வீரவனராணி -
சுபாகர்
நாலாம் நரசிம்மவர்மனின் செல்லபுத்திரி இளவரசி வனராணி அந்தபுரத்தின் நந்தவனத்தில் இள மாலையில் வருவது தென்றல் என்று கவிஞர்கள் சொன்னதை நம்பி அதை அனுபவிப்பதாக நினைத்துக்கொண்டு நடைபயின்று கொண்டிருந்தாள்.
தோழிகள் குண்டோதரியும், மண்டோதரியும் பதட்டத்துடன் ஓடி வருவது கண்டு ஏற்கனவே சுருங்கி இருந்த வன ராணியின் மலர் முகம் மேலும் சுருங்கி விகாரமாகியது.
‘’ஏண்டி குண்டு ஏன் இவ்வளவு பதட்டம்..’’
‘’இளவரசி வர வர மந்திரி வீரசேனன்..’’
‘’கழுதை போல ஆனாரா..’’
‘’ஐயோ இளவரசி நான் பழமொழி சொல்ல வரவில்லை அவரது அக்கிரமம் வளர்ந்துகொண்டே போகிறது என்று சொல்ல வந்தேன்..’’
‘’அதற்கு முன் ஒன்றை சொல்கிறேன் புரிந்து கொள் வரலாற்றில் எல்லா இளவரசிகளும் புத்திசாலிகளாக இருப்பதில்லை ஆனால்.. நீ என்னை புத்திசாலி என்று எண்ணுகிறாய்..’’
‘’அது என் தவறுதான் ஆகையால் விளக்கமாகவே சொல்லிவிடுகிறேன் இளவரசி..’’
‘’முட்டாள்.. நான் அதி புத்திசாலி என்று சொல்ல வந்தேன்..’’
‘’நம்பிக்கைதானே வாழ்க்கை சரி விஷயத்தை கேளுங்கள். வரி கட்ட முடியாத ஒரு அப்பாவி கிழவரை பிடித்து பாதாள சிறையில் போட்டதோடு அல்லாமல் அவர் மகளிடம் தகாத முறையில் நடக்க முயற்சி செய்திருக்கிறார் மந்திரி..’’
‘’யார் அந்த கோவில் வாசலில் பழக்கடை வைத்திருக்கும் கிழவரின் மகளைதானே..’’
‘’ஆம் இளவரசி..’’
‘’மந்திரி ஒரு ரசனை கெட்ட ஜென்மம் என்பது சரியாக இருக்கிறது அவலட்சணத்திற்கு இலக்கணமான அந்தப் பெண்ணைப் போய்..’’
‘’இளவரசி காலையில் நாங்கள் இருவரும் கண்ணாடியில் முகம் பார்த்தோம் தாங்கள் பார்க்க மறந்து விட்டீர்களோ..’’ என்றாள் மண்டோதரி.
வனராணி இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தாள்
‘’ஐயோ இளவரசி விஷயம் அதுவல்ல..’’ என்றாள் குண்டோதரி.
‘’ஏண்டி இப்போது நீதானே இதை ஒரு விஷயம் என்று சொன்னாய்..’’
‘’நான் சொல்ல வந்தது, மந்திரியாரின் அக்கிரமத்தை பற்றி... நம் மன்னர் தன் பொறுப்புகளை பாதியாய் பிரித்து மந்திரியிடம் கொடுத்ததை மக்கள் விரும்பவில்லை இளவரசி.. மந்திரி தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருகிறார்..’’
‘’நானும் யோசித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என் தந்தைக்கு எப்படி இப்படி மறை கழண்டதென்று புரியவில்லை.. ஆனால் கூடிய விரைவில் இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும்..’’ என்றாள் வனராணி உறுதியான குரலில்.
‘’இன்னொரு சேதி இளவரசி..’’ என்றாள் மண்டோதரி.
‘’ஏண்டி கூகைகளா.. மந்திரி எத்தனை பெண்களிடம் அத்துமீறினார் என்பதை ஒட்டுமொத்தமாய் சொன்னாலென்ன..’’
‘’உஷ்ஷ்ஷ்...’’என்று பெருமூச்சு விட்டாள் மண்டோதரி.
‘’இளவரசி உங்களுக்கு ஒரு விஷயத்தை விளங்க வைப்பதற்கும் எங்களுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி விடுகிறது..’’
‘’அப்படியாவது இளைத்து தொலைக்கட்டும் உங்களது பருத்த உடல்கள்...இப்போது சொல் கவனமாக கேட்கிறேன்..’’
‘’நம் அரசுக்கு எதிரான புரட்சி படை தலைவர் முத்து தேவனை, மந்திரி அலுவலகத்தினுள் விஷ உருண்டை வீசி மந்திரியை கொலை செய்ய முயற்சித்ததாய் கைது செய்திருக்கிறார்கள்..’’
‘’முகத்தை பார்க்காதீர்கள் வாயிலேயே சொல்லிவிடுகிறேன்..’’
‘’சொல்லுங்கள் இளவரசி..’’
‘’இது ஒரு அதிர்ச்சியான செய்தி..’’ என்ற வனராணி யோசித்து, ‘’யார் என்னை ஒரு முறை மதம் பிடித்த யானையிடம் இருந்து காப்பாற்றிய அந்த இளைஞரையா..’’
‘’அந்த சம்பவம் நடந்து பதினைந்து வருடங்களுக்கு மேல் ஆகிறது இலவரசி..’’
‘’அதனால் என்ன..’’ என்று மண்டோதரியை முறைத்தாள் வனராணி.
‘’அதனால் ஒன்றும் இல்லை நீங்கள் இருவரும் நாற்பது அகவையை கடந்து விட்டீர்கள் என்று சொல்ல வந்தேன்..’’
‘’கதைகளும் காவியங்களும் படித்ததில்லையா நீ.... இளவரசி என்றாலே அவள் எப்போதும் இளம் பெண்தான்..’’
‘’சரி இளவரசி.. நீங்கள் இளமையை தொலைத்த பெண்தான் மன்னிக்க, இளம் பெண்தான் என்பதை ஒப்புக் கொள்கிறேன் இப்போது விஷயத்திற்கு வருவோம்..'’
‘’வா..’’
‘’நாளை கொலு மண்டபத்தில் நடக்கும் விசாரணையில் முத்து தேவன் மீது உள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டால் மன்னர் நிச்சயம் அவருக்கு மரண தண்டனை அளிப்பார் ஏழை எளிய மக்களிடம் செல்வாக்கு பெற்றவர் முத்து தேவன் அவருக்கு மரண தண்டனை உறுதியானால் நாடே கொந்தளித்து விடும் இளவரசி..’’
‘'இப்போதெல்லாம் மக்களிடம் செல்வாக்கு பெற, இருப்பவனிடமிருந்து பிடுங்கி இல்லாதவர்களுக்கு வழங்கும் ராபின் ஹூட் முறைதான் சரி போலிருக்கிறது..’’
‘’அவர் மீதுள்ள குற்றத்தை எப்படி நிரூபிக்க போகிறார்களாம்..’’ என்று கேட்டாள் வனராணி.
‘’மந்திரி முத்து தேவன் வீசிய விஷ உருண்டையை வைத்தியர் உதவியுடன் சேகரித்து பாதுகாத்து வைத்திருக்கிறார் நாளை அதைத்தான் ஆதாரமாய் சமர்ப்பிக்க போகிறார்கள்..’’
யோசித்த இளவரசி,’’ ஏண்டி நாற்பது வயதில் நாய் குணம் என்கிறார்களே.. ஏன்..?’’
‘’தெரியவில்லை இளவரசி.. ஏன் கேட்கிறீர்கள்..’’
‘’இல்லை மந்திரியை கொல்ல வேண்டுமென்றால் கத்தியை எடுத்து ஒரே சொருவாய் சொருகி கதையை முடிக்காமல் விஷ உருண்டை,களி உருண்டையெல்லாமா வீசுவது..’’
‘’இ..இளவரசி..’’
‘’தொலையட்டும். நாம் எப்படியாவது முத்து தேவனை காப்பாற்றியே ஆகவேண்டும்..’’
‘’எப்படி...’’
‘’மண்டோதரி என்னிடம் ஒரு திட்டம் இருக்கிறது..’’
‘’ஆச்சரியம் இளவரசி..’’
‘’உன் நக்கல் புரிகிறது.. நீ போய் எனக்கு கடுமையான தலைவலி என்று கூறி அரண்மனை வைத்தியரை அழைத்து வா..’’
ஓமக்குச்சி நரசிம்மனை போலிருந்த வைத்தியர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் குப்புற விழுபவர் போலவே நடந்து வந்தார்.
‘’முதலில் இவருக்கு வெளிநாடுகளுக்கு தகவல் அனுப்பி நல்ல சத்து மருந்து வாங்கி நாலு பாட்டில் செலுத்த வேண்டும் இளவரசி..’’ என்றாள் குண்டோதரி
‘’தலை என்று ஒன்று இருந்தால் வலி என்று ஒன்று வரத்தான் செய்யும் அதன் பெயர்தான் தலைவலி..’’ என்றார் வைத்தியர்
‘’அடடா அற்புதம் யாருக்கும் தெரியாத விஷயமாக அல்லவா இருக்கிறது..’’
அதை கவனிக்காத வைத்தியர்,’’ ராவணனுக்கு தலை வலி வந்த போது அவனுடைய பத்து தலைக்கும் தைலம் தடவிய வைத்திய பரம்பரையில் வந்தவன் நான்..’’
இளவரசி வனராணி அந்த பொற்கிழியை எடுத்து அவரிடம் நீட்டினாள். பிரித்து மஞ்சள் கிழங்காய் மின்னிய பொற்காசுகளை கண்ட அவர் கண்கள் கொடுக்காப்புளி போல் விரிந்தன.
‘’சொல்லுங்கள் இளவரசி யாரை விஷம் வைத்துக் கொல்ல வேண்டும்..’’
மண்டோதரி சொன்னாள்.
‘’நம் நாட்டின் நிர்வாகத்தில் ஊழலும்,லஞ்சமும் எப்படி புரையோடிப் போயிருக்கிறது என்பதற்கு இவரே சிறந்த எடுத்துக்காட்டு..’’
வனராணி வைத்தியரை தனியே அழைத்துச் சென்று ‘கிசுகிசு’ என்று பேசிவிட்டு அவர் கொடுத்த சிறு பொட்டலத்தை பெற்றுக்கொண்டு அனுப்பி வைத்தாள்.
இன்னொரு பொற்கிழியை எடுத்த இளவரசி, ‘’அடுத்து வரவழைக்க வேண்டியது நம்ம அரண்மனை சமையல்காரரை..’’ என்றாள்.
மறுநாள்
கொலு மண்டபத்தில் அத்தனை அறிஞர்களும் அமர்ந்திருந்தார்கள். பொதுமக்கள் நின்றிருந்தார்கள்.
சபை நடுவே மேஜை ஒன்றின் மேல் வைக்கப்பட்டிருந்த தாம்பாளம் பட்டுத்துணியால் மூடப்பட்டிருந்தது.
அருகில் நின்றிருந்த முத்து தேவனை சங்கிலியால் பிணைத்து இரண்டு வீரர்கள் பிடித்தபடி நின்றிருந்தார்கள்
பால்கனியில் அமர்ந்து சபையை பார்வையிட்டுக் கொண்டிருந்த இளவரசி வனராணி, முத்து தேவனை பார்த்தவாறு தோழிகளிடம் சொன்னாள்.
‘’அகவை நாற்பதானாலும் ஆள் கட்டுமஸ்தான இளைஞனை போல் அல்லவா இருக்கிறார்..’’
‘’இளவரசி நாங்கள் என்ன நடக்குமோ என்று பதறிக் கொண்டு இருக்கிறோம் நீங்கள் காதல் வசனம் பேசிக் கொண்டிருக்கிறீர்களே..’’
‘’பொறு நல்லதே நடக்கும்..’’ என்றாள் வனராணி.
சபைகூடலின் சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்தது. அரசர் அவைக்கு வர வேண்டியதுதான் பாக்கி.
உள்ளிருந்து மெய்க்காப்பாளன் ஒருவன் வந்து மேடையேறி சொன்னான்.
‘’மன்னருக்கு திடீரென்று கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டு விட்டதால் அரண்மனை வைத்தியர் வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.. அதனால் சபை நான்கு மணிநேரம் தள்ளி வைக்கப்படுகிறது..’’
‘’இ..இளவரசி..’’ என்றாள் மண்டோதரி.
‘’பொற்கிழியை கையூட்டு பெற்றுக்கொண்டு சமையல்காரன் பாலில் கலந்த பொடி வேலை செய்கிறது.. பயப்படாதே மன்னருக்கு ஒன்றும் ஆகாது வைத்தியர் மாற்று மருந்து கொடுத்தவுடன் சரியாகிவிடுவார்..’’
‘அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள்’ மாதிரி முத்து தேவனின் பார்வையும், வனராணியின் பார்வையும் ஒன்றோடொன்று கலந்தன. எதையோ புரிந்துக் கொண்டது போல்,முத்துதேவன் முகத்தில் புன்னகை தோன்றியது.
மன்னர் தெளிவு பெற்று சபைக்கு வர ஐந்து மணி நேரத்துக்கு மேலானது. பிறகே சபை துவங்கியது.
‘’மந்திரியாரே இப்போது நீங்கள் ஆதாரத்தை இந்த சபை முன் தெளிவுபடுத்தினால் முத்து தேவனுக்கு உடனே தண்டனை தருகிறேன்..’’ என்றார் மன்னர்
மந்திரி வீரசேனன் எழுந்து அந்த தாம்பாளத்தின் அருகே சென்று பட்டுத் துணியை விலக்க, தாம்பாளம் காலியாயிருந்தது. மந்திரி திடுக்கிட்டார். பதட்டத்துடன் கவிழ்த்துப் பார்த்தார்.கைப்பிடி அளவு தண்ணீர்தான் தரையில் கொட்டியது.
‘’என்ன மந்திரி எங்கே ஆதாரம்..’’ என்றார் மன்னர் கோபமாக.
‘’இ..இந்த தாம்பாளத்தில் தான் அந்த விஷ உருண்டை வைக்கப்பட்டிருந்தது ஆனால் இப்போது அதை காணோம்..மன்னா..’’
‘’அதை தொட்டாலோ, அது நம் உடல் மீது பட்டாலோ உடனே மரணம் எனும் போது அதை யார் எடுத்திருக்க முடியும்..’’ என்று இரைந்த மன்னர், ’’ஆதாரம் இல்லாததால் இந்த முத்து தேவனை தண்டிக்க இயலாது அதனால் இவனை விடுதலை செய்கிறேன்..’’ என்றார்
பால்கனியில் நின்றவாறு அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த குண்டோதரியும், மண்டோதரியும் ஆச்சர்யத்தில் வாய் பிளந்தார்கள். பிளந்த படி கேட்டார்கள்
‘’இ...இளவரசி இது எப்படி சாத்தியமானது..’’
வனராணி சிரித்தபடி சொன்னாள்.
‘’வைத்தியர் மூலம் அந்த விஷயுருண்டை மரகதவல்லி கொடியின் சாறு, கனுபிடுங்கி மரவேர், பதப்படுத்தப்பட்ட நாக விஷம் மூன்றும் கலந்து செய்யப்பட்டது என்றும், கூடவே அதன் செயல்பாடுகளில் உள்ள ஒரு தனி ரகசியத்தையும் தெரிந்து கொண்டேன். அதனால்தான் அவை கூடுவதை தாமதப்படுத்த மன்னருக்கு பேதி மருந்து கொடுக்கப்பட்டது..’’.
‘’புரியவில்லையே..’’
‘’அந்த விஷயுருண்டை, தயாரிக்கப்பட்ட நேரத்திலிருந்து இருபத்திநான்கு மணி நேரத்தை கடந்துவிட்டால் காற்றுடன் வினைபுரிந்து தன் சக்தியை இழந்து நீராகி விடும் என்பதுதான் அந்த ரகசியம். சரியான நேரத்தில் சபை கூடி இருந்தால் முத்து தேவன் சிக்கியியிருப்பார். மன்னரின் பேதியால் சபை கூடல் தாமதமானதால் அந்த உருண்டைக்கு நேரம் கிடைத்து தண்ணீராகிவிட்டது..’’
‘’ஆஹா.. என்ன ஒரு புத்திசாலித்தனம்..’’
‘’இனிதான் வேலையே... நான் முத்து தேவனுடன் சேர்ந்து படைகளை நம் பக்கம் திருப்பி மந்திரியையும், மன்னரான என் தந்தையையும் பிடித்து பாதாள சிறையில் அடைத்து நாட்டை காப்பாற்றப் போகிறேன்..’’ என்றாள் இளவரசி.
‘’ஆஹா மகள் தந்தைக்கு ஆற்றும் உதவி இவள் தந்தை என் நோற்றான் கொல்எனும் சொல்..’’என்றாள் மண்டோதரி.
‘’நாங்களும் பதினைந்து வருடங்களாக காத்துக் கொண்டிருக்கிறோம் இளவரசி...’’ என்றாள் குண்டோதரி.
‘’எதற்கு..’’
‘தாங்களுக்கும் முத்து தேவனுக்கும் பிறக்கப்போகும் குழந்தையை எடுத்து கொஞ்சத்தான்..’’
’’ச்சீ போடி..’’
‘’உங்கள் வெட்கம் சகிக்கவில்லை..இருந்தாலும் பரவாயில்லை.. எங்கே நீங்கள்... வீணாய் போன ராணியாகி விடுவீர்களோ என்று பயந்து கொண்டிருந்தோம் ஆனால் நீங்கள் வீர வனராணியென்று நிருபித்து விட்டீர்கள் .இளவரசி ....’’என்றாள் மண்டோதரி.
‘’அப்பாடா ஒரு வழியாய் தலைப்பை சொல்லியாச்சு..’’ என்றாள் குண்டோதரி.
`````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````

Author: siteadmin
Article Title: 26. வீரவனராணி - சுபாகர்
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.