ஆடுமடி தொட்டில் இனி - 5
"அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே
பொன்னான கை பட்டுப் புண்ணான கண்னங்களே…"
பி.பி.ஸ்ரீனிவாஸின் குரலில் தொனித்த மயக்கத்தில் தானும் மனம் மயங்கித் தலையணையைக் கட்டிப் பிடித்துக் கனவுக்குள் நுழைந்து கொண்டு இருந்தான் மாதவன். என்ன பேசினோம் என்று தெரியாமலே அர்த்த ஜாமம் வரை ஸ்வேதாவுடன் பேசியவன், தூக்கம் வராமல் போனதில் கடந்த நான்கு மணி நேரமாகவே இப்படித் தான் இருக்கிறான். இன்னும் நாலே நாட்களில் திருமணமாகப் போகிறவன் கேட்கும் பாடல்கள் தான் என்றாலும் இத்தனை பழமையான பாடல்களை இந்தக் கால இளைஞனிடம் இருந்து யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
அவனது எம்பி3 பிளேயரில் ஒலிக்கும் பாடல்களை முதல் முதலில் கேட்பவர், அவனை 'யாருடா இந்த வினோதப் பிறவி?' என்று தான் நிச்சயமாகப் பார்ப்பார்கள். மெலடி மட்டுமே தான் இருக்கும் என்றாலும் அவை 1960களில் இருந்து 1990களின் ஆரம்பத்தில் வந்த பாடல்களோடு முடிந்து விடும். அதன் பிறகு வந்ததெல்லாம் மெலடியே இல்லை என்று சாதிக்கும் ரகம் அவன்.
பாடலில் வந்த விசிலோடு சேர்ந்து விசிலடித்தவனின் கவனத்தை மொபைல் ஃபோனில் வந்த சத்தம் திசை திருப்பியது. வாட்ஸ்அப்பில் மெசேஜ் வந்ததற்கான ஒலி அது. சட்டென்று கை நீட்டி மொபைலை எடுத்தவன் வேகமாக அதன் அன்லாக் செய்து பார்க்க, செய்தியை அனுப்பியவரின் பெயரைக் கண்டு புன்னகையுடன் எழுந்து அமர்ந்தான்.
"Very Good Morning to you Dear..
எழுந்தாச்சா?? கொஞ்சமாவது தூங்கினீங்களா.. இல்லையா??
நான் அஞ்சு மணி நேரம் நல்லா தூங்கி எழுந்தாச்சு…
மார்னிங் டியூட்டி எல்லாம் முடிச்சாச்சு. நல்ல ஒரு காஃபி ஸ்ட்ராங்கா போட்டு குடிச்சாச்சு…
அண்ணா வந்தான் இப்போ தான்…
பெல் அடிக்க யோசிச்சு வாசல்லயே நின்னிருக்கான்… நான் முழிச்சிருந்ததால தப்பிச்சான்.. இல்லேன்னா வாசல்ல எவ்வளவு நேரம் காவல் இருந்திருப்பானோ தெரியலை…
ஈவ்னிங் உங்களை மீட் பண்றேன்னு சொன்னான்.."
அவனது பதிலை எதிர்பார்க்காமல் அடுத்தடுத்த செய்திகள் வந்து விழுந்தன. தனக்குள் ரசித்தபடி இருந்தவன் அடுத்து வந்த செய்தியில் அடுத்த நொடியே அவளை அழைத்து விட்டான்.
"still four more days to go…."
ஏதோ ஒரு வேகத்தில் செய்தியை அனுப்பி விட்டவள், அதை அழிக்க நினைக்கும் போதே அவன் படித்து விட்டான். என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்கும் போதே அவளது மொபைல்,
"யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
தாளாத பெண்மை வாடுமே
வாடுமே..ஏஏ.ஏ.." என்று பாடியது.
அறை வாசலில் நின்று தங்கையின் முகத்தில் தோன்றும் வர்ணஜாலங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த அரவிந்தன், "இது எங்க எல்லாருக்குமே தெரியுமே.. மேடி அலையஸ் மாதவன் தான் அது!" என்று சொல்லிச் சத்தமாகச் சிரித்தான்.
அதிர்ந்து திரும்பிய தங்கையின் முகம் போன போக்கைப் பார்த்து, "சரி சரி.. யூ ப்ரோசீட்.. நான் டிஸ்டர்ப் பண்ணலை" என்று அறைக்கதவை மூடிவிட்டு படுக்கையில் விழுந்தான்.
அதற்குள் அழைப்பு நின்று போயிருக்க, அடுத்த அழைப்புக்காகக் காத்திருந்தாள் ஸ்வேதா. எப்போதும் போல அவளாகவே அழைத்து விட மாட்டாளா என்று காத்திருந்த மாதவன், வழக்கம் போல மீண்டும் அழைத்தான்.
"குட் மார்னிங் ஸ்வீட்டி! லவ் யூ டியர்."
கரகரப்பாக வந்த குரலில் பதில் சொல்லத் தோன்றாமல் மெய்மறந்து நின்றாள் ஸ்வேதா.
"வாட் ஹேப்பன்ட்.. எந்த ரியாக்ஷனும் காணோம்? ஹல்லோவ்… எனிபடி தேர்…. "மை டியர் இஞ்சி இடுப்பழகி! வாயைத் திறந்தாலே காத்து தான் வருதா? என்று கிண்டல் செய்து சிரித்தான்.
"குட்… குட் மார்னிங்..மாது! எனக்கு நல்லாவே பேசவும் வரும்"
"ஹா.. ஹா.. ஹா.. உனக்கு எப்போதும் ஸ்டார்ட்டிங் ப்ராப்ளம் மட்டும் தான். அப்புறம் எல்லாமே.. ஐ மீன் எல்லாமே ஜெட் ஸ்பீட் தான்" அந்த எல்லாமே என்ற வார்த்தையை பல வித மாடுலேஷனில் ஏற்ற இறக்கங்களோடு சொன்னவனை ஃபோனில் முறைக்க முடியாமல் போனது அவளால்.
"என்ன எனக்குப் பதிலா ஃபோனை முறைச்சுப் பாக்கிறயா.. வெயிட் பண்ணு.. நாலே நாள் அப்புறம் நேர்ல முறைக்கலாம். ஆமா… இன்னும் நாலு நாள் இருக்குன்னு யாரோ ரொம்பவே ஃபீல் பண்ணி இருக்காங்களே.. அது யார்னு உனக்குத் தெரியுமா ஸ்வீட்டி?"
அவன் எதிர்பார்த்த பதிலைக் கொடுக்காமல், "உங்களுக்கு அது யார்னு தெரியாதா?" என்று பதில் கேள்வி எழுப்பினாள்.
"ஓ… நீ அப்படி வரியா… அப்போ ஓகே.. அது என் ஸ்வீட் பொண்டாட்டி தான்… ஆனால் எதுக்கு நாலு நாள் தான் இருக்குன்னு அவ சொல்லவே இல்லை… அதையாவது சொல்லேன்"
"நான் சொல்லித் தான் அது உங்களுக்கு தெரியணுமா?"
"ஹூம்… உனக்கும் தெரியலையா.. தெரியாமல் தான் நாள் கணக்கு சொன்னியா?"
"அச்சோஓஓஓ! ஒரு வார்த்தை சொல்லிட்டு ஃபீல் பண்ணி எழுதிட்டு நான் படுற பாடு இருக்கே…"
"ஒரு வார்த்தை இல்லை டா… Still four more days to go.. ஆறு வார்த்தை இருக்கு… உனக்கு மேத்ஸ் வராதா, அதான் லிட்டரேச்சர் எடுத்தியா?" அவனும் விடுவேனா என்று வாதாடினான்.
"இப்போ என்ன தான் வேணும் உங்களுக்கு?"
"வாவ்! என்ன கேட்டாலும் கிடைக்குமா? நேர்ல வந்து வாங்கிக்கிறேன்."
"நாலு உதை கொடுக்கலாம்னு நினைச்சேன்… நேர்லயே வாங்க.. இன்னும் இரண்டு சேர்த்துக் கொடுக்கறேன்."
"அடிப்பாவி! ராட்சசி… நான் கூட நேர்ல வந்தால் கொடுக்கிற இடத்தை…"
"மாது! ப்ளீஸ்! ஸ்டாப்.. "
"என்னமோ போடா மாதவா. நீ கொடுத்து வச்சது அவ்வளவு தான். இதுக்கெல்லாம் வட்டி போட்டு வச்சிக்கோ.சேர்த்து நாலு நாள் கழிச்சு வாங்கிக்கறேன்.. உனக்குத் தான் கணக்கு வராதே.. நானே நோட் பண்ணிக்கிறேன்."
"ம்ம்.. "
"அப்புறம் அரவிந்த் ஈவ்னிங் வருவான்னு சொன்னியே, நீயும் அவன் கூட வாயேன். உன்னைப் பார்க்கணும் போல இருக்கு."
"ஆசை தோசை … எங்கம்மா முதுகுலயே நாலு கொடுப்பாங்க.. இப்போ தானே துணிக் கடையில மீட் பண்ணினோம்."
"ஏய்… நாம மீட் பண்ணி இரண்டு நாள்.. முழுசா நாற்பத்தெட்டு மணி நேரம்ஆச்சுடி.. இப்போ தான்னு ஈஸியா சொல்ற.."
"ஆமா… 2880 நிமிஷம் ஆச்சு.. 172800 செகண்ட் ஆச்சுன்னு சொல்லுங்களேன்…"
"பாரு கணக்குல வீக்கா இருக்கிற உனக்கே தெரியுது.. ஸ்வேதா! நான் சீரியஸா கேட்கிறேன்.. உன்னால வர முடியுமா…"
"தெரியலை மாது… அம்மா கண்டிப்பா விட மாட்டாங்க.. "
"அரவிந்துக்கு மச்சினன் முறைக்கு ஏதோ வாங்கணுமாமே… அதை நாம இரண்டு பேரும் சேர்ந்து வாங்கிடலாம்னு நினைச்சேன்.."
"அதான் அண்ணா வரானே.. அப்புறம் என்ன.. அவனுக்கு பிடிச்சதா நீங்களே வாங்கிடுங்க..
"அது எனக்குத் தெரியாது பாரு. பெரிசா சொல்ல வந்துட்டா."
"ப்ளீஸ் மாது.. கொஞ்சம் என் சிச்சுவேஷனையும் புரிஞ்சுக்கோங்க."
"ம்ச்.. நீ என் மச்சினி கிட்ட இருந்து சில விஷயங்களை கத்துக்கணும்…"
"தேவையே இல்லை… அவளை மாதிரி நான் இருக்க வேண்டாம்.. நான் நானாவே இருந்துக்கறேன்."
"ஹேய்… டோன்ட் டேக் இட் சீரியஸ்லி… நான் சும்மா தான் சொன்னேன்… எதுக்கும் அரவிந்த் கிட்ட பேசிப் பார்க்கறேன்.. அவனால உங்க அம்மாவை கன்வின்ஸ் பண்ண முடியுதா பார்க்கலாம்.."
"வேண்டாம்… வேண்டாம்..இது தான் விஷயம்னு அம்மா கிட்ட சொன்னா அவங்களும் சேர்ந்து கிளம்புவாங்க. ஏற்கனவே அவங்க செஞ்சு வச்ச குழப்பம் எல்லாம் போதும். புதுசா எதையும் ஃபேஸ் பண்ண நான் தயாரா இல்லை.."
"நீ சொல்றதும் சரி தான்… அவங்க ஏதோ டென்ஷன்ல இப்படி பண்றாங்க.. நீ டென்ஷன் ஆகாத.."
வருங்கால மாமியாரின் குணத்தை முழுமையாக அறியாதவனாக அவளைச் சமாதானப் படுத்த முயன்றான். ஆனால் தனது தாயைப் பற்றி நன்றாக அறிந்த ஸ்வேதா மௌனமாக இருந்தாள்.
"எல்லாமே புரியுது டா.. ஆனால் எனக்கு உன்னை பார்க்கணுமே.." அவன் குரலில் ஒலித்த ஏக்கம் அவளுக்கும் தான் இருந்தது. ஆனால் அதை வெளியே சொல்ல முடியாமல் திணறினாள்.
'எனக்கும் தான்' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள். அதையும் அவன் கண்டு கொண்டான்.
"எதையும் வாய் விட்டு சொல்லிடாத.. மனசுக்குள்ளயே வச்சுக்கோ.."
இப்படி மாறி மாறி எதையெதையோ பேசி இவர்கள் இருவரும் அவர்களது தனி உலகத்தில் இருக்க, இருவரது பெற்றோரும் அவர்களைத் தரை இறங்கினார்கள்.
"மாதவா! மணி ஏழாகப் போகுது. எழுந்திரு பா" ஹேமா மகனது அறைக் கதவை தட்ட, "இதோ வந்துட்டேன் மா.." என்று குரல் கொடுத்த மாதவனின் காதுகளில் தமயந்தியின் உரத்த குரல் தெளிவாகக் கேட்டது.
"காலங்கார்த்தால ஆரம்பிச்சிட்டியா! இப்படி கல்யாணத்துக்கு முன்னாடியே இருபத்தி நாலு மணி நேரமும் பேசிக்கிட்டே இருந்தால் அப்புறம் பேசறதுக்கு ஒன்னுமே இருக்காது."
கடகடவென்று சிரித்தான் மாதவன்.
"கல்யாணத்துக்கு அப்புறம் நோ டாக்கிங் ஒன்லி ஆக்ஷன்னு மாமியாருக்கு தெரியலை பாரேன். எதுக்கும் அவங்க கிட்ட சொல்லி வை… உங்களை சீக்கிரமே பாட்டி ஆக்கணும்னு தான் கல்யாணத்துக்கு முன்னாடியே இவ்வளவு பேசறோம்னு.." என்றவன் பிறகு பேசலாம் என்று அழைப்பைத் துண்டித்தான்.
'ஹப்பா… என்னவெல்லாம் பேசறான் இவன்… எப்படித்தான் சமாளிக்கப் போறேனோ? நமக்குப் பிறக்கப் போற குழந்தை யாரை மாதிரி இருக்கும்?' மொபைலைக் காதில் வைத்தவாறே யோசிக்க ஆரம்பித்தாள் ஸ்வேதா. இவள் எதுவும் பேசாமல் காதுகளில் மொபைலை வைத்திருப்பதைப் பார்த்த தமயந்தி பொரிய ஆரம்பித்தார்.
"ஸ்வேதா! இவ்வளவு சொல்றேன்.. இன்னும் பேச்சை முடிக்கலையா? அந்த ஹேமா என்ன தான் பிள்ளைய வளர்த்து வச்சிருக்காளோ? காலங்கார்த்தால இப்படி வெட்டிப் பேச்சு பேசிட்டு இருந்தா வீடு விளங்கிடும். ஏய் உன்னைத் தான் டி. அந்த மொபைல வச்சிட்டு எழுந்திரு. நாலு நாளைக்கு அந்த ஃபோனைத் தூக்கி தூரமா வை..போய் சூடா காஃபி போட்டு கொண்டு வா. தலைக்கு மேலே வேலை கிடக்கு. இப்படி மசமசன்னு நின்னுட்டு இருந்தால் அதுக்கும் என்னைத் தான் குறை சொல்லுவாங்க.. போ.. போ.."
அவள் தான் மணப்பெண் என்ற நினைவே இல்லை போலும். நேற்று மாலை பிரியமாக இருந்த அம்மாவின் மற்றொரு முகத்தைப் பார்க்க ஸ்வேதாவிற்குத் துளியும் விருப்பம் இல்லை. வேகமாக எழுந்து சமையலறை நோக்கி நகர்ந்தவளின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றினார் அந்தத் தாய்.
"உன் பெட்டி எல்லாம் அடுக்கிட்டியா.. பார்லர் பொண்ணுக்கு டீடெயிலா சொல்லிட்டியா.. அப்புறம் கடைசி நேரத்தில அது இல்லை.. இது சொல்லலைன்னு என் கிட்ட வரக் கூடாது. என்ன இருந்தாலும் சின்னவ சாமர்த்தியம் உனக்கு வராது.. அவ தான் எல்லாத்தையும் கரெக்டா ப்ளான் பண்ணி செய்வா."
பதில் பேசாமல் அமைதியாக நகர்ந்தவள், பின்னோடு வந்த அண்ணனின் குரலில் திகைத்து நின்றாள். 'இந்த அண்ணன் ஏன் அம்மா கிட்ட வாயைக் கொடுக்கிறாரு. எல்லாம் நல்ல படியா நடக்கணும் ஆண்டவனே.'
"ஆமாம் மா..சின்னவளோட சாமர்த்தியம் இவளுக்கு வராது. வரவும் வேண்டாம். அது தான் மாதவனுக்கு… இல்லை இல்லை.. நம்ம எல்லாருக்கும் நல்லது.
திடீரென்று கேட்ட மகனது குரலில் திடுக்கிட்டு திரும்பினார் தமயந்தி.
"அரவிந்தா! வந்துட்டியா? யாரு கதவைத் திறந்து விட்டது? பல் விளக்கிட்டியா? காஃபி குடிக்கலாம்.. வா.. வந்து இப்படி உட்காரு.. ஸ்வேதா! இங்கே என்ன வேடிக்கை பார்த்துட்டே இருக்க, சீக்கிரம் காஃபி கேட்டு எவ்வளவு நேரம் ஆச்சு?"
ஒரே நேரத்தில் மகனிடம் ஒரு நிறமும் மகளிடம் வேறு நிறமும் காட்டிய அன்னையை ஆராய்ச்சியாகப் பார்த்தான் அரவிந்தன். 'தான் பெத்த பொண்ணு கிட்டயே இப்படி பாரபட்சமா நடந்துக்கிற அம்மா நாளைக்கு என் மனைவி கிட்ட எப்படி நடந்துப்பாங்க. நல்ல வேளை எல்லாம் பாதில நின்னு போச்சு.. பேசாமல் அமெரிக்காலயே செட்டில் ஆகிடலாமா?'
"அரவிந்தா! அம்மா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் என்ன யோசனை பண்ற?"
"ஹான்.. அம்மா! நான் அஞ்சு மணி வாக்கில வந்தேன்.." என்று ஆரம்பித்து ஸ்ரேயா வந்தது வரை சொல்லி முடித்தான். கூடவே ஸ்ரேயாவின் நடவடிக்கைகளில் மாற்றம் தேவை என்பதையும் அழுத்தமாக எடுத்துரைத்தான். ஆனால் பெற்றவளோ எதையும் கண்டு கொள்ளவே இல்லை.
"ஃபேஷன் டிசைனிங் படிச்சதோ, ஃபேஷனா இருக்கிறதோ தப்பில்லை மா. ஆனால் அது அடுத்தவங்க கண்ணை உறுத்தாத மாதிரி இருக்கணும். பெண்களுக்கு தைரியம் இருந்தால் நல்லது தான், அது அசட்டுத் தைரியமா இருக்கக் கூடாது."
"டேய்! நீ என்ன அவளை சந்தேகப் படறியா? என் பொண்ணு அப்படிப்பட்டவ இல்லை. மாடர்னா இருந்தால் தப்பா?"
"எனக்கும் என் தங்கையைப் பத்தி தெரியும். நான் என்ன சொல்றேன், நீங்க என்ன மாதிரி புரிஞ்சிக்கிறீங்க? காலைல இருந்து தூங்கியே பொழுது போக்கிட்டு பெண் சுதந்திரம்னு ராத்திரி முழுக்க தனியா பொட்டீக்ல உட்கார்ந்து இருக்கணும்னு இருக்கா? கூட இரண்டு பேர் இருந்தால் பரவாயில்லை. அண்ணனா அவ மேல ஒரு அக்கறைல சொல்றேன் மா."
"எங்கே? உன் பேச்சுல ஒரு அக்கறையும் காணோமே. அவ படிப்பு அந்த மாதிரி டா. இதோ இவளை மாதிரி புஸ்தகத்திலயே இருக்கிற வேலை இல்லை. அவ தனியா நின்னு சாதிக்க நினைக்கிறா. அதைக் கெடுக்கணுமா நானு? அவளுக்கு இருக்கிற திறமைக்கு ஓஹோன்னு வருவா, அதுக்கேத்த மாதிரி மாப்பிள்ளையும் வருவான். இவளை மாதிரி சாதாரணமா இல்லாமல் கோடீஸ்வர குடும்பம் தான் அமையும்."
சந்தடி சாக்கில் மாதவனது குடும்பம் சாதாரணமானது என்று சொல்லி விட ஸ்வேதாவிற்குக் கண்கள் நிரம்பி எந்நேரமும் வழிந்து விடுவேன் என்றது. தமையனைப் பார்வையில் கெஞ்சினாள் அவள்.
"அம்மா! என்ன பேசறீங்கன்னு தெரிஞ்சு தான் பேசுறீங்களா? என்னைக்கோ வரப் போற கோடீஸ்வரனுக்காக நாளைக்கு வரப் போற மாப்பிள்ளை சாதாரணமா போயிட்டாரா உங்களுக்கு. பணத்தை விடுங்க, குணத்தில அவங்களை விட நம்ம எத்தனை படி கீழே இருக்கோம் தெரியுமா? அவளும் நீங்க பெத்த பொண்ணு தான் மா. தேவையில்லாமல் வார்த்தையை விட்டு அப்புறம் ஃபீல் பண்ணாதீங்க."
"நல்லா உரைக்கிற மாதிரி சொல்லு உங்க அம்மா கிட்ட.. அப்போதாவது செல்லப் பொண்ணைக் கண்டிச்சு வைக்கிறாளா பார்ப்போம். நானும் நிறைய தடவை சொல்லிட்டே இருக்கேன் தமா. நீ ஸ்வேதா வீட்டு மனுஷங்களை விமர்சிக்கிறது நல்லா இல்லை. நாளைக்கு அவங்க சகஜமா இருந்தாலும், நம்ம பொண்ணு மனசு எப்படி இருக்கும்னு யோசிச்சு பாரு. இப்படி பேசிப் பேசி தான் உன் பையன் விஷயத்தில என்ன ஆச்சு?"
"ஹூக்கும்…" தோளில் இடித்துக் கொண்ட தமயந்தியைப் பார்த்து பெருமூச்சு விடத் தான் முடிந்தது அவரால்.
தந்தையின் குரல் கேட்டு எழுந்து நின்ற அரவிந்தன் அவரருகில் சென்று அணைத்துக் கொண்டான்.
"ஜர்னி எல்லாம் எப்படி இருந்தது அரவிந்த். ஜெட் லாக் இருக்கா? உன்னால அலைய முடியுமா? ரெஸ்ட் எடுக்கணுமா?"
"பரவாயில்லை பா.. என்ன வேலைன்னு சொல்லுங்க.. செஞ்சிடலாம். இன்னும் நாலு நாள் தானே இருக்கு. மாதவனைப் பார்க்க வரேன்னு சொல்லி இருக்கேன். எப்போ வரலாம்னு கேட்கணும்."
"நானும் சம்பந்தியைப் பார்க்கணும். சாயங்காலம் வரேன்னு சொல்லி இருக்கேன். என் கூட வரலாம்னா வா.. இல்லை..நீ தனியா போகணும்னா மாப்பிள்ளை கிட்ட பேசிட்டு போயிட்டு வா.."
"அப்பா! நானும் உங்க கூடவே வரேன்.. அப்புறம்…."
"சொல்லு பா.. என்ன விஷயம், இவ்வளவு தயங்கற அளவுக்கு?"
"நாம போகும் போது ஸ்வேதாவையும் கூட்டிட்டு போகலாமா? மாதவன் பார்க்கணும்னு சொன்னார்" அடுத்த யுத்தத்திற்கான அடிக்கல்லை நாட்டிய தமையனை முடிந்த வரை முறைத்தாள் ஸ்வேதா.
*****
"சொல்லு ஹேமா, கல்யாண வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு? எல்லாம் வாங்கியாச்சு தானே, இன்னும் ஏதாவது பாக்கி இருக்கா?" என்று கேட்டபடியே உள்ளே நுழைந்தார் அருந்ததி. அவருக்கான பதில் மாதவனிடம் இருந்து வந்தது.
"ஹப்பா! கொஞ்சம் மூச்சு விட்டுக்கோங்க ஆன்ட்டி. முதல்ல இந்த காஃபியை பிடிங்க. குடிச்சிட்டு, எனக்கு ஹஸ்பண்ட் கேரக்டர் பண்ற தகுதி வந்திடுச்சான்னு சொல்லுங்க. விக்கி! நீயும் எடுத்துக்கோ.. லெஃப்ட்ல இருக்கு உன்னோட மசாலா சாய்.. யெஸ்.. யெஸ்.. அது தான்."
"ஹேய் மேடி! நீ கொஞ்சம் மூச்சை ஆழமா இழுத்து விடு மேன். முதல்ல பேச்சைக் குறை.. அது தான் ஹஸ்பண்ட் ரோலுக்கான முதல் அன்ட் முக்கியமான குவாலிஃபிகேஷன்." வாயைத் திறந்து தனது பொன்மொழிகளை உதிர்த்தான் விக்ரமன்.
"அட.. அட.. அட. யாருப்பா இது.. விசுவாமித்திரன் என்று பேரெடுத்த விக்கிரமாதித்த மஹாராஜா கல்யாணத்துக்கு தயாராகிட்டார் போல இருக்கே.. ஆன்ட்டி இவனை என்னன்னு கேளுங்க" விடுவேனா பார் என்று பேச்சை வளர்த்த மாதவனுக்கு பதில் வேறொருவரிடம் இருந்து வந்தது.
"எல்லாம் கேட்டாச்சு.. கேட்டாச்சு.." வாசல் பக்கம் வந்த குரலில்,
"இப்போ தான் ஆன்ட்டி கிட்ட கேட்கணும்னு நினைச்சேன். நீ முன்னாடி நிக்கிற. ஆயுசு நூறு தான் உனக்கு" என்று வைஜயந்தியை வரவேற்றான் மாதவன். அடுத்து இருவரும் சற்று நேரம் ஒருவரையொருவர் கலாய்த்துக் கொண்டனர்.
"என்னைப் பத்தி நீ… கண்டிப்பா நல்ல விதமா நினைச்சிருக்க மாட்ட.. மாது அண்ணா"
"என்னைப் போய்… என்னைப் போய்.. இப்படி சொல்லிட்டியே டா..அந்த அறுந்த வாலு வரலையா? அவளுக்கு ஜூஸ் எடுத்துட்டு வந்தேனே.. வேஸ்ட் டா போயிடுமேன்னு மட்டும் தான் நினைச்சேன்."
"உன்னை…" என்று பல்லைக் கடித்தவள், "அறுந்த வாலுன்னு சொல்லாத ணா" என்றாள்.
"பின்னே… ஓ.. இலை தழை எல்லாம் வாலுள்ள பிராணிகள் தானே மேயும். இனிமேல் மாத்திக்கிறேன்."
வைஜயந்தி அவனைத் துரத்த, கையில் ட்ரேயுடன் அவன் ஓட முடியாமல் விலகி நின்று விட்டான். அவனைத் துரத்தி வந்தவள் யார் மீதோ மோதி நின்று விட்டாள். வீட்டில் நடந்த காரசாரமான விவாதத்தின் பிறகு தான் மட்டுமே மாதவனைப் பார்த்து விடலாம் என்று வந்த அரவிந்தன் தன் மேல் மோதிய வைஜெயந்தியைத் தாங்கிக் கொண்டான்.
இவங்க இரண்டு பேருக்கும் மணி அடிச்சு, பல்ப் எரிஞ்சு அப்படி எல்லாம் ஏதாவது நடந்திடுமோ.. பார்க்கலாம்… ஆனால் அரவிந்தா உனக்குன்னு உங்க அம்மா பொண்ணு பார்த்து பண்ணின நிச்சயம் என்ன ஆச்சு.. அவ்வளவு சீக்கிரம் எல்லாம் மறந்து போகுமா உனக்கு.. எதுக்கும் இந்த பொண்ணை விட்டு சீக்கிரமே தள்ளி நில்லு..
'மாதவன் வீட்டுக்கு ஒரே பிள்ளை, உடன் பிறந்தவர் யாரும் இல்லை என்பது தெரியும். ஆனால் யார் இந்த பூச்செண்டு?' (அம்பது கிலோ பூச்செண்டா.. கொஞ்சம் ஓவரா தான் போறடா நீ) யோசித்துக் கொண்டே அவளைப் பார்த்தபடி நிற்க, வைஜயந்தியோ, 'யாருடா இந்த திருமலை நாயக்கர் மஹால் தூண்.. தூண்ல முட்டினா கூட இப்படி வலிக்காதே' என்று யோசித்துக் கொண்டு இருந்தாள். (இவளெல்லாம் விக்கியைப் பேசறா.. என்ன கொடுமை சார் இது!)
"அடடே! வாங்க வாங்க.. அரவிந்த்! அப்பா வரேன்னு சொல்லி இருந்தாங்களே?" என்று வரவேற்ற மாதவனின் கண்கள் அரவிந்தனின் பின்னே யாரையோ தேட, வைஜயந்தி தன்னுணர்வு பெற்றாள். அரவிந்தன் என்ற பெயரில், அவன் ஸ்வேதாவின் அண்ணன் என்று தெரிந்து கொண்டவள், மாதவனை ஓட்ட ஆரம்பித்தாள்.
"ஹை.. ஹை.. உன்னோட ஸ்வீட்டி.. ஸாரி.. ஸாரி.. என்னோட ஸ்வீட் ஸ்வேதா அண்ணி வரலையான்னு டைரக்டா கேளுண்ணா. அதை விட்டு அங்கிளை ஏன் இழுக்கிற?"
"உன்னை…" என்று அடிக்க வந்தவனிடன் இருந்த ட்ரேயை வாங்கிக் கொண்டு பொறுப்பான பெண்ணாக வைஜயந்தி உள்ளே செல்ல, மாதவன் அரவிந்தனைப் போர்டிகோவின் புறம் நகர்த்தினான். அரவிந்தனின் பார்வையோ வைஜயந்தியைப் பின்தொடர்ந்தது சென்றது. அன்று மட்டும் இல்லாமல், அடுத்து வந்த நாட்களிலும் மாதவன் - ஸ்வேதா திருமணத்திலும் கூட அவன் பார்வை வைஜயந்தியிடமே இருந்தது.
இதைப் பார்த்த தாமோதரனின் மனம், 'இனிமேலாவது என் பையன் வாழ்க்கையை நல்ல படியாக அமைத்துக் கொடு பெருமாளே!' என்று வேண்டிக் கொண்டது.

Author: SudhaSri
Article Title: ஆடுமடி தொட்டில் இனி - 5
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.