அத்தியாயம் -12
வெற்றி மேல் வெற்றியாகக் குவித்துக் கொண்டிருந்த பிலிப், அப்போது பைசாண்டியா என்ற நாட்டின் மீது போர் தொடுப்பதற்காக முக்கிய தளபதிகள் மற்றும் வீரர்களுடன் அங்குச் சென்றிருந்தார். மேடி என்பது தற்போதைய பல்கேரியா நாடு.
பொதுவாக மன்னர் பிலிப்பிடம் ஒரு வழக்கம் இருந்தது. அதாவது தான் வென்றெடுத்த நாடுகளை ஆட்சி செய்வதற்கு தனது நம்பிக்கைக்குரிய ஒருவரைப் பிரதிநிதியாக நியமிப்பார். அவருக்குத் துணையாக சிறிதளவு படையும் வழங்கப்படும். அவ்வப்போது அந்த மாதிரியான பிரதிநிதிகளை அழைத்துப் பேசி பிரச்சினைகளைப் பற்றி விவாதித்து அறிவுரைகளைக் கூறுவார்.
இப்படித்தான் அருகிலுள்ள மேடி என்ற நாட்டையும் தன் ஆளுகைக்குட்படுத்திய பின்னர் ஒருவரை பிரதிநிதியாக நியமித்து ஆட்சி செய்ய அனுமதித்திருந்தார்.
இந்நிலையில் மேடியை ஆட்சி செய்தவனுக்கு ஒரு தப்பான யோசனை உதித்தது. அவனுக்கு நெருங்கியவர்கள் சிலர் இதனைத் தூபமிட்டு வளர்த்தனர்.
அதாவது மாசிடோனியாவில் தற்போது மன்னர் பிலிப் இல்லை. 16 வயதே நிரம்பிய சிறுவன் அலெக்சாண்டர்தான் ஆட்சியில் இருக்கிறான். ‘போயும் போயும் ஒரு சிறுவனிடம் கைகட்டி நிற்க வேண்டுமா?’ என்ற நினைப்பு எழுந்தது.
“நாம் ஏன் இன்னும் அடிமையாகவே இருக்க வேண்டும்? சுதந்திரக் காற்றை ஏன் சுவாசிக்கக் கூடாது?” ஆக்ரோஷமான அவனது பேச்சில் மேடி நாட்டவர்கள் வீழ்ந்தனர்.
பொங்கி எழுந்ததில் கலவரம் ஏற்பட்டது. மேடி நாட்டின் மன்னராகத் தன்னைத் தானே அறிவித்துக் கொண்டான் பிலிப்பின் பிரதிநிதி.
இந்த விஷயம் மாசிடோனிய அரண்மனையை எட்டியது. அலெக்சாண்டரின் செவிகளைத் துளைத்தது. அவனது கண்களில் கோபம் கொப்பளித்தது. குறிப்பாக, தன்னைச் சிறுவன் என்று ஏளனமாக நினைத்துவிட்ட மேடி நாட்டின் பிரதிநிதியின் மீது கோபம் கொந்தளித்தது.
அவசரம் அவசரமாக அமைச்சர்களையும் அங்கிருந்த படைத் தளபதிகள் சிலரையும் அழைத்தான். “மேடி நாட்டில் கலவரத்தைத் தூண்டி விட்டு ஆட்சியைக் கைப்பற்றிய செயலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கோபமாகக் கேட்டான்.
“மிகத் தவறான செயல்தான். ஆனாலும் மன்னர் இல்லாத நேரத்தில் இந்தத் தவறு நடந்துள்ளது. நமது முன்னணித் தளபதிகள் அனைவரும் மன்னருடன் பைசாண்டியாவின் போர் முனையில் உள்ளனர். எனவே அவசரப்பட வேண்டாம். பொறுமை காப்போம். மன்னர் வந்த பின்னர் இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு காண்போம்” என்று யோசனை கூறினார்கள்.
ஆனால் இதனை ஏற்க அலெக்சாண்டரால் முடியவில்லை. “என்ன சொல்கிறீர்கள்? மன்னர் இங்கில்லை என்பதற்காக எவன் நம் மீது தாக்குதல் தொடுத்தாலும் நாம் பேசாமல் இருந்து விடவேண்டுமா என்ன?” என்று கோபம் கொப்பளிக்கக் கேட்டான்.
“அப்படியில்லை. தாங்கள் வயதில் மிகவும் சிறியவர். போர் அனுபவமும் தங்களுக்குக் கிடையாது. எனவே இந்த விவகாரத்தில் நாம் மேடி நாட்டின் மீது போர் தொடுத்து அது தோல்வியில் முடிந்து போனால் பிரச்சினை இன்னும் விஸ்வரூபம் எடுத்து விடக் கூடும் என்பதால் அஞ்சுகிறோம்” என்று தங்கள் பயத்தை விவரித்தார்கள்.
“போகட்டும். இந்த இக்கட்டான நேரத்தில் என் தந்தை இங்கே இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்பதை மட்டும் எனக்குக் கூறுங்கள்” என்றான் கோபம் அடங்காமலேயே.
“மேடி நாட்டின் மீது படையெடுத்து கலவரத்தை ஒடுக்கி இருப்பார்.”
“அதைத்தான் இப்போது நானும் செய்யப் போகிறேன். ஏனென்றால் நான் இப்போது அரசப் பிரதிநிதி. என் மீது நம்பிக்கை உள்ளவர்களும், இரண்டாண்டுகளுக்கு முன்னர் வென்றெடுத்த மேடி நாட்டை மீண்டும் நமது ஆட்சி அதிகாரத்தின் கீழ் கொண்டு வர நினைப்பவர்களும் என்னோடு வரலாம்” என்று வீரவசனத்தை உலவ விட்டான் அலெக்சாண்டர்.
அலெக்சாண்டரின் வீரம் செறிந்த பேச்சும், நம்பிக்கை அளிக்கும் உறுதியும் படை வீரர்களிடையே புதிய உற்சாகத்தை அளித்தது. சிறுவன் என்ற எண்ணத்தை அழித்து விட்டு அலெக்சாண்டரின் பின்னால் அணி திரண்டனர்.
“போர்....போர்....” என்று ஆரவார ஓசை நகர் முழுவதும் ஒலித்தது.
நேராகத் தன் தாய் ஒலிம்பியஸிடம் போய் தனது முதல் போருக்கு வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்ட அலெக்சாண்டர், வீரர்களுடன் தனது பிரியமான பியூசெபாலஸ் குதிரையின் மீதேறி வாளைச் சுழற்றிப் பெரும் படையுடன் புறப்பட்டான்.
அலெக்சாண்டர் போருக்குத் தயாராக வந்து கொண்டிருக்கிற செய்தி மேடி நாட்டின் பிரதிநிதிக்குக் கிடைத்தது. “ஒரு சிறுவன் என்னை எதிர்க்க வருகிறானா? அவனை மூட்டைப் பூச்சியைப் போல நசுக்கி எறிந்து விடுகிறேன் பாருங்கள்” என்று கொக்கரித்தான்.
ஆனால் நடந்தது வேறு. அலெக்சாண்டரின் குதிரைப் படைத் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறின மேடி நாட்டுப் படைகள்.
அதனை ஒரு போர் என்று கூறுவது சரியாக இருக்க முடியாது. நாட்டுக்கு எதிராகக் கிளம்பிய கிளர்ச்சியை அடக்கியதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். சில மணி நேரங்களில் அனைத்தும் முடிந்து விட்டன. மறுபடியும் மேடி மாசிடோனியா வசமாகியது. அந்தப் பிரதிநிதி கொல்லப்பட்டான்.
தான் முதன்முதலாக வெற்றி பெற்றதன் நினைவாக அந்த இடத்திற்குப் புதிய பெயர் ஒன்றைச் சூட்ட விரும்பினான். தனது பெயரையே அதற்கு சூட்டி மகிழ விரும்பினான்.
‘அலெக்சாண்ட்ரா பொலீஸ்’.
இதுதான் அவர் சூட்டிய புதிய பெயர். ‘பொலீஸ்’ என்றால் கிரேக்க மொழியில் ‘நகரம்’ என்று பொருள்.
பின்னர் வெற்றிப் பெருமிதத்துடன் பெல்லா திரும்பினான் அலெக்சாண்டர். அவரது அன்னைக்கு மகிழ்ச்சி தாளவில்லை. மகனை உச்சி முகர்ந்து வரவேற்றார். நகரம் முழுவதும் அலெக்சாண்டரின் முதல் வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தது.
பைசாண்டியா போர் முனை!
எதிரிகளைத் துவம்சம் செய்து கொண்டிருந்தது மன்னர் பிலிப் தலைமையிலான மாசிடோனியப் படைகள். வேகவேகமாகப் பின்வாங்கிக் கொண்டே போனது பைசாண்டியப் படைகள்.
இவ்வாறு வெற்றியின் விளிம்பில் பிலிப் நின்று கொண்டு தனது படைகளை உற்சாகப் படுத்திக் கொண்டிருந்த நேரத்தில் அவசரம் அவசரமாக அவரருகே வந்து நின்றான் குதிரை வீரன் ஒருவன்.
எதிரியின் தலையைக் குறி பார்த்து வெட்டி வீழ்த்திய பிலிப், சற்று பின்வாங்கி, “என்ன?” என்று அவனை நோக்கிக் கேட்டார்.
“மேடி நாட்டில் தாங்கள் நியமித்த பிரதிநிதி பெரும் கலவரத்தைத் தூண்டி விட்டு, தன்னைத்தானே மன்னராகவும் அறிவித்து விட்டான்...” என்றான் வீரன்.
“அப்படியா! என்ன துணிச்சல் அவனுக்கு! உடனடியாக அவன் தலையைக் கொய்து கொண்டு வர வேண்டியதுதானே...” என்று கோபம் கண்களில் கொப்பளிக்கக் கத்தினார் மன்னர்.
“அதைத் தங்கள் மகன் செய்து முடித்து விட்டார் மன்னா!” என்றான் அந்த வீரன்.
“என்ன சொல்கிறாய் வீரனே?” என்று நம்பவே முடியாதவராகக் கேட்டார்.
விவரத்தைச் சுருக்கமாக மன்னரிடம் அவன் தெரிவித்தான். அப்போது கோப்பை கோப்பையாக மது அருந்திய போதை உடையவராகி விட்டார் பிலிப். மகிழ்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாதவராகத் தத்தளித்தார். இன்னும் இன்னும் முன்னேறி எதிரி நாட்டுப் படையைக் கலங்கடித்து வெற்றியை வெகு விரைவாக்கிக் கொண்டார்.
தளபதிகளிடம், “நான் உடனே தலைநகருக்குத் திரும்ப வேண்டும். என் மகனைப் பாராட்டியே ஆக வேண்டும்” என்று பரபரத்தார். பிலிப்புக்கு அலெக்சாண்டரின் முதல்வெற்றி தேனாக இனித்தது. தன்னுடைய வீரர்களுக்குப் பரிசுகள் வழங்கி மகிழ்ச்சியைக் கொண்டாடினார்.
வேகமாக பெல்லா திரும்பிய பிலிப், அலெக்சாண்டரைத் தேடிச் சென்று ஆரத் தழுவி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
அலெக்சாண்டரின் வெற்றியை எல்லோரும் மகிழ்ச்சி பொங்கப் பேசிக் கொண்டிருக்க, ‘சிறுபிள்ளைகள் எல்லாம் கிரேக்கர்களிடம் விளையாடக் கூடாது!’ என்ற ஒரு குரல் மாசிடோனியாவில் பதற்றத்தைக் கொண்டு வந்தது.
குரலுக்குச் சொந்தக்காரர் யார் என்று விசாரித்ததில், அவருடைய பெயர் டெமாஸ்தனிஸ் என்பதும் கிரேக்கம் அருளிய அற்புதமான பேச்சாளர் என்பதும் தெரிந்தது. வசீகரம் மிக்க அவருடைய வார்த்தைகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்து தருவதற்கு கிரேக்க மன்னர்கள் காத்திருக்கிறார்கள் என்பதும் அலெக்சாண்டருக்குப் புரிந்தது. அதேசமயம் கிரேக்கர்கள்தான் உலகிலேயே உயர்ந்தவர்கள், மாசிடோனியர்கள் மட்டமானவர்கள் என்கிற அவருடைய குறுகலான சிந்தனைகளும் அலெக்சாண்டரின் கவனத்துக்கு வந்தன.
மனத்துக்குள் சிரித்துக் கொண்டான் அலெக்சாண்டர். ‘இவ்வளவு விரைவாக இரண்டாவது வெற்றிமாலை என் கழுத்தில் விழ வேண்டுமென்றால் அதை யாரால் தடுக்க முடியும்? அதற்கு காரணகர்த்தாவாக மாமேதை டெமாஸ்தனிஸ் மாற விரும்பினார் என்றால் அதைவிட வேறு என்ன சந்தோஷம் இருக்க முடியும்?’ என்று சொல்லிக் கொண்டே போருக்குத் தயாராக உத்தரவிட்டான்.
டெமாஸ்தனிஸ் இருக்கும் கிரேக்க நாட்டுக்குப் புறப்பட்டது மாசிடோனியப் படை. வெற்றி தேவதை இந்த முறையும் அலெக்சாண்டர் பக்கம்தான். எதிர்ப்பார்த்ததைவிட குறுகிய காலத்திலேயே முடிந்து விட்டது யுத்தம். அதை யுத்தம் என்று கூடச் சொல்லத் தேவையில்லை. சின்னச் சண்டை அல்லது கைகலப்பு என்று சொல்லலாம். தொடர்ச்சியாகக் கிடைத்த இரண்டு வெற்றிகள் மன்னர் பிலிப்பைப் பூரிப்படைய வைத்திருந்தன. அப்போது அலெக்சாண்டருக்கு வயது பத்தொன்பதைத் தொட்டிருந்தது.
நாள்கள் கழிந்தன. மன்னர் பிலிப்பிடம் இருந்து முக்கியமான அறிவிப்பு வந்தது. “கிளியோபாட்ரா என்கிற பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்.”
பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது. திருமணம் நடந்து விட்டதால், அலெக்சாண்டர் வெறும் மௌனத்தை மட்டுமே கடைப்பிடிக்க வேண்டியிருந்தது. மனரீதியாக மிகவும் நொறுங்கிப் போய்விட்டான். நெஞ்சு கொள்ளாத சோகம். அதிருப்தி. கடும் அதிருப்தி தந்தை மீது.
ஒருபக்கம் அன்னை ஒலிம்பியஸை நினைத்து சோகம் பொங்கியது. மறுபக்கம், மன்னர் பிலிப்பை நினைத்துக் கோபம் கொப்பளித்தது. மன்னர் பிலிப்புக்கும் அலெக்சாண்டருக்கும் இடையே விழுந்த முதல் விரிசல் இதுதான். திருமண விழா வெகு விமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. மதுவிருந்து. பல்சுவை விருந்து. ஆடல். பாடல். எல்லாம். எல்லாம் தாராளமாக இருந்தன. கலகலப்புக்குக் கொஞ்சமும் பஞ்சமில்லாமல் நடந்து கொண்டிருந்தது விழா.
ஆனால் எதிலும் கலந்து கொள்ளாமல் அமைதியாக ஒதுங்கி நின்று கொண்டிருந்தான் அலெக்சாண்டர்.
திடீரென பிலிப்பின் புதிய மனைவி கிளியோபாட்ராவின் மாமன் அட்டாலஸ், திருமண விருந்தில், "மாசிடோனியாவின் மேன்மை பொருந்திய மக்களே! எனது மருமகள் கிளியோபாட்ராவுக்கும் மன்னர் பிலிப்புக்கும் கோலாகலமாக திருமணம் நடந்துள்ளது. மணமக்கள் நீண்டகாலம் வாழ வாழ்த்துங்கள். நீங்கள் கடவுளை வேண்டிக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால். மணிமகுடம் ஏற்கும் வகையில் ஒரு அழகிய மகன் பிறக்க வேண்டும். என்று வேண்டிக் கொள்ளுங்கள்!" என்றான். அநேகமாக அலெக்சாண்டருக்குக் கோபத்தை வரவழைக்க வேண்டும் என்றே அவன் அவ்வாறு பேசியதாக அவனது நடவடிக்கைகள் காட்டிக் கொடுத்தன.
இதைக் கேட்டதும் அலெக்சாண்டரின் இரத்த நாளங்கள் அனைத்தும் சூடேறிக் கொதித்தன.
தனது வாளை எடுத்து அவன் தலையைக் குறி வைத்துப் பாய்ந்தான்.
இதைக் கவனித்த மன்னர் பிலிப்புக்குச் சட்டென ஆத்திரம் வந்தது. போதை அதிகமாகியிருந்ததால் நிதானம் இழந்து காணப்பட்டார். மதி மயங்கியிருந்தது. விளைவு, புதிதாக முளைத்த சொந்தத்துக்காக தொப்புள்கொடி உறவை அறுத்தெறியும் நோக்கத்தோடு வாளை உருவியபடி அலெக்சாண்டரை நோக்கிப் பாய்ந்தார் பிலிப்.
“இதோ, இன்னும் சில நொடிகளில் உன்னுடைய தலை தரையில் உருளப் போகிறது.”
ஆவேசமாக வந்தவரை தலைக்கேறிய போதை தடுமாற வைக்க, கீழே விழுந்து விட்டார். நல்லவேளையாக அன்று அசம்பாவிதம் எதுவும் நடந்து விடவில்லை. அலெக்சாண்டருக்கு, தன்னுடைய அன்புத் தந்தையே தன்னை நோக்கி வாளுடன் பாய்ந்த காட்சி கண்ணுக்குள் அடிக்கடி வந்து மோதியது. அலெக்சாண்டரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அதிருப்தி. கடும் அதிருப்தி. தந்தைக்கும் மகனுக்கும் விழுந்த இரண்டாவது விரிசல் இது. உடல் ரணம் ஆகவில்லையே தவிர மனம் ரணமாகியிருந்தது. ரணம் ஆறும்வரை சிலகாலம் தந்தையை விட்டுப் பிரிந்து இருக்கலாம் என்கிற முடிவுக்கு வந்தான்.
ஒலிம்பியஸிடம் விஷயத்தைச் சொன்னதும் சம்மதம் தெரிவித்தாள். இருவரும் எபிரஸ் என்கிற இடத்துக்குப் புறப்பட்டார்கள். சில காலம் அங்கேயே தாயும் தனயனும் தங்கியிருந்தார்கள். மகனுடைய பிரிவு மன்னர் பிலிப்பை வாட்டி வதைக்கத் தொடங்கியது. தூக்கம் வராமல் தவித்தார். தூங்கும் போதெல்லாம், “அலெக்சாண்டர் எங்கே இருக்கிறான்? எப்போது வருவான்?” என்று பிதற்றினார்.
சில காலம் கழித்து டெமரேட்டஸ் என்ற பிலிப்பின் பழைய நண்பரின் மூலம் குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்தது.
மன்னர் பிலிப்புக்கு கிளியோபாட்ரா என்றொரு மகள். புது மனைவி கிளியோபாட்ரா அல்ல. மகளுடைய பெயரும் கிளியோபாட்ரா. அலெக்ஸாண்டருக்கு அடுத்துப் பிறந்தவள்.
மாப்பிள்ளை பார்த்து, திருமணத்துக்கு நாளும் குறித்து விட்டார் பிலிப். திருமண நிகழ்ச்சியில் ஏராளமான மன்னர்களும், உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளின் பிரபலங்களும், செல்வந்தர்களும் வந்து குவிந்தனர். மேள தாள இசை முழக்கம் நகரின் எல்லை வரையிலும் எட்டியது. பெல்லா நகரத்து மக்கள் அனைவரும், தங்கள் வீட்டுத் திருமணம் போல நினைத்து ஆனந்தமும், ஆரவாரமும் கொண்டனர். நகர் முழுவதும் களை கட்டியது.
அந்தத் திருமணத்துக்கு பஸானியஸ் என்பவரும் வந்திருந்தார். மன்னர் பிலிப்பின் நெருங்கிய நண்பர். அவர்களுக்குள் இருந்த நட்பு, கிளியோபாட்ரா என்னும் புது மனைவி வந்தபிறகு கீறல் விழத் தொடங்கியது. கிளியோபாட்ராவிற்கு பசானியஸுடன் பிலிப் அதிக நட்போடு இருந்தது பொறாமையை வரவழைத்தது. மனைவியை விடவும் அதிக நெருக்கமாக இருப்பதை அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
இந்தப் பொறாமைத் தீ வளர்ந்து வளர்ந்து பெரிதாகியது. அவர்கள் இருவருக்கும் இடையேயான நட்பைக் கொஞ்சம் கொஞ்சமாக உடைக்கத் தொடங்கினாள். ஒரு கட்டத்தில் நட்பு விரிசலாகிக் கடைசியில் உடைந்து சிதறிப் போயிற்று.
இந்த நட்பின் பிரிவிற்குக் காரணம் கிளியோபாட்ராவும், அவளது தாய் மாமன் அட்டாலஸும்தான் என்பதைப் பசானியஸ் தெளிவாகவே புரிந்து கொண்டான். அவர்கள் மீது கோபம் வந்தது. ஆனால் அதைவிட பிலிப் மீதுதான் ஆத்திரம் அதிகமானது. புது மனைவி என்பதற்காக அவள் சொல்வதை எல்லாம் கேட்டு ஆட வேண்டுமா என்ன என்று ஆத்திரம் வந்தது. ஒரு புனிதமான நட்பு, நெருக்கமான புரிதல் தந்த சிநேகம் என்றுகூடப் பாராமல் பிலிப் நட்பை முறித்துக் கொண்டதை அவனால் தாங்கவே முடியவில்லை.
தக்க சந்தர்ப்பத்திற்காகக் கத்திருந்தவன் இன்று பழி வாங்கி விட்டன். பிலிப்பின் மார்பில் கட்டாரியைச் செறுகி விட்டான். பிலிப்பின் சஹாப்தம் முடிந்தது.
மன்னர் பிலிப்புக்கு அடுத்தது யார்? சந்தேகமில்லாமல் இளவரசர் அலெக்சாண்டர்தான். அலெக்சாண்டர் அழைத்து வரப்பட்டான். பதவியேற்றுக் கொள்வதற்கு முன்னர் நடக்கும் கடவுள் பூஜைகள், சடங்குகள் எல்லாம் வரிசைக் கிரமமாக. கொஞ்சம் தடபுடலாகவே நடந்தேறின. ஒரு சுப தினத்தில் அலெக்சாண்டர் மாசிடோனிய மன்னராக மகுடம் சூட்டப்பட்டான்
‘மாமன்னர் அலெக்சாண்டர் வாழ்க!’ அலெக்சாண்டரின் தலை கி
ரீடத்தால் அலங்கரிக்கப்பட்டது. நாடே உற்சாகமாகக் கொண்டாடியது.

Author: SudhaSri
Article Title: அத்தியாயம் -12
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.