சங்கீத கலாநிதியும் நாட்டிய பேரொளியும்
ச.மணிவண்ணன்
லிங்கேசனுக்கு வயது அறுத்திரெண்டு. அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றதிலிருந்து அவருக்கு ஒரு ஆசை எப்படியாவது சபாவில் பாடிட வேண்டும் என்று.
சங்கீதம் என்றால் அவருக்கு உயிர்.அதனால் தன்னுடைய பெயரைக் கூட பைரவர் என்று மாற்றிக் கொண்டார்.
பைரவி ராகத்தின் ஆண்பால் பெயர் என்று தன்னுடைய பெயர் காரணம் சொல்லி அறுஅறு என அறுத்து விடுவார் பாட்டாலும் பேச்சாலும்.
சங்கீத மும்மூர்த்திகள் படத்தை படுக்கை அறையில் மாட்டி வைத்துள்ளார்.காலையில் விழித்ததும் மும்மூர்த்திகளைப் பார்த்து வணங்கிதான் தன்னுடைய அன்றைய பொழுதை கழிப்பார்.
"சபாவில் படலைன்னா…என் கட்டை வேகாது!"என்று வீட்டில் உள்ளவர்கள் மட்டும் இல்லாமல் தெரு முழுக்க,ஏன் பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்லி திரிவார்.
மார்கழி பிறந்தால் போதும் கச்சேரி செய்ய சபாசபாவாக அலைவார் வாய்ப்பு கேட்டு.
மூன்று மாதங்களுக்கு முன்பாகவே தன்னை தயார் படுத்திக் கொள்வார். பாகவதர் போன்ற கெட்டப்பிற்கு மெனக்கெடுவார்.
பைரவரின் நரைத்த முடி தோள் வரை சுருள் சுருளாக காதை மறைத்தவாறு தொங்கி கொண்டிருந்தது.
மார்கழியில் பைரவர் எப்போதும் பிசி.கையில் பிடிக்க முடியாது.ஏனென்றால்
ஏதேனும் ஒரு சபாவில் கால்மேல் போட்டு,தொடையை தட்டிக் கொண்டு கச்சேரியை ரசித்துக் கேட்பார். அப்படியே பார்ப்பவர்களின் வாய்ப்பும் கேட்பார்.அது வாட்ச் மேனாக இருந்தாலும். பைரவரைப் பார்த்து ஒருவர் பதுங்கவில்லை என்றால் அவரை முதன் முதலாக பார்ப்பவராக இருக்கும். போனவாரம் சபாவில் கச்சேரி முடிந்ததும் தன் பக்கத்தில் இருந்த பெரியவரைப் பார்த்தார் பைரவர்..
அவருக்கு எண்பது வயது இருக்கும்.பல்லில்லாமல் பொக்கை வாயுடன் பைரவரை பார்த்து சிரிக்கவும்,உடனே தன்னுடைய திறமையை வெளிப்படுத்த,"பெரியவரே! நானும் தான் பாடுவேன் அம்பிகாபதி மாதிரி!ஆனா எனக்கு வாய்ப்பு தான் கிடைக்கலை.."என்றார் பயணங்கள் முடிவதில்லை கவுண்ட மணி மாதிரி.
பெரியவர் பைரவரை பரிதாபமாக பார்த்ததும் அங்கே ஓர் சிம்பதி உருவாக, மேற்கொண்டு பேச தொடங்கினார் பைரவர்.
"கேட்டு பாருங்க என்னுடைய சாங்க.."என்று சொல்லி சத்தமாக உச்சஸ்தாயில் பாடினார்.
பெரியவர் மிரண்டு மிரண்டு பார்க்க,அதை கவனிக்காமல் கண் மூடி பைரவர் பாட,அறை முழுவதும் எதிரொலித்தது அவரின் கட்டை குரலில் பாடல்.
பெரியவர் இப்போது தொடையை தட்டினார் மூட்டைப்பூச்சி கடிக்க,கூடவே கொசுவும் பறக்க,கைகளை வேகவேகமாக இடம் வலமாக அசைத்தார்.
பைரவரின் பாடல் கேட்டிலிருந்த வாட்ச் மேனுக்கு கேட்க, வாட்ச் மேன் ஓடியே வந்துவிட்டார் தன் முதுமையை கூட பொருட்படுத்தாமல்.
அவர் பின்னாலேயே ஒரு ஜோடி வர,தன் கண்களை திறந்த பைரவர் தன் பாட்டில் ஈர்க்கப்பட்டுதான் ஓடி வருகிறார்கள் என்று தவறாக நினைத்து ,உற்சாகமாக பாடலை தொடர்ந்தார்..
"சார் கொஞ்சம் பாட்டை நிறுத்துங்க!என் அப்பாவை மறந்து விட்டுட்டு போயிட்டோம்!ஞாபக மறதிகாரர்.
எங்கயாவது போயிட்டு இருப்பாரோன்னு பயந்திட்டோம்!ஆனா என் அப்பாவை உங்கள் பாட்டால் கட்டி போட்டு எங்கும் நகராமல் பார்த்துகிட்டீங்க.என்ன அவருக்கு காது தான் கேட்காது !ரொம்ப தேங்ஸ்!"என்றவருக்கு,பாடலிலே சற்று பொறுங்கள் அவர் என் பாடலை ரசித்து கேட்கிறார் என்று சொன்னார் பைரவர்.
"ஹலோ சார் அவருக்கு காது கேட்காதுன்னு சொன்னேனே உங்க காது கேட்குமா? வீட்ல தனியா விட்டுட்டு வர முடியாது ன்னு கூப்பிட்டு வந்தோம்!"அந்த பெண்மணி தன் மாமனாருக்கு காது கேட்காத விஷயத்தை சொன்னாள்.
பைரவர் அசடு வழிந்தார்."அப்ப என் பாட்டைக் கேட்டு எப்படி தொடையில் கைகளைக் கொண்டு தட்டி ரசித்தார்?!"அப்பாவியாகக் கேட்டார்.
"அது மூட்டைப்பூச்சி கடிக்காக இருக்கும்!ஏன்னா நாங்களும் அப்படிதான் கச்சேரி நடக்கும் போது தொடை தட்டிக்கிட்டு இருந்தோம் !"என்று சொல்லி அவர் இளித்தார் காவிப்பல் தெரிய.
."சரி உட்கார்ந்து நீங்களாவது என் பாட்டை கேளுங்க!" என்றார் பைரவர்.
"இந்த கருமத்துக்குதான் நான் வரமாட்டேன்னு சொன்னேன். கேட்டீங்களா? வீட்டுக்கு வாங்க உங்களை ஒரு கை பார்க்கிறேன்!" என்று சொல்லி அவள் தலையில் அடித்துக் கொண்டாள்.
வீட்டில் அவதி அவதி என்று வந்தவனுக்கு இங்கும் அதே நிலையா என்று நடுங்கியவாறு
பைரவர் கண் முன்னே பெரியவரை தரதரவென இழுத்துக் கொண்டு அந்த தம்பதியினர் வெளியேறினர்.
பைரவரை வாட்ச்மேன் ஒரு மாதிரியாக பார்த்தார். வாட்ச் மேனுக்கு பைரவரின் அலப்பறை நன்றாகத் தெரியும்.வருடாவருடம் பார்த்து பழகிய கூத்துதான் இது.
"வாட்ச் மேன் !நீங்களாவது என் பாட்டை கேளுங்க!"என்ற பைரவருக்கு பயந்து வெளியே ஓடினார் வாட்ச் மேன்.
பின்னாலேயே பாடியவாறு துரத்தினார் வாட்ச் மேன். மூச்சிரைக்க நின்றார் வாட்ச் மேன்.
"முடியலை சார்!என்னால் தினமும் ஓட முடியாது!
நானும் இந்த சபாவில சான்ஸ் கேட்டு கேட்டு வாய்ப்பு கிடைக்காம இங்கேயே வாட்ச்மேன் ஆகிட்டேன். எனக்கும் வயசாகுது. நீங்க வேலைக்கு வர்றீங்களா?நான் வேலையை விட்டு போகணும்னா வேற ஆளை கொண்டு வந்து விட்டுட்டு வேலையை விட்டு போன்று சபா மேனேஜர் சொல்லிட்டாரு!" புலம்பினார் வாட்ச் மேன்.
அங்கிருந்து ஓடியே வந்து வழியில் வந்த ஆட்டோவை மடக்கி புறப்பட்டார் பைரவர்.
ஆட்டோ வீட்டு வாசலில் நின்றது. குதித்து இறங்கினார் பைரவர்.
வாசலில் ஒருவன் பைக் மீது சாய்ந்து கொண்டு நின்றிருந்தான்.பெரிய நாமம் நெற்றியில் சாத்தியிருந்தான். அவனை ரெண்டு சாத்து சாத்த வேண்டும் என்று நினைத்தார்.
பைக்கை கேட் திறக்க முடியாதபடி நிறுத்தி இருந்ததால்.
பைரவர் அவனை முறைக்கு,"உங்க மகள் சைந்தவி தானே?" என்றான்.
"ஆமாம். அதற்கு என்ன?அதுக்காக கேட்டை திறக்க முடியாதபடி இப்படிதான் நிக்கறதா?"கோபமாக கேட்டார் பைரவர்.
" நான் அவளை காதலிக்கிறேன்!"பட்டென்று சொல்லிவிட்டான் அவன்.
" அப்படியா ?"பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் பதில் சொன்னார் பைரவர்.
அவன் திருதிருவென விழித்தான்.
பைரவரே அவன் முழிப்பதைப் பார்த்து,"என் பொண்ண கல்யாணம் பண்ணிக்கணும்ன்னா ஒரே ஒரு கண்டிஷன் இருக்கு."
"ம்…சைந்தவி சொன்னாள்."
"அப்ப சபாவில் பாட எனக்கு சான்ஸ் வாங்கி தரப் போற!"
"ஷூயூர்!"திமிராக சொன்னான்
"எப்படி?"
"என் சித்தப்பா ஆளுங்கட்சி சேர்மன்.எங்க கிராமத்திலேயே செல்வாக்கான ஆளு.எந்நேரமும் சதா அமைச்சர்கள் போற கார் பின்னாடி போற கார்ல எதுலையாவது தொத்திக்குவாரு..அவரு நினைச்ச உடனே சபாவில் பாட ஈஸியா சான்ஸ் வாங்கி தந்திடுவாரு.."
முகமெல்லாம் பல்லானது பைரவருக்கு.
"உங்க சித்தப்பா பேரு?"
"சபாபதி!"
"உன் பேரு சபாரத்தினம்!
"அப்ப நீங்க சபா குடும்பம்னு சொல்லுங்க!"
பெரிதாக தலையாட்டினான் சபாரத்தினம்.
"மாப்பிள்ளை!வாங்க உள்ள போய் பேசுவோம்.."பைரவர் மரியாதையுடன் வீட்டினுள் அழைத்து வந்தார்.
பலமான உபசரிப்பு.
அவனுக்கு ஒரு பாடல் பாடிக் காட்டினார் பைரவர். அவன் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தான் ஹெட்போனில் இளையராஜா பாட்டு.
இளையராஜா பாட்டுக் கேட்டு, மெய் மறந்து தலையாட்டினான்.
"மாப்பிள்ளை! கண்டிப்பா எனக்கு வாய்ப்பு வாங்கி தருவீங்களா?"
"கண்டிப்பா…"ஹெட் போனை கழட்டிக் கொண்டே சொன்னான்.
பைரவர் தன்னுடைய சிங்கப் பல் சேர்ந்து முப்பத்தி நான்கு பற்கள் தெரிய சிரித்தார்.
சைந்தவி உருளையாக இருந்தாள்.கேஸ் சிலிண்டருக்கு கவுன் போட்ட மாதிரி.
காபி கொடுத்துவிட்டு, சபாரத்தினத்தைப் பார்த்து வெட்கப்பட்டு அவன் பக்கத்தில் நின்றாள்.
"மாமா!சைந்தவியோட இந்த வெட்கம் தான் என்னை காதலிக்க தூண்டியது"என்றான்
நாய் குடிப்பது போல் சலக் சலக் என்ற சத்தத்துடன் காபியை உறிஞ்சிக் கொண்டே..
"டீ எங்க வீட்ல போடமாட்டோம்!காபி ராகத்தோட பேருன்றதால் காபி தான் குடிப்போம்.எல்லாம் ராக மயமாதான் இருக்கும்.உதாரணமா பாருங்க இது டீபாய் தானே?"என்ற பைரவர் டீபாயை தொட்டு காண்பித்தார்.
"ஆமாம்"என்றான்.
"ஆனா எங்க வீட்ல காபிபாய்ன்னு தான் சொல்லுவோம்.."சொல்லி விட்டு வீடு அதிர சிரித்தார் பைரவர்.
"அத்தைய கூப்பிடுங்க பார்க்கணும்"கையிலிருந்த காபி டம்ளரை காலி செய்து விட்டு
காபிபாய் மீது வைத்தவாறு கேட்டான்.
"மாப்பிள்ளை முன்னாடி எப்படி வர்றதுன்னு கூச்சப்படறா போலிருக்கு!"என்று சொல்லி விட்டு"சரோ…சரோ…"என்று உள்ளமை நோக்கி கூவினார் பைரவர்.
"இதோ வந்திட்டேன்!"என்று தாவி,குதித்து மான் போல் வந்து நின்றாள்.
சரோஜா ஐம்பத்தைந்து கடந்துவிட்டிருந்தாள்.காலில் சலங்கை கட்டியிருந்தாள்.
மாப்பிள்ளைக்கு வந்தனம் சொன்னாள் பரதநாட்டிய முறையில்.
"மாப்பிள்ளை எனக்கும் ஒரு சான்ஸ் வாங்கி தாங்களேன்!"அபிநயம் பிடித்தாள் தன் மையிட்ட கண்கள் விரிய சரோ என்கின்ற சரோஜா.
'சைந்தவியை கைபிடிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு' என்று நினைத்தவாறே,
மிரண்டு போய் தலையாட்டினான்.
அன்றைய பொழுது நல்லநாளாக அமைந்ததில் நிம்மதியாக உறங்க முடியாமல் பைரவரும், சரோஜாவும் கனவில் மிதந்து கொண்டு இருந்தனர்.
மைதிலி என்னை காதலி அமலா போல் தன்னை உருவகப் படுத்திக் கொண்டு 'ஒரு பொன் மானை நான் காண.."பாடலுக்கு படுத்துக் கொண்டு கை கால்கள் ஆட்ட, பக்கத்தில் படுத்திருந்த பைரவர் மீது கால் பட, உருண்டு தரையில் விழுந்தார் "அம்மா…"என்று ஏதோ பெயர் தெரியாத ராகத்தில்.
கணவர் கீழே விழுந்தது கூட கவனிக்காமல் படுக்கையில் படுத்தபடியே ஆடினாள் சரோஜா.
ஏதோ பாட்டு பாடுகிறார் கணவர் என்று நினைத்தவாறே அமலா பாடல் முடிந்து,வைதேகி காத்திருந்தாள் ரேவதியாக மாறி
"அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட'பாடலுக்கு ஆடத் தொடங்கினாள்.
கீழே விழுந்த பைரவர் மூக்கில் இரத்தம் வழிய எழுந்து உட்கார்ந்து கொண்டார்.
சிந்து பைரவி சிவக்குமார் போல "கலைவாணியே வருவாய்"என கண் மூடி பாடத் தொடங்கி,சங்கீத சாதி முல்லை பாட்டை தொடர்ந்து பாடி, அசந்து தரையில் படுத்த
பைரவர் ஒருவழியாக தூங்கிப் போனார்.
வடிவேலு போல் பப்பரப்ப என்ற போஸில் படுத்து தூங்கி போயிருந்தாள் சரோஜா.
மறுநாள் சபாரத்தினம் சொன்னதை நம்பி பைரவர் மும்மூர்த்திகளின் கீர்த்தனைகள் பிராக்டீஸ் செய்து கொண்டிருந்தார் ஒருபுறம். மற்றொருபுறம் சலங்கை கட்டிக் கொண்டு ஜதிகளை செல்லில் பாடிவிட்டு சரோஜா வீடு அதிர பாடாய் படுத்திக் கொண்டு இருந்தாள்.
சபாவில் வாய்ப்பு கிடைக்கும் நாள் எந்நாளோ? ஆனால் அது வரை வீடு ரெண்டு பட்டு கிடந்தது.
ஆபிஸிற்கு தானே சமைத்து எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் சைந்தவி.
சபாரத்தினம் தெருமுனையில் காத்திருந்தான்.
"சைந்தவி! நான் ஏன் உங்க வீட்டுக்கு வரலை தெரியுமா?" பைகில் உட்கார்ந்து கொண்டே கேட்டான் சபாரத்தினம்.
பின் சீட்டில் உட்கார்ந்தவள்,"ஏன்?"என்றாள்.
"சபா ! உண்மையில் உங்க சித்தப்பா சபாவில வாய்ப்பு வாங்கி தருவாறா?"தன்னுடைய சந்தேகத்தைக் கேட்டாள்.
"அப்ப நான் சொன்னதை நீ நம்பல போல?நிஜமாவே என் சித்தப்பா சேர்மேன் தான்!"
"சரி.. சரி நம்பிட்டேன்!"என்றாள்.
அன்று இரவு ஒன்பது மணிக்கு சபாரத்தினம் போன் செய்தான்.
"சொல்லு சபா ..!"
"ஒரு குட் நியூஸ்…"மறுமுனையில் சிரிப்புடன் சொன்னான்.
"என்ன?"
"உங்கப்பாவுக்கு சபாவில் பாட டேட் வாங்கிட்டேன்…"துள்ளினாள்.
அவளுக்கே அப்படி ஒரு மகிழ்ச்சி என்றால் பைரவருக்கு எப்படி இருக்கும்?
ஓடினாள் மூச்சிரைக்க அப்பாவின் அறை நோக்கி போனில் பேசிக் கொண்டே.
"எப்படி சான்ஸ் வாங்கின?"
"சித்தப்பாக்கிட்ட பேசி, கெஞ்சி சான்ஸ் வாங்கறத்துக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுச்சு.."சலிப்புடன் சொன்னான்.
"அம்மாவிற்கு சான்ஸ்?"என்றாள் ஆர்வமாக.
"அட சொல்ல மறந்திட்டேன்!
அத்தைக்கு மாசம் ரெண்டு தடவை சான்ஸ் தரேன்னு சித்தப்பா சொல்லிட்டாரு!ஆனா மாமாவுக்கு தான் கொஞ்சம் யோசனை பண்ணாரு.. அப்புறம் யாருக்கோ போன் பண்ணாரு..
பேசினவங்க ஓகே சொல்ல,உடனே மாமாவுக்கு சேன்ஸ் ஓகே சொல்லிட்டாரு…ஆனா வருஷம் இரண்டு தடவைதான்..!
நீ சொன்னா நம்ப மாட்டே…எங்க சித்தப்பாவை அப்படியே கட்டி பிடிச்சு முத்தமே கொடுத்திட்டேன்னா பார்த்துக்கோயேன்.."
ஒரு உம்மா கொடுத்து போனை துண்டித்தாள்.
"என்னம்மா பதட்டமா ஓடி வர்ற?"
பைரவர் கேட்டார் மூக்கு கண்ணாடியை சரிசெய்து கொண்டே.
"அப்பா…அப்பா…அம்மா…அம்மா…"வார்த்தை அதற்கு மேல் வராமல் கண்களில் நீர் வழிய நின்ற மகளை பார்த்து இருவரும் அதிர்ந்தனர்.
" என்ன விஷயம்? எதுக்கு கண்கலங்கற?"சரோஜா கேட்டாள்.
"அம்மா இது சாதாரண கண்ணீர் இல்லை… ஆனந்தக் கண்ணீர்!"
"ஆனந்த கண்ணீர் வர அளவிற்கு என்ன விஷயம் நடந்தது?"
"உங்க.. உங்க…"
"என்னம்மா…பாதி வார்த்தை விழுங்கற? முழுசா சொல்லு!"
"அப்பா.. அம்மா… உங்க ரெண்டு பேருக்கும் சான்ஸ் வாங்கி கொடுத்திட்டாரு உங்க மாப்பிள்ளை.."
வீடே அதிர்ந்தது.
பைரவர் பாட,சரோஜா ஆட
இருவரையும் மகிழ்ச்சியோடு
பார்த்தாள் சைந்தவி.
"இனி நீங்க பயங்கரம பிராக்டீஸ் பண்ணுங்க.…பயமுறுத்தற மாதிரி பண்ணாதீங்க! கஷ்டப்பட்டு வாங்கின சான்ஸ் ஒழுங்கா பிராக்டீஸ் பண்ணுங்க.."
"ஒரே ஒரு வார்த்தை மாப்பிள்ளை கிட்ட பேசிக்கறேனே!"
கால் செய்து செல்போனை அப்பாவிடம் நீட்டினாள்.
ஃபோனை காதில் வைத்த பைரவர் வார்த்தை வராமல் தடுமாறினார்.
"கொடுங்க.. நான் பேசறேன்.."என்று வாங்கிய சரோஜாவும் வார்த்தை வராமல் திணறினாள்.
" மாப்பிள்ளைக்கு தேங்ஸ் சொல்ல ஏன் இந்த தடுமாற்றம்? நானே சொல்லிகிறேன் "என்று செல்லை வாங்கிக் கொண்டு தன் அறைக்கு போய் விட்டாள்.
அவர்கள் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது.
சபாரத்தினம் சொன்ன இடத்திற்கு ஓலோவில் கார் புக் செய்து இறங்கியதும் விழித்தனர் மூவரும்.ஏனென்றால் அது ஒரு சிறிய கிராமம். சரியான இடத்திற்கு தான் வந்திருக்கோமா என்று குழம்பிப் போனார்கள்.
"என்னம்மா சபாரத்தினத்திற்கு போன் போட்டு கேளு!"
பாகவதர் போல் ஒரு கையில் வெற்றிலை பெட்டியும், மறுகையில் ஜக்கும் வைத்து இருந்தார்.
"ஹலோ…சபா !நீ சொன்ன இடத்திற்கு வந்திட்டோம்!ஆனா இங்க எங்க சபா எதுவும் இருக்கிற மாதிரி தெரியவில்லையே?"
"சரியான இடத்திற்கு தான் வந்திருக்கீங்க..நீ இருக்கிற இடத்திற்கு வடக்கு புறம் பாரு.அங்க புதூர் ஊராட்சி ஒன்றியம் என்ற பெயரில் ஒரு கட்டிடம் இருக்கா?"
வடக்குப்புறம் திரும்பி பார்வையை சுழலவிட்டாள்.
"ம்…இருக்கு."
"அப்படியே கட்டிடத்து உள்ளே வா! நான் அங்கதான் இருக்கேன்.."
பாழடைந்த செங்கற்கள் இளிக்க , நின்றிருந்த கட்டிடம் நோக்கி நடக்க,மூத்திர வாடை அதிகரித்து கொண்டே வந்தது.
கட்டிடம் சுற்றி புதர் மண்டி கிடந்தது.ஊரின் அவசர கழிவறையாக கட்டிடம் பின்புறம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
"என்னடி சபா இங்க வரச் சொல்லி இருக்காரு?"என்ற சரோஜா ஃபுல் மேக்கப்பில் நாட்டியம் ஆட தயார்நிலையில் பட்டுப்புடவை,சலங்கை கட்டியிருந்தாள்.
"எனக்கும் ஒண்ணும் புரியலைம்மா!"
சபாரத்தினம் சொன்னது நினைவுக்கு வந்தது.
"அத்தை அங்க மேக்கப் போட, காஸ்டியூம் ரெடி பண்ண இடம் இருக்காது…வீட்லயே ரெடி பண்ணிட்டு வந்திடுங்க.."
கட்டிடம் உள்ளே நுழைந்ததும் பல்இளிக்க வரவேற்றான்.
ஒரு கால் உடைந்த மர பெஞ்சில் உட்கார்ந்து இருந்த சபா எழுந்திருக்க, நொடிந்து ஒரு சத்தத்தை உண்டாக்கியது மர பெஞ்ச்.
"பார்த்து உட்காருங்க…"சபாரத்தினம் சொன்னது காதில் விழவில்லை மூவருக்கும்.
"மாப்பிள்ளை எங்க பாடப்போறேன்…எங்க சரோஜா ஆடுவா?"பைரவர் பேந்த பேந்த விழிதாதவாறு கேள்வி எழுப்பினார்.
"இதோ.." என்று உடைந்து தொங்கி கொண்டிருந்த ஜன்னல் பக்கம் கை காட்டினான்.
எட்டிப் பார்த்தனர்.
ஒரு பாழடைந்த கோவில்.பக்கத்தில் பெரிய ஆலமரம்.ஆலமரம் சுற்றி சிமெண்ட் மேடை.கிராம மக்கள் காலை,மாலை உட்கார்ந்து,படுத்துக் கொண்டு பேசும் இடம்,
"இதோ தெரியுதே அந்த ஆலமர மேடையில் அத்தை முதலில் அறிமுகம் ஆகி ஆடுறாங்க.அப்புறம் மாமா பாடறாரு…கூட்டத்தைப் பற்றி கவலைப்படாதீங்க ! இன்னும் கொஞ்சம் நேரத்தில் கூடிடுடும்.."
"மாப்பிள்ளை ஒரு சந்தேகம் சபா..சபான்னு சொன்னீங்க.."
"ஆமாம் மாமா…இது சபாதான்!
கிராம சபை…பேச்சு வழக்கில் கிராம சபான்னு சொல்லுவாங்க…ஒவ்வொரு கிராமத்திலும் குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற நாட்களில் கூடுவாங்க…எங்க சித்தப்பா அரசியல் கூட்டம் மாதம் ரெண்டு தடவை போடுவாரு..தொடங்கறத்துக்கு முன்னாடி அதுல அத்தை நாட்டியம் ஆடறாங்க…"சபாரத்தினம் சொல்லச் சொல்ல மூவருக்கும் தலைசுற்ற, அந்த அறையே சுழல்வது போல் தெரிந்தது.
தங்களை கட்டுப் படுத்திக் கொண்டு உடைந்த மரபெஞ்சில் உட்கார்ந்தனர்.
மர பெஞ்ச்ம் அவர்களின் மனசும் நொடிந்தது.

Author: siteadmin
Article Title: 14. சங்கீத கலாநிதியும் நாட்டிய பேரொளியும்… - ச.மணிவண்ணன்
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.