ஆடுமடி தொட்டில் இனி - 7
ஸ்விட்சர்லாந்து நாட்டின் லொசேன்(Lausanne). மேற்கு ஐரோப்பாவின் மிகப்பெரிய ஏரியான லேக் ஜெனீவாவும் (பிரெஞ்சு மொழியில் Lac Léman) கண்ணுக்குக் குளிர்ச்சியாக எங்கெங்கும் காணப்படும் பசுமையும் உடைய ஒரு பிரமிக்க வைக்கும் நகரம்.
ஒலிம்பிக்கின் தலைநகரான லொசேன், அதன் கல்வி மற்றும் ஆராய்ச்சி வசதிகளுக்கு புகழ்பெற்ற மையமாகும். விளையாட்டு, கலாச்சாரம், தொழில்நுட்பம், மருத்துவ ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம் ஆகிய உலகங்கள் அனைத்தும் ஒன்றிணையும் ஒரு தனித்துவமான சூழலை உருவாக்கி, ஒலிம்பிக் இயக்கத்தின் செயல்பாடுகளால் நிரம்பியுள்ளது.
ஐரோப்பாவின் பசுமையான நகரங்களில் ஒன்றான லொசேன் "உலகின் சிறந்த சிறிய நகரம்" (200,000 க்கும் குறைவான மக்கள்) என்று மதிப்புமிக்க மோனோக்கிள் பத்திரிகையால் பெயரிடப்பட்டது.
லொசேன் சுவிஸ் பீடபூமியின் தெற்குச் சரிவில் கட்டப்பட்டுள்ளது, நகரத்தின் வடக்கு எல்லைக்கும் தெற்கு எல்லைக்கும் இடையே இடையே சுமார் 500 மீட்டர் (1,640 அடி). புதிதாக வருபவர்கள் எந்த உயரத்தில் இருக்கிறோம் என்ற கவனத்துடன் செயல்பட வேண்டும்.
ஜெனீவா ஏரியும் பனி படர்ந்த ஆல்ப்ஸ் மலைகளும், பிக்சர் பெர்ஃபக்ட் என்று சொல்வது போல் ஒரு தோற்றத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. ஜெனீவா ஏரிக்கரையில் அமைந்த லொசேன் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் நின்று கொண்டு தனது வின்டர் ஜாக்கெட்டில் கையை நுழைத்தபடி தூரத்தில் தெரிந்த ஆல்ப்ஸ் மலைகளை ரசித்துக் கொண்டு நின்றான் விக்ரமன்.
இந்த பல்கலைக்கழகம் சுவிட்சர்லாந்தில் இரண்டாவது பழமையான பல்கலைக்கழகமாகும், மேலும் உலகின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். புற்றுநோய் மருத்துவத்தில் உலகில் முதல் பத்து இடங்களுக்குள் இருந்தது.
விக்ரமன் அந்த ஊருக்கு வந்து இரண்டு நாட்கள் ஆகின்றன. மகளிர் நலத்துறையில் வெற்றிகரமாக மேற்படிப்பை முடித்திருந்தான். மகளிருக்கு ஏற்படும் புற்றுநோய் சம்பந்தமாக அவன் சமர்பித்த ஆராய்ச்சிக் கட்டுரை நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் மூலமாகவே புற்றுநோய் மருத்துவத்தில் தனது ஆராய்ச்சியைத் தொடர லொசேன் பல்கலைக்கழகத்தின் அனுமதியைப் பெற்றிருந்தான்.
வந்த முதல் நாளே மருத்துவத் துறைக்கான வளாகத்திற்குச் சென்று தங்கும் விடுதி பற்றிக் கேட்டு அறிந்தவன், ஒரு அறிமுகப் படலத்தை முடித்துக் கொண்டு வந்திருந்தான். ஆராய்ச்சியைத் தொடங்க இன்னும் ஒரு வாரம் இருக்க, ஊரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பி விட்டான்.
தூரத்தில் தெரிந்த ஆல்ப்ஸ் மலையின் பேரெழிலும் நடுங்கும் குளிரும், எல்லாரும் சொன்னதைக் கேட்டு கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கலாமோ என்று பெருமூச்சு விட வைத்தது. 'ஹூம்.. வந்த முதல் நாளே இப்படியாடா … இன்னும் நாலஞ்சு வருஷம் இப்படிப் பெருமூச்சு விட்டே ஆல்ப்ஸ்ல ஐஸ் கட்டி எல்லாம் உருகிடப் போகுது.. ஏற்கனவே குளோபல் வார்மிங்னு பாதி கரைஞ்சு போச்சு' மனசாட்சி மண்டையில் கொட்ட நினைவுகள் அவளைக் கடைசியாகச் சந்தித்த தினத்தை நோக்கி போனது.
அன்று வகுப்பறையில் பிறவியிலேயே ஏற்படும் கோளாறுகள் பற்றி எடுத்துக்காட்டுகளுடன் விவரித்துக் கொண்டு இருந்தான். அறிவியல் முன்னேற்றம் அடைந்த இன்றைய நிலையில் அனாமலி ஸ்கேன் என்பது பெரும்பாலான நகரங்களில் செயல்பாட்டில் உள்ளது. இருபதாவது வாரத்தில் ஸ்கேன் மூலம் முதுகெலும்பு குறைபாடுகள், உதடு பிளவு, சில அசாதாரண உடல் அமைப்பு, பெரிய அளவிலான சிறுநீரக கோளாறுகள் மற்றும் பெரிய இதய குறைபாடுகள் போன்றவற்றை கண்டு கொள்ள முடியும். சிலவற்றை குணப்படுத்த முடியும், சிலவற்றை உறுதியாக குணப்படுத்த முடியாது என்று தெரியும். இது தான் காரணம் என்று இல்லாமல் மரபணு, பெற்றோரின் வயது, பழக்கவழக்கங்கள், சூழ்நிலை, தாயின் உடல் நிலை என்று ஏகப்பட்ட காரணங்கள்.
அவன் சொன்னவற்றைப் பிராக்டிகலாக விளக்கவும் அன்று அருந்ததி மூலம் நடந்த பிரசவம் ஒன்று வழிவகுத்தது.
"இவங்க மிஸஸ்.கல்பனா, டீச்சரா இருக்காங்க. சவுத்ல இருந்து வந்திருக்காங்க. யூ ஸீ. கைஸ்..இந்த குழந்தை இவங்களுக்கு நாலாவது பேபி. பிறக்கும் போதே ஹார்ட்ல த்ரீ ரூம்ஸோட தான் பிறந்திருக்கு. இன்னும் ஒன் வீக்ல சர்ஜரி பண்ணி அதை ஃபிக்ஸ் பண்ண போறாங்க. இதுல உங்களுக்கு தெரிய வேண்டியது, இதுக்கு முன்னாடி இவங்களுக்கு பிறந்த எல்லாக் குழந்தைகளுக்கும் இதே ப்ராப்ளம் இருந்தது தான்."
"அது எப்படி சார் பாஸிபிள்? அப்போ அந்த குழந்தை எல்லாம்…?"
"யெஸ்… அந்த குழந்தைகள் எல்லாம் இப்போ இல்லை.. இன் ஃபேக்ட் இவங்களுக்கு மூன்றாவதா பிறந்த குழந்தை மூலமா தான் காரணத்தைக் கண்டு பிடிச்சிருக்காங்க. Yes, she only helped the science to find out the reason ( என்ன காரணம்னு கண்டுபிடிக்க அந்தக் குழந்தை தான் உதவியது)"
"கேன் யூ ப்ளீஸ் எலாபரேட் சார்!" முதன் முதலாக அவனது வகுப்பில் வாய் திறந்தாள் நியதி. மகளிர் மருத்துவத்தில் தான் தனது மேற்படிப்பு என்று என்றோ முடிவு செய்திருந்தாள் அவள்.
"அவங்களே சொல்லுவாங்க.. மேடம் இஃப் யூ டோண்ட் மைன்ட்.. உங்க எக்ஸ்பீரியன்ஸ் நிறைய பேருக்கு பாடமா இருக்கலாம். ப்ளீஸ்.."
"ம்ம்.. சொல்றேன்.. எனக்கு முப்பத்தைந்து வயசில் கல்யாணம் ஆகி உடனே முதல் குழந்தை. பொதுவாக, பிறந்த குழந்தைகள் எல்லாம் அம்மா கைக்குப் போனாளே பால் குடிக்க முயற்சி பண்ணுவாங்க. ஆனால் என் குழந்தை எப்போதும் தூங்கிட்டு, எதுக்கும் என்னைத் தொந்தரவு பண்ணாதேன்னு இருந்தது. ஒரு மாசம் கழிச்சு பேர் வைக்கிற அன்னைக்கு, முதல் முறையா தலைக்கு தண்ணீர் ஊத்தினோம். உடம்பெல்லாம் ப்ளூ கலர்ல மாறி மூச்சுத் திணறி இறந்து போச்சு. தலைக்கு சீயக்காய் போட்டு தேய்ச்சதுல மூச்சு திணறல் வந்திருக்கலாம்னு சொல்லிட்டாங்க..
இரண்டாவது தடவையும் அதே மாதிரி ஆச்சு. அப்போ தான் டாக்டரை மாத்தினோம். இங்கே அருந்ததி மேடம் கிட்ட வந்தோம். அவங்க இது மரபணு சம்பந்தப்பட்ட பிரச்சினையா இருக்கலாம்னு சொல்லி மெடிசின்ஸ் கொடுத்தாங்க. மூனாவது குழந்தையை முதல்ல இருந்தே மானிட்டர் பண்ணிட்டு இருந்தாங்க. அனாமலி ஸ்கேன் பண்ணதுல ஹார்ட்ல ஏதோ பிரச்சினை, ஆனால் என்னன்னு தெரியலை. ஏழாவது மாசமே குழந்தையை எடுத்து…" கண்ணை மூடிக்கொண்டு அழுதாள் அந்தப் பெண். சற்று நேரத்தில் தானே சுதாரித்துக் கொண்டிருந்தாள்
"பிறந்த உடனேயே இறந்து போச்சு, அந்த உடம்பை லேபுக்கு அனுப்பி விஷயம் என்னன்னு கண்டு பிடிச்சாங்க. இன்னொரு குழந்தை பிறந்தாலும் இதே பிரச்சினை வரும், ஆனால் சமாளிக்கலாம்னு சொல்லி இதோ என் நாலாவது பொண்ணும்
இதயத்தில ஒரு சுவர் சரியான வளர்ச்சி இல்லாமல் பிறந்திருக்கா. ஹார்ட் சர்ஜன் முதல்லயே பார்த்துட்டதால குணப்படுத்த முடியும்னு சொல்லி இருக்காங்க. இதுவாவது தங்கணும்னு அந்த ஆண்டவனை வேண்டிட்டு இருக்கேன்.."
"நிச்சயமா மேடம்.. உங்க பொண்ணு நல்லா இருப்பா" என்றவன் நியதியைப் பார்க்க, அவளது கண்கள் ததும்பி நின்றது. அருகில் இருந்த பெண் "ஷ்ஷ்.. நிதி!" என்று சொல்லிக் கொண்டு இருந்தாள்.
"ஒன் மோர் இம்பார்ட்டன்ட் திங், இவங்களுக்கு பிறந்த நாலுமே பெண் குழந்தைகள். பொதுவா, இந்த மாதிரி பிரச்சினை வர ப்ரெக்னன்சில பெண் குழந்தைகளோட சர்வைவல் ரேட் தான் ஜாஸ்தினு ஒரு சர்வே சொல்லுது. வுமன் ஆர் பார்ன் ஃபைட்டர்ஸ் யூ நோ!" நியதியைப் பார்த்த படியே அவன் சொல்ல அவள் அவசரமாக வேறு பக்கம் திரும்பிக் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
"நான் இன்னைக்கு சொன்னது ஒரு சாம்பிள் தான். இது மாதிரி கர்ப்ப காலத்தில நடக்கிற ஏகப்பட்ட பிரச்சினைகள் நிறைய பேருக்கு தெரியறதில்லை. தினம் தினம் புதுசு புதுசா ஒரு பிரச்சினை கண்டு பிடிக்கிறோம். ஆனால் அதுக்கான ரீசன்ஸ்… சொல்யூஷன்ஸ்.. எப்போ யார் கண்டுபிடிக்க? ப்ரீச் டெலிவரி பத்தி இருக்கிற நாலட்ஜ் அதுக்கு முன்னாடியே பிரெக்னன்ஸி பீரியட்ல வர்ற ஏகப்பட்ட பிரச்சினைகளைப் பத்தி இல்லை. டயாபடீஸ், அனீமியா மாதிரி சில விஷயங்கள் தான் வெளியே தெரியுது. மத்ததெல்லாம் கஸ்டமைஸேஷன் மாதிரி இருக்கு. டெவலப்ட் நேஷன்ஸ்ல இன்னும் டீப்பா ரிசர்ச் பண்ற நேரத்தில நம்ம ஊர்ல சிட்டீஸ்ல கூட நிறைய அவேர்நஸ் இல்லை. இந்த சப்ஜெக்ட்ல மேல படிக்க நினைக்கிறவங்க ப்ளீஸ் கன்சிடர் தி வெரைட்டி ஆஃப் சேலஞ்சஸ் ட்யூரிங் ப்ரெக்னன்சி."
உணர்ச்சி வசப்பட்டு பேசியவன் சற்று நிதானித்தான். "ஓகே கைஸ்! ஆல் தி பெஸ்ட் ஃபார் யுவர் எக்ஸாம்ஸ்.. சில புக்ஸ் நேம் கொடுக்கிறேன்.. எக்ஸாமுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்… வேற எந்த டவுட் வந்தாலும் டாக்டர் புருஷோத்தமனைக் கான்டாக்ட் பண்ணுங்க. இட் வாஸ் எ ப்ளஷர் டு ஹேண்டில் மை ஃபேவரைட் சப்ஜெக்ட் ஃபார் யுவர் க்ளாஸ். லெட் மீ டேக் லீவ்."
அனைவரையும் பார்த்துப் பொதுவாகப் புன்னகைத்து நடந்தவன், நியதியின் அருகில் வரும் போது நின்றான். இனிமேல் கல்லூரியில் பார்ப்பது கடினம். மேற்படிப்பு என்று போனால், வருடங்கள் ஓடிவிடும். எப்போது அவளைப் பார்ப்போம் என்று தோன்றிவிடவே, போய் வரவா என்பது போல அவன் தலை தானாக அசைந்தது. போய் வா என்று அவளும் பதிலுக்குத் தலையசைத்தாள்.
"ம்ம்.. ஸீ யூ லேட்டர்!" என்று முணுமுணுத்து விட்டு வேகமாக வெளியே சென்று விட்டான். ஏதோ ஒரு வகையில் தனது மனதை வெளிப்படுத்தி விட்டோம் என்ற திருப்தி அவனுக்கு. அதே உற்சாகத்துடன் இதோ ஸ்விட்சர்லாந்தில் வந்து நிற்கிறான்.
****
நியதியோ அன்று அவளது தோழியரிடம் மாட்டிக்கொண்டு விழித்தாள். ஆளாளுக்கு அவளை கலாய்த்த வண்ணம் இருந்தனர்.
"ஏய் கவனிச்சீங்களா டீ… அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்… அப்புறம்… என்னது டி மறந்து போச்சே.."
"ஏய் அது அப்படிக் கிடையாது டீ.. நீ ஏன் ராமாயண காலத்துக்கே போற.. கொஞ்சம் பக்கமா வா.. நான் பாடறேன் பாரு… ப்ரீத்ஸ் நீ கன்டிநியூ பண்ணு ஓகே" என்று அபிநயத்துடன் அவள் பாட
"சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி"
"என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக" ப்ரீத்தியானவள் அதைத் தொடர்ந்தாள்.
"இதுவும் பழசு தானே.. இன்னும்.. இன்னும்.. லேட்டஸ்ட்டா ஏதாவது வேணும்.."
"சே.. சே.. இது க்ளாசிக் ஹிட்.. இதை அடிச்சுக்க ஆளே கிடையாது யூ நோ. நம்ம ஆளுக்கும் இது தான் பிடிச்சிருக்கும்."
அவர்கள் விக்ரமனையும் விட்டு வைக்கவில்லை.
"இவளை விடுங்க டி.. இப்போ நம்ம விசுவாமித்திரனோட கண்டிஷன் எப்படி இருக்கும் தெரியுமா? சொல்லிட்டாளே அவ காதல… னு உலகம் மறந்து காரிடார்ல பாடிட்டே போகப் போறான்.. எதுக்கும் காரிடார்ல நடக்கும் போது வழுக்காமல் பார்த்துக்கணும்.."
"ஆனாலும் வாயைத் திறந்து இரண்டு பேரும் என்னைக்கு பேசுவாங்கன்னு தெரியலையே.."
"ம்… கல்யாணம் பண்ற அன்னைக்கு விடிய விடிய பேச வேண்டியது தானே…"
"என்ன டி நீ இப்படி சொல்லிட்ட… அன்னைக்கு விடிய விடிய…" சட்டென்று அவள் வாயைப் பொத்திய நியதி, "போதும் போதும்… இன்னைக்கு இதோட ஸ்டாப் பண்ணிக்கோங்க!" என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.
"இவ்வளவு கெஞ்சற… பொழைச்சுப் போ… இப்போதைக்கு கமா தான் போட்டு இருக்கோம்.. அதையும் ஞாபகம் வச்சுக்கோ…"
"கரெக்ட் டி… சிக்கின ஆட்டை பிரியாணி போடாமல் விடறதா… நெவர்…"
கலகலப்பாகப் பேசிக் கொண்டு இருந்த தோழிகள் நடுவே இருந்த நியதி வானத்தில் பறந்து கொண்டிருந்தாள். அவனுடைய ஒற்றைப் பார்வை அவளுக்கு ஒரு பதிலைச் சொல்லி அவனுக்காகக் காத்திருக்கலாம் என்று ஏற்கனவே எடுத்த முடிவை உறுதியாக்கியது..
'ஆனால், நிதி! அவன் எங்கேயோ பி.எச்டி பண்ணப் போறதா நியூஸ் வருதே.. இதுக்கு அப்புறம் எங்கே எப்படி பார்க்கிறது…' அவளது மூளை கேட்ட கேள்வியை இதயம் ஒதுக்கி விட்டது.. 'எப்போ வருவான் எப்படி வருவான்னு தெரியாது.. வரவேண்டிய நேரத்தில கரெக்டா வருவான்' என்று விக்ரமனை சூப்பர் ஸ்டார் ஆக்கிவிட்டது.
******
விக்ரமனிடம் ஒரு வித்தியாசத்தைக் கண்ட அவனது நண்பர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர்.
"டேய் விக்கி… என்ன டா விஷயம்.. மூஞ்சில இப்படி ஒரு வெளிச்சம்…"
"அதானே.. டேய்.. நீ இப்போ ஃபைனல் இயர் கிளாஸ்ல இருந்து தானே வர.. உன் ஆளு கிட்ட ப்ரோபோஸ் பண்ணிட்டியா.."
"அப்படியும் இருக்குமோ.."
"அப்படித்தான் இருக்கும்… இங்கே பாரு.. பையன் வெட்கப் படறான்.."
மூவரும் அவனை ஓட்டிக் கொண்டு இருக்க, விக்ரமன் அலட்டிக் கொள்ளாமல் தட்டில் இருந்த வடையில் பச்சை மிளகாயைத் தனியே எடுத்து வைத்துக் கொண்டு இருந்தான்.
"டேய்.. இவ்வளவு பேசறோம்.. வாயைத் திறந்து ஏதாவது சொல்லேன் டா.."
"என்ன டா சொல்லணும்?"
"அடப்பாவி.. நீயெல்லாம் ரொம்ப நல்லா வருவ டா.. உன் ஆளு கிட்ட ப்ரோபோஸ் பண்ணிட்டியான்னு கேட்டோம்… எங்களுக்கு ஒரு பதிலைச் சொல்லு தம்பி.."
"அப்படியெல்லாம் எதுவும் இல்லையே டா.. எதுக்கு உங்களுக்கு இப்படி ஒரு சந்தேகம்?"
"அடப் போடா… உனக்கெல்லாம் ஃப்ரண்டா இருந்து…."
"சரி… சரி… கோவிச்சுக்காதீங்க… அவ கிட்ட சொல்லிட்டேன்… ஆனால் சொல்லலை…"
"டேய்… எங்களைக் கொலைகாரன் ஆக்காதே சொல்லிட்டேன்…"
வேறு வழியின்றி விக்ரமன் நடந்த விஷயத்தைச் சொல்ல, நண்பர்கள் பார்த்த பார்வையில்… தட் கரடியே காரி துப்பிய மொமன்ட் அங்கே…
நண்பர்களின் கேலி கிண்டலுக்கு இடையே சம்பந்தப்பட்ட இருவரும், அடுத்தவர் மனம் தெளிவாக தெரிந்து விட்டது என்ற நிலையிலேயே சந்தோஷம் அடைந்தார்கள். நியதி இன்டர்ன்ஷிப்பை ஆரம்பித்து இருக்க, விக்ரமன் ஸ்விட்சர்லாந்து பறந்தான்.
*****
"குட்.. எல்லாமே நார்மலா இருக்கு.. வெயிட் தான் ஏறவே இல்லை. வாமிட்டிங் இருக்கா?"
"எங்க ஆன்ட்டி? அப்லோட் அன்ட் டவுன்லோட் சைமல்டேனியஸா நடக்குது. இந்த லட்சணத்தில எங்க இருந்து வெயிட் ஏறும்."
"மாதவா!.. நீ என்ன அவளுக்கு மவுத் பீஸா? ஸ்வேதா! வாமிட் பண்ணினாலும் பிரச்சினை இல்லை. சாப்பிடத் தான் செய்யணும்.."
"ஆமா.. அது பாட்டுக்கு அது.. இது பாட்டுக்கு.." அருந்ததி முறைத்த முறைப்பில் வாயை மூடிக் கொண்டான் மாதவன்.
"அஞ்சு மாசம் முடிச்சாச்சு. இனிமேல் தான் மேஜரா வெயிட் கெயின் ஆகும். ஸோ, நல்லா சாப்பிடு. பிடிச்சதைச் சாப்பிடு. உன்னோட பிரசன்ட் ஹெல்த் கண்டிஷனுக்கு ரெஸ்ட்ரிக்ஷன் எதுவும் தேவையில்லை. நானும் ஹேமா கிட்ட பேசறேன்."
"அத்தை எல்லாம் செஞ்சு தான் தராங்க ஆன்ட்டி. எனக்குத் தான்…."
"இட்ஸ் ஓகே.. நான் உன் மாமியாரை ஒன்னும் சொல்லலை. ஆனால் உன் உடம்பை கொஞ்சம் கவனி. நெக்ஸ்ட் வீக்ல இருந்து ப்ரீநேட்டல் கேர்க்கு வா. அங்கே சில எக்ஸர்சைஸ் எல்லாம் சொல்லிக் கொடுப்பாங்க. ரெகுலரா பண்ணு, வாக்கிங் போ.. அப்போ தான் டெலிவரி ஸ்மூத்தா இருக்கும்."
"ஓகே ஆன்ட்டி… அப்புறம்… மூவ்மென்ட் எப்போ தெரியும்?"
"இது வரைக்கும் எதுவும் தெரியலையா? மைல்டா இருந்திருக்கும். நீ நோட்டீஸ் பண்ணி இருக்க மாட்ட.. இனிமேல் பாரு… பேபி உள்ளுக்குளே ஃபுட்பாலே விளையாடும்"
"அதானே.. என் பொண்ணாச்சே எப்படி சும்மா இருப்பா… ஃபுட்பால் பேஸ்பால் எல்லாம் விளையாடுவா"
"மாதவா…. பொண்ணுன்னு நான் எப்போ சொன்னேன்.."
"நீங்க சொல்லவே வேண்டாம் ஆன்ட்டி.. அது பொண்ணு தான்.. "
"ஓகே.. அது உங்களுக்குள்ள.. நான் தலையிடலை.. வேறெதுவும் கேட்கணுமா.."
"இடத்தைக் காலி பண்ணுன்னு சொல்லிட்டீங்களே ஆன்ட்டி… சொல்லிட்டீங்களே… "
"உன் வாய் இருக்கே.. வாய்… ஏதோ எங்க மருமகளா இருக்கறதால சமாளிக்கிறா… ரொம்ப கஷ்டம் மா இவனோட.."
"ஆமா ஸ்வீட்டி.. ஆன்ட்டிக்கு ரொம்ப கஷ்டம்.. விக்கி எண்ணிப் எண்ணி பேசுவான்.. ஆனால் பேசும் போது நச்சுன்னு பேசிடுவான்… நான் தான் ஓட்டை வாய்.. அவங்களுக்கு சமாளிக்க முடியாமல் திணறுவாங்க.. ஓகே ஆன்ட்டி… ஏதோ ஈ ஓட்டிட்டு இருக்காங்களே கம்பெனி கொடுப்போமேன்னு பார்த்தேன்.. நீங்க என்னடான்னா விரட்டறீங்க.. நல்லதுக்கே காலம் இல்லை..நாங்க கிளம்பறோம்.."
பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு எழுந்தவனின் அருகில் வந்து முதுகில் ஒன்று போட்டார் அருந்ததி. "உனக்காக ஸ்பெஷலா டைம் ஃபிக்ஸ் பண்ணி வந்தா..நீ இதுவும் பேசுவ... இதுக்கு மேலேயும் பேசுவ.. கிளம்பு.. கேர்புல்லா டிரைவ் பண்ணு.. டேக் கேர் மா.."
"ஆன்ட்டி ஒன் மோர் திங்.. நான் ட்ராவல் பண்ணலாமா.. சேஃபா.."
"எங்க போகணும் ஸ்வேதா… இப்போ என்ன ட்ராவல்?"
"அது… அம்மா வீட்டுக்கு…"
"ஓ.. அது மேக்ஸிமம் டூ அவர்ஸ் ட்ராவல் தானே.. தாராளமா போகலாம்.. எதுன்னாலும் கான்டாக்ட் பண்ணு.. என் நம்பர் இருக்குல்ல.."
"யெஸ் ஆன்ட்டி.. நாங்க கிளம்பறோம்"
அமைதியாகக் காரை ஓட்டிக் கொண்டு இருந்தான் மாதவன்.
"என்ன மாது இது? எதுக்கு இந்த மௌன விரதம்"
"ஸ்வீட்டி! கண்டிப்பா அம்மா வீட்டுக்குப் போய் தான் ஆகணுமா? அதுவும் பதினைஞ்சு நாள்.. என்னைப் பார்த்தால் பாவமா இல்லையா உனக்கு? என்னை விட்டு உன்னால இருக்க முடியுமா?"
என்னால முடியாது என்றது அவன் மனது.
அவளது கர்ப்பம் உறுதியானது தெரிந்ததுமே தமயந்தி பெண்ணை அழைத்துச் செல்ல விரும்பினார். அவளது உடல் நலன் கருதி பிரயாணம் செய்ய வேண்டாம் என்று அருந்ததி சொல்லி இருக்க ஸ்வேதாவின் தாய் வீட்டு விஜயம் ஒத்தி வைக்கப்பட்டது. தமயந்தியும் அவ்வப்போது மகளிடம் நச்சரித்துக் கொண்டே இருந்தார்.
இப்போது ஐந்து மாதங்கள் முடிவடைந்த நிலையில் பதினைந்து நாட்களாவது அங்கே வரவேண்டும் என்று கட்டளை பிறப்பித்து இருந்தார். பதினைந்து நாட்களுக்கு தான் இவ்வளவு அலப்பறை…
அவனது மௌன விரதம் வீட்டிலும் தொடர பெரியவர்கள் பேசி முடிவு செய்து ஸ்வேதாவை அழைத்துச் செல்ல தமயந்தியும் தாமோதரனும் வந்து விட்டனர். மாதவன், அறைக்குள் உம்மென்று முகத்தைத் தூக்கி வைத்து உட்கார்ந்து இருந்தான்.
"மாது…"
"…"
"மாதுஊஊ உங்களைத் தான்…"
"….."
"டேய் .. மாதூஊஊஊஊ"
"அச்சோ! ஏன் டி இப்படி கத்தற… என் பொண்ணுக்குக் கஷ்டமா இருக்கும்.. நீ தான் என்னை விட்டுப் போறேங்கிற… அவ வெளியே வரட்டும்… அப்புறம் பாரு…"
"அது சரி… இப்போ எதுக்கு இப்படி உர்ருன்னு ரூமுக்குள்ளயே உட்கார்ந்து இருக்கீங்க.. அம்மா அப்பா வந்துருக்காங்க.. ப்ளீஸ்.. வெளியே வாங்க.."
"ம்ம்… வரேன்.. நீ போ.."
"பரவாயில்லை.. நீங்க வர்ற வரைக்கும் நானும் இங்கேயே இருக்கேன்.."
"…."
"ப்ளீஸ் மாது.. ஒன்லி ஃபிவ்டீன் டேஸ்… ஜஸ்ட் லைக் தட் போயிடும்.. நீங்க கொஞ்சம் சிரிச்சிட்டே வழியனுப்பி வைங்களேன்.. வேணும்னா நீங்க கூட வீக் எண்ட்ல அங்கே வரலாம்.. அரவிந்தன் இருக்கான்... உங்களுக்கும் பொழுது போகும்.."
"ம்ம்.. இப்பவே உன் கூட வந்துடவா?" என்றவன் அவளைத் தன் மடி மீது அமர்த்திக் கொண்டான்.. புடவையை விலக்கி, வயிற்றில் கை வைத்து அமைதியாக இருந்தான்.
"அம்மாவைக் கவனிச்சுக்கோ டா குட்டிமா.. அங்கே போனால் கொஞ்சம் இல்லை.. ரொம்பவே டென்ஷன் ஆகிடுவா.." என்றவனுக்கு வயிற்றில் ஒரு அசைவின் மூலம் பதில் கிடைத்தது.
"ஸ்வீட்டி! எனக்கு வருத்தம் எல்லாம் என் பொண்ணைப் பிரிஞ்சு பதினைஞ்சு நாள் இருக்கணுமேன்னு தான்... மத்தபடி நீ கிளம்பிட உடனே.. என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டான்னு பார்ட்டி வச்சிடுவேன்... நோ தங்கமணி என்சாய்னு... ஒரே என்ஜாய் தான்.. யூ நோ..."
"ஹூக்கும்… என்ஜாய்.. அதுவும் நீங்க... அதையும் பார்த்திடலாம்.."
"நானே தான்.." என்றவன் சீரியஸ் மோடுக்குப் போய் அறிவுரைகளை வாரி வழங்கினான்.
"நான் சொல்றதை பாஸிட்டிவ் நோட்ல எடுத்துக்கோ டா.. அம்மா வீட்டில யார் எது சொன்னாலும் பெரிசா ரியாக்ட் பண்ணாத.. அதே சமயம் மனசுக்குள்ளயும் வச்சுக்காத.. ஹெல்த் ஸ்பாயில் ஆகிடும்.. அப்பப்போ பேசு.. ஒழுங்கா சாப்பிட்டு ரெஸ்ட் எடு.. "
"மாது! என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன் இத்தனை அட்வைஸ்.. அம்மா வீட்டுக்கு தானே போறேன்.. நான் பார்த்துக்கிறேன்.. அம்மா கொஞ்சம் பேசுவாங்க தான்.. அதுக்காக என்னை கவனிக்காமல் இருக்க மாட்டாங்க.. யூ டோண்ட் வொர்ரி."
"அதுக்கில்ல டா..ஏதோ ஒரு இன்ஸ்டிங்க்ட்.. ஸம்திங் ராங்னு சொல்லுது.. என்னன்னு தெரியலை.. அதான்.. எதுக்கும் ராத்திரி அம்மா கிட்ட படுத்துக்கோ… எதுவானாலும், எந்த நேரம் ஆனாலும் என்னைக் கூப்பிடு.."
"என்ன நீங்க, இப்படி பயப்படற அளவுக்கு ஒன்னும் இல்லையே.. எனக்கு எல்லாமே நார்மல்னு ஆன்ட்டி சொல்லிட்டாங்களே!"
"பயம் எல்லாம் இல்லை டா.. எல்லா நேரமும் ஜாக்கிரதையா இருன்னு தான் சொல்றேன். ஓகே..டேக் கேர்.. வா கீழே போகலாம்.. உங்க அம்மா ஏற்கனவே எனக்கு லட்சார்ச்சனை பண்ணிட்டு இருப்பாங்க.. அது கோடியார்ச்சனையா மாறதுக்கு முன்னால போய்டுவோம்."
அவளது பதிலுக்குக் காத்திராமல் தடதடவென கீழே சென்று மாமியார் மாமனாரைத் தலையசைத்து வரவேற்றான். அது வரையில் மாடியையே பார்த்துக் கொண்டு இருந்த தமயந்தி டக்கென்று பார்வையை மாற்றிக் கொண்டார். நமட்டுச் சிரிப்புடன், "ஸாரி மாமா.. கொஞ்சம் வேலை இருந்தது.. அது தான் உடனே வர முடியலை" என்று தாமோதரனிடம் பேச ஆரம்பித்தான்.
"அதனால பரவாயில்லை மாப்பிள்ளை, எங்களுக்கும் இது போல.. இதை விட ஜாஸ்தியான வேலை எல்லாம் வந்திருக்கு. நீங்க தனி ஆளில்லை. என்ன சம்பந்தி நான் சொல்றது" மாப்பிள்ளையை வாரிய கையோடு புருஷோத்தமனைத் துணைக்கு அழைத்தார் தாமோதரன்.
"அதானே! இது ஜஸ்ட் சில நிமிஷம் தான்.. எங்களுக்கு நாள் கணக்கில கூட வேலை வந்திருக்கு" என்றார் புருஷோத்தமன் மனைவியைப் பார்த்துக் கொண்டே.
"ஹூக்கும்.. சம்பந்தி கிட்ட முக்கியமா பேசற விஷயம் தான் இது" முணுமுணுத்தபடி ஹேமா கணவனை முறைத்தார்.
"விவஸ்தை கெட்ட மனுஷன்!" என்று தமயந்தி மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டார். மாடியில் இருந்து இறங்கி வந்த ஸ்வேதா என்னவென்று தெரியாமல் பார்வையில் கேள்வியுடன் மாதவனைப் பார்த்தாள்.
"மாம்! உங்க மருமக என்னன்னு கேட்கிறா பாருங்க. நீங்க சொல்றீங்களா? இல்லை… நான் சொல்லட்டுமா?"
"போடா போக்கிரி! நீ வாம்மா ஸ்வேதா! சுவாமி கும்பிட்டு, சாப்பிட வா. நல்ல நேரம் முடியறத்துக்கு முன்னாடி கிளம்பணும். மெடிசின்ஸ் எல்லாம் எடுத்து வச்சிட்டியா? வேளா வேளைக்கு சாப்பிடு, வாந்தி வருதுன்னு சாப்பிடாமல் இருக்காதே…" என்று ஆரம்பித்து நீண்ட பட்டியல் கொடுக்க, தமயந்தி மகளையும் அவளது மாமியாரையும் வினோதமாகப் பார்த்தார். ஹேமா மகனையும் விடவில்லை.
"அவ பேக் எல்லாம் எடுத்து கார்ல வை மாதவா! எதுக்கும் அவளோட மெடிக்கல் ரெகார்ட்ஸ் ஒரு காப்பி அவ பேக்ல வை. அருந்ததி நம்பர் அவ மொபைல்ல இருக்கா பாரு.."
ஒரு வழியாக ஸ்வேதா தாய் வீடு கிளம்ப மாதவனுக்கு ஏதோ இனம் புரியாத எண்ணம் தோன்றி மனதைப் பிசைந்தது.

Author: SudhaSri
Article Title: ஆடுமடி தொட்டில் இனி - 7
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.