அந்தச் செருப்பை எடுத்துட்டு, "பாத்தியா ஆரோக்கியம்... கல்யாணப் பேச்சு எடுத்த உடனே அவ சந்தோஷத்துல செருப்பை விட்டுட்டு ஓடுறா! இதுதான்டா 'லவ்'!" அப்படின்னு அந்தச் செருப்பை மோந்து பார்த்துட்டு, அதே மாப்குச்சியோட கெத்தா கக்கூஸ் பக்கம் நடந்துப்போனான்.
ஜெசிகா அன்னைக்கே லண்டன்ல இருந்து ஓடிப் போய், "இனிமே இங்கிலீஷ் பேசுற எவனையும் பார்க்க மாட்டேன்"னு சத்தியம் பண்ணிட்டாளாம். முனுசாமி இன்னைக்கும் லண்டன்ல, "அந்த வெள்ளைக்காரி என் குடும்ப வரலாறை கேட்டு மயங்கி, ஞாபகார்த்தமா அவ செருப்பை என்கிட்ட கொடுத்துட்டுப் போயிருக்கா"ன்னு பீத்திக்கிட்டு இருக்கான்.

Author: siteadmin
Article Title: லண்டனில் ஒரு முனியப்பன்!! - கிரிஷிகா அம்மு.
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.