மலச்சிக்கல்
பல நாட்களாக என்னை பாடாய்ப்படுத்திய என் மலச்சிக்கலை ஆஸ்பத்திரிக்கு போவதற்கு பதில் வீட்டிலேயே நாமே எப்படி தீர்த்துக்கொள்ளலாம் என You Tube க்குள் நுழைந்தேன். 'மலச்சிக்கல்' என்று டைப் செய்தேன். அதில் நிறைய வந்தன. குறிப்பிட்ட ஒன்றை தேர்ந்தெடுத்து உள்ளே நுழைந்தேன்
ஒரு மருத்துவர், மலச்சிக்கல் பற்றியும் அதற்கு தீர்வுகள் பற்றியும் நன்றாக விளக்கினார். சாப்பிட வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை என்றெல்லாம் விரிவாக கூறியவர் இறுதியாக, ‘தினசரி பத்து நிமிடம் தொடர்ந்து இந்தியன் டாய்லெட்டில் அமர்ந்திருங்கள். போய் உட்கார்ந்தவுடன் மலம் வந்தவுடன் அதை கழித்துவிட்டு சுத்தம் செய்து கொண்டு உடனே வெளியே வந்து விடாமல் பத்து நிமிடம் தொடர்ந்து உட்காரும்போது மலக்குடலில் ஆங்காங்கே தேங்கியுள்ள உள்ள மலம் முழுவதும் மெல்ல மெல்ல நகர்ந்து வந்து வெளியேறிவிடும் என கூறியவர் மேலும் மலக்குடல் எவ்வாறு இயங்குகிறது, மலம் எவ்வாறு வெளியேறுகிறது என்பதையெல்லாம் படம் போட்டு விளக்கினார்.
சரி, நாளை முதல் ஆரம்பித்துவிடலாம் என தீர்மானித்தேன். நாளை திங்கட்கிழமை ஆதலால், நாளை ஆரம்பித்தால் அடுத்த ஞாயிறு வரை ஒரு கணக்கு வைத்துக் கொள்ள வசதியாக இருக்கும் என முடிவு செய்தேன்.
ஆனால் அதில் ஒரு சிக்கல். எங்கள் வீடு சிங்கிள் பெட் ரூம் பிளாட். காலை வேளை பாத்ரூமும், டாய்லெட்டும் எப்போதுமே பிசியாக இருக்கும். நானும், மனைவியும் வேலைக்கு கிளம்ப வேண்டும். அத்துடன் எங்கள் இரண்டு பசங்களும் ஸ்கூலுக்கு கிளம்ப வேண்டும். எப்படி சமாளிக்கப் போகிறேனோ தெரியவில்லை!
மறுநாள் காலை டாய்லெட்டில் போய் உட்கார்ந்த இரண்டு நிமிடங்களில், என் மனைவி, 'என்னங்க, கேஸ் காலியாயிருச்சு, சீக்கிரம் வெளியே வாங்க' என கத்தவும், ‘முதல் நாளே இந்த கூத்தா! சரி, இன்னும் ஒரு வாரம் இருக்கு, பார்த்துக்கொள்ளலாம் ' என்று எனக்குள் கூறிக்கொண்டு வெளியே வந்தேன்.
அடுத்த நாள் செவ்வாய் காலை டாய்லெட்டில் போய் உட்காரவும், அடுத்த நிமிடம் என் சின்ன பையன்,
'அப்பா, அர்ஜென்டா வருது' என கத்த, தலையில் அடித்துக் கொண்டு வந்தேன்.
புதன் அன்று மனைவியிடம் எதாவது வேலை இருந்தா சொல்லிடு என்று கேட்டுவிட்டு, மகன்களிடமும், என்னடா உங்களுக்கு டாய்லெட் போகணுமா என்றெல்லாம் கேட்டுவிட்டு உள்ளே போனேன். உள்ளே போய் மூன்று நிமிடம் ஆயிருக்கும், எனது மொபைல் கூப்பிடவே, என் மகன் மொபைலை எடுத்து பார்த்துவிட்டு, 'அப்பா, ஊரிலிருந்து தாத்தா கூப்பிடறாரு' என்றவுடன், பின்பாட்டாக என் மனைவி கிச்சனிலிருந்து
"என்னன்னு சீக்கிரம் கேளுங்க. உங்கம்மா பாத்ரூம்ல விழுந்துட்டாங்களோ என்னவோ" என்றாள் வெறுப்புடன்.
நான் பதிலுக்கு வெளியே வந்து, "ஏண்டி போன் வந்தா கெட்ட சேதிதானா, நல்லதையே நினைக்க மாட்டியா?' என்று திட்டிக்கொண்டே வந்து மொபைலில் அப்பாவுடன் பேசினேன்.
"இன்னிக்கு அம்மாவுக்கு பிறந்த நாள் டா, நான் வெளில வந்திருக்கேன். நான் வீட்டுக்கு போனவுடனே அவகிட்ட தர்றேன், பேசு. சந்தோசப்படுவா" என்றார். அதன் பின் அப்பா, வீட்டுக்கு போய் கால் பண்ணி அம்மாவிடம் தந்தவுடன் அம்மாவிடம் எல்லோரும் பேசி, எல்லோரும் வீட்டை விட்டு கிளம்ப நேரம் சரியாக இருந்தது.
மறுநாள் காலை போய் அமரவும், அடுத்த நிமிடம் என் மனைவி, "என்னங்க சீக்கிரம் வாங்க, அசோசியேஷன் செகரட்டரி வந்திருக்காரு' என கூப்பிடவும் அவசர அவசரமாக வெளியே வந்தேன்.
"சார் இன்னிக்கு தண்ணீர் டேங்க் சுத்தம் பண்ணப் போறோம். தண்ணியெல்லாம் பிடிச்சு வைங்க” என்று சொல்லிவிட்டு பக்கத்து பிளாட்டுக்கு போனார். அவர் போனவுடன் மனைவியிடம், “ஏன்டி இதை நீயே கேட்டு வைக்கலாமே என்னை கூப்பிடுவானேன்” என திட்டினேன். அந்த நாள் அப்படி கழிந்தது.
வெள்ளிக்கிழமை விடிந்ததில் இருந்து என் பெரிய பையனுக்கு வயிற்றுப் போக்காக இருந்ததால் அவன் அடிக்கடி டாய்லெட் போகவேண்டி இருந்ததால் அன்றைக்கு ப்ரோக்ராம் கேன்சல்.
சனிக்கிழமையன்று இன்றாவது பத்து நிமிடம் உட்கார்ந்துவிட்டு வரலாம் என எண்ணி உள்ளே சென்று அமர்ந்தேன். அடுத்த இரண்டாவது நிமிடம் என் மனைவி, 'என்னங்க சீக்கிரம் வாங்க. இந்த குக்கர் விசில் தொடர்ந்து கத்திகிட்டே இருக்கு, கீழ இறங்க மாட்டேங்குது. எனக்கு குக்கர் வெடிச்சிருமோனு பயமா இருக்கு" என்று அலறவும் நான் அவசர, அவசரமாக வெளியில் வந்து அடுப்படிக்கு சென்று ஒரு கரண்டி எடுத்து விசிலைத் தட்டவும் விசில் கீழே இறங்கியது.
"இதைக்கூட பண்ணாத தெரியாதா" என மனைவியை திட்டிவிட்டு வேலைக்கு கிளம்பலானேன்.
பார்த்தேன்! நமக்கு பத்து நிமிடம் எல்லாம் தொடர்ந்து உட்கார வாய்ப்பில்லை. இன்று மாலையே நல்ல அலோபதி டாக்டரை போய்ப் பார்த்து விடுவது என தீர்மானித்துவிட்டேன்.

Author: VedhaVishal
Article Title: 36. மலச்சிக்கல் - டீ. என். பாலகிருஷ்ணன்
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.