• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

32. மீண்டும் மீண்டுமா? - கலை

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
442
12
43
india
மீண்டும் மீண்டுமா?

கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக சுமாராக இருந்த முகத்தை மேக்கப் மூலம் சூப்பராக மாற்றி கொண்டிருந்த
அஞ்சலியை பார்த்து நீ எப்பமா இடத்தை காலி பண்ணுவ? என கண்ணாடி கதறியது

ஒரு வழியாக மேக்கப் முடிந்து விதவிதமாக ஷெல்பி எடுப்பவளை கொலை வெறியில் பார்த்திருந்தான் அவளின் அண்ணன் ராகுல்.

"நான் செலவுக்கு காசு கேட்டா ஆத்தக்காரி தொடப்பத்துல அடிக்கிறா ..
அப்பங்காரன் செருப்பால அடிப்பேன் என சொல்றார்..ஆனால் இந்த மூஞ்சிக்கு இவ்வளவு அயிட்டமா?"என்று மேக்கப் ஐட்டங்களை கண்டு மனதில் வறுத்தெடுதான்.

தன்னுடைய மூக்கை சுருக்கி அண்ணன் பக்கம் திரும்பியவள் ,"எங்கேயோ தீஞ்ச ஸ்மெல் வருதே என்று பார்த்தேன் நீ தானா ?"என்று கேட்க

வயிறு பத்தி எரியுதுடி. சம்பாதிக்கிற பதினைந்தாயிரத்துக்கு இது ஓவர் என்றான்

அதுக்கு கூட வழி இல்லாம தானே தண்டசோறா வீட்டில் உட்கார்ந்து இருக்க என்றாள் அவனது ஈகோவை சீண்டும் வண்ணம்.

ஒரு நாள் இல்ல ஒரு நாள் உன்னை விட அதிகமாக சம்பாதிக்கல என் பேரு ராகுல் இல்ல என்க

அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை பேசாமல் பெயரை இப்பவே மாத்திக்கோ என்று அவனை வெறியேற்றினாள்.

"டேய் வேலை வெட்டி இல்லாதவனே! சப்பாத்தி தேய்க்க மாவு தீர்ந்து போச்சு. போய் கடையில் வாங்கிட்டு வா" என்றார் அவனது தாய்

ஒரே நிமிஷம் என்று கிண்ணத்தோடு வந்தவன் அஞ்சலி முகத்தில் போட்டிருந்த டச்சப் பவுடரை சுரண்டி ,"அவ சாப்பிடுற ஒத்த சப்பாத்திக்கு இந்த மாவுல தேச்சு கொடு அதுவே ஜாஸ்தி" என்று என்றவனை மேக்கப்பை கலைத்து விட்ட ஆத்திரத்தில் மொத்தினால் அஞ்சலி..

வலி தாங்காமல் அவளது முடியை பிடித்து இழுக்க அவள் கத்தியதில் தந்தை ஆஜராகி " கையை எடுடா.இல்லாட்டி நடக்கிறதே வேற" என்று எச்சரிக்க

"மவளே உனக்கு இருக்குடி ஆளில்லாத நேரத்துல வச்சி செய்றேன்" என்று கருவிக் கொண்டு மொட்டை மாடிக்கு செல்ல அவன் பின்னாலே சென்றது அந்த வீட்டின் செல்லப்பிராணி ஜிம்மி..

டேய் அந்த உருப்படாத தண்ட சோறு கூட சேர்ந்து நீயும் உருப்படாதவானாக மாறாத வா என்று வீட்டு தலைவன் அழைத்ததும் ஜிம்மி(நாய்)பம்மிக்கொண்டு பின் வாங்கியது.

"போடா போ நைட்டு கபாப் வாங்கிட்டு வந்து உன்ன காக்க வச்சு சாப்பிடல என் பேரு ராகுல் இல்ல "என்று மார்தட்டிக் கொண்டவனுக்கு இரவு சிறப்பான சம்பவம் உண்டு என்பது அப்பொழுது அறியவில்லை..

சற்று நேரத்தில் அஞ்சலி கொலீக் வந்து வீடு கலகலக்க கீழே இறங்கி வந்த ராகுல் தங்கை மேல் இருந்த கோபத்தில் அவளை ஒரு லுக்கு விட்டு ,"ஏண்டி இந்த கிழவியா உன் கொலீக்" என்று கலாய்த்ததில் அவளுக்கு காதில் புகை வந்து இவளை முறைத்து விட்டு இனிமேல் உன்னோடு ரிலேஷன்ஷிப் கட் என்று விட்டு சென்றதில் இன்னும் கடுப்பானால் அஞ்சலி.

வந்த ஆத்திரத்தில் கையில் கிடைத்ததை அவன் மீது வீச இவன் குனிய சரியாக தகப்பன் தலையிலேயே விழுந்தது.

" செம ஷாட். இவளுக்காக என்ன திட்டுன இல்ல. இந்த வலியை என்ஜாய் பண்ணு தகப்பா "என்று ராகுல் துள்ளி குதித்து கிச்சனுக்குள் ஒட

"டேய் உன்னை கொல்லாமல் விடமாட்டேன்" என்று ஆவேசமாக அஞ்சலியும் கிச்சனில் நுழைந்து சப்பாத்தி கட்டையை எடுத்து வீச அதை தடுத்து எரிந்ததில் ஷெல்ப் மேல் இருந்த மாவு டப்பாவில் பட்டு அஞ்சலி தலையில் வந்து டொம்மென்று விழுந்து மண்டை வீங்கியதோடு உடல் முழுவதும் மாவு படர்ந்தது..

அஞ்சலிக்கு வந்த ஆத்திரத்தில் நிலத்தில் காலை உதைத்தவளுக்கு கட்டைவிரல் நகம் உடைந்து ரத்தம் வந்தது தான் மிச்சம்..

அது போதாது என ராகுல் தோழன் வந்து இவளது கோலம் கண்டு வெடித்து சிரித்து "ஹாய் சுண்டெலி இன்னைக்கு ஸ்பெஷலா மாவு குளியலா?என்று அவளை அவனும் கலாய்க்க

இருந்த ஆத்திரத்தில் முடியை விரித்துவிட்டு உங்களை கொல்லாமல் விட மாட்டேன் என்று வெள்ளை மோகினியாக தாக்க வர "மச்சி எஸ்கேப்" என நண்பனின் கையை பிடித்து கொண்டு ஷம்போ ஷிவ ஷம்போ..
ஷிவஷிவ ஸம்போ என்ற பாடலை பேக்ரவுண்ட் மியூசிக்கில் ப்ளே செய்தபடி தலைதெறிக்க மின்னல் வேகத்தில் ஓட அஞ்சலி துரத்த வீதியில் இருந்தவர்கள் இவளை பார்த்து சிரிக்க, நாய்கள் இவளை பார்த்து குரைத்தோடு துரத்தவும் செய்ய அப்படியே யூ டர்ன் போட்டு அழுகையோடு அவள் வீட்டுக்கே வந்தது எல்லாம் தனி கதை.

அவமானத்திலும் கோபத்திலும் முகம் சிவந்த அஞ்சலி, "டேய் ராகுல் எங்க போனாலும் வீட்டுக்கு வந்தே ஆகணும்.. நின்ன ஒதலனு ரா" என சந்திரமுகியாகவே மாறி போனாள்.

இன்றைக்கு தான் செய்து வைத்த சம்பவத்திற்கு கண்டிப்பாக சோறு போட மாட்டார்கள் என்று பகல் முழுவதும் நண்பன் அறையிலேயே கழித்து விட்டு இரவு 11 மணி போல் சிக்கன் கபாப் வாங்கி கொண்டு பதுங்கியபடி திருட்டு சாவி கொண்டு மெல்ல வீட்டுக்குள் நுழைந்தான் ராகுல்.

வீடு நிசப்தமாக இருக்க தூங்கி கொண்டு இருந்த ஜிம்மி மோப்பம் பிடித்து மூக்கை துருத்திக் கொண்டு ராகுல் முன்பு வந்து "எனக்கு சிக்கன் கபாப் தா " என்னும் ரீதியில் நின்றது.

"அந்த மனுஷன் பேச்சை கேட்டு என்னை கழட்டி விட்டுட்டு போன உனக்கு கபாப் கேக்குதா?"என்று வெறுப்பேற்றினான் ராகுல்.

அதில் ஜிம்மியின் முகம் வாடி போக
இன்னும் ஜிம்மியை வெறுப்பேற்ற வேண்டி ,"இப்ப இந்த கபாப்பை கொண்டு போய் எதிர்விட்டு டைகருக்கு(நாய்)தர போறேன் என்றதும்

ஜிம்மிக்கு வந்ததே ஆத்திரம்..அது எப்படி நீ தந்திடுவேன்னு நானும் பாக்குறேன். என்ன விட்டுட்டு சுமாரான பெண் நாயை சைட் அடிச்ச அந்த டைகருக்கு கபாப் கேக்குதா? நெவர் நான் விடமாட்டேன் என்று வெறி கொண்ட ஜம்மி ராகுல் கையில் இருந்த கவரை பறிக்க போக

அது பறிக்க போவதை உணர்ந்து ராகுல் கவரை மேலே தூக்கி பிடிக்க டார்கெட் மிஸ் ஆனதில் ஜிம்மி கவ்வி பிடித்தது என்னவோ அவன் இடுப்புக்கு கீழேதான்..

அம்மாஆஆஆஆஆஆ என்ற ஒரு அலறல்.. போட்டிருந்த வெள்ளை ஷார்ட்ஸ் இரத்தத்தை பூசிக்கொள்ள கவரை நழுவ விட்டு கைகள் இரண்டையும் கால்களுக்கு இடுக்கில் வைத்தவன் வலி தாங்காமல் கத்தினான்.

பதறியடித்து வந்த தாய் விசாரித்த போது தான் நடந்தது தெரிந்தது. மகனுக்காக ஒரு தாயாக பரிதவித்தாலும் அடி பட்ட இடத்தை ஆராய கூட முடியாத நிலை.

அண்ணன் குரலை கேட்டு வெறி கொண்டு வந்தவள் ஜிம்மி கடித்த விடயமும் இடமும் அறிந்து அஞ்சலிக்கு அடக்க முடியாமல் வாய் விட்டே சிரித்த படி "கடவுள் இருக்கான் குமாரு "என குத்தாட்டம் போட்டவளை அடிக்க கூட முடியாத நிலை.

குளியலறை புகுந்து நாய் கடித்த இடத்தை சோப்பு போட்டு கழுவி இரத்தத்தை கட்டுபடுத்தி உடை மாற்றி கொண்டு வந்தவன் கெஞ்சியதில்

டேய் அண்ணா ஸ்கூட்டியில உட்கார முடியுமா? என்று கலாய்த்து அந்த இரவு வேளையிலும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றது அவளாகத்தான் இருந்தாள்.

அப்போது தான் மருத்துவமனை பிஸி எல்லாம் அடங்கி டேபிள் மீது தலை சாய்த்த செவிலியர் முன்பு வந்து நின்றார்கள் இருவரும்.

டாக்டரை பார்க்கணும் என்றான் வலியை அடக்கியபடி

என்ன பிராப்ளம் ?என்று கேட்க

அதெல்லாம் நான் டாக்டர்கிட்ட பேசிக்கிறேன் முதல்ல டாக்டர் வேண்டுமென்றான்

இவன் என்ன பைத்தியமா? என்ற ரேஞ்சில் ஒரு லுக்கு விட்டு செவிலியர் டாக்டருக்கு தகவல் தெரிவிக்க

டாக்டர் வந்து என்ன தொந்தரவு? என்றார்..

அவரிடம் கெஞ்சி அங்கிருந்த நர்ஸை வெளியே அனுப்பி வைத்து விட்டு நடந்த சம்பவத்தையும் நாய் கடித்த இடத்தை சொன்னதும்

அதை கேட்டதும் மருத்துவருக்கே அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது.

பரிசோதிக்கும் போது ,"நானும் உடம்புல எத்தனையோ இடத்தில் நாய் கடிச்சு பாத்திருக்கேன். ஆனா இப்படி விசேஷமா உன்னுடைய கு*சில கடிக்கும் எதிர்பார்க்கல "என்க இவனுக்கோ ஐயோடா என்ற நிலை தான்

தையல் போடணும் என்றதும் கோகுலுக்கு வலியையும் மீறி விழி பிதுங்கி போனது.

வேறு ஆப்ஷனே இல்லையா? என்று கேட்க

இல்லை என்றதும் வேறு வழி இல்லாமல் தையல் போட ஒத்துக்கொண்டான்

அதே நேரம் வெளியே இருந்த நர்ஸ்கள் அஞ்சலியிடம் என்ன ?என்று விசாரிக்க

இது தான் அண்ணனை பழிவாங்க வாய்ப்பு என கருதி தனது வீட்டு செல்ல பிராணி அவனது மர்ம தேசத்தில் கடித்த கதையை விவரித்து சொந்த செலவுல சூனியம் வச்சிகிட்டான் என சொல்ல

நோயாளிகளை பார்த்து சிரிப்பவர்கள் அல்ல என்றாலும் அந்த நிலைமையிலும் அவனது இரகசியம் தெரிய கூடாது என நடித்த விதம் சிரிப்பை வர வைத்தது..

ஒருவழியாக தையல் முடிந்தது.

"டாக்டர் தொப்புளை சுத்தி 21 ஊசி போடுவீங்களா? "என்று கேடடாள் பா(மோ)சகார தங்கை

அதெல்லாம் அப்போ..இப்போ நாலு ஊசி போட்டா போதும் என்றார் மருத்துவர்..

கோகுல் தயங்கி டாக்டர் பியூச்சர்ல இதனால வேற எந்த ஆபத்தும் வராது தான என்று கேட்க

"வேலையே இல்ல அதுக்குள்ள மேட்டர் பண்ண முடியுமானு கேட்க போயிடுச்சு நாய் ''என்று இந்த முறை மனதிற்குள்ளே சொல்லிக் கொண்டால் அஞ்சலி.

அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை என்று மருத்துவர் சொன்ன பிறகுதான் அவனுக்கு ஆசுவாசம்.

இந்த வாயில் எல்லாம் ஜொல்லு விட்டுகிட்டு வெறி புடிச்ச நாயாட்டம் என் அண்ணன் மாறிடமாட்டானே என்று பாசாங்கு காட்டிய தங்கச்சி இன்னும் வெறியேற்றினாள்.

ஊசி கரெக்டா போட்டா பிரச்சினை வராது என்றவர் பார்த்து பத்திரமாக இரு என அறிவுரையும் வலி நிவாரணி மாத்திரைகளும் வழங்கினார்.

டாக்டர் சிக்கன் எல்லாம் சாப்பிடலாமா?என்றான் அந்த ரணகளத்திலும்

அதெல்லாம் பத்தியம் தேவையில்லை என்றார்

மருத்துவத்திற்கான பணத்தை தந்தவள் ,"கோழி சிக்கன்னு நினச்சு உன் சிக்கனை கவ்வுன நாய் என்ன ஆச்சுன்னு போய் பாக்கணும் வாடா"என்று சத்தமாக அழைக்க மருத்துவரோடு நர்ஸ்களும் சேர்ந்து சிரிக்க உண்மை அவர்களுக்கு தெரிந்ததில் மானம் போனது.

மவளே இந்த காயம் ஆறட்டும் உனக்கு இருக்கு என மனதில் நினைத்தவனுக்கு இப்போது கையறு நிலைமை.

ஸ்பீட் பிரேக்கர் வரும்போதெல்லாம் பழி வாங்கிடாத தையல் பிரிஞ்சிட போது என்று காலில் விழாத குறையாக அவனை கெஞ்ச வைத்து தான் வீட்டில் கொண்டு வந்து சேர்த்தாள்

தாய் அவன் நிலைமையை கண்டு பரிதவிக்க அதெல்லாம் பியூச்சருக்கு ஒரு ஆபத்து இல்லையாம் விடு? இந்த இடத்தை டேஸ்ட் பண்ண ஜிம்மி உயிரோடு இருக்கிறானா? இல்ல மயங்கிட்டானா ?என்று ஆராய

"டேய் ஜிம்மி இப்ப கண்ண திறந்தா ராகுல் மிதிச்சே சாவடிச்சிடுவான்! அப்படியே மயங்கின மாதிரி படுத்துடு" என்று தனக்கே அறிவுரை சொல்லிக் கொண்டது

அவனுக்கோ ஜிம்மியை பார்க்க பார்க்க வெறி ஏறியது.

"ரொம்ப நடிக்காதடா..நெஞ்சில கடிச்சிருந்தா கூட போனால் போகிறதுன்னு விட்டிருப்பேன். ஆனா நீ என் குஞ்*ல கடிச்சிட்டியேடா.உனானாலே ஹாஸ்பிட்டல்ல என் இமேஜே போச்சு" என்று அவன் பேசியதில் சிரிப்பை அடக்கிக் கொண்டு ஓடிப் போய்விட்டால் அஞ்சலி..

அந்த வலியிலும் நாயை அடிக்கப் போனவனை போராடி தடுத்து மீண்டும் கடி வாங்காத போய் படு என்று தாய் அதட்டிய பிறகு தான் உனக்கு இருக்கு என்று சென்றான்

அடுத்த நாள் காலை இரண்டு கால்களையும் விரித்து வைத்து நடக்க குடும்ப கட்டுப்பாடு பண்ணவன் போலவே இருந்ததை பார்த்து தங்கைக்கு சிரிப்பு வந்தது. இரவு பணி முடித்து வந்த தந்தைக்கும் அதைக் கேட்டு சிரிப்பு தான் வந்தது.

இதில் அஞ்சலி வேலைக்கு போகாமல் போக எதுக்குடி வேலைக்கு வரலை? என்று அலைபேசி மூலம் தோழி விசாரிக்க

எங்க அண்ணனுக்கு நாய் கடிச்சிடுச்சு என்று சொன்னவள் பதிலுக்கு என்ன கேட்கப்பட்டதோ

எந்த இடத்திலன்னு கேக்குறியா? அது என்று சொல்லும் போதே அவசரமாக ஓடி வந்து அவள் வாயை பொத்தியவன், "உன் கால்ல கூட விழுகிறேண்டி உன் பிரெண்ட்ஸ் கிட்ட மானத்தை வாங்கிடாத" என்று கெஞ்ச

கால்களை தூக்கி அவன் முன்பு நீட்டிக் காட்டினாள்.

காலில் விழவில்லை என்றால் இவ ஊரை கூட்டி பேனர் கூட வச்சிடுவா. நேரம் வரும்போது கவனித்துக் கொள்கிறேன் என்று தங்கையின் காலில் விழுந்திருந்தான் ராகுல்.

"அது" என்று இல்லாத சுடிதார் காலரை தூக்கி கெத்து காட்டியவள் சொந்தங்களுக்கு அழைத்து விடயத்தை சொல்லி இருக்க பெரியம்மா முதல் அத்தை வரை அவனுக்கு அழைத்து நலம் விசாரித்ததில் நொந்து நூடுல்ஸ் ஆகிப்போனான்..

ஒரு கட்டத்தில் இந்த நாயை கூட மன்னிச்சிடுவேன் ஆனா உன்னை மன்னிக்க மாட்டேன் என்று ஒருவார காலம் பொறுமை காத்து காயம் ஆறியதும் விதவிதமாக பழி வாங்கினான்.

அவளது விலை உயர்ந்த நெயில் பாலிஷ் எடுத்து ஜிம்மி நகங்களுக்கு பூசி விட்டான்..

துப்பட்டாவை போடும் போது ஏதோ ஒரு கெட்ட ஸ்மெல் வந்து அஞ்சலி முகத்தை சுளிக்க

அது ஒன்னும் இல்ல அதுல தான் ஜிமிக்கி டிக்கி கழுவினேன் என்று ஓடினான்..

அவள் யூஸ் செய்யும் பர்ஃயூம் எடுத்து ஜிமிக்கிக்கு போட்டு விட்டு, "இப்ப நீ டைகர் பக்கம் போ அடுத்த மாசமே மாசமாயிடுவ" என்று அனுப்பி வைக்க

அதுவோ முன்னிரண்டு கால்களையும் தூக்கி தேங்க்ஸ் மச்சி நீயும் பக்கத்து வீட்டு கவிதாவோடு மிங்கிள் ஆகிடனும் என ஓடியது.

இப்படி தங்கை மேல் இருந்த கோபத்தில் ஜிம்மியை விதவிதமாக அலங்காரம் செய்ய அதில் டைகர் இம்ப்ரஸ் ஆகி ஜிம்மியை முத்தமிட்டுக் கொஞ்சி மேட்டரையும் முடித்து விட்டு தான் அனுப்ப வீட்டிற்கு வந்து களைப்பாக படுத்துக் கொள்ளும் ஜிம்மி,"தேங்க்ஸ் ராகுல்..மேட்டிங் ஃபீல் செமையா இருக்குடா ..அதை நினைத்தாலே மூட் வருது "என்று ஜிம்மி மனதில் சொல்லிக் கொண்டது என்றால் பாருங்களேன் அது எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும் என்று.

இப்படி மேக்கப் ஐட்டங்களை அவள் எங்கு ஒழித்து வைத்தாலும் அதை தேடி பிடித்து ஜிமிக்கிக்கு போட்டு விட்டு அஞ்சலியின் மொத்த வயிற்றெரிச்சலையும் சாபத்தையும் பெற்றுக் கொண்டான் ராகுல். .

அதற்கு அவள் பழி வாங்கவில்லை என்றால் அவன் தங்கை அல்லவே..

கவிதாவை உஷார் செய்து சேட் செய்து கொண்டிருப்பதை கண்டுபிடித்தவள் அவனுக்கு பலான இடத்தில் நாய் கடித்த விடயத்தை போட்டு உடைக்க

இதனால் எதிர்காலத்தில் பிரச்சனை வருமோ என பயந்து கவிதா பிரேக் அப் சொல்ல இதற்கெல்லாம் காரணம் தங்கை என்று அறிந்தவன் கொலை வெறியோடு அவளை அடிக்க துரத்த இவனிடமிருந்து தப்பிக்க வீதியில் ஓடிய போது டர்னிங்கில் ஓடிவரும் நாயை கண்டு அஞ்சலி ரூட்டை மாற்ற துரத்தி கொண்டு வந்த ராகுலின் மர்மதேசத்தை இந்த நாய் பதம் பார்த்திருந்தது..

மீண்டும் மீண்டுமா ?என்பது போல் பட்ட இடத்திலேயே மீண்டும் ஒரு நாய்கடி. இதைத் தாங்குமா அவன் நெஞ்சம்?

"போச்சே போச்சே ஊருக்கே தெரிஞ்சு போச்சே !"என விழி பிதுங்கி நின்றவனை மூச்சுவாங்கியபடி திரும்பி வந்து பார்த்தவளால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

முற்றும்.


மறக்காமல் விமர்சனங்கள் பதிவிடுங்கள்
கலை வர்ஷினி
 

Author: SudhaSri
Article Title: 32. மீண்டும் மீண்டுமா? - கலை
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.