அத்தியாயம் - 5
பௌரவ தேசம். கோடைக்கால கதிரவன் தாழ்வாக இருந்தாலும் தீவிரமாக ஒளிர்ந்து கொண்டிருந்தான். அந்த ஒளி அரண்மனையின் சுவர்களின் மீது விழுந்து நீண்ட நிழல்கள்
அரண்மனையின் உள்ளே, ஒவ்வொரு வளைவிலும், ஒவ்வொரு படிக்கட்டிலும் வீரர்கள் காவலாக நின்றனர். உட்புறத்தில் காணப்பட்ட பண்டைய செங்கல் சுவர்கள் அந்த உள்ளகப் பகுதிகளை உறுதியாகத் தாங்கிக் கொண்டிருக்கும் அதே வேளையில் அதீத அழகையும் சுமந்து காட்சி அளித்தன.
அரண்மனையின் மையத்தில், அரச தர்பார் மண்டபம் அமைந்திருந்தது. பௌரவ தேசத்தின் சட்ட திட்டங்களையும் பல இடம்.
உயர்ந்து வளைந்த கூரைகளை தாமரை கொடிகளும் போர் காட்சிகளும் பொறிக்கப்பட்ட மாபெரும் கல் தூண்கள் தாங்கிக் கொண்டிருந்தன. வண்ண வண்ண நிறங்கள் பூசப்பட்ட கண்ணாடி ஜன்னல்கள் வழியே சூரிய ஒளி ஊடுருவி, வெண்மையான பளிங்குக் தரையையும் வண்ணமயமாக்கியது. அரைத்த சந்தனமும் மல்லிகையும் கலந்த மணம் காற்றை நிரப்பியது; பூஜை அறையில் இருந்து வரும் தூபத்தின் புகை போல் அரண்மனையின் மொத்த கூரையையும் தனதாக்கும் முயற்சியில் இருந்தது.
ஆழ்ந்த செந்நிற கம்பளம், பொன்னிற ஓரங்களுடன், அரண்மனையின் வாயிலிலிருந்து சிம்மாசனத்தைத் தாங்கிய மேடை வரை விரிக்கப்பட்டிருந்தது. கம்பளத்தின் இருபுறங்களிலும், செழுமையாகச் செதுக்கப்பட்ட பெரியதும் சிறியதுமாக பலதரப்பட்ட ஆசனங்கள் அவரவர் பதவிக்கு ஏற்ப அமைக்கப்பட்டிருந்தன. ராஜ்ஜியத்தின் மந்திரிகள், தளபதிகள், எழுத்தர்கள், ஆலோசகர் மட்டுமே அல்லாமல் நாட்டின் பிரஜைகளும் தர்பார் நடவடிக்கைகளைக் காணும் படியான அமைப்பு அது.
அமைச்சர்களும் இதர முக்கியஸ்தர்களும் அவரவர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார்கள். சங்கின் முழக்கம் மண்டபம் முழுவதும் ஒலிக்க, அவர்களது உரையாடல்கள் மரியாதைமிக்க நிசம்பத்திலே மூழ்கின.
பெரிய தேக்கு மர வாயில்கள் கனத்த ஒலியுடன் திறந்தன.
அரசன் புருஷோத்தமன் தனது ஆஜானுபாகுவான தோற்றத்தால் அந்த அவையையே சிறிதாக்கியபடி உள்ளே வந்தார். அவருக்குப் பின்னால் ராஜ்ஜியத்தின் தலைமைத் தளபதி விஜயனும் தலைமை மந்திரி பிரதாபனும் வந்தனர். அவர்களுடன் புருஷோத்தமனின் மைந்தர்களான மலையகேது மற்றும் சகாதேவனும் சபைக்கு வந்தனர்.
முதல் முறையாக அந்த அவைக்குள் அடியெடுத்து வைக்கும் சகாதேவனுக்கு, அதன் பிரம்மாண்டமான தோற்றமும் அமைப்பும் பிரமிப்பூட்டும் படியாக இருந்தது.
இரட்டை யானைத் தலைகளைக் கொண்ட கைப்பிடிகள், முற்றிலும் பொன்னால் இழைக்கப்பட்ட சிம்மாசனத்தின் படிக்கட்டுகளில் கம்பீரமாக ஏறி அமர்ந்தான் புருஷோத்தமன்.
அவையில் அதுவரை நிலவிய சிறு முணுமுணுப்பு கூட இல்லாமல் ஒரு நிசப்தம் நிலவியது.
அரசன் சைகை செய்ததும் தலைமை மந்திரி பிரதாபன் எழுந்தார். அவரது முகத்தில் அறிவின் கூர்மை மின்னியது.
“மகாராஜா! இன்று அரசவை அவசரமாகக் கூட்டப்பட்டதை அனைவரும் அறிவோம். இருப்பினும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நமது தேசத்தின் செயல்பாடு குறித்த சில முக்கியத் தகவல்களைப் பகிர விழைகிறேன். பல்வேறு துறைகளிலும் இருந்தும் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றைக் கவனித்த போது, தேசத்தில் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை உணர முடிகிறது. ஆகையால், அந்த அறிக்கைகளை வாசிக்கத் தாங்கள் அனுமதி தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று சிரம் தாழ்த்தி, தனது கோரிக்கையை மன்னன் முன்வைத்தார் பிரதாபன்.
பிரதாபன், பௌரவ தேசத்தைத் தாங்கி நிற்கும் தூண்களில் ஒருவர். தேசத்தின் வரலாற்றை மாற்றி அமைத்ததில் அவர்து பங்கும் உண்டு. புருஷோத்தமனைப் போலவே ஒரு விஷயத்தை, அதன் வீர்யத்தை சட்டென்று புரிந்து கொண்டு செயல்படுபவர். படைத்தளபதியாகப் பல போர்களைச் வென்றவர். மூப்பின் காரணமாக அவர் ஓய்வு வேண்டியபோது புருஷோத்தமனால் தலைமை மந்திரியாக மாற்றப்பட்டு தேசத்திற்கான தனது கடமையை தொடர்கிறார்.
அவர்து முகத்தைச் சில நொடிகளே தீர்க்கமாகப் பார்த்த அரசன், “அறிக்கைகளை வாசியுங்கள் மந்திரியாரே!” என்று ஒப்புதல் வழங்கினான். புருஷோத்தமன் தனது தலைமை மந்திரியின் கோரிக்கைக்கு உடனே செவி சாய்த்தான்.
“நன்றி அரசே!” என்றவாறு தன்னிடம் இருந்த சுருள்களை வாசிக்கத் தொடங்கினேன் பிரதாபன்.
“மகாராஜா, தெற்குவாயில்கள், ஆலய சந்தைகள், வடக்கு வர்த்தக நிலையங்களிலிருந்து வந்த அறிக்கைகள் இவை.”
புருஷோத்தமன் தலை அசைத்தார்.
“கடந்த மூன்று திங்களாக வணிக வரவு கணிசமான அளவு உயர்ந்துள்ளது. காந்தார வியாபாரிகள் நமது வாசனை திரவியங்கள், நிறமிகள், பட்டு ஆகியவற்றை நாடுகின்றனர். கலிங்க தேசத்தினர் அவர்களின் முத்துக்களை பௌரவ தேசத்தின் இரும்பிற்கு மாற்றாக வணிகம் செய்ய விரும்புகின்றனர். யவனம் மற்றும் பாரசீக நாடுகளில் இருந்து வந்தவர்கள் அவர்களது கம்பளம் போன்ற பொருட்களுக்கு மாற்றாக நமது ரத்தினங்களையும் நெல், கரும்பு போன்ற பயிர்களையும் மாற்றாகக் கோருகின்றனர்.”
இதைக் கேட்டதும் அரங்கில் இருந்தவர்களின் முகத்தில் பெருமிதம் தவழ்ந்தது. இவையெல்லாம் தங்கள் தேசத்தின் வளத்தைப் பறைசாற்றும் ஆதாரங்கள் அல்லவா என்று பூரித்துப் போனார்கள்.
தொடர்ந்து வாசித்த பிரதாபனின் குரல் மாறியது.
“ஆனால், வடமேற்கு பகுதியில் சிக்கல் உருவாகிறது. காந்தார அரசன் அம்பி, அனுமதியற்ற சுங்கங்களை உயர்த்தியுள்ளார். அங்கே செல்லும் வியாபாரிகள் அடக்குமுறை, மிரட்டல் மற்றும் கொள்ளை பற்றிப் புகார் அளிக்கின்றனர்.”
இதைக் கேட்டதும் அரங்கில் பலத்த அமைதி நிலவியது.
பின்பு தனது அறிக்கையை தொடர்ந்தார் மந்திரி.
“தீர விசாரித்ததில் கள்வர்கள் போல வேடமிட்டு கொள்ளையில் ஈடுபவர்கள் காந்தார தேசத்தின் உளவாளிகள் என்பது உறுதியாகிறது. நமது அரச முத்திரை கொண்ட வண்டிகளைக் காந்தாரம் வழியாகச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்துகின்றனர்.”
புருஷோத்தமனின் கைகள் அரியாசனத்தின் கைப்பிடியை இறுகப் பற்றின. அவையில் இருந்த அனைவரையும் அதிர்ச்சி ஆட்கொண்டது. இது எதற்கான அறிகுறி என்று புரிந்தவர்கள் அரசனின் அடுத்த நடவடிக்கைக்காகக் காத்திருந்தனர். என்னவென்று தெரியாதவர்கள் ஆளாளுக்கு ஒரு ஊகம் செய்து தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். அவையில் சற்று நேரம் குழப்பம் நிலவியது. தனது கைகளை உயர்த்தி அமைதி காக்கும் படி கேட்டுக் கொண்ட புருஷோத்தமன் பேச ஆரம்பித்தான்.
“கடந்த சில திங்களாகவே வடமேற்கில் சில அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாக நமக்குத் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த மாற்றங்கள் அனைத்தும் கிரேக்க வீரன் அலெக்சாண்டரின் படையெடுப்பு காரணமாகவே நிகழ்கிறது என்பதையும் தகவல்கள் உறுதி செய்கின்றன. காந்தாரம் அலெக்சாண்டரின் பிடிக்குள் சென்று விட்டதா என்று உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை. ஆனால், அதன் அரசன் அம்பிக்கு நிச்சயமாக அலெக்சாண்டரை எதிர்த்துப் போரிடும் அளவுக்குத் துணிச்சலோ வீரமோ இல்லை என்பதை நாம் அறிவோம். அவர் சரணாகதியை நாடுகிறார் என்பது போன்ற செய்திகளும் வலம் வருகின்றன. ஒரு வேளை நம்மிடம் உதவி கேட்டு வந்தால் பாரத கண்டத்தின் புனிதம் காக்க நிச்சயம் துணை புரிவோம்.” புருஷோத்தமனின் வார்த்தைகளில் இருந்த ஆவேசம் அங்கிருந்த அனைவருக்குள்ளும் புகுந்து கொண்டது.
“நிச்சயம் அரசே! நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம்” என்று ஒருமித்த குரலில் கூறினார்கள்.
“நமது நிலைப்பாடு இப்படித்தான் இருக்கும் என்பதை அந்த அம்பியும் நன்றாகவே அறிவார். ஆனால் நமக்கு ஒரு ஆபத்து வரும் என்றால் அதனைப் பூரணமாக வரவேற்பவரும் அவராகவே இருப்பார். வாய்ப்பு அவரது வாயிலில் காத்திருக்கும் வேளையில் என்ன செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்” என்று தனது கருத்தை வெளிப்படுத்தினான் விஜயன்.
“நமக்குள் சண்டையென்று வரும் போது அவரது நிலைப்பாடு அவ்வாறு இருந்திருக்கலாம். அதுவே, அந்நியர் என்று வரும் போது மாறலாம் அல்லவா?” இப்போதும், மலையகேது தனது கருத்தை மறக்காமல் சபையின் முன் வெளிப்படுத்தினான்.
இப்போது அவையில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. ஒரு வேளை அப்படியும் இருக்கலாமோ என்றும் சிலர் சிந்திக்க ஆரம்பித்து இருந்தார்கள். புருஷோத்தமனுக்கு மைந்தனது கருத்தில் சற்றும் உடன்பாடு இல்லை. விரைவில் அவனுக்கு உண்மை புரிந்துவிடும் என்பதால் அமைதி காத்தான்.
அவையின் சலசலப்பு அடங்கும் முன்பு, “வணங்குகிறேன் அரசே! தட்சசீலத்தில் இருந்து அரசனின் செய்தியுடன் தூதுவர் ஒருவர் வந்திருக்கிறார். தங்களை சந்திக்க அனுமதி கோருகிறார்” என்று அரண்மனை காவலாளி ஒருவன் வந்து நின்றான்.
“வரச் சொல்!” என்ற ஆணையைத் தொடர்ந்து தூதுவன் உள்ளே வந்தான்..
பௌரவ தர்பார் மண்டபத்தின் கல்லால் செதுக்கப்பட்ட வாயில்கள் வழியே அவன் உள்ளே நுழைந்தான். கண்கள் அகன்றிருந்தன. வேகமாக வந்திருப்பான் போலும், நெற்றியில் தூசியும் உலர்ந்த வியர்வையும் ஒட்டிக் கிடந்தன. அரச சின்னம் பொறித்த ஆடை அணிந்திருந்தான்.
அரசன் புருஷோத்தமனின் முன்னிலையில் வந்து நின்ற போது கூட முதலில் அவன் தலைவணங்கவில்லை. காரணம், அரசனை அவன் அறியவில்லை. அவன் உறைந்தபடி நின்றான்.
பளிங்கினால் செதுக்கப்பட்ட சிங்கங்களைப் பார்த்தான்.
அரசவையின் மொத்த அமைப்பையும் பார்த்தான். பின்னர், அரியாசனத்தை நோக்கி கண்களை உயர்த்தினான்.
அங்கே, காலமே மனித வடிவம் எடுத்துவிட்டது போல அசைக்க முடியாத உறுதியுடன் அமர்ந்திருந்தான் புருஷோத்தமன்.
“எங்கிருந்து வருகிறாய்? உன்னிடம் செய்தி எதுவும் இருக்கிறதா?”
என்று மந்திரி பிரதாபன் வினவினான்.
தூதன் மெதுவாகத் தலையசைத்தான். நன்றி இருந்த ஓலையை நடுங்கும் கைகளால் முன்னே நீட்டினான்.
“சிந்து நதிக்கு அப்பால் இருந்து…” என்று சற்று இடைவெளி விட்டவன், “இதுபோன்ற படையை நான் பார்த்ததே இல்லை, மகாராஜா”
என்று மெல்லிய குரலில் உரைத்தான்.
.
“ஓலையில் செய்தி இருக்கிறதல்லவா? என்று பிரதாபன் சற்று கடுமையாக வினவ, வந்தவனுக்கு நா உலர்ந்து போனது. ஆம் என்பது போல் தலையசைத்தான்.
கையில் இருந்த ஓலைச் சுருளை பிரதாபனின் கூர்மையான பார்வை நன்கு ஆராய்ந்தது. அதில் பொறிக்கப்பட்டிருந்த சின்னம் இது வரை பார்த்திராத சின்னம். ஒரு வட்டத்தினுல், பாம்பின் மேல் நடக்கும் சிங்கம். அதன் குறியீடுகள் அனைத்தும் பெரும்பாலோர் அறியாத எழுத்து.
பிரதாபனின் புருவங்கள் சுருங்கின. “இது பாரசீகமல்ல.” என்று மெதுவாகச் சொன்னான்.
“இது… கிரேக்கம்.”
அதற்கு மேல் ஒரு வார்த்தையும் பேசாமல், அந்தச் சுருளை அரசவையில் இருந்த கிரேக்க அதிகாரியிடம் கொடுத்தார் மந்திரி. கிரேக்கத்தைச் சேர்ந்த அந்த அதிகாரி, தட்சசீலத்தில் பயில வந்தவர். புருவைப் பற்றி அறிந்து கொண்டு பௌரவ தேசத்தில் தங்கி விட்டவர். பல ஆண்டுகளாக புருவுக்கு சேவை செய்தவர். இரு மொழிகளையும், இரு உலகங்களையும் அறிந்தவர்.
அரங்கம் முழுவதும் மூச்சை நிறுத்தியது போல அமைதி. அந்த கிரேக்கன் மெதுவாகச் சுருளை அவிழ்த்தான்.
அவன் முகத்திலிருந்து இரத்தம் மொத்தமாக வடிந்தது போல வெளுத்துப் போயிற்று.
அங்கே ஒரே ஒரு வரி. எந்த வித பூச்சுகளும் இன்றி போர்முழக்கம் போன்ற வார்த்தைகளில்.
அவன் படித்தான். மீண்டும் மீண்டும் படித்தான். பதட்டத்துடன், அரசனை நோக்கித் திரும்பினான்.
“அரசே…” என்றான், குரல் உடைந்தபடி.
“பதட்டம் வேண்டாம். உள்ளதை உரையுங்கள். நாம் எதையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம்” என்று ஊக்கினான் அரசன்.
“சரணாகதி அடையுங்கள் அல்லது போருக்குத் தயாராகுங்கள். இந்த வாசகம் தான் சுவடியில் எழுதப்பட்டுள்ளது” என்றான் தணிவான குரலில். அவனே தொடர்ந்து பேசினான்.
“மேலும், அதில் உள்ள அரச முத்திரை..
அலெக்ஸாண்டருடையது.”
தர்பார் மண்டபத்தின் பலத்த அமைதி, அனைவரும் மூச்சை நிறுத்தி விட்டது போலிருந்தது.
தளபதி விஜயன், வாளின் கைப்பிடியை மிக அழுத்தமாகப் பற்றினான். ஒரு மூத்த அதிகாரி, இந்திரனுக்குப் பிரார்த்தனையாய் உதடுகளை அசைத்தார். அரசன் புருஷோத்தமன், தனது அரியாசனத்தின் மீதிருந்து சற்றே முன்னால் வந்தான்.
“போர்?” என்று கேள்வியாகக் கேட்டான்.
“யாருடன்?”
கிரேக்க அதிகாரி உமிழ்நீரை விழுங்கினான்.
“அலெக்ஸாண்டர். மாசிடோனியாவின் அரசன். இப்போது… தட்சசீலத்தில் இருந்து அவர் நமது நிலத்தை நோக்கி முன்னேறி வருகிறார்.”
ஓலை கொண்டு வந்த தூதன் முன்னே வந்து உறுதியான குரலில் சொன்னான். “மகாராஜா. தாங்கள் அனுமதி அளித்தால் நான் கண்ணால் கண்டதை உள்ளபடியே உரைக்கிறேன்.”
“சிந்து நதிக்கு அப்பால், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட படையுடன் அவர் முகாமிட்டுள்ளார். கணக்கிலடங்கா குதிரைகள். அவரது வீரர்கள் எல்லாம் மனித வடிவில் இருக்கும் மிருகங்கள் போல வலிமை மிக்கவர்கள். உலகில் வேறு எவரைக் காட்டிலும், போரில் மிகுந்த பயிற்சியை உடையவர்கள். மிகவும் கொடூரமான முறையில் போர் புரிபவர்கள். அவர்களின் குதிரைகள் தாள லயத்துடன் நகர்கின்றன. அவர்களின் கூடாரங்கள் கண்ணுக்கு எட்டாத தூரம் வரை கூட விரிகின்றன.”
அவன் சற்றுத் தயங்கினான். பின்னர், “அவர்களது அரசன், அலெக்ஸாண்டர்.. தேவர்களாலே வடிவமைக்கப்பட்டது போல் நிற்கிறார். சராசரி உயரம். மஞ்சள் முடி. நெருப்பாக எரியும் பழுப்பு நிறக் கண்கள். பயமில்லாதவன். தொடப்படாதவன். அவரது பெயரைக் கேட்டாலே அரசர்கள் நடுங்குகிறார்கள்.
அந்தப் பெயர்… அவரது படையைவிட வேகமாக நகர்கிறது.”
அரசவையில் ஒரு அதிர்வு. புருஷோத்தமனிடம் ஒரு ஆர்வம் மட்டுமே.
“அவர் நமக்கெதிரி அல்ல. நாம் அவரை அவமதித்ததில்லை. அவரிடம் கூட வியாபாரம் செய்தோம். அவருக்குப் போரில் தான் விருப்பம் என்றால் அதையே நமது பரிசாக வழங்குவோம். சரணாகதி என்ற வார்த்தையை எமது பௌரவ வம்சம் ஒரு போதும் ஏற்றதில்லை.. இனிமேலும் ஏற்காது” என்று அறுதியிட்டுக் கூறிய புருஷோத்தமன் பிரதாபனிடம் திரும்பினான்.
“பதில் ஓலையைத் தயார் செய்து அலெக்சாண்டரிடம் அனுப்பி வையுங்கள்” என்று கட்டளையிட்டான்.
புருஷோத்தமனின் செய்தியுடன் பதில் ஓலை அலக்சாண்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஓலையும் ஒற்றை வரியில் இருந்தது.
“விரைவில் களத்தில் சந்திப்போம்”
புருஷோத்தமனின் முத்திரையுடன் ஓலை தூதரிடம் வழங்கப்பட்டது.
“போ. என் யானைகளின் குரலைக் கேட்பதற்கு உன் அரசனைத் தயாராக இருக்கச் சொல்!” என்று சொல்லி அனுப்பினான். தூதன் ஓலையுடன் மறைந்தான். பௌரவ தேசத்தின் தூதுவன் ஒருவனும் அவனுடன் சென்றான்.
போர் என்பது நிச்சயம் என்பதை அறிந்த அடுத்த நிமிடமே ராஜ்ஜியம் தன்னை அதற்குத் தயார் படுத்த ஆரம்பித்தது.
தர்பார் மண்டபத்தின் கீழ் இருந்த குளிர்ந்த, நிழல் படிந்த அறையில், பௌரவ தேசத்தின் முக்கியஸ்தர்கள் அனைவரும் கூடியிருந்தனர்.
மகாராஜா புருஷோத்தமன் தனது இருக்கையில் நேராக அமர்ந்து பேச ஆரம்பித்தான்.
“நாம் போரை அறியாதவர் அல்ல. அலெக்ஸாண்டர் போரைக் கேட்கிறான். அவனுக்குப் போர் கிடைக்கும். பௌரவம் எனும் இந்த தேசமே பல போர்களின் விளைவாக உருவாக்கப் பட்டது என்பதை பகைவன் அறியமாட்டான். வாளுக்கு வாளால் பதில் தருவோம். இந்த தேசம் என்பது, அரசர்களின் பிறப்புரிமை அல்ல. மரியாதையுடன் தன் நிலத்தை காக்கும் ஒவ்வொருவரின் உரிமை.”
அங்கிருந்த அனைவரும் அதை ஆமோதிக்கும் விதமாகத் தலையசைத்தனர்.
“நட்பு தேசங்கள் மட்டும் அன்றி மற்றவரையும் அழைக்க வேண்டும். விரைவில் ஒரு ஆலோசனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
உத்தரபாதை முழுவதும் செய்தி அனுப்ப வேண்டும். வியாபாரிகளும் உளவாளிகளும் கிரேக்கரின் ஒவ்வொரு மூச்சையும்,ஒவ்வொரு குதிரைக் கால் அடியையும் புகாரளிக்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.”
பேசியபடி முத்திரையிடப்பட்ட கட்டளைகளின் சுருளை விரித்தான் மன்னன்.
முதல் உத்தரவு, உளவு வலையை விரிவாக்குதல். அதன் படியே,
விடியற்காலையில் தூதர்கள் அரண்மனை விட்டுப் புறப்பட்டனர். சிலர் முனிவர் போன்று வேடமிட்டனர், சிலர் வணிகரின் வழிகாட்டிகளாக, சிலர் கழிவறைக் காவலர்களாக. அவர்களின் பணி—கூட்டத்தில் கலக்க, சாலைகளில் மறைய, சொற்களுக்கும் போருக்கும் இடையிலான திரையைப் பிளக்க.
முத்திரையுடன் எழுதப்பட்ட கடிதங்கள், உத்தரபாதை வழியே அனுப்பப்பட்டன. வட மதுரையின் உப்பு களஞ்சியங்களிலிருந்து, வாரணாசியின் வணிக வீடுகள் வரை அவை சென்று சேர்ந்தன. அம்பியின் அரண்மனையை கண்காணிக்கவும் உளவாளர்கள் நியமிக்கப்பட்டனர். அலெக்ஸாண்டரின் சொந்தப் படையிலேயே, இரண்டு பௌரவ மொழிபெயர்ப்பாளர்கள் இணைந்து கொண்டனர். தேசத்தின் மீதான விசுவாசமும் சத்தியங்களும் அவர்களை இணைத்திருந்தன.
“எதிரி என்ன சொல்கிறான் என்பதைக் காட்டிலும், அவன் உரக்கச் சொல்லத் தயங்குவது என்ன என்பதை அறிய வேண்டும்” புருஷோத்தமன் தெளிவான குரலில் கட்டளை இட்டான்.
அடுத்ததாக தலைமைத் தளபதி விஜயனுக்கான கட்டளைகள். புருஷோத்தமனோடு அனைத்துப் போர்களிலும் உடன் இருந்தவன். அவனுக்குப் புதிதாக எதையும் சொல்லத் தேவையில்லை. இருந்தாலும் மன்னன் கட்டளை இட்டான்.
“யானைப் படையைப் புதிய வியூகங்களுக்கு பழக்கப்படுத்துங்கள். ஆயுதக் கிடங்கில் கணக்கெடுப்பு நடத்துங்கள். ஆயுத சாலையின் உற்பத்தியை துரிதப் படுத்துங்கள்.
படையினருக்கு முறையாக பயிற்சி நடத்துங்கள். யானைகள் மற்றும் குதிரைகளுக்கான உணவுப் பொருட்களைத் தேவையான அளவு சேமித்து வையுங்கள்.” விஜயன் தனக்கிடப்பட்ட கட்டளைகளை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொண்டான்.
சூரியன் மறையும் நேரத்தில், படைவாசல்களில் இருந்து போர்க் கொம்புகள் ஒலித்தன. மிருகக் காப்பகங்களில் கர்ஜித்தன. பௌரவத்தின் வளாகங்கள் வீரர்கள் மற்றும் குதிரைப் பயிற்சியாளர்களின் கூச்சலால் எதிரொலித்தன.
நகரின் ஆயுதசாலை, பல ஆண்டுகள் மௌனமாக இருந்தது. சேற்றிலிருந்து சீறி எழுந்த பாம்புபோல் மீண்டும் உயிர் பெற்றது.
அடுத்ததாக அழைக்கப்பட்டவர், தேசத்தின் தனாதிபதி சத்யஜித். இவனது வரலாறும் பௌரவ தேசத்துடன் பின்னிப் பிணைந்தது.
“கையிருப்புகளை கணக்கிடுங்கள். போர் என்று வந்துவிட்டால் தங்கமும் வெள்ளியும் கூட கரைந்தே போகும்..” பூடகமாக பேசினான் புருஷோத்தமன்.
புரிந்து கொண்ட தனாதிபதி தலை அசைத்தார். வார்த்தையின்றி வெளியேறினார்.
விரைவில், பாதுகாப்பான கோயில் அடுக்குக்களுக்குள், தானியக் கிடங்குகளுக்குள் நகர்த்தப்பட்டன.
ஒரு காலத்தில் வரிவிலக்கு கோரி நின்ற வியாபாரிகள், இப்போது தானியமும் துணியும் இரும்புமாக உதவி வழங்க முனைந்தனர்.
ராஜ்ஜியம் இன்னும் போரில் இறங்கவில்லை. ஆனால் அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. நகரின் பகுதிகளையும் அருகிலுள்ள குடியிருப்புகளையும் வலம் வந்த அரசனின் அறிவிப்பாளர்கள் மக்களிடம் அவ்வப்போது அறிவித்த வண்ணம் இருந்தனர்.
“பௌரவ தேசத்தின் மக்களே! அனைவரும் தயார் ஆகுங்கள். ராஜ்ஜியம் புதிய சவாலுக்கு முகம் கொடுக்கிறது. அரசன் புதிதான வரிகளை விதிக்கவில்லை. ஆனால் போரின் சுமையை அனைவரும் பகிர்ந்து இக்கட்டான சூழ்நிலையைக் கடக்க வேண்டும். தானியத்தை சேமியுங்கள். தேவையற்ற பயணங்களை தவிருங்கள்.”
போருக்குப் பயந்து சில வியாபாரிகள் மற்றும் செல்வந்தர்கள் அன்றே வண்டிகளை பொதித்துக்கொண்டு தேசம் விட்டு புறப்பட்டனர்.
சில தினங்களில் போரைப் பற்றிய செய்திகளும் கிரேக்கரைப் பற்றிய பல்வேறு வதந்திகளும் பௌரவத்தின் எல்லா மூலைகளிலும் பரவியது. ஒருகாலத்தில் இந்தியாவின் பொன்னாரத் தமனியாக இருந்த உத்தரபாதையில் பொருட்களைவிட, வதந்திகளே அதிகமாகப் பயணித்தது.
அரச முத்திரை பொறிக்கப்பட்ட அழைப்புகள், கலிங்கம், மாலவம் முதல் பௌரவரின் ஜென்ம எதிரியான மகதம் வரை அனுப்பப்பட்டன.
அரசனின் வார்த்தைகள் மரியாதையுடன் அவர்களை அழைத்தது.
“மேற்கில் இருந்து ஒரு தீ எழுகிறது. வாருங்கள். ஒன்று கூடுங்கள்.ஒரே நிலத்தின் அங்கங்களாக உரையாடுவோம்.”
அந்தச் சுருள்கள் மிகுந்த பாதுகாப்புடன், நதிகளைத் தாண்டி, பள்ளத்தாக்குகளை கடந்து,
உயர்ந்தும் மறைந்தும் இருக்கும் அரண்மனைகளுக்குச் சென்றன.
அவர்களது வரவை எதிர்பார்த்து பௌரவம் காத்திருந்த வேளையில் அலெக்சாண்டரைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க ஆரம்பித்தான் புருஷோத்தமன்.
****
தூதுவர் விடியற்காலை வரும் முன்னரே புறப்பட்டனர். சிந்துவின் அப்பால், கிரேக்கப் படையின் சத்தம் கண் எட்டாத தூரம் வரை விரிந்திருந்தது. ஆயிரக்கணக்கான முகாம் தீக்கள் துடித்தன; ஆயுதங்கள் ஆயிரம் கண்ணாடிகள்போல் மின்னின; படைகளின் காலடி ஓசைகள் பூமியே அதிரும் அளவுக்கு முழங்கின.
வெண்கலம் மற்றும் குதிரைமயிர் தொப்பிகள் அணிந்த வீரர்கள், தூதரை நிறுத்தினர்.
வண்டிப்பாதைகளையும் வேல்கள் ஏந்திய படையினரையும், பாரசீக கூலிப்படையினரின் திரளையும் கடந்து அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இறுதியில், மணலில் பொன்னும் இரத்தச் சிவப்பு நிறக் கம்பளங்களும் விரிக்கப்பட்ட ஒரு விசாலமான கூடாரத்தை அடைந்தனர்.
அங்கே, சிங்கச் சின்னங்கள் பொறிக்கப்பட்ட உயரிய ஆசனத்தில்
அலெக்ஸாண்டர் அமர்ந்திருந்தான்.
கிரேக்க அரசன் மௌனமாக அவனை நோக்கினான். கணக்கிடும் பார்வை. சுற்றிலும் இருந்த தளபதிகள், கிரேக்கர்கள் முறியடித்த ஒவ்வொரு நிலத்திலிருந்தும் கொண்டுவந்த நினைவுச் சின்னங்களை அணிந்திருந்தனர். எகிப்திய கழுத்தணிகள், பாபிலோனிய கத்திகள், பாக்தீரிய கை வளையங்கள்.
கடிதம் அலக்சாண்டர் முன்பு பிரிக்கப்பட்டது. அதிலிருந்த விஷயத்தைப் படித்த போது அவன் முகம் மாற்றம் கண்டது. முதலில் அலட்சியம், பின்னர் மெலிந்த அவமதிப்பு. அவன் கிரேக்கத்தில் பேசினான். சுரண்டலான, கூர்மையான குரலில். பின்னர் பௌரவ தேசத்தின் தூதனைப் பார்த்தான். அந்தப் பார்வையே எதிராளிக்கு நடுக்கத்தை வரவழைத்தது.
“உன் அரசன். போரஸ்… அப்படித்தானே அழைக்கிறீர்கள்? அவன் பிலிப்பின் மகனின் கதையைக் கேட்டதில்லையா?
ஏஜியக் கரை முதல் இதோ இந்த சிந்து நதி வரை உள்ள அரசெல்லாம் என்னுடையதென்று அவன் அறிவானா?”
தூதன் அவனது பார்வையை சந்தித்தான். இப்போது சற்று தைரியம் வந்தது. “என் அரசன் போருக்கு அஞ்சுவதில்லை, அரசே. அவர் வெற்றியையும் இழப்பையும்—தன் மக்களின் உயிர்களால் அளக்கிறார். இளமையிலேயே பௌரவ தேசத்தை அரணாகத் தாங்கியவர். பல அசாதாரணமான சூழ்நிலைகளைச் சந்தித்தவர். காந்தார அரசனைப் போரில் வென்றவர். பிற அரசுகள் சிதறும் போது, தன் நாட்டை முழுமையுடனும் செழிப்புடனும் வைத்திருப்பவர். உத்தரபாதையில் அனைவரும் என் அரசனின் துணிச்சலையும் ராஜதந்திரத்தையும் வீரத்தையும் அறிவார்கள். போர் அவசியமாகும்போது மட்டுமே அவர் அதை ஏற்கிறார். ஏனெனில் இங்கே,
நாங்கள் பயப்படுவது மரணத்தை அல்ல; மானிட வாழ்க்கையின் நோக்கம் சிதைவதையே.” தெளிவாக உரைத்த தூதுவன் நிமிர்ந்து நின்றான்.
கூடாரத்தை நிசப்தம் சூழ்ந்தது. அலெக்ஸாண்டரின் முகம் கோபத்தால் ஜொலித்தது.
“அப்படியென்றால் இப்போது இந்த பழங்குடிகள் எனக்கு வாழ்க்கையின் நெறிமுறைகளை கற்பிக்கிறார்களா? மாசிடோனிய வேல்கள் பௌரவம் வழியாகப் பாயும் போது, உங்கள் மானுட வாழ்வின் முடிவு என்ன ஆகும் என்பதை நான் காட்டுகிறேன். உன் அரசனிடம் சொல். என்னிடம் பணிய மறுப்பவருக்கு வாழ்க்கை என்பது நிச்சயம் இல்லை.
அவன் அடிமைத்தனத்திற்கோ, இரத்தத்திற்கோ தயாராக இருக்கட்டும். போர், அவனது அகம்பாவத்திற்கு சீக்கிரமே ஒரு முடிவுரை எழுதும்” என்று கர்ஜித்தான்.
காவலர்கள் சைகை காட்டினர். கிரேக்கர்களின் எகத்தாளச் சிரிப்பு பின்னால் எதிரொலிக்க, தூதன் வெளியே அழைத்துச் செல்லப்பட்டான்.
புருஷோத்தமனின் யானைப் படை பற்றிக் கேள்வியுற்ற தளபதிகள் திடுக்கிட்டுப் போனார்கள். கிரேக்கர்கள் யானைகளைப் போரில் பயன்படுத்தியதில்லை. இதுவரையில் அவர்கள் சந்தித்த போர்களிலும் யானைகளைக் கண்டதில்லை. அலக்சாண்டரது படையின் பலமே அவர்களின் குதிரைகள் தான். யானைகள் எதிர்த்து நின்றால் குதிரைகளின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்பதை இப்போதே யோசிக்கத் தொடங்கினர்.
அலெக்சாண்டரும் அவனது பிரதான தளபதி ஹெபஸ்டினும் கூட இதுபற்றிய ஆலோசனையில் இறங்கி இருந்தனர்.
“போரஸ் பற்றிய முழுமையான தகவல்கள் வேண்டும். அந்த ஜெயரதன் பேச்சு மிகைப்படுத்தி பேசப்பட்டது என்று நினைத்தேன், ஆனால் எனது எண்ணம் தவறென்று தற்போது தோன்றுகிறது. அம்பியை வரச் சொல்” என்று ஆணையிட்டான் அலெக்சாண்டர்.
புருஷோத்தமனின் கதையைக் கேட்ட போதே சந்திக்க இருக்கும் எதிரி சாமான்யன் அல்ல என்று அலெக்சாண்டருக்குப் புரிந்தது.
அவனை நேரில் சந்திக்கும் நாளை எதிர்நோக்கிக் காத்திருக்க ஆரம்பித்தான்.

Author: SudhaSri
Article Title: அத்தியாயம் - 5
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.