அத்தியாயம் -19
பாரசீக மன்னர் போர் முனையிலிருந்து தப்பிவிட்டார் என்ற தகவல் கிடைத்ததும் அலெக்சாண்டருக்கு ஆத்திரம் பீறிட்டது. “டேரியஸ் எங்கு சென்றாலும் விடாதீர்கள். உயிரோடு அவரைப் பிடித்துக் கொண்டு வாருங்கள்” என்று தன் வீரர்களுக்குக் கட்டளையிட்டார்.
மன்னரே ஓடி ஒளிந்த பிறகு போர் தொடர்ந்து நடக்குமா என்ன? முடிந்து போயிற்று.
பாரசீகத்தை இத்தனை எளிதாக ஒருசில நாட்களிலேயே வெல்ல முடியும் என்பதை அலெக்சாண்டர் எதிர்பார்க்கவே இல்லை. ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அவரை ஆட்சி செய்தன.
அப்படியே பாரசீக மண்ணில் வீழ்ந்து, “இந்த வெற்றி என் தந்தை பிலிப்பிற்கு சமர்ப்பணம்” என்றார்.
வெற்றிக்களிப்பில் வீரர்கள் வாழ்த்துக் கோஷங்களை முழங்கினர்.
போர் முடிவுக்கு வந்த நிலையில் அனைவரும் ஓய்வெடுத்தனர். போர் முனையில் இது அவசியம்.
ஆனால் தட்ப வெப்ப சூழ்நிலை மாற்றம் காரணமாக சில வீரர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டனர். ஏதோ ஒரு இனம் புரியாத காய்ச்சல் அலெக்சாண்டரையும் தொற்றிக் கொண்டது. அதனால்சில நாட்கள் டேரியஸ் பற்றிய பேச்சில்லை. உள்ளூர் மருத்துவர் மூலம் நலம் பெற்று எழுந்த அலெக்ஸாண்டர் இழந்திருந்த சக்தியை மீண்டும் பெற்றவனாக, போருடை தரித்து அறையைவிட்டு வெளியே வந்தான்.
“பாரசீக மன்னர் டேரியஸைப் பிடித்து விட்டீர்களா, இல்லையா?” என்று வீரர்களைப் பார்த்து கர்ஜித்தார். இப்படியரு கேள்வியை எதிர்பாராத அவர்கள் மௌனத்தைக் கடைப்பிடித்தனர்.
டேரியஸ் என்ன ஆனார்-?
பாரசீகத்திலேயே ஒரு இடத்தில் ஒளிந்து மறைந்திருந்த டேரியஸ், அங்கிருந்தவாறே புதிய படை ஒன்றை உருவாக்கிக் கொண்டிருந்தார். அலெக்சாண்டரைப் புறமுதுகிட்டு ஓடச் செய்ய வேண்டும் என்பது மட்டுமே அவரது எண்ணமாகவும் வெறியாகவும் இருந்தது.
“இப்படியே இருந்தால் நம் அனைவரையும் மாசிடோனியர்கள் அடிமைகளாக்கி விடுவர். மேலும் நமது சந்ததிகளே இல்லாமலும் செய்து விடுவர். எனவே அவர்களை எதிர்க்க அனைவரும் என் பின்னால் அணி திரண்டு வாருங்கள்” என்று பாரசீகத்தினரின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டார் டேரியஸ். அதற்கு நல்ல பலனும் கிடைத்தது.
ஆயிரக்கணக்கில் அவரது படையில் இளைஞர்கள் ஆர்வத்துடன் வந்து குவிந்தனர். அவர்களுக்குத் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், அஸ்ஸிரியா என்னும் இடத்திற்கு அருகே சொச்சி என்னும் நகரில் மாசிடோனியப் படைகளை எதிர்த்துப் போரிடுவதற்காக டேரியஸ் தலைமையில் பாரசீகப் படை முகாமிட்டு இருப்பதாக அலெக்சாண்டருக்குத் தகவல் கிடைத்தது.
அப்போது அவர்கள் மல்லுஸ் என்னுமிடத்தில் இருந்தார்கள். வேகமாக செயல்பட்டு, மறுநாள் காலையில் இஸ்ஸஸ் என்னும் நதிக்கரையில் டேரியஸின் படைகளை எதிர்த்து சண்டையிடப் போவதை வீரர்களிடம் அறிவித்தான்.
இதைக்கேட்டதும் மாசிடோனிய வீரர்களிடம் திடீரென்று ஒரு உற்சாகம் வந்து ஒட்டிக் கொண்டது.
இஸ்ஸஸ் நதியின் மறுகரையை நோக்கி வேகமாக வந்தது டேரியஸ் படை. சுமார் ஒரு லட்சம் பேர் கொண்ட அசுர பலமிக்க படை. நடுநாயகமாகக் குதிரையில் அமர்ந்திருந்தான் டேரியஸ்.
அந்த அளவிற்குப் படை பலம் இல்லை என்றாலும் அறிவு பலம் அதிகம் உடையதாயிற்றே மாசிடோனியப் படைகள்.
பாரசீகப் படையின் தாக்குதலுக்கு மாசிடோனியப் படைகள் ஈடுகொடுத்துப் போரிட்டன. ஆனாலும் இம்முறை டேரியஸின் தாக்குதல் சற்றுக் கடுமையாகத்தான் இருந்தது.
எனவே சட்டென்று தனது தாக்குலை வேறுவிதமாக நடத்த முடிவு செய்தான் அலெக்சாண்டர். தனது படையின் ஒரு பகுதியை டேரியஸ் இருந்த திசைக்கு, பாரசீகப் படைகளை ஊடறுத்து செய்து கொண்டு முன்னேறச் செய்தாந்.
இதனை எதிர்பார்க்காத டேரியஸின் படைகள் இந்தத் தாக்குதலால் இரண்டாகப் பிளவுபட்ட எதிரியின் படை மீது கொடூரத் தாக்குதல்.
சிந்திச் சிதறி சின்னாபின்னமானது பாரசீகப் படை. யுத்த களம், இரத்த களமாகிற்று. பாரசீகப் படை வீரர்கள் செத்து மடியத் தொடங்கினர்.
மறுபடியும் தோல்வியை நோக்கித் தனது படைகள் சென்று கொண்டிருந்ததை உணர்ந்து கொண்ட டேரியஸ், இம்முறையும் தப்பி ஓடிச் செல்வதிலேயே குறியாக இருந்தார். அப்படியே கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தப்பித்துவிட்டார் டேரியஸ்.
பாரசீகத்தைச் சேர்ந்த பலர் மாசிடோனியப் படைகளால் சிறைப் பிடிக்கப்பட்டனர்.
தனது தளபதிகளிடம், “நம்மிடம் கைதியாக சிக்கிக் கொண்டவர்களில் முக்கியமானவர்கள் யாராவது இருக்கிறார்களா?” என்று சாதாரணமாகக் கேட்டார்.
“ஆம் மன்னா! டேரியஸ் மன்னரின் தாய், மனைவி மற்றும் வயதுக்கு வந்த அவரது இரண்டு மகள்களும் சிறைப்பிடிக்கப் பட்டுள்ளனர்”
“அப்படியா! ஆச்சரியமான தகவல் ஆயிற்றே இது. பாரசீகம் என்ற மிகப் பெரிய தேசத்தின் மகாராணியே நம் வசம் என்பது பெருமைக்குரிய ஒன்று. அவர்களை சிறைப்படுத்தி வைத்திருக்கும் இடத்திற்கு உடனடியாக நான் சென்று அவர்களைப் பார்க்க வேண்டும்” என்றான்.
அடுத்த நொடிப் பொழுதே அலெக்சாண்டர் அங்கு அழைத்துச் செல்லப்பட்டான்.
மன்னரைப் பார்த்ததும் அந்த நால்வரும் மரியாதை நிமித்தம் எழுந்து நின்றனர். ‘இவர்தான் மாசிடோனிய மன்னர் அலெக்சாண்டராக இருக்கலாம்’ என்று அப்போது அவர்கள் நினைத்துக் கொண்டனர். எனினும் உறுதியாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை.
அவர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டவன், சற்று நேரம் அவர்களை உற்றுநோக்கினான். நால்வரின் கண்களிலும் கவலையும், ஒருவித அச்சமும் பரவிக் கிடந்தது.
“நீங்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. எங்களுக்கு எதிரி டேரியஸ் மட்டுமே. நீங்கள் அல்ல” என்று அழுத்தமாகக் கூறினான்.
“எங்களை என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கவலையுடன் கேட்டார் டேரியஸின் தாய்.
“நீங்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். போரில் ஒருவர் தோற்பதும் வெல்வதும் நேர்வது இயற்கை. அதற்காக அரசர் ஆண்டியாகிவிட முடியாது. இதைத் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளேன். வளமான, செல்வச் செழிப்பான வாழ்வை வாழ்ந்த நீங்கள் அதேபோன்ற வாழ்க்கையைத் தொடர அனுமதி அளிக்கிறேன். நீங்கள் வசித்த அதே அரண்மனையில் தொடர்ந்து வசிக்கலாம். உங்களுக்கு அனைத்து வசதிகளையும் நான் வழங்குகிறேன். சேவகம் செய்யவும் ஆட்கள் இருப்பார்கள். என்ன குறை இருந்தாலும் அதனை என்னிடம் தயங்காமல் நீங்கள் எப்போதும் கூறலாம். நிவர்த்தி செய்வேன்”.
“தங்கள் வாக்குறுதிக்கு மிக்க நன்றி. எங்களின் இரு மகள்களுக்கும் எந்தவொரு இடைஞ்சலும் வந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார் டேரியஸின் தாய்.
“அதற்கு முழு உத்தரவாதம் அளிக்கிறேன்” என்று உறுதி அளித்தான்.
டேரியஸைப் பிடிக்க முடியாத குறைபாட்டைத் தவிர, வேறு எந்தக் குறையும் இல்லை. வெற்றியின் உச்சத்தில் அமர்ந்திருந்தனர் மாசிடோனிய வீரர்கள். மன்னரும்கூட.
அலெக்சாண்டரின் படைகள் அப்படியே பாரசீகத்தின் பல்வேறு நகரங்களையும் எளிதாகக் கைப்பற்றியவாறே வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது.
“வீரர்களே! உங்கள் வீரத்தை நிரூபிக்க மீண்டும் ஒரு சந்தர்ப்பம். டயர் நகரத்தின் மீது போர் தொடுப்போம், வாருங்கள்” என்று அழைப்பு விடுத்தார்.
கடந்த சில நாட்களாகப் போர் எதுவும் இல்லாமல் சோம்பிக் கிடந்த வீரர்கள், சிலிர்த்துக் கொண்டனர்.
மாசிடோனியப் படைகள் தாக்குதலைத் தொடங்கின. கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் தொடர்ச்சியாக நடந்தது போர். அப்புறம்தான் டயர் அரசு வீழ்ந்தது. மாசிடோனியப் படைகள் வெற்றியை அடைந்தன. அலெக்சாண்டர் மற்றொரு வெற்றியை ருசித்தான்.
மீண்டும் தெற்கு நோக்கிய பயணம். இப்போது அகப்பட்டது காசா நகர்.
சுமார் இரண்டு மாத காலமாகக் கடுமையாகப் போர் நடந்தது. பின்னர் காசாவும் அலெக்சாண்டரின் கைகளுக்குள் வந்தது.
இங்கு விலை உயர்ந்த சாம்பிராணி அதிகளவில் கொட்டிக் கிடந்ததைப் பார்த்தார். இன்ப அதிர்ச்சிக்கு உள்ளானார். தான் சிறுவனாக இருந்தபோது ஒருநாள், பூஜை அறையில் சாம்பிராணியை அதிகமாகப் பயன்படுத்தியதைக் கண்ட தனது குரு லியோனிடஸ், கோபப்பட்ட விஷயம் நினைவிற்கு வந்தது.
“நீ மன்னராகி, போரில் பல நாடுகளை வென்று சாம்பிராணியை அள்ளிக்கொண்டு வந்து தாராளமாகப் பயன்படுத்து” என்று அவர் கடிந்து கொண்டது இப்போது நினைவிற்கு வந்தது.
உடனே சில மூட்டைகளில் சாம்பிராணியை நிரப்பி லியோனிடஸக்கு அனுப்பி வைக்குமாறு தனது வீரர்களுக்கு உத்தரவிட்டார். கூடவே, ‘போரில் நான் வென்று கைப்பற்றிய சாம்பிராணி. எனவே சிக்கனம் பாராமல் தாராளமாகச் செலவு செய்யவும்’ என்று தனது குருவுக்கு இளக்காரமாகவும், நக்கலாகவும் கடிதம் ஒன்றை எழுதியும் அனுப்பி வைத்தார்.
இதன்பின்னர் எகிப்து நாட்டை நோக்கிப்பயணம். எகிப்தும் பெரிய நாடுதான். எனவே இங்கும் எதிர்ப்பு சற்று பலமாகவே இருக்கும் என்று நினைத்துச் சென்றவர்களுக்கு அங்கே வேறொன்று காத்திருந்தது.
எகிப்து நாட்டின் மக்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு மாவீரன் அலெக்சாண்டருக்கு மாபெரும் வரவேற்பை அளித்தனர்.
அவர்கள் அனைவரும் பாரசீக நாட்டிற்கு அடிமையாகவே இதுவரை இருந்து வந்தனர். இப்போது அலெக்சாண்டர் படையெடுத்து வருவதால், தங்களுக்கு இனிமேலாவது சுதந்திரம் கிடைக்கக்கூடும் என்ற நம்பிக்கை அவர்களிடம் நிறைந்திருந்ததே இதற்குக் காரணம்.
காலம் காலமாக நினைவில் நிற்கிற பரிசாக ஒன்றைக் கொடுக்க ஆசைப்பட்டனர் அம்மக்கள்.
புகழ்பெற்ற நைல் நதிக்கரையில் புதிதாக நகர் ஒன்றை நிர்மாணிக்க விருப்பம் தெரிவித்தனர். கிரேக்க கலாச்சாரம் எகிப்தில் பரவ இது ஒரு நல்ல வாய்ப்பு என்று நினைத்த அலெக்ஸாண்டர், புதிய நகரை கிரேக்க நாட்டின் கட்டிடக்கலை, சிற்பக்கலை, நுணுக்கமான அமைப்புகளோடு உருவாக்க வகை செய்தான்.
இவ்வாறு உருவாக்கப்பட்ட நகரத்திற்கு அலெக்சாண்டிரியா என்று பெயர் சூட்டப்பட்டது.
இவ்வாறு பாரசீகம் முழுவதுமே வளைக்கப்பட்டுவிட்ட நிலையில், டேரியஸ் இன்னும் பிடிபடாமல் தப்பித்துக் கொண்டிருப்பதுதான் அலெக்சாண்டருக்கு வியப்பாக இருந்தது. எனினும் எகிப்தும் விழுந்துவிட்ட நிலையில் இனிமேலும் டேரியஸால் ஒளிந்திருக்க முடியாது என்று உறுதியாக நினைத்தான்.
இப்படிப்பட்ட ஒரு தருணத்தில் அவர் எதிர்பாராத சேதி ஒன்று டேரியஸிடமிருந்து வந்தது. கடிதம் மூலமாக அந்தத் தகவல் வந்திருந்தது.
அதாவது, அலெக்சாண்டரோடு சமாதானம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்திருந்தார் டேரியஸ். கைது செய்யப்பட்டுள்ள பாரசீக வீரர்களை விடுதலை செய்துவிட வேண்டும் என்றும், அதற்கு விலையாக செல்வமும், பணமும் தரப்படும் என்றும் அதில் விவரித்திருந்தார். மேலும் யூப்ரிடஸ் நதியின் இருபுறமும் உள்ள நாடுகள் அனைத்தையும் அன்பளிப்பாகத் தந்துவிடத் தயாராக இருப்பதோடு, தனது மகளைத் திருமணம் செய்து கொடுக்கவும் ஆவலாக இருப்பதாக அதில் எழுதியிருந்தார்.
‘இலவசமாக நீ எனக்குத் தரும் நாடுகளும், பணமும் தேவை கிடையாது. இதனை நீ எனக்குத் தரும் பிச்சையாக நான் கருதுகிறேன். சுமார் ஆறு லட்சம் படைகளைக் கொண்டிருக்கும் மிகப்பெரிய பாரசீக மன்னரான உன்னைப் போரில் வெல்லவே ஆசைப்படுகிறேன். அதுவே என் வீரத்திற்குப் பெருமையாகவும் இருக்கும். சமாதானம் செய்து கொள்ள விரும்பினால் நீ என்னிடம் வந்து சரணடைய வேண்டும்’ என்று அனுப்ப்பட்ட பதில் சிறிய திடுக்கிடலைக் கொடுத்தது டேரியஸக்கு.
“இரண்டு முறை தோல்வியைச் சந்தித்ததால் நம்மைச் சாதாரணமாக நினைத்துவிட்டான் அலெக்சாண்டர். உலகிலேயே வீரம் செறிந்த ஒரே மன்னர் என்ற நினைப்பும், தற்பெருமையும் கொண்டு அலைகிறான். மன்னரின் குடும்பத்தை இன்னும் சிறைப்பிடித்து வைத்திருப்பதற்குக் காரணமே தங்களைப் பிடிப்பதற்காகத்தான். இப்போது சரணடைந்தால் தங்களை மட்டுமல்ல, தங்கள் குடும்பத்தையும் கொன்று புதைத்து விடுவான். எக்காரணம் கொண்டும் சரணடையவே கூடாது. நாம் இப்போது பெரும் படையைத் திரட்டி உள்ளோம். இந்தப் புதிய படையை வீரமும், விவேகமும் உள்ளதாக உருவாக்கி உள்ளோம். எனவே சரியான தருணத்தில் மீண்டும் போர் செய்து அலெக்சாண்டரை வெல்வது ஒன்றையே நமது லட்சியமாகக் கொள்ள வேண்டும்” என்று மூத்த தளபதிகளும், அமைச்சர்களும் கருத்துத் தெரிவித்தனர்.
இந்தக் கருத்தே சரியானதாகவும் தோன்றியது டேரியஸக்கு. சம்மதித்தார்.
இந்த நேரத்தில் வீரன் ஒருவன் ஓலை ஒன்றைக் கொண்டு வந்து நீட்டினான்.
அதனை வாங்கிப் பிரித்துப் பார்த்த டேரியஸ் அதிர்ந்து போனார். அலெக்சாண்டரின் பாதுகாப்பில் இருந்த அவரது கர்ப்பிணி மனைவி, பிரசவத்தின்போது மரணமடைந்து போனதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
“என் மனைவியை வேண்டுமென்றே அலெக்சாண்டர் கொன்று பழி தீர்த்துக் கொண்டுவிட்டார். அவரைப் பழிக்குப் பழி வாங்காமல் விடமாட்டேன்” என்று கர்ஜித்தார் டேரியஸ்.
அவரது ஆவேசத்தைக் கண்டு அனைவரும் மிரண்டு போயினர்.
மீண்டும் போர் தொடங்கியது. பல நாட்கள் நடைபெற்ற போர் இது. ஒவ்வொரு நாளும் பயங்கரத் தோல்வியைத் தொடர்ந்து சந்தித்துக் கொண்டே இருந்தன பாரசீகப் படைகள்.
இனிமேல் தோல்வி நிச்சயம் என்பது தெளிவாகவே புரிந்து போயிற்று. வழக்கம்போல டேரியஸ் எஞ்சியிருந்த சிறு படையுடன் தப்பி ஓடிவிட்டார்.பாரசீகத்தின் மீது போர் தொடுக்க ஆரம்பித்து சரியாக ஐந்தாண்டுகள் கடந்து விட்டிருந்தன.
பாரசீகம் அநேகமாக இப்போது முழுமையாக மாசிடோனியப் படைகளின் வசமாகி இருந்தது. மிகப் பெரிய வெற்றியைத் தொட்டாகிவிட்டது. தனது முயற்சி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது அலெக்சாண்டருக்கு பெருத்த சந்தோஷத்தை அளித்த போதிலும், டேரியஸைத் தேடும் வேட்டை தொடர்ந்தது. விரைவின் அவர் தனது தளபதியால் கொல்லப்பட்டார் என்ற செய்தி கிடைத்தது.
இப்போது , பாரசீகம் முழுமையாக அலெக்சாண்டருக்குச் சொந்தமானதாகிவிட்டது. வெற்றியின் உச்சத்தில் மாசிடோனிய வீரர்கள் இருந்தனர். அலெக்சாண்டரும், மற்றவர்களும் மகிழ்ச்சியோடு பாரசீக மன்னரின் அரண்மனைக்குள் நுழைந்தனர். அதன் அழகும், கம்பீரமும் அவர்களை வியப்படையச் செய்தது. அங்கிருந்த விலை உயர்ந்த பொருட்களான தங்கம், வெள்ளி, வைரம், பவளம் என்று ஒன்று விடாமல் அத்தனையையும் அள்ளிக் கொண்டனர்.
அந்தக் காலக்கட்டத்தில் போரில் வெற்றி பெறுகிறவர்கள் அங்கு கொள்ளையடித்துச் செல்வங்களைக் குவிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தனர். அதிலும் மாசிடோனியப் படைகள் நிறைய போர்களில் வெற்றிகளைக் குவித்து, அங்குள்ள செல்வங்களை எல்லாம் கையில் கிடைத்த வரையில் அள்ளிக் கொண்டு தங்கள் வீட்டில் குவித்து சுகபோக வாழ்வை அனுபவித்து வந்தனர்.
அப்படித்தான் பாரசீக அரண்மனையும் பரிபூர்ணமாகக் கொள்ளையடிக்கப்பட்டது. பின்னர் தங்கள் வெற்றியைக் கொண்டாடும் முகமாக மது விருந்து நடைபெற்றது. அலெக்சாண்டர் உட்பட அனைவரும் வேண்டிய மட்டிலும் மதுவைப் பருகி சுகித்திருந்தனர்.
அப்போது தளபதிகள் சிலர் அலெக்சாண்டரிடம், “முன்னொரு காலத்தில் இதே பாரசீக மன்னர்கள் நம் கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரை வென்றெடுத்து, கொள்ளை அடித்ததோடு, தீயிட்டும் எரித்துச் சென்றார்கள். அந்தச் செயலுக்குப் பழிவாங்கும் விதமாக நாமும் இந்த அரண்மனையை எரித்துத் தீக்கிரையாக்க வேண்டும் மன்னா” என்றனர்.
மதுமயக்கத்தில் கிறங்கிக் கிடந்த மன்னரும் உடனடியாக இதற்குச் சம்மதம் தெரிவிக்கவே, அடுத்த சில நிமிடங்களில் பெருமைக்குரிய பாரசீக அரண்மனை நெருப்பின் வசமானது. கடைசியில் சாம்பல்தான் மிஞ்சியது.
இவ்வாறு பாரசீக அரண்மனையை எரித்து சாம்பலாக்கினாலும், பாரசீகத்தில் செழித்துக் கிடந்த குங்குமப் பூ அலெக்சாண்டரை வெகுவாகக் கவர்ந்தது. அதன் மருத்துவ மகத்துவம் தெரிந்த பின்னர், ஆசியாவில் நடத்திய அத்தனைப் போர்க்களங்களிலும் ஏற்படும் காயங்களைக் குணப்படுத்த குங்குமப் பூவைப் பயன்படுத்தினான். குளியலில் மட்டுமல்லாமல் தாங்கள் பயன்படுத்தும் கரைசல்கள், சாதம் போன்றவற்றிலும் இதனைப் பயன்படுத்தத் தொடங்கினர். இவ்வாறு பாரசீகர்களிடம் இருந்து குங்குமப் பூ குளியல் பழக்கத்தை, மாசிடோனிய வீரர்கள் கிரேக்க நாட்டிற்கும் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
அலெக்ஸாண்டரின் கவனம் முழுவதும் இப்போது அவனது கனவு தேசத்தை நோக்கித் திரும்பியது.

Author: SudhaSri
Article Title: அத்தியாயம் - 19
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.