தெய்வ குற்றம்....
சூரிய தேவன் தன் இளமஞ்சள் கதிர்களால் தேவலோகத்தையே பொன்மயமாய் அடித்துக் கொண்டிருந்தான்.தேவதூதர்கள் இசைத்த இன்னிசையும், தேவ மங்கையர்கள் சலங்கை ஒலியும், தேவலோகத்தை கிறங்கடித்துக் கொண்டிருந்தது.
இவை யாவையும் ரசித்துக்கொண்டு, நாரதர் தேவலோகத்திற்குள் நுழைந்தார். "நாராயண! நாராயண! எம்பெருமானை சென்று தரிசிக்க வேண்டும்"என்று எண்ணிக்கொண்டே நுழைந்தவரை வாயிலில் காத்திருந்த தேவதூதர்கள் தடுத்தார்கள்.
"நாரதரே! உம்மை கைது செய்து அழைத்து வர உத்தரவு "
"என்ன இது புது குழப்பம்... நான் தேவலோகம் என்று எண்ணி பூலோகம் வந்து விட்டேனா?"
"இல்லை இல்லை... நீர் சரியாகத்தான் வந்திருக்கிறீர்! வாரும் நீராக வரவில்லையென்றால் உம்மை விலங்கிட்டு அழைத்து செல்வோம் நீதிமன்றத்திற்கு"
" தேவலோகத்தில் நீதிமன்றமெல்லாம் எங்கே முளைத்தது? இருந்தாலும் இந்த பூலோகவாசிகளைப் பார்த்து தேவர்களும் கெட்டுப் போய் விட்டார்களா? நல்லதுக்கு காலமில்லை.."
"புலம்பாமல் வாரும்!" என்று அதட்டிய தேவதூதர்களை பின்தொடர்ந்தார் நாரதர் தன் விதியை நொந்தபடி. அவர்கள் நீதிமன்றம் இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.அங்கே ஒரு புதியவன் நீதிபதி இடத்தில் அமர்ந்திருந்தான்.
"நாராயண! நாராயண! இங்கே அமர்ந்திருப்பது யார்?"
"நாரதரே! வாரும் நான்தான் நீதிதேவன்... உம் மேலுள்ள குற்றச்சாட்டை விசாரிக்கப் போகிறவன்"
"என்மேல் குற்றச்சாட்டா? ஆச்சரியமாக உள்ளதே... நான் ஒரு திரிலோக சஞ்சாரி... முற்றும் துறந்த முனிவன்... என்மேல் என்ன வழக்கு இருக்கமுடியும்?"
"நாரதா! உம்மேல் போடப்பட்டிருப்பது பொதுநல வழக்கு"
"நான் செய்த குற்றம் என்ன நீதி தேவா?"
"வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு... மேலும் தேவலோகத்தில் கலவரத்தை தூண்டியது"
"பொறுங்கள்!பொறுங்கள்! வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தேனா?இது என்ன கொடுமை? எனக்கு வருமானமே கிடையாதே"
"அதைத்தான் சொல்கிறோம்!வருமானமே இல்லாத நீர் கழுத்திலே அணிந்திருக்கிறீரே.. அது என்ன மாலை?"
"உத்திராட்சம் மற்றும் மாணிக்கமாலை. உத்திராட்சம் சரி... அந்த மாணிக்கமாலை... பல கோடி மதிப்புள்ளது. அது எப்படி உமக்கு கிடைத்தது?"
"இது என்ன கொடுமை நீதி தேவா? இது என் தாய் சரஸ்வதி என் கல்வி கேள்வி ஞானத்திற்கு பரிசாக எனக்கு வழங்கியது."
"அதில் உள்ள வைரக்கல் பதக்கம்... அதன் மதிப்பு தெரியுமா? அதுவும் உனக்கு உன் தாய் கொடுத்ததோ?"
"அது குபேரன் எனக்கு அன்பு பரிசாக கொடுத்தது."
"உமக்கு எப்படி கொடுத்தான் குபேரன் இவ்வளவு விலை உயர்ந்த பரிசை?"
"அதாவது அவன் ஒரு சமயம் ஒரு சிக்கலில் இருந்தான், நான் அவனுக்கு அதிலிருந்து வெளியே வர உதவி செய்தேன். அதற்கு பரிசாக இக்கல்லை எனக்கு கொடுத்தான், நான் பெற்றுக்கொண்டேன்."
"அதாவது லஞ்சமாக பெற்றீர்... அப்படித்தானே?
பரிசாக வந்தாலும், அன்பளிப்பாக வந்தாலும், அது லஞ்சமே! மேலும் உமக்கு தேவலோகத்தின் தென் பக்கத்தில் சகல வசதிகளும் உள்ள ஒரு பண்ணை வீடு உள்ளதாமே"
"அது வந்து... மயன் ஒருமுறை என்னிடம் பேசிக்கொண்டிருந்த போது, இப்படி எல்லா லோகங்களையும் சுற்றி வருகிறீர்களே! களைத்துப் போனால் ஓய்வெடுக்க உங்களுக்கு ஒரு மாளிகை வேண்டாமா? என்றான். எனக்கும் வயதாகிக் கொண்டே வருகிறது அல்லவா,அதனால் எனக்கென்று ஒரு இடம் இருந்தால் நல்லது என்று நினைத்தேன். அவன் உதவியை ஏற்றுக் கொண்டேன் ..அவன் எனக்கு ஒரு அழகான மாளிகை கட்டித் தந்தான்."
"அதாவது மயனுக்கு நீர் செய்த ஏதோ ஒரு உதவிக்கு இது லஞ்சமாக பெறப்பட்டது... இதை உம்மால் மறுக்க முடியாது நாரதரே!".
"அப்படி நீங்கள் நினைத்தால் அது உங்கள் இஷ்டம்"
"இதற்கும் மேலே உன் மீது உள்ள முக்கிய குற்றச்சாட்டு நீ தேவலோகத்தில் கலவரத்தை உண்டு பண்ணினாய்"
"அது என் சுபாவம்.நான் ஏதாவது ஒன்று கூற அதுவே கலவரம் ஆகிவிடுகிறது. அப்படி என்ன கலவரத்தை உண்டு பண்ணினேன்?"
"ஒன்றா இரண்டா... நீர் கலவரம் பண்ணாத இடமேது? எங்கிருந்தோ ஒரு மாங்கனியை கொண்டு வந்து முருகனுக்கும் விநாயகனுக்கும் சண்டை மூட்டி விட்டாய் .....அது வரை ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள் அக்கனியால் பிரிந்து போனார்கள். பார்வதி தேவிக்கும், ஈசனுக்குமே சண்டையை மூட்டி விட்டாய்..தேவி கோபம் கொண்டு கைலாயம் விட்டு நீங்கி தவம் புரிய போய்விட்டார்கள். நீ அடிக்கடி பூலோகம் சென்று வந்து அங்குள்ள ஸ்திரிகளைப் பற்றி சொல்லுவதைக் கேட்டு மூன்று தேவியருமே தங்கள் கணவன்மார்களை எதிர்க்க கிளம்பி விட்டார்கள்."
"இது நன்றாக இருக்கிறது நீதி தேவா! நான் அவ்வப்போது பூலோகம் சென்று வருவதால் அங்கே நடக்கும் நடப்பை கூறுவேன் அது எப்படி தவறாகும்?"
"தேவலோகத்தின் புனித தன்மை உன்னால் கெடுகிறது. பூலோகவாசிகளை பார்த்து நம் தேவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கி விட்டார்கள் "
"பொருளாசை கொண்டவர்களாக மாறிவிட்டனர். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் வழியில் போவோரை நிறுத்தி 'சுங்கவரி' என்று சொல்லி பொருள் கேட்கிறார்கள். வாகனங்களை நிறுத்த 'நிறுத்தவரி' கேட்கிறார்கள். தேவர்களின் வாகனங்கள் வேறு சில பல கோரிக்கைகளை வைத்து அவ்வபோது வேலை நிறுத்தம் செய்கின்றன. அதனால் தேவர்கள் திண்டாடி போகின்றனர். காமதேனுதான் கொடுக்கும் பாலமுதத்திற்கு பணம் கேட்கிறது, கற்பக விருட்சம் கூட நான் ஏன் இலவசமாக அருள் தர வேண்டும் என கேட்கிறது . இந்திரனின் ஐராவதம் தினமும் ஆயிரம் பொன் வேண்டும் என்கிறது.முருகனின் மயில் வாகனம் கூட ஒரு படி மேலே போய் தான் கொஞ்சி விளையாட ஒரு துணையும் நந்தவனமும் கேட்கிறது. இவையெல்லாம் நிறைவேற்றப்பட வில்லையென்றால் வேலை நிறுத்தம் என்று அறிவித்திருக்கின்றன."
"பேஷ்!பேஷ்! இப்படியா செய்கின்றன? சிரித்தார் நாரதர்"
"சிரிக்காதீர்! நான் சொல்வதைக் கேளும்!" என்று கோபத்தோடு மேலும் கூறத் தொடங்கினார்,
"ஈசனின் காவலர் நந்திதேவர் கூட மாறிவிட்டார். ஷிப்ட் முறையில் வேலை பார்க்கிறேன் என்கிறார். சிவபெருமானுக்கு சேவைக்கு இன்னொருவரையும் நியமியுங்கள் என்கிறார். முனிவர்கள் எல்லோரும் வேள்விகளுக்கு கட்டணம் கேட்கின்றனர், மொத்தத்தில் தேவலோகத்தில் பொன்னாசை பெண்ணாசை மண்ணாசை எல்லாம் குடியேறிவிட்டது இத்தனைக்கும் காரணம் நீர்தான்! அடிக்கடி பூலோகம் சென்று வந்து அங்கு நடப்பதை விவரமாக கூறுகிறீர்.அதன் விளைவு பூலோக மக்களைப்போல தேவர்களும் நடக்க முற்படுகின்றனர்.
,அதனால் இதற்கு மேல் உம்மை வெளியே சுதந்திரமாக நடமாடவிட்டால் தேவலோகமே இன்னும் மோசமாய் போய்விடும் எனவே நீர் சற்று காலம் காராகிரகத்தில் இரும்..."
"அய்யய்யோ... நீதிதேவா இது என்ன கொடுமை நான் ஏதோ யதார்த்தமாக பூலோகவாசிகளைப் பற்றி சொல்லப்போக அது இவ்வளவு மோசமாக தேவலோகத்தில் பிரதிபலித்து விட்டதா? இந்த பூலோவாசிகள் தாங்கள் கெடுவதோடு இல்லாமல் தேவர்களையும் கெடுத்து விடுவார்கள் போலிருக்கிறது"
"என்ன யோசிக்கிறாய் நாரதா".
" ஒன்றுமில்லை நீதிதேவா! நீர் கூறிய விஷயங்கள் மனதை நோகச் செய்கின்றன. அதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்,"
'முதலில் இந்த வழக்கு விசாரணையிலிருந்து நான் தப்பிக்க வேண்டும். இங்கிருந்து எப்படியாவது வெளியேற வேண்டும். தப்பித்தால் நேராக ஈசனிடம் போய் சரணடைந்து இனி பூலோகம் செல்லவே மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்து விடலாம்.'
"நாரதா! நீர் என்ன காரணம் கூறினாலும் இவ்விடம் இருந்து நீங்க முடியாது... தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது.."
"அய்யய்யோ.,. நெஞ்சு வலிக்கிறதே"வென நெஞ்சை பிடித்துக்கொண்டு நாரதர் சாய...நீதிதேவன் சற்றே பயந்து போனான்.
"யாரங்கே நாரதரை மலர் படுக்கையில் படுக்க வையுங்கள். உடனே போய் மவைத்தியரை அழைத்து வாருங்கள்!"
நீதிதேவன் கலங்கினான். நாரதருக்கு ஏதாவது கெடுதல் நேர்ந்தால்,அவர் தந்தை பிரம்மதேவர் வெகுண்டெழுந்து நம்மை உண்டு இல்லை என்று பண்ணி விடுவார். ஒரு முடிவுக்கு வந்தவனாக,
"தற்சமயம் நீதிமன்றம் கலைகிறது... நாரதர் குணமாகட்டும் வழக்கை பிறகு பார்க்கலாம். நீதிமன்றம் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுகிறது "என்றான் நீதிதேவன்..
நாரதர் மனதிற்குள் சிரித்துக் கொண்டார். 'பூலோகத்தைப் பற்றி நீ முழுவதும் அறியவில்லை நீதி தேவா.... அங்கு வழக்கு போடப்படும் எந்த புள்ளியும் சிறைக்கு போனதாகவும் தண்டனை அனுபவித்ததாகவும் சரித்திரமே இல்லை. அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். எனவே இந்த விசாரணையிலிருந்து எப்படி தப்பிப்பது என்று நான் நன்றாகவே அறிவேன்' என்று நினைத்த நாரதர்,
"ஐய்யய்யோ..நெஞ்சு வலி தாங்க முடியவில்லையே! நான் இப்பொழுதே இறந்துவிடுவேன் போல இருக்கிறதே..." என்று அலற நீதிதேவன் தலைதெறிக்க ஓடினான்....

Author: VedhaVishal
Article Title: 38 - தெய்வ குற்றம்.... - தி.வள்ளி
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.