பாட்டும் நானே! பாவமும் நானே!
அலுவலகத்திலிருந்து களைப்புடன் வந்தவன், காபி குடிக்கும் நப்பாசையில், மனைவி சுஜாதாவைக் கூப்பிட்டேன்.
"சுஜாதா, சுஜாதா, சுஜா"
பதில்லை.
"வந்ததும் வராதுமா எதுக்கு இப்படி ஏலம் போடறீங்க" என்று கேட்டுக் கொண்டே தினமும் காபியுடன் வருபவள் இன்று காணோம். என்னாச்சு இவளுக்கு? மறுபடியும் சுஜா… ஆ.. ஆ!
"நான் காலேஜிலிருந்து வரும்போதே அம்மா வீட்ல இல்லப்பா. பக்கத்து வீட்டு ஆன்டி தான் சாவி குடுத்தாங்க" புத்திரசிகாமணி சித்தார்த் குரல் கொடுத்தான். குரலில் தெரிந்த கடுப்பு, அவனுக்கும் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தது.
"ஆகா, இன்னிக்கு காபி கட்டா"
பெருமூச்சு விட்டபடி” வெளியில் போய்க் குடித்துவிட்டு வரலாமா?” என்று நினைத்தேன்.
வாசலில் சத்தம் கேட்டது.
" தடதடவென" உள்ளே வந்த சுஜாதா, கைப்பையை கட்டிலில் தூக்கி எறிந்து விட்டு" பொத்"தென கட்டிலில் கோபத்துடன் அமர்ந்தாள்.
உட்கார்ந்த வேகத்தில் பூகம்பத்தில் நடுங்குவது போல் கட்டில் ஆடியது. இந்த மாதிரி பூகம்பங்களை நிறைய ஏற்கனவே பார்த்தவன் ஆதலால், பயப்படாமல் சாந்தமாய்,
" என்ன சுஜா, என்ன ஆச்சு?" என்றேன்.
"ஹும், என்ன ஆச்சு! மானம் போச்சு.”
“ ஹும், காப்பி இப்போதைக்கு இல்லியா?” மனதுக்குள் எழுந்த கவலையை மறைத்துக் கொண்டு, “ அச்சச்சோ! என்ன ஆச்சு” என்றேன், வருத்தத்தைக் குரலில் ஏற்றிக் கொண்டு.
“ இன்னிக்கு நம்ம அசோயேஷன் லேடீஸ் மீட்டிங்ல வர்ற மகளிர் தின விழா கொண்டாட்டம் பத்தி பேசறதுக்காக மீட்டிங் வெச்சிருந்தாங்க.
யார் யார் என்ன நிகழ்ச்சி பண்ணப் போறம்னு பேர் குடுக்கச் சொன்னாங்க. நான் டான்ஸ் பண்றதா சொன்னதும் அந்த ஒல்லிக்குச்சி உமா, "நீயா சுஜா டான்ஸ் ஆடப் போறே?" ன்னு சிரிச்சா. உடனேஅந்த ஜால்ரா ஜலஜா, "ஸ்டேஜ் தாங்குமா?"ன்னு கேட்டு கெக்கபிக்கேன்னு சிரிப்பு.
எதோ பெரிய ஜோக் கேட்ட எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்கறாங்க. கொஞ்சம் கூட நன்றியில்லாத ஜென்மங்க. நான் கொண்டு போன சமோசாவெல்லாம்"நல்லாருக்கு, நல்லாருக்கு, நீயேவா செஞ்சே" ன்னு நாக்கைச் சப்புக் கொட்டிட்டு சாப்டுட்டு, என்னையே கிண்டல் பண்றாங்க"
கோபத்துடன் விடாமல் பேசியதில் புஸுபுஸு வென மூச்சு வாங்கியது சுஜாதாவுக்கு.
சுஜாவை அழகு என்றெல்லாம் சொல்ல முடியாது. அதற்காக பார்க்கவே சகிக்காமல் இருப்பாள் என்றும் சொல்ல முடியாது. ஆனால் நன்றாக சமைப்பாள். கைபக்குவம், கைமணம் என்றெல்லாம் சொல்வார்களே, அத்தனையும் அவள் சமையலில் உண்டு. நன்றாக சமைப்பது போலவே நன்றாக சாப்பிடவும் செய்வாள். அது அவளைப் பார்க்கும் போதே நன்றாகவே தெரியும்.
நாங்களும் அதைத் தான் சாப்பிடுகிறோம் என்றாலும், எனக்கும், என் பையனுக்கும் உடல்வாகு அந்தமாதிரி. நாங்கள் இருவரும் சாதாரண உடல்வாகு. அது அவளுக்கு மகா கோபம் என்பது சமயத்தில் சித்தார்த்தைத் திட்டும் போது தெரியும். "அப்பா மாதிரியே தீசல் புத்தி. நல்ல புத்தி இருந்தா தானே சாப்பிடறது ஒட்டும், என்னை மாதிரி " என்று சொல்லிக் கொள்வாள். எதாவது சொல்லி நல்ல சாப்பாட்டை இழக்க விரும்பாததால், நாங்கள் வாயைத் திறக்க மாட்டோம்.
அவளைப் பார்க்கவே பாவமாக இருந்தது எனக்கு.
"போட்டும் விடு சுஜா. நீ நிஜமாவே டான்ஸ் கத்துக்கிட்டா, உடம்பு கூட குறையும். இப்ப என்னவோ புது டான்ஸ் வந்திருக்காமே, ஜும்பாவோ, என்னவோ. அது வேணா கத்துக்கோயேன்" என்றேன் அனுதாபத்துடன்.
"அப்படீன்னா, நான் குண்டா இருக்கேன்னு நீங்களும் சொல்றீங்களா?" கண்ணைக் கசக்க ஆரம்பித்தாள்.
" அடடா, இது என்ன புது வம்பு! அதைச் சொல்லும் தைரியம் எனக்குண்டா?” என்று மனதில் நினைத்தவாறு," சேச்சே! உன்னைப் போய் அப்படிச் சொல்வேனா! பெண்கள் கொஞ்சம் பூசின மாதிரி இருந்தா தான் அழகு " என்றேன்.
காபி குடிக்காமல் தலை வலிப்பது போல் இருந்தது. "அழுது தலைவலி வரவெச்சுக்காதே சுஜா. இரு. உனக்கும், எனக்கும் காபி கலந்து கொண்டு வரேன்"என்று எழமுயன்றதாக காட்டிக்கொண்டேன்.
" வேணாம், வேணாம், நானே கலக்கறேன். "என்று எழுந்தாள் சுஜாதா. என் தந்திரம் பலித்தது. என் காபி அவளுக்குப் பிடிக்காது. எனக்கும் பிடிக்காது என்பது வேற விஷயம்.
" இப்போ காபி கலக்கு. டான்ஸ் கத்துட்டு, விழால கலக்கற. பத்மினி, வைஜயந்தி மாலா ரேஞ்சுக்கு உன்னை தேத்த நானாச்சு"என்று அவளை அனுப்பினேன்.
அம்மா உள்ளே போய்விட்டாள் என்று தெரிந்து கொண்ட பையன், எட்டிப் பார்த்து "அம்மா, எனக்கும் காபி" என்று குரல் கொடுத்தவன் என்னைப் பார்த்து, உதட்டைப் பிதுக்கி விழிகளை உயர்த்தி,
" யப்பா, தைரியம் தான்! பத்மினி…. வைவைஜயந்தி மாலா வா! உங்க தலையெழுத்து. காபிக்காக வாயக் கொடுத்து வாலண்டியரா மாட்றீங்க" என்றான், நடக்கப் போவதை அறிந்த மாதிரி.
காபியைக் கொடுத்த சுஜா, "ஏங்க, என்ன பாட்டுக்கு ஆடட்டும்?" என்றாள்.
நிஜமாகவே ஆடப் போகிறாளா? என்று கிலி தோன்றினாலும், அதை மறைத்துக் கொண்டேன்.
"என்ன பாட்டு பாடினாலும், நீ பாட்டுக்கு தான் ஆடப் போறே. எந்தப் பாட்டானால் என்ன?" என்று மனதில் தோன்றியதைச் சொல்லவா முடியும்.?
" பேசாம உனக்குப் பிடிச்ச பாட்டை, நீயே பாடி ரெகார்ட் செஞ்சு வெச்சுக்கோயேன்" என் நாக்கில் சனி. என்ன செய்ய!
பெண் பார்க்கப் போகும்போது அவள் பாடிய பாட்டை நிறுத்துவதற்காகவே, உடனே சம்மதம் சொன்னது ஞாபகம் வந்தாலும், அவளைச் சமாதானம் செய்வதற்காக எதோ சொன்னதை உண்மை என நம்பிவிடுவாள் என்று நினைக்கவில்லை.
" அப்படியா சொல்றீங்க. இதுவும் நல்ல ஐடியா. இரண்டு நிகழ்ச்சிக்கும் பேர் குடுக்கலாம். நாளையிலிருந்து முதல்ல பாடிப் பழகறேன். நல்லா பாடிட்டிருந்தேன். டச் விட்டுப் போச்சு" என்று எழுந்தாள்.
நன்றாய்த் தூங்கிக் கொண்டிருந்த போது, எலி ஒன்று எதிலோ மாட்டிக் கொண்டு'கிறீச், கிரீச்சென்று' அலறிய சப்தம் நாராசமாகக் கேட்டது.
சித்தார்த்தும் அதை கேட்டிருப்பான் போலிருக்கிறது. " அப்பா, ரொம்ப நாளா தப்பிச்ச எலி இன்னிக்கு எதிலோ மாட்டிகிச்சு. சீக்கிரம் எழுந்திரிச்சி வாப்பா. பிடிச்சிடலாம்" என்று கூறிக்கொண்டே வந்து எழுப்பினான்.
அவன் சாக்கு ஒன்றும், நான் கம்பு ஒன்றும் எடுத்துக் கொண்டோம். ஹாலுக்கு வந்தபோது சுஜாதா மொபைலை வைத்துக் கொண்டு என்னவோ செய்து கொண்டிருந்தவள், திரும்பினாள்.
இருவரும் சேர்ந்து வருவதை அதிசயமாகப் பார்த்தாள்.
" என்னவோ எலி கத்தின மாதிரி சத்தம்… " நான் முடிப்பதற்குள், சித்தார்த் ஜாடை காட்டியவாறே சாக்கை பின்னால் மறைத்து விட்டான். என்னவென்று புரியாவிட்டாலும் நான் கொம்பை மறைப்பதற்குள் சுஜா பார்த்து விட்டாள்.
"அம்மா தான் பாட்டு பாடறோம்னு நினைச்சி கத்திட்டு இருக்காங்க. எல்லாம் நீங்க செஞ்ச வேலை. நீங்களே சமாளிச்சுங்கோங்க.” சித்தார்த் முணுமுணுத்துவிட்டு நிமிஷமாய் மறைந்து விட்டான்.
கண்களில் கேள்வியுடனும், தன் சாதகம் நின்ற எரிச்சலுடனும், "என்ன பண்றீங்க?" என்ற கேள்வியுடனும் சுஜா முறைத்தாள்.
"வாக்கிங் போலாம்னு… 'நம்புவாளோ, மாட்டாளோ தெரியலையே' என்ற சந்தேகத்துடன் நிறுத்தி விட்டேன்.
“ இந்த நேரத்துக்கா? அப்பாவும், பிள்ளையும் சமைச்சதுக்குப் பிறகு தானே, எழுந்திருக்கவே எழுந்திருப்பீங்க! ” என்றவள்,” அப்படியே இருந்தாலும், அதுக்கு குச்சி எதுக்கு? " என்றாள் சந்தேகத்துடன்
" நாய், கீய் துரத்தாம இருக்கத் தான்…. "
எப்படியோ ஒழி என்ற பார்வையுடன் மறுபடி கத்த ஆரம்பித்தாள்.
இனி விழா முடிகிற வரை, வாக்கிங் போவது என்ற முடிவுடன் ஒரு மணி நேரம் கழித்து வீட்டிற்கு திரும்பி வந்தேன்.
சுஜா சமையலறையில் இருக்கிறாள் என்பது அங்கிருந்து வந்த வாசனையில் தெரிந்தது.
" சித்தார்த் எங்கே சுஜா?"
"ஸ்பெஷல் க்ளாஸ் இருக்குன்னு சீக்கிரமே கிளம்பிட்டான்"
இனி அவனுக்கும் ஸ்பெஷல் க்ளாஸ் இருக்கும்னு புரிஞ்சுது.
இரண்டு நாள் இருவரும் சீக்கிரமாக கிளம்பிப் போய், மெதுவாகத் திரும்பினோம்.
மூன்றாவது நாள் சித்தார்த் கோபமாக வந்தான். "அப்பா, அம்மாவை கிளப்பிவிட்டுட்டு வேடிக்க பாக்கறீங்களா? டிபன் கூட சாப்பிடாம ஓட வேண்டியதா இருக்கு. எதாச்சும் பண்ணுங்கப்பா. இன்னிக்கு லீவு வேற" என்றான்.
அன்று பூராவும் யோசித்ததில் ஒரு ஐடியா தோன்றியது. இப்போதைக்கு பாட்டை மட்டும் நிறுத்துவோம் என்று தோன்ற, "சுஜா, எனக்கு ஒண்ணு தோணுது. நீ பாடி, பழகி, அப்புறம் டான்ஸ் கத்துக்கறதுக்குள்ள விழா வந்திட்டா கஷ்டம். நீ முதல்ல யூடியூப்ல எதாவது நல்லா பாட்டா தேடி, டான்ஸ் ஆடிப் பழகிக்கோயேன். எப்படியும் பாடிட்டு ஆட முடியாதே" என்றேன்.
ஒத்துக் கொள்ளாவிட்டாலும், பாடியது எப்படி என்று அவளுக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். சரியென்று ஒத்துக் கொண்டாள்.
மறுநாளிலிருந்து டான்ஸ் ஆரம்பமானது. நல்லவேளையாய், எதிரில் ஆடக் கூச்சமாக இருக்கிறது என்று அறையிலேயே டான்ஸ் பிராக்டிஸ் வைத்துக் கொண்டாள். அதிலும் நல்லவேளையாய் நாங்கள் இருப்பது தரைத்தளம் என்பதால் அடுத்த கவலையும் விட்டது.
விழா நாள் அன்று அவளுடைய ஒன்றுவிட்ட அண்ணன் பெண்ணுக்கு மதுரையில் கல்யாணம். யாரும் போகாவிட்டால் நன்றாக இருக்காது என்று முதல்நாளே நான் கிளம்பி விட்டேன்.
மறுநாள் திருமணம் முடிந்து நான் வீட்டுக்கு வந்தபோது, சுஜாதா தூங்கிக் கொண்டிருந்தாள். சத்தம் கேட்டு கண்விழித்தாள்.
எப்போதும் எங்காவது விழாவுக்கு போய்விட்டு வந்தால், எப்படி நடந்தது என்று விசாரிப்பாள். இன்று முகம் சோர்வாக இருந்தது. எதுவும் கேட்கவில்லை. விழாவில் ஆடவேண்டாம் என்று சொல்லிவிட்டார்களோ? என்று நினைத்துக் கொண்டே, "பங்க்ஷன் நல்லா நடந்ததா சுஜா? நீ டான்ஸ் ஆடினயா? எல்லாரும் விழுந்து விழுந்து பாராட்டியிருப்பாங்களே" என்றேன்.
"க்கும், அதுக்கு முன்னாலேயே அம்மா தான் விழுந்துட்டாங்களே" கையில் எதையோ வைத்து ஆற்றியவாறு வந்த சித்தார்த், "இந்தாம்மா, ஹார்லிக்ஸ் குடிச்சுட்டு படுத்துக்கோ "என்று அம்மாவிடம் டம்ளரை நீட்டினான்." நீ ஹார்லிக்ஸ் குடிக்கறயாப்பா? இன்னும் ஒருவாரம் அம்மா ரெஸ்ட்ல இருக்கணும்னு டாக்டர் சொல்லியிருக்கார் " என்றான்.
" என்னாச்சுடா அம்மாக்கு? " என்றேன் கவலையுடன் .
டான்ஸ் ஆட ஸ்டேஜில் வேகமாக ஏறும்போது, குறுக்கும் நெடுக்குமாக இருந்த ஒயரில் விரல் மாட்டி கீழே விழுந்ததில், சுண்டுவிரலில் ஹேர் பிராக்சராம். சுண்டுவிரலில் கட்டுப்போட்டு விட்டு ஒருவாரம் ரெஸ்ட் எடுத்தால் போதும், பலத்த அடி ஒன்றும் இல்லை என்றும் டாக்டர் சொன்னாராம்.
என் துக்கம் இன்னும் ஒரு வாரத்திற்கு நல்ல சாப்பாடோ, காப்பியோ கிடையாது என்பதற்காகவா? சுஜாவுக்கு அடிபட்டு, டான்ஸ் ஆட முடியாமல் போய் விட்டதே என்பதற்காகவா? எனக்கே தெரியவில்லை.
இருந்தாலும், அவளைப் பார்க்க பாவமாய்த் தான் இருந்தது. ஆசையாய் டான்ஸ் பிராக்டிஸ் பண்ணிக் கொண்டிருந்தாளே.
"போனா போகட்டும் சுஜா. கால் சரியானதும், டான்ஸ் க்ளாஸ் எதுலயாவது சேர்த்து விடறேன். எனக்கும், சித்துவுக்கும் தினமும் ஆடிக்காட்டு" என்றேன்.
சுஜாவின் முகம் பூவாய் மலர்ந்தது. சித்தார்த்'விருட்' என்று தலையைத் தூக்கி என்னைப் பார்த்த பார்வையில் கொலைவெறி தெரிந்தது.

Author: VedhaVishal
Article Title: 43 -பாட்டும் நானே! பாவமும் நானே! - சுபாஷிணி
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.