ஆடுமடி தொட்டில் இனி - 10
ஒரு நான்கு மணி நேரத்தில் உலகமே இருண்டு விடுமா என்ன? மாதவனின் உலகில் அப்படித்தான் ஆனது. அருகில் நின்ற அருந்ததி சொன்ன எதுவும் அவனது செவி மடலைக் கூடத் தீண்டவில்லை.
"மாதவா! இங்கே பாரு. இப்படி நிக்கிறதுக்கு நமக்கு டைம் இல்லை. ஏதாவது இல்லை.. ஒரே முடிவு தான் இருக்கு. நீ அக்சப்ட் பண்ணத்தான் வேணும். அப்போ தான் நாம ஸ்வேதாவைக் கவனிக்க முடியும். நாம லேட் பண்ற ஒவ்வொரு நிமிஷமும் அவளுக்குப் பிரச்சனையா முடியும்."
"ம்ம்.. நான் ஸ்வீட்டி.. ஸ்வேதா கிட்ட பேசலாமா ஆன்ட்டி? அவ இதை எப்படி எடுத்துப்பான்னு தெரியலையே? ரொம்பவே எதிர்பார்ப்போட இருந்தா!"
"அவ கான்சியஸ்ல இல்லை மாதவா. புரிஞ்சுக்கோ. பிபி ரொம்பவே ஜாஸ்தியா இருக்கு. இதுக்கு மேல வெயிட் பண்ணினால் அவளுக்கும் பிரச்சினை ஆகிடும். வேற வழியே இல்லை.. பேபிய டெர்மினேட் பண்ணித்தான் ஆகணும்."
"சி செக்ஷ்ன்.."
"அவளோட பிபி லெவலுக்கு சி செக்ஷ்ன் பண்ணவே முடியாது. அதுவும் இல்லாமல் பேபி நல்லா இறங்கி இருக்கு. யூட்ரஸ் ஓபன் ஆகி தலை தெரிய ஆரம்பிக்குது. வேக்குவம் போட்டு குழந்தையை எடுத்துடுவோம். நார்மலா கூட டெலிவரி ஆகிடும். அதை இன்ட்யூஸ் பண்ணக் கூட முடியாமல் தான் பேசிட்டு இருக்கேன். ப்ளீஸ் புரிஞ்சுக்கோ மாதவா."
"ஓகே ஆன்ட்டி. கோ அஹெட். எனக்கு… ஸ்வேதா நல்லபடியா வந்தால் போதும்." கண்ணைத் துடைத்துக் கொண்டு வருவது வரட்டும் என்று தயாரானான் மாதவன். பக்கத்தில் நின்று கொண்டு இந்தப் பேச்சைக் கேட்டு கொண்டு இருந்த நியதிக்கு மனதுக்குள் திக்கென்றது. 'குட்டி பேபிய டெர்மினேட் பண்ணனுமா? ஓ மை கடவுளே!'
"நீயும் பக்கத்திலயே இரு. அவ கையைப் பிடிச்சிக்கோ. எதையாவது பேசி அவளுக்கு மயக்கம் தெளிய வை." அவர் சொன்ன எதையும் செய்ய முடியாமல் மனைவியின் கையைப் பிடித்தபடி நின்றிருந்த மாதவனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. அவன் வாய் திறந்து எதுவும் பேசாவிட்டாலும் அவனது தொடுகைக்குப் பலன் இருந்தது. ஸ்வேதாவின் கண்மணிகள் அசைந்து அவள் மயக்கம் தெளிவதை அறிவித்தன.
அடுத்த பத்து நிமிடங்களில் அவன் முன்னே நீட்டிய குழந்தையைக் கண்டவனுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. அவன் எதிர்பார்த்தபடியே அழகான பெண் குழந்தை. ஆனால் மலராத மொட்டாய், உயிரற்ற சடலமாய்..
மௌனமாகக் கண்ணீர் வடித்தவன் குழந்தையைக் கையில் வாங்க மறுத்து விட்டான். பார்வை மனைவியின் புறம் திரும்பியது. தனக்குள் ஒன்று குறைந்ததை உணர்ந்தாள் போலும். நினைவு திரும்பி விடும் என்று எதிர்பார்த்த போது ஸ்வேதாவிற்கு வலிப்பு வர, உடனடியாக ஐசியூவிற்கு மாற்றப் பட்டாள்.
குழந்தையை வெளியே காத்திருந்த அனைவரிடமும் காட்டிய பின்னர் மருத்துவமனை ஊழியர்கள் அவளை வழியனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஸ்வேதா இருக்கும் நிலையில் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று மாதவன் தான் இந்த ஏற்பாட்டுக்குச் சம்மதித்திருந்தான். யாராலும் மறுக்க முடியாத ஏற்பாடு.
நடைபிணம் போல தலைகுனிந்தபடி வெளியே வந்த மாதவன், யாரையும் பார்க்காமல் ஒரு ஓரத்தில் சென்று அமர்ந்தான். அங்கே இருந்த யாரும் யாருக்கும் ஆறுதல் சொல்லும் நிலையில் இல்லை. மெல்ல மகனருகில் வந்தமர்ந்த ஹேமா, அவனை இழுத்துத் தனது மடியில் சாய்த்துக் கொண்டார். மகனது கண்ணீரில் தாயின் மடி நனைந்தது.
மௌனமாகக் கழிந்த சில நிமிடங்களுக்குப் பின் முகத்தைத் துடைத்துக் கொண்டு தெளிவாக எழுந்த மாதவன் மாமனாரிடம் வந்தான்.
"மாமா! நீங்க அத்தையைக் கூப்பிட்டு கிளம்புங்க. அரவிந்த் நீயும் தான். நான் சொல்லும் போது வந்தால் போதும்."
"மாதவா! நான்.."
"இப்போ எதுவும் பேச வேண்டாம் அரவிந்த். கொஞ்ச நாள் போகட்டும். அவசரப்பட்டு வார்த்தையை விட்டு இப்போ என்ன ஆச்சு? இனிமேலாவது எதையும் நிதானமா யோசிச்சு பேசு. பதிலுக்கு பதில் பேசறதால எந்தப் பயனும் இல்லை. தேவையில்லாத மனஸ்தாபம் தான் மிஞ்சும்."
"இப்படி ஆகும்னு நினைக்கவே இல்லை மாதவா. ஸ்வேதாவுக்கு விஷயம் தெரியுமா? என்னால தான்.. என்னோட அவசரத்தால தான்.." தலையில் அடித்துக் கொண்ட அரவிந்தனை அணைத்துச் சமாதானப் படுத்தினான் மாதவன்.
"யாராலயும் இல்லை.. இப்படி நடக்கணும்னு விதி. யாரால மாத்த முடியும்.. அவ முழிச்சு குழந்தையைக் கேட்டா என்ன பதில் சொல்லப் போறேன்னு தான் தெரியலை"
"ப்ளீஸ் மாதவா! கோபத்தில நாலு அடி கூட அடிச்சிடு. என்னால தாங்க முடியல.."
"எனக்கு யார் மேலயும் கோபம் எல்லாம் இல்லை அரவிந்த். என் மேல தான். நான் எதையோ நினைச்சு பெரிய நாட்டாமை வேலை பார்க்கப் போக, அது இப்படி ஆகிடுச்சு" பேசிக்கொண்டே திரும்பியவன் வைஜயந்தி அழுது வடியும் முகத்துடன் வருவதைக் கண்டான்.
அவளைக் கண்டதும் தமயந்தியின் முகத்தில் தோன்றிய மாற்றங்களையும் கண்டான். "அண்ணா!" என்று கண்ணீர் குரலுடன் அருகில் வந்தவளைத் தோளோடு அணைத்துத் தனியே அழைத்துச் சென்றான்.
"வைஜு! நீ எதுக்கு இந்த நேரத்தில தனியா வந்த?"
"டாடி கூடத் தான் வந்தேன் ணா. டாடி புருஷோத் அங்கிள் கூட பேசிட்டு இருக்கார்."
"ஓ…"
"அண்ணா! அண்ணி.. பாப்பா.." என்று திணறியவள் அடுத்து என்ன கேட்பது என்று தெரியாமல் விழித்தாள்.
"வைஜு! அண்ணா சொல்றதைத் தெளிவா கேளுடா. அண்ணிக்கு கொஞ்சம் முடியாமல் இருக்கு. சீக்கிரம் சரியாகிடுவா. பாப்பா… இன்னொரு பாப்பா சீக்கிரமே வரும். நீ எதுக்கும் கவலைப் படாமல் இரு. அண்ணி சரியாகி வந்து உன்னைப் பொண்ணு கேட்டு வருவா. இந்த ஜென்மத்தில அரவிந்தனுக்கு இந்த வைஜயந்தி தான். யாரும் தடுத்திட முடியாது.சியர் அப் மை டியர் சிஸ்டர்" என்றான் பார்வையைத் தமயந்தியிடம் வைத்தபடி.
இன்னொரு சமயமாக இருந்திருந்தால், ஒரு வேளை மாதவன் அந்த இடத்தில் இல்லாமல் இருந்திருந்தால் கூட மகளுக்கு இப்படி ஆனதற்கு இந்தக் கல்யாணப் பேச்சு தான் காரணம் என்று சொல்லி இருப்பார் தமயந்தி. ஆனால் இப்போது கையும் களவுமாகப் பிடிபட்ட பின் எதுவும் பேச முடியாமல் அமர்ந்திருந்தார். அரவிந்தனுக்கு மாதவனின் பேச்சைக் கேட்டு சந்தோஷப் படுவதா கவலைப் படுவதா என்றே புரியவில்லை.
நள்ளிரவு நேரம் வரை ஸ்வேதாவின் உடல் நிலையில் முன்னேற்றம் எதுவும் இல்லாமல் போக, வலுக்கட்டாயமாக அனைவரையும் அனுப்பி வைத்த மாதவன் அமைதியாக ஐசியூ வாசலில் அமர்ந்து கொண்டான்.
மனம் வெறுமையாக இருந்தது. கையால் தலையைத் தாங்கிக் கொண்டு அமர்ந்து இருந்தவனின் தோள்களை பழக்கப்பட்ட ஒரு கை அரவணைத்துக் கொண்டது. புருஷோத்தமன், மனைவியை வீட்டில் விட்டு மகனுக்குத் துணையாக வந்து விட்டார். தந்தையின் கைகள் கொடுத்த ஆதரவு மாதவனின் துயரத்திற்கு மருந்தாக அமைந்தது.
"மாதவா! கொஞ்ச நேரம் ரூம்ல போய் ரெஸ்ட் எடுத்துட்டு வா. இப்படியே இருந்தால் ஸ்வேதா முழிக்கும் போது அழுது வடிஞ்ச உன் மூஞ்சியைப் பார்த்துப் பயந்துக்கப் போறா. அவளுக்கு இன்னும் டென்ஷன் ஏத்தாமல் இருக்கிறது தான் நல்லது. உனக்குப் புரியும்னு நினைக்கிறேன்."
"இல்ல பா. ஒரு வேளை நான் போன நேரத்தில இங்கே கூப்பிட்டா..?"
"ஃபோன்ல இன்ஃபார்ம் பண்ணுவாங்க. நான் இங்கே இருக்கேன். ஒரு டூ அவர்ஸ் தூங்கிட்டு வா."
"உங்களுக்கு இங்கே…"
"எனக்கு இது பழக்கம் தான்.. நான் ஐசியூ உள்ளே கூட உட்கார்ந்துப்பேன்.. நீ கிளம்பு.."
"ம்ம்" என்றவன், ஐசியூவின் கதவைத் தட்டி மனைவியின் தற்போதைய நிலை அறிந்து, தனது மொபைல் நம்பரைக் கொடுத்து விட்டே அறைக்குச் சென்றான்.
அவன் இருக்கும் நிலையில் தூக்கமாவது ஒன்றாவது என்று நினைத்துதான் படுத்தான். ஆனால் கடந்த சில மணி நேரங்களாக ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக ஏற்பட்ட சோர்வு.. தன்னையறியாமல் படுத்தவுடன் தூங்கிப் போனான்.
******
"ஹாய் ஆல்! எல்லாரும் வந்தாச்சா? ஏன் இவ்வளவு நேரம்? உங்களுக்காக நான் பொட்டீக் வேலையை விட்டு பாதில வந்திருக்கேன். போகும் போது கீ எல்லாம் எடுத்துட்டு போகணும்னு தெரியாதா? ஸ்வேதா எங்கே? மேடி வீட்டுல விட்டுட்டு வரீங்களா? ஆனது ஆகிப் போச்சு. இதுக்காக வருத்தப் பட்டால் ஆகுமா? அவங்களுக்கு இன்னொரு குழந்தை பிறக்காமலா போயிடும்?"
கதவைத் திறந்து படபடவெனப் பேசிய ஸ்ரேயாவை சங்கடமாகப் பார்த்தபடி தமயந்தியும் தீப்பார்வை பார்த்தபடி தாமோதரனும் உள்ளே சென்றனர். காரை நிறுத்திவிட்டு வந்த அரவிந்தன் அவளைக் கண்டு கொள்ளாமல் பெற்றோரைப் பின் தொடர்ந்தான். நள்ளிரவைத் தாண்டிய வேளையில் முழு ஒப்பனையுடன் கிளம்பி வெளியே செல்லத் தயாராக இருந்தாள். வேலை நேரத்தின் நடுவே வந்திருப்பாள் போலும், அவளே சொன்னாளே.
இப்போது அவளது பொட்டீக்கில் மேலும் நான்கு பெண்கள் அவளுடன் வேலை செய்கிறார்கள். நால்வரும் National institute of Fashion technology (nift)ல் படித்துக் கொண்டு இருக்கும் அவளது ஜூனியர்கள். காலையில் கல்லூரிக்குச் செல்பவர்கள், வாரத்தில் நான்கு நாட்கள் மாலை ஆறு மணியிலிருந்து பத்து மணி வரையிலும் இவளுடன் புதிய ஆடை வடிவமைப்பில் ஈடுபடுகிறார்கள்.
ஸ்ரேயாவின் நாளும் அதை ஒட்டியே தொடங்கும், ஆறு மணியளவில் வீட்டை விட்டுக் கிளம்புவள், டிசைனிங் வேலையை முடித்து அவளது வெப் சைட்டில் அனைத்தையும் ஏற்றிவிட்டு
விடிகின்ற வேளையில் தான் திரும்புவாள். நேரே போய் படுக்கையில் விழுந்தால், மதியம் ஒரு மணிக்கு மேல் தான் பள்ளியெழுச்சி நடக்கும். சில நாட்கள் அதையும் தாண்டிக் கூட போகும். அதற்கு முன்னால் அவளாகவே விருப்பப் பட்டால் ஒழிய இடியே விழுந்தாலும் விழிப்பதில்லை.
ஆனால் இன்றைய நாளும் மற்றைய நாட்களும் ஒன்றா? இன்று காலையிலேயே வேலை இருப்பதாக வெளியே சென்றவள் தலைவலி என்று சீக்கிரமே திரும்பி விட்டாள். அவளை முன்னிறுத்திக் காரசாரமான வாக்குவாதம் நடந்த நேரத்தில் இழுத்துப் போர்த்தித் தூங்கிக் கொண்டிருந்தாள். ஆம்புலன்சின் சத்தம் கேட்டும் கூட அவள் எழுந்து வரவில்லை. அவளது வழக்கமான நேரத்தில் பொட்டீக் கிளம்பி இருந்தால் கூட வீட்டில் யாரும் இல்லை என்பதை உணர்ந்து விஷயம் கேட்டு நேரில் வந்திருக்க வேண்டாமா?
ஒரு உயிரைப் பிஞ்சிலேயே பறிகொடுத்து மனம் முழுக்க வேதனையுடன் வந்த வேளையில் நின்று நிதானமாக விசாரிக்கிறாள். இவளை எல்லாம் எந்தக் கணக்கில் சேர்க்க?
அனைவரும் எதுவும் பேசாமல் அங்கே இருந்த சோஃபாவில் ஆளுக்கொரு திசையில் அமர்ந்தார்கள். "ஓகே! நீங்க எதுவும் சொல்ற மாதிரி இல்லை. நான் வேலையைப் பாதில போட்டு வந்திருக்கேன். லெட் மீ டேக் லீவ்"
"அதெல்லாம் இந்த நேரத்தில எங்கேயும் போக வேண்டாம். போய் ஏதாவது டிஃபனுக்கு ஏற்பாடு பண்ணு. நாங்க எல்லாம் குளிச்சிட்டு வரோம்" அரவிந்தனுக்கு வந்த தைரியம் அவனைப் பெற்றோருக்கு இல்லை.
"வாட் சமைக்கணுமா? நானா? ஆர் யூ ஜோக்கிங்? எனக்கெல்லாம் எதுவும் செய்ய தெரியாது. என்னை என்ன ஸ்வேதான்னு நினைச்சியா? அன்ட் ஹூ ஆர் யூ டு கிவ் ஆர்டர்ஸ் டு மி? …" அந்த நள்ளிரவிலும் ஆடித் தீர்த்து விட்டாள் ஸ்ரேயா.
"ஓகே.. நான் உனக்கு யாரும் இல்லை.. ஆனால் சில கேள்விகளை கேட்கிறேன்.. அதுக்கு பதில் சொல்லிட்டு எங்க வேணும்னாலும் போ."
"அரவிந்த்! நான் எதுக்கு உனக்கு பதில் சொல்லணும்?"
"அதை உங்க அம்மா கிட்ட கேளு. நீ அடிக்கிற கூத்துல உன் கூடப் பிறந்த பாவத்துக்கு எங்க வாழ்க்கை தானே டேமேஜ் ஆகுது." அரவிந்தன் இன்று ஃபுல் ஃபார்மில் இருந்தான். தாயையும் தங்கையையும் ஒரு வழி செய்யாமல் விடுவதில்லை என்று முடிவு செய்து விட்டவனாகப் பேச்சை ஆரம்பித்து வைத்தான்.
"அரவிந்தா! இப்போ எதுக்கு பா இதையெல்லாம் பேசிட்டு. போன உயிர் திரும்பி வரவா போகுது? இன்னும் ஸ்வேதா நிலைமை வேற என்னன்னு தெரியலை. வேண்டாம் பா, விட்டுடு" தாமோதரன் ஓய்ந்து போயிருந்தார். இன்றைய நிகழ்வுகளால் மனைவியை வெறுத்து விட்டார். சாக்கடையில் கல்லெறிந்து தேவையில்லாமல் நாமே ஏன் சேற்றை அப்பிக் கொள்ள வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருந்தது.
"இன்னைக்கு விட்டா பேச முடியாது பா. நீங்க போய் படுத்துக்கோங்க. நான் பேசிக்கிறேன்." அரவிந்தன் முடிவாகச் சொல்லி விட அமைதியாக அமர்ந்து விட்டார் தாமோதரன்.
தமயந்தி மகளுக்கு வாயை மூடி இருக்கும் படி செய்த ஜாடையெல்லாம் அவள் கண்டு கொள்ளவே இல்லை. என்ன தான் வரும் பார்த்து விடலாம் என்று இருந்தாள்.
"இன்னைக்கு என்ன நடந்தது, நாங்க எல்லாம் எங்க போனோம்னு தெரியுமா?"
"ஸ்வேதாக்கு டெலிவரின்னு தானே போனீங்க, அதுல பிரச்சினை ஆகி குழந்தை செத்துப் போச்சு. இதெல்லாம் ஊர்ல நடக்கிறது தானே!" தங்கையின் பதிலில் பல்லைக் கடித்தான் அரவிந்தன்.
"எத்தனை மாசத்துல டெலிவரி ஆகும்னாவது உனக்குத் தெரியுமா? ஸ்வேதாக்கு இன்னும் நாலு மாசத்துக்கு மேல இருந்தது டெலிவரிக்கு.. அதாவது தெரியுமா?"
"ஹான்.. தெரியும்.. தெரியும்…"
"குழந்தை தானா செத்துப் போகலை. நாம பண்ண காரியத்தால குழந்தை மூச்சு விட முடியாமல் திணறிச் செத்துப் போச்சு." சொல்லும் போதே நடுங்கியது அவனுக்கு.
"இன்னும் கொஞ்சம் லேட் ஆகியிருந்தால் ஸ்வேதாவும் போய் சேர்ந்திருப்பா.."
"அரவிந்தா!" அலறினார் தாமோதரன்.
"அது தான் பா நிஜம். ஏதோ அந்த ஆண்டவன் பெரிய மனசு பண்ணி நம்மளைக் கொலைகாரர்கள் ஆக்காம விட்டுட்டான்." தந்தைக்கு பதில் சொல்லி தங்கையிடம் திரும்பினான்.
"இப்படி ஆகக் காரணம் என்ன தெரியுமா.. டென்ஷன்.. அதனால் பிபி..ஷூட் அப் ஆகி.. ம்ச்.. "
"அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?"
"அவளோட டென்ஷனுக்குக் காரணம் நீயும் அம்மாவும்… விக்ரமன் என்ன சின்னக் குழந்தையா.. நீ சொன்ன உடனே உன் பின்னாடியே வரதுக்கு?"
"என் லைஃப் என் இஷ்டம். அதைப் பத்தி உனக்கென்ன.."
"அதையே அவனும் சொல்லலாம்."
"சொல்ல மாட்டான். கண்ணுக்கு முன்னாடி அழகான பொண்ணு நடமாடிட்டு இருந்தால் மயங்கிக் தான் போவான்." அவன் தான் ஸ்விட்சர்லாந்தில் இருக்கிறானே இவள் என்ன உளறுகிறாள் என்று பார்த்தான்.
"நானும் ஒரு கோர்ஸ் பண்ண Istituto Europeo Di Design, Milan போகப் போறேன். அடிக்கடி ஸ்விஸ் போயிட்டு வரலாம் பாரு. திரும்பும் போது நாங்க கபுள்ஸா தான் திரும்புவோம்." தாயைப் பார்த்துக் கொண்டே அவள் கூற, இந்தக் கேவலமான ஐடியாவைக் கொடுத்த தாயை என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தான் அரவிந்தன்.
"ஓ.. அப்படி… ப்ளான் எல்லாம் பிரமாதமா இருக்கு. ஓகே… இதுக்கு பதில் சொல்லு… இன்னைக்கு நீ ஏன் ஹாஸ்பிடல் வரலை? உனக்கு விஷயம் தெரியாதுன்னு பொய் சொல்லிடாத.. எனக்குத் தெரிஞ்சு அம்மா உனக்கு
செகண்ட் பை செகண்ட் ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்து இருக்காங்க."
"ஹாஸ்பிடலுக்கு நானா? உவ்வேக்… எங்க பார்த்தாலும் வியாதி, பேஷண்ட்ஸ்.. டெட்டால் ஸ்மெல்.. ஐ ஜஸ்ட் ஹேட் இட்.."
"ம்ம்.. ஜஸ்ட் ஹேட்.. பிரமாதம்.. நாளைக்கு உனக்கே குழந்தை பிறக்கும் போது இப்படித் தான் இருப்பியா?"
"வாட் குழந்தையா??"
"பின்னே.. கல்யாணம் ஆனா அடுத்து குழந்தை தானே.. "
"நோ..சான்ஸ்.. குழந்தை பெத்துட்டா என் ஷேப் என்ன ஆகிறது?"
"இந்த கரீனா கபூர்லாம் பாரு.. இரண்டு குழந்தைகளை பெத்ததுக்கு அப்புறமும் ஷேப் மெயின்டெய்ன் பண்றா.."
"ஆனால் நை..நைன்னு.. அழுதுட்டு… நோ.. ஐ டோண்ட் வான்ட் டு ஹேவ் பேபீஸ்.."
"இதுக்கு விக்ரம் அப்படியே தலையாட்டிடுவான்னு நினைப்பா உனக்கு?"
"நிச்சயமா.. "
"அதை விடு.. அது உங்க ஹஸ்பண்ட் வைஃப் விஷயம். எனக்குத் தேவையில்லை. அந்தப் பொண்ணு வைஜயந்தி கூட வளர்ந்த பாசத்தைக் காட்டி ஓடி வந்து மாதவனுக்கு ஆறுதல் சொல்றா.. ஆனால் நீ கூடப்பிறந்தவ கிரிட்டிகல் கண்டிஷன்ல இருக்கான்னு தெரிஞ்சும் வரலை.."
"அவ கூட என்னை எதுக்கு கம்பேர் பண்ற.. அவளே இந்த மாதிரி தொல்லை எல்லாம் வேண்டாம்னு தானே இலை தழைன்னு போயிட்டா.."
"கரெக்ட்.. ஆனால் அவ தான் அப்படி போயிருக்கா.. அவளோட அண்ணன் போகலையே!"
"வாட் டு யூ மீன்?"
"ஐ மீன் விக்ரமனைக் கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறியே அவனும் டெய்லி டெலிவரி ஆபரேஷன்னு தானே இருப்பான். வீட்டுக்கு அதே டெட்டால் ஸ்மெல்லோட தான் வருவான். ஒரு வேளை வந்ததும் அதைப் பத்தி மறந்து போயிடுவான்னு நினைக்கிறியோ?"
"வாட் விக்ரம் சர்ஜனா?"
"நல்லா இருக்கு தெலுங்கு பட டைட்டில் மாதிரி"
"அவன் அவங்க அப்பா மாதிரி சைக்காலஜி தானே படிக்கிறதா சொன்னாங்க.. இப்போ கூட அதுல பிஎச்டி பண்ணலாம்னு தானே போயிருக்கான்."
"சுத்தம்.. கல்யாணம் பண்ணிக்க போறேன்னு முடிவே பண்ணிட்ட. ஆனால் அவனைப் பத்தி எதுவும் தெரியலை."
"அம்மா!!! வாட் இஸ் திஸ்.. விக்ரம் சர்ஜன்னு நீங்க ஏன் என் கிட்ட சொல்லவே இல்லை. என்னால சர்ஜனைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது. இப்போ நான் என்ன பண்றது?"
"அவங்க கிட்ட ஏன் கேட்கிற .. நான் சொல்றேன்.. விக்ரம் அவங்க அப்பா மாதிரி இல்லை… அம்மா மாதிரி ஒரு கைனகாலஜிஸ்ட்.. இப்போ ஆன்காலஜில ஐ மீன் கேன்சர்ல ஆராய்ச்சி பண்ணப் போயிருக்கான். நியர் ஃபியூச்சர்ல நம்ம ஊர் லேடீஸ்கு ஒரு நல்ல டாக்டர் கிடைப்பார்."
பேசிக் கொண்டே தங்கையின் முகத்தில் வந்து போகும் உணர்வுகளை ஆராய்ந்தான். சாக்லேட் பாய் லுக்கில் இருக்கும் விக்ரமனை அடைய வேண்டும் என்ற ஆசை அவளுக்கு இருந்திருக்கலாம். ஆனால் அதற்கு தூபம் போட்ட அன்னை, தன் வேலையை சரியாகச் செய்திருக்க வேண்டாமா? இடைவிடாது துளைத்த கேள்விகளால் ஸ்ரேயா ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.
"ஓ... எனக்கு விக்ரம் வேண்டாம். அவன் எனக்கு செட் ஆகவே மாட்டான். நான் நியூயார்க்ல என் பிஜிய கன்டிநியூ பண்ணப் போறேன். கல்யாணத்தை அதுக்கு அப்புறம் பார்க்கலாம். நிச்சயமா விக்ரம் கூட இல்லை." தெளிவாகக் கூறி விட்டு எழுந்து அறைக்குள் சென்று விட்டாள்.
இவளுக்கு எதுக்கு இவ்வளவு லென்ந்தியா டயலாக்னு யோசிச்சீங்களா? இனி ஒரு தடவை விக்ரமனைத் திரும்பிப் பார்க்கலாம்னு கூட அவளுக்குக் தோணிடக் கூடாதில்ல.. அதுக்காகத் தான்.. இப்போ பாருங்க எனக்கு விக்ரம் வேண்டவே வேண்டாம்னு சூடம் அடிச்சு சத்தியம் பண்ணாத குறையா சொல்லிட்டா… இனிமேல் இவளை நியூயார்க் அனுப்பி வச்சுடுவோம்.. அநேகமா கதை முடியற வரை வரமாட்டான்னு தான் நினைக்கிறேன்..
மூச்சு விடாமல் தங்கையிடம் பேசிமுடித்த அரவிந்தன், "ஹப்பாடா!" என்று சோஃபாவில் சாய்ந்தான். தாமோதரன் ஏற்கெனவே தூங்கியிருக்க, அவரை எழுப்பி அறைக்கு அனுப்பியவன் தாயின் அருகில் வந்து அமர்ந்தான்.
"பார்த்து நடந்துக்கோங்க மா.. அவ்வளவு தான் என்னால சொல்ல முடியும்" என்று சொல்லி விட்டு எழுந்து சென்று விட்டான்.
தமயந்தி தனித்து விடப்பட்டார்..
*******
"நிதி! என்ன டா. இன்னைக்கு ட்யூட்டி இல்லையா? ஹாலிடே கூட கிடையாதே. என்ன ஆச்சு மா?" அருகில் வந்து நெற்றியைத் தொட்டுப் பார்த்த அன்னைக்கு பதில் சொல்லாமல் விட்டத்தைப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தாள் நியதி.
நேற்று மாலை வழக்கத்தை விடத் தாமதமாக வீடு வந்து சேர்ந்தவள், மிகுந்த சோர்வுடன் காணப்பட்டாள். இரவு உணவை மறுத்து வெறும் பாலுடன் படுத்துக் கொண்டாள்.
அவளது வேலையில் இது போன்ற சோர்வுகளைக் கடந்து தான் வரவேண்டும் என்பது தெரியும். இருந்தாலும்.. இன்று நடந்த விஷயம்.. அந்தக் கணவனின் பதட்டம்.. அருந்ததி பொறுமையாக விளக்கிய போதும், மூன்றாம் மனிதரான தனக்கே கஷ்டமாக இருந்த விஷயத்தைச் சீரணித்து மனைவிக்குத் தனது தொடுகையிலேயே தைரியம் அளித்து.. க்ரேட்.. விக்ரம் அப்படி இருப்பானா.. மனம் அடுத்த கேள்விக்குத் தாவியது. வேண்டாம் வேண்டாம்.. இப்படி ஒரு கஷ்டம் யாருக்கும் வரவேண்டாம்..
இப்படிப் பலவும் எண்ணியவாறு படுக்கையை விட்டு எழ மனமில்லாமல் படுத்துக் கொண்டு இருந்தாள் நியதி.
மகள் கிளம்பாமல் இருப்பதைப் பார்த்த சுகந்தா ஒரு வேளை அவளுக்கு உடல்நிலை சரியில்லையோ என்ற கவலையுடன் நெற்றியைத் தொட்டுப் பார்த்து அருகில் அமர்ந்தார். இப்போது வசதியாக தாயின் மடியைத் தலையணை ஆக்கியவள், தனது யோசனையைத் தொடர்ந்தாள்.
"நிதி! அம்மா கேட்டுட்டே இருக்கேன், நீ என்ன யோசனைல இருக்க?"
"என்ன கேட்டீங்க மா?"
"அது சரி.. இன்னைக்கு லீவா.. டாக்டர் மேடம் ரொம்ப ரிலாக்ஸ்டா படுத்துட்டு இருக்காங்களேன்னு கேட்டேன்."
"இன்னைக்கு லீவு கிடையாது மா.. பாதி நாள் ஆஃப்..நேத்து ஓவர்டைமா போனதால மத்தியானம் வந்தால் போதும்னு அருந்ததி மேடம் சொல்லிட்டாங்க."
"அப்போ உன் யோசனை நேத்தைய ஓவர்டைம் பத்தி.. என்ன நடந்தது?"
"ஃபென்டாஸ்டிக் மா.. கரெக்டா கெஸ் பண்ணிட்டீங்க. நேத்து ஒரு டெலிவரி கேஸ் மா.." தொடர முடியாமல் நிறுத்தினாள்.
"கஷ்டமான டெலிவரியா? என்ன குழந்தை?"
"ம்ச்.. என்ன சொல்றது மா.. ஒரு ப்ரீமெச்சூர் டெலிவரி. ப்ரீஎக்லாம்ஸியான்னு சொல்வாங்க. பிபி ஷூட் அப் ஆகி குழந்தையை டெர்மினேட் பண்ணிட்டாங்க."
"அச்சோ.. ஏன்?"
"மதர் அன்கான்ஸியஸா இருந்தாங்க. குழந்தை மூச்சுக்குத் திணறி வெளியே வர ஆரம்பிச்சிடுச்சு. வேக்குவம் போட்டு எடுத்தாங்க. பட் இட் வாஸ் எ ஸ்டில் பார்ன் பேபி. கேர்ள் பேபி மா.. எவ்வளவு குட்டியா.. க்யூட்டா.. அந்த ஹஸ்பண்ட் முகத்தைப் பார்க்கணுமே.. டாக்டரோட ரிலேடிவ் போல இருக்கு. ஸோ மெச்சூர்ட் பிஹேவியர். வைஃபுக்கு கொஞ்சம் கிரிட்டிகல் கண்டிஷன், அவங்க ஹஸ்பண்ட்டுக்காவது அவங்க நல்லா ஹீல் ஆகிடணும். நீங்களும் ப்ரே பண்ணிக்கோங்க மா."
"கண்டிப்பா டா. ஆனால் நீ ஏன் இவ்வளவு அப்செட்டா இருக்க? உன்னோட கேரியர்ல இது மாதிரி நிறைய பார்க்க வேண்டியது வரும் ஒவ்வொரு தடவையும் இப்படி ஃபீல் பண்ணிட்டு இருந்தால் நல்லது இல்லம்மா. ஒருவேளை இதை எல்லாம் பார்த்து பிஜில இது வேண்டாம்னு வேற ஸ்பெஷலைஷேசன் எடுக்கலாம்னு பாக்குறியா?"
"கண்டிப்பா இல்லம்மா இப்போதான் எனக்கு கைனகாலஜி மேல இன்னும் ஜாஸ்தி இன்ட்ரஸ்ட் வருது. அருந்ததி மேடம் எவ்வளவு நிதானம்மா ஹேண்டில் பண்ணினாங்க தெரியுமா? இவங்களுக்குனனு இல்லை, யாரா இருந்தாலும் அவங்களோட ட்ரீட்மென்ட் ஸ்பெஷலா தான் இருக்கும். ஃபீல்டுல அப்படி ஒரு நல்ல பேர் அவங்களுக்கு. நானும் அதே மாதிரி ஃப்யூச்சர்ல பேர் வாங்கணும்னு நினைக்கிறேன்."
கூடவே, 'இன்னொரு ஆளும் தான் இந்த ஃபீல்டு சூஸ் பண்ண என்னை இம்ப்ரஸ் பண்ணது.. அவனை மறுபடி பார்க்கும் போது கைனகாலஜிஸ்டா நிக்கணும் 'என்று மனதோடு சொல்லிக் கொண்டாள்.
'அவன் என்னை நினைவில் வைத்திருப்பானா?' என்ற கேள்வியும் சேர்ந்து வந்தது. "அவனைச் சந்தேகப் பட்டால் என்னை நானே சந்தேகப் படற மாதிரி"
"யாரை எதுக்கு சந்தேகப் படப்போற நிதி?" தாயின் கேள்வியின் பிறகே அவள் வாய்விட்டு சத்தமாகச் சொல்லி விட்டதை அறிந்தாள். என்ன சொல்லி சமாளிப்பது என்று யோசிக்கும் போதே, "அம்மாவும் பொண்ணும் காலங்கார்த்தால கொஞ்சிட்டு இருக்கீங்க. என்ன விஷயம்? சுகா! எனக்கு நீ இன்னும் காஃபியே தரலை" என்று ஆஜரானார் வாசுதேவன்.
'நல்ல வேளை தப்பிச்சேன்' என்று பாத்ரூமுக்குள் ஓடினாள் நியதி.
அவள் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் விக்ரமனும் தன்னவளைத் தான் நினைத்துக் கொண்டு இருந்தான். அர்த்த ராத்திரியில் தூக்கம் வராமல் பால்கனியில் நின்று ஸ்விட்சர்லாந்தின் ஊசி போல் குத்தும் குளிரைத் தனியே என்ஜாய்(!?) பண்ணிக் கொண்டு இருந்தான். வேற வழி!!
தொடர்ந்து புரையேறியதில் தன் தலையில் தானே தட்டிக் கொண்டு தண்ணீரைத் தேடி எடுத்துக் குடித்தான். யார் தன்னை இந்த நேரத்தில் வறுத்தெடுப்பது என்ற யோசனையில் இருந்தவனை அலைபேசியில் வந்த அழைப்பு ஈர்த்தது. வைஜயந்தி, காலங்காத்தால எதுக்கு கூப்பிடறா.. அவசரமாய் காதில் வைத்தான்.
"ஹலோ விக்ரம மஹாராஜா.. இன்னும் தூங்காமல் என்ன செய்யற.. ஒரே ரிங்ல எடுத்துட்ட?" இது போன்ற கேள்விகளை எதிர்பார்த்தவனுக்கு, அந்தப் பக்கம் இருந்த மௌனம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
"ஹாய் வேதாள் குட்டி! என்ன ஆச்சரியம்? ஃபோன் பண்ணிட்டு பேசாமல் இருக்க?"
"....."
"அட.. என்னையெல்லாம் ஞாபகம் வச்சிருக்கே? இந்த நேரத்தில உன் செடி கொடியோட தானே பேசிட்டு இருப்ப. எனக்கு இங்கே டைம் என்ன தெரியுமா? தூக்கம் வருது டா!"
"...." மௌனத்தின் பின்னே லேசான விசும்பல் ஒலியும் கேட்கப் பயந்து போனான் விக்ரமன்.
"வைஜூ! என்ன டா.. யாருக்கு என்ன ஆச்சு? இப்போ நீ வாய் திறந்து பேசலேன்னா நான் அம்மாவைக் கூப்பிட்டு கேட்டுக்கறேன்" என்றான் அழுத்தமாக.
"வேண்டாம் வேண்டாம் நானே சொல்லிடறேன். ஸ்வேதா அண்ணி இல்ல.. அவங்க அண்ணனுக்கு.." என்று ஆரம்பித்து அரவிந்தனின் விருப்பத்தில் இருந்து குழந்தை இறந்தது வரை சொல்லி முடித்திருந்தாள்.
"நான் அரவிந்தன் கூட பேசினதால தான் இப்படி ஆகிடுச்சாண்ணா? எனக்கு ரொம்ப கில்டியா இருக்கு. மாதவன் அண்ணா ரொம்ப பாவம் தெரியுமா? அண்ணி இன்னும் கண்ணு முழிக்கவே இல்லையாம். இப்போ என்ன ஆகும்? அந்த ஆன்ட்டி என்னைத் தானே திட்டுவாங்க?"
எந்த ஆன்ட்டி எதுக்கு திட்டணும், முன்னுக்கு பின் முரணாக ஏதேதோ பேசிக் கொண்டிருந்த தங்கையைச் சமாதானம் செய்வதற்குள் அவனுக்குப் போதும் போதும் என்றாகிப் போனது. மாதவனுக்கு அழைத்துப் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டவன், அதன் பின்னர் வேறு கேள்விகளுக்கு தாவினான்.
"டெலிவரி யார் பார்த்தது?"
"அம்மா தான்.. ஆனால் ரொம்ப கிரிட்டிகல் ஸ்டேஜ்.. எதுவும் பண்ண முடியலைன்னு சொல்லிட்டாங்க. கூடவே இரண்டு ஜூனியர்ஸ்.. ஹவுஸ் சர்ஜன்னு நினைக்கிறேன். அம்மா கூட அடிக்கடி சொல்லுவாங்களே நிதி.. அந்தப் பொண்ணு கூட அங்கே தான் இருந்தா.."
"நதியா.. யார் டா அது புதுசா?"
"நதி இல்லண்ணா.. நிதி.. அவ முழுப்பேர் நியதி.. அப்படீன்னா ஸ்ட்ரிக்ட் ரூல்னு தானே அர்த்தம். இவளும் அப்படியே தான். ரூல்ஸ் ராமானுஜி இவ.. கேள்வியின் நாயகின்னு அம்மா பேர் வச்சிருக்காங்க. எல்லாருக்கும் சேர்த்து இவளே கேள்வி கேட்டு கொல்றாளாம்.. அம்மா கிட்ட சொல்லிடாத .. என்னைக் கொன்னுடுவாங்க.. அத்தனையும் அவ்வளவு அறிவாளி கேள்வியாம்.. அவளும் பிஜில கைனகாலஜி தான் எடுக்கப் போறாளாம். யாராலயோ இந்த ஃபீல்டுல ரொம்ப இம்ப்ரெஸ் ஆகிட்டாளாம். அம்மா…"
இவள் பாட்டுக்கு நிதியின் புகழ் பாடிக் கொண்டே இருக்க அவன் மொபைலை அணைத்து விட்டு நியதியுடன் டூயட் பாட ரெடியானான் விக்ரமன். 'டேய் அவ எவ்வளவு சீரியஸான விஷயம் சொல்லி இருக்கா? நீ என்னடான்னா… ' என்று அவனது மனசாட்சியே அவனைக் காரி துப்பியது.
அடுத்த நிமிடமே சூழ்நிலை உணர்ந்து மாதவனை அழைத்து விட்டான் அவன். கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் தொடர்ந்த அந்த அலைபேசி அழைப்பின் முடிவில் மாதவன் தெளிவடைந்து சில முடிவுகளை எடுத்திருந்தான்.

Author: SudhaSri
Article Title: ஆடுமடி தொட்டில் இனி - 10
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.