• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

Intro

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
427
7
43
india
ஆசிரியர் உரை:

இந்தக் கதையில் வரும் சம்பவங்களை எல்லாம் எல்லாருமே ஏதோ ஒரு உறவிலோ நட்பிலோ அனுபவித்தோ இல்லை கேள்விப்பட்டோ இருக்கலாம், நானும் அப்படித்தான். சுற்றி நடக்கும் சம்பவங்கள் தான் முக்கியக் காரணம்.உங்களுக்கு என்னம்மா? பையனை பெற்ற மகராசி என்று சொன்ன காலம் போய், இப்போது உனக்கென்னம்மா மகாலட்சுமியை பெற்ற மகராசி என்று சொல்லும் காலம் வந்து விட்டது. பெண் குழந்தை வேண்டாம் என்று 1980 / 1990 ல் கூறி அழித்துக் கொண்டு இருந்த பெண்களும் ஆண்களும் தற்போது அதற்கான தண்டனையை அனுபவிக்கிறார்கள். இன்றைக்கு ஆண்களுக்கு திருமணம் செய்து கொள்ள பெண் கிடைப்பது குதிரைக்கொம்பாக உள்ளது. அப்படியே கிடைத்தாலும் பெண் வீட்டார் போடும் ஏகப்பட்ட கண்டிசன்கள்.



ஜாதகம், குடும்பம், கோத்திரம், அந்தஸ்து அது இது என்று ஆயிரம் பார்த்து பேசி முடிக்கப்படும் திருமணங்கள், திடீரென பெண்களால் தடுத்து நிறுத்தப்படுகின்றன.

இன்னொரு புறத்தில் 30 வயதை கடந்துவிட்ட இளைஞர்களில் பலர் தங்கள் நண்பர்களுக்குள், "என்னடா நேத்து போன இடம் என்ன ஆச்சு? என் கதையும் உன் கதை மாதிரிதான். அந்தப் பொண்ணும் என்னை வேண்டாம்னு சொல்லிட்டா! நமக்கெல்லாம் என்னடா குறை. ஏன் நல்ல பொண்ணு அமையவே மாட்டேங்கிறது.." என்று தங்களுக்குள் போன் போட்டு புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.



ஒரு காலத்தில் வரதட்சணை இவ்வளவு கொடுத்தால் தான் திருமணத்திற்கு சம்மதிப்போம் என்று இருந்தவர்கள் தற்போது பெண் கொடுத்தால் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டார்கள் இருந்தும், பெண் கிடைத்தபாடில்லை. ஒருகாலத்தில் திருமணத்தின் போது பெண்களைக் காட்சிப்பொருளாகக் கண்டவர்களுக்கு, தற்போது தர்ம அடி விழுந்து கொண்டு இருக்கிறது. அன்று பெண்கள் / ஆண்கள் செய்த பாவங்களுக்கு அலட்சியங்களுக்கு இன்றைய தலைமுறை ஆண்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.



இதற்கெல்லாம் என்ன காரணம்?

பெண்கள் கைநிறைய சம்பாதிக்கிறார்கள். அதனால் நாம் யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. அனுசரிக்கவும் வேண்டியதில்லை என்று நினைக்கிறார்கள். அதை பெண்களின் தன்னம்பிக்கை என்று சொல்வதா அல்லது அடாவடித்தனம் என்று சொல்வதா என்று தெரியவில்லை. பெற்றோரும் மகளின் வருமானத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பதால் மகளின் விருப்பத்திற்கு மாறாக அவர்களால் கருத்துசொல்ல முடியவில்லை.



இளைஞர்கள், `அம்மாவைப் போல் கவனித்துக்கொள்ளும் பெண் தேவை’ என்கிறார்கள். அவர்கள் என்ன தப்பு செய்தாலும் அதை எல்லாம் அம்மா தாங்கிக்கொண்டு அனுசரித்துப்போவாள். அதுபோல் தன் மனைவியும் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அந்த நிலை இப்போது அப்படியேமாறி பெண்களும், `எங்களை அப்பா நன்றாக கவனித்துக்கொள்கிறார். அதனால் அப்பா போன்று பாதுகாக்கும் மாப்பிள்ளை வேண்டும்` என்கிறார்கள். இங்குதான் நெருக்கடி உருவாகிறது. அம்மா மாதிரி பெண்ணும் கிடைக்கமாட்டாள். அப்பா மாதிரி மாப்பிள்ளையும் கிடைக்கமாட்டார்.

இது போன்ற விஷயங்கள் சரியா என்ற கேள்வி ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் இப்படி ஒரு சமூக மாற்றம் தேவை தான்.. ஒரு காலத்தில் பெண்களைப் பாடாய் படுத்திக் கொண்டிருந்தவர்களுக்கு இது ஒரு நல்ல பாடமாக இருக்கும்.. இது சமூகத்தை ஒரு வித பேலன்ஸ் செய்து விடும் என்பது போன்ற கருத்துக்களைப் பலரும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இங்கே தான் எனது பார்வை வேறுபடுகிறது.. ஒருவர் செய்தது தவறு என்று தீர்ப்பளிக்கும் நாம் அதே தவறை அவர்களுக்குத் திருப்பிச் செய்வதன் மூலம் தப்பை சரியாக்க முடியுமா? காலம் மாற மாற யாரோ ஒருவர் தப்பைச் செய்வோம் என்று சுழற்சி முறையில் மாறிவிடாதா?? ஆணோ, பெண்ணோ யாரோ ஒருவர் தப்பைச் செய்து கொண்டு தான் இருக்க வேண்டுமா? இது இயற்கைக்குப் புறம்பானதாக மாறிவிடாதா? இது மனித இனத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்குமா இல்லை வீழ்ச்சிக்கு வித்திடுமா?? தாய்மை, பொறுமை, சகிப்புத்தன்மை என்று இயற்கை பெண்களுக்கு மட்டுமே கொடுத்த சீதனங்களை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு வேறொரு முகமூடிக்குள் புகுந்து கொள்வது தான் புரட்சியா? விடையறியா கேள்விகள்…



மற்ற நாடுகளில் எப்படியோ எனக்குத் தெரியவில்லை.. ஆனால் நமது திருநாட்டில் குறிப்பாகக் குடும்ப அரசியலில் அன்றும் இன்றும் ஆணாதிக்கம் என்ற பெயரில் பெரும்பாலும் பெண்களைக் கொடுமைப்படுத்துவதும் பெண்கள் தான் என்பதை நாம் மறுக்க முடியாது. மாமியார் என்ற பதவி தான் அன்று மகனின் மூலம் மருமகளை எரித்தது.. இன்று மகளின் மூலம் மருமகனை ஆட்டி வைக்கிறது.. உங்கள் தொடர் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.



அன்புடன்

அனன்யா