சிலிண்டர் சிநேகிதங்கள்
யாழ்ப்பாணத்து வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. கந்தசாமி ஐயாவின் வீட்டு விறாந்தையில் ஒரு போர்க்களமே நடந்து கொண்டிருந்தது. தீர்ந்து போய் இரண்டு நாட்களாகிவிட்டது. கந்தசாமி ஐயாவின் மனைவி செல்லம்மா, காலி சிலிண்டரை விறாந்தையில் உருட்டி விளையாடிக்கொண்டிருந்தார். எங்கே அது தன் தலையில் வந்து விழுந்து விடுமோ என்ற பயத்தில் அடிக்கடி மனைவி பக்கம் பார்வையைத் திருப்பிக் கொண்டிருந்தார் கந்தசாமி.
"இஞ்சருங்கோ... நீங்க பாக்கிற வேலை கொஞ்சம் கூட நல்லா இல்லைச் சொல்லிப்போட்டன். பேப்பர் பார்த்துக்கொண்டு இருந்தா சோறு தானா வரும் என்ற நினைப்போ? பக்கத்து வீட்டுப் பொன்னம்பலம் நேற்று இரவு முழுக்க 'ஷெட்டில' நின்றவராம். அவருக்கு காஸ் கிடைச்சிட்டுது. நீங்கள் இன்னும் இந்த பழைய பேப்பரில இருக்கிற அரசியலைப் பார்த்துக் கொண்டிருக்கிறீங்கள்!" என்று செல்லம்மா சீறினார்.
கந்தசாமி ஐயா மெதுவாகப் பேப்பரை இறக்கினார். "அடி செல்லம்மா, பொன்னம்பலத்துக்கு சின்ன வயசு, நிண்டிருப்பான். என்னை இந்த எழுபது வயசில போய் ரோட்டில கிடக்கச் சொல்லுறியே... இது நியாயமே? உன்ர அருமந்த புத்திரனுக்குப் போய் வாங்க ஏலாதாமோ?"
"என்ர பிள்ளையைக் குறை சொல்லாட்டில் உங்களுக்கு விடியாதே.. அவன் கியூவில போய் நிண்டால் அவன்ட உத்தியோகத்தை நீங்கள் போய்ப் பார்ப்பியளோ.. வயசாவது மண்ணாங்கட்டியாவது! ஒழுங்கா அந்தச் சிலிண்டரைத் தூக்கிக்கொண்டு போய் 'கியூவில' போடுங்கோ. இல்லை எண்டா, இனிமேல் இந்த வீட்டில அடுப்பு எரியாது. இந்த வெயிலுக்க என்னால விறகு அடுப்புக்கு முன்னால நின்று வேகேலாது. அதை ஊதி ஊதி மூச்சு வாங்க இந்த வயசில என்னால ஏலாது சொல்லிப் போட்டன்..”
வேறு வழியின்றி, கந்தசாமி ஐயா தனது பழைய லுமாலா சைக்கிளைத் தூக்கினார். பின்னால் சிலிண்டரை ஒரு கயிறு போட்டு இறுக்கமாகக் கட்டினார். யாழ்ப்பாணத்து ஒழுங்கைகளுக்குள்ளால் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு எரிவாயு விநியோகஸ்தர் கடைக்கு முன் சென்றபோது, அங்கே ஒரு மகாபாரதப் போரே நடந்து கொண்டிருந்தது.
கடைக்கு முன்னால் ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு சிலிண்டர்கள் படுத்திருந்தன. மனிதர்கள் மரநிழல்களிலும், அருகிலிருந்த கடை விறாந்தைகளிலும் தஞ்சம் புகுந்திருந்தார்கள். கந்தசாமி ஐயா தனது சிலிண்டரையும் வரிசையின் கடைசியில் வைத்தார்.
"என்ன ஐயா... இப்பதான் வாறியளோ? விடிய நாலு மணிக்கே லோட் வரும் எண்டு சொன்னவை. நாங்கள் எல்லாம் மூண்டு மணிக்கே வந்திட்டம். நீங்கள் என்ன ஆடிப்பாடி இப்ப வாறீங்கள்? இப்ப மணி பத்து ஆகுது, ஆனா இன்னமும் சிலிண்டர் வாறதுக்கான ஒரு அறிகுறியையும் காணேல்ல!" என்றான் அவருக்கு முன்னால் நின்றிருந்த இளைஞன். அவன் கையில் ஒரு ஸ்மார்ட்போன்.
"என்ன தம்பி செய்யுறது? வளவு முழுக்க விறகு கிடக்குது. அதை வைச்சு எரிக்கட்டும் என்று நான் பேசாமல் இருந்திட்டன். ஆனால் வீட்டில 'ஹோம் மினிஸ்டர்' போட்ட உத்தரவு. சிலிண்டர் இல்லாமல் வீட்டுக்குள்ள வராத எண்டு!" என்று சிரித்துக்கொண்டே சொன்னார் கந்தசாமி.
அங்கிருந்த சூழல் ஒரு திருவிழா போல இருந்தது. சிலர் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தார்கள். சிலர் ‘யூடியூப்’ பார்த்து அரசியல் விவாதம் செய்துகொண்டிருந்தார்கள். கந்தசாமி ஐயாவுக்குப் பக்கத்தில் ஒரு பெரியவர் கையில் ஒரு 'பிளாஸ்க்' உடன் அமர்ந்திருந்தார். அடிக்கிற உச்சி வெயிலுக்கும் தேத்தண்ணி குடிக்காமல் இருக்க முடியாத நபர் அவர் என்று பார்த்த மாத்திரத்தில் விளங்கியது.
"தம்பி, கொஞ்சம் தள்ளி இருங்கோப்பா... இந்தச் சிலிண்டர் உருண்டு போயிடப்போகுது," என்று அந்தப் பெரியவர் சொல்ல, கந்தசாமி ஐயா அவரோடு பேச்சுக் கொடுத்தார். அவர் பெயர் தம்பிதுரை. ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர்.
"என்ன தம்பிதுரை ஐயா, நீங்களும் இஞ்சதானா?"
"ஓமடாப்பா... மூண்டு நாளா இஞ்சதான் வாசம். வீட்டில இருக்கிறதுக்கு இஞ்ச இருக்கிறதுக்கு மேல தெரியுமோ . வீட்டில இருந்தால் மனுசிட நச்சரிப்பு.. அங்கேயும் கரண்ட் இல்லை, இங்கேயும் கரண்ட் இல்லை. ஆனா இஞ்ச சுத்தி நாலு பேர் கதைக்கவாவது இருக்கினம்!" என்றார் தம்பிதுரை.
மதியம் ஒரு மணி இருக்கும். எல்லோருடைய வயிற்றிலும் பசி தாளம் போட்டது. திடீரென ஒரு வதந்தி பரவியது: "இன்று காஸ் சிலிண்டர் லோட் வராது, நாளைக்குத்தான் வருமாம்!"
வரிசையில் நின்றவர்கள் கொதித்து எழுந்தார்கள். "என்னடா இது... காலையில வரும் எண்டாங்கள், இப்ப நாளைக்கு எண்டுறாங்கள்? இந்த சிலிண்டர்காரன் எங்களை மடையன் எண்டு நினைக்கிறானோ?" என்று ஒருவன் கத்தினான்.
அப்போதுதான் அந்தப் பகுதியின் ‘கியூ லீடர்’ போலத் தெரிந்த ஒரு நபர் முன்வந்தார். அவர் பெயர் 'கியூ' குமாரசாமி. "அடேய் தம்பிகளா, சத்தம் போடாதேங்கோ. லோட் வரும், ஆனா வராது. அதாவது லொறி வருகுது, ஆனா அது பக்கத்து டவுனுக்குப் போகுதாம். நாம மறிச்சு இஞ்ச இறக்கினால்தான் உண்டு!" என்றார் ரகசியக் குரலில்.
கந்தசாமி ஐயாவுக்கு இது ஆச்சரியமாக இருந்தது. "என்னப்பா சொல்லுறாய்? மறிக்கிறதாவது?"
"ஓம் ஐயா... இது 'கியூ தர்மம்'. நாம கஷ்டப்பட்டு நிக்கிறோம். லொறி எங்களைத் தாண்டிப் போகக்கூடாது!"
திடீரென தூரத்தில் ஒரு வாகனம் வரும் சத்தம் கேட்டது. வரிசையில் நின்ற நூற்றுக்கணக்கானவர்கள் அலறியடித்துக்கொண்டு வீதிக்கு வந்தார்கள். "நிப்பாட்டு... நிப்பாட்டு!" என்று சத்தம்.
ஆனால் வந்தது லொறி இல்லை, ஒரு பழைய தனியார் பஸ். அது புகையைக் கக்கிக்கொண்டு போக, எல்லோரும் ஏமாற்றத்துடன் மீண்டும் அமர்ந்தார்கள்.
மாலை நான்கு மணி இருக்கும். கந்தசாமி ஐயா ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டு எழுந்தார். கண்ணைத் தேய்த்துக்கொண்டு பார்த்தால்... அவர் சிலிண்டரைக் காணவில்லை!
"ஐயோ... என்ர சிலிண்டர்! எவன் தூக்கினான்? யாழ்ப்பாணத்தில இப்ப சிலிண்டர் திருடுற அளவுக்கு நிலைமை மோசமாகிட்டதா?" என்று பதறினார்.
பக்கத்திலிருந்த தம்பிதுரை சிரித்தார். "பயப்படாதீங்கோ ஐயா... கொஞ்சம் பேர் வீட்ட போய்ட்டாங்கள். வரிசை முன்னுக்குப் போச்சு. உங்கட சிலிண்டரை நான்தான் மெதுவா முன்னுக்குத் தள்ளிக்கொண்டு போனனான். நீங்க நல்ல நித்திரையில இருந்தீங்கள்!"
கந்தசாமி ஐயாவுக்கு உயிர் திரும்ப வந்தது. "நன்றி ஐயா... இந்த காலத்தில பொன்னையும் பொருளையும் கூட விட்டுட்டுப் போகலாம், ஆனா இந்தத் தகர சிலிண்டரை மட்டும் கண்ணு முன்னாடியே வச்சிருக்கோணும்!"
இரவு நெருங்கியது. இன்னும் கேஸ் வந்தபாடில்லை. வீடுகளில் இருந்து ஆளாளுக்கு சாப்பாடு கொண்டு வந்தார்கள். ஒருவன் 'பாண்' வாங்கிக்கொண்டு வந்தான். இன்னொருவன் வீட்டில் இருந்து புட்டும் சம்பலும் கொண்டு வந்தான். எல்லோரும் பகிர்ந்து சாப்பிட்டார்கள்.
"பாருங்கோ தம்பிதுரை ஐயா... இந்த தட்டுப்பாடு எங்களை அந்தக்காலம் மாதிரி ஒரு குடும்பமா மாத்திட்டுது. முந்தி பக்கத்து வீட்டில யார் இருக்கினம் எண்டே தெரியாது. இப்ப கியூவில நிக்கிற எல்லாரோட ஜாதகமும் எங்களுக்குத் தெரியுது!" என்றார் கந்தசாமி.
தம்பிதுரை ஆதங்கப்பட்டார். "உண்மைதான் ஐயா. ஆனா இந்தச் சந்தோஷம் சிலிண்டர் கிடைச்ச உடனே முடிஞ்சுடும். அப்புறம் பெட்ரோல் கியூவில தான் சந்திக்கோணும்!"
பேச்சு பெட்ரோல் பக்கம் திரும்பியது. "பெட்ரோல் கியூ இதைவிடக் கொடுமை ஐயா," என்றார் ஒரு இளைஞன். "என்ர மோட்டார் சைக்கிளுக்குப் பெட்ரோல் அடிக்கப் போய், மூன்று நாள் கியூவில நிண்டேன். கடைசியில என்ர முறை வரும்போது, 'ஸ்டொக் அவுட்' (Stock Out) எண்டு போர்டு போட்டுட்டான். ஆத்திரத்துல அந்தப் போர்டையே அடிச்சு உடைக்கலாம் எண்டு போனேன், ஆனா கையைத் தூக்கக்கூட உடலில் தெம்பு இல்லை. பசியில மயங்கி விழுந்துட்டேன்!"
கந்தசாமி ஐயாவுக்குத் தனது பழைய சைக்கிள் மேல் ஒரு பெரிய மதிப்பு வந்தது. "நல்ல காலம்... நான் இந்த சைக்கிளோட நிக்கிறேன். இதற்குப் பெட்ரோலும் தேவையில்லை, கியூஆர் கோட்டும் தேவையில்லை. ஒரு கால் மிதி இருந்தா போதும்!"
இரவு எட்டு மணி இருக்கும்போது, ஊரே அதிரும் வகையில் அந்த நீல நிற லொறி வந்தது. எல்லோரும் 'ஓ'வென்று கத்தினார்கள். ஜே ஜே என்று கூட்டம். பொலிஸ்காரர்கள் வந்து வரிசையைச் சரி செய்தார்கள்.
"எல்லாரும் உங்கட கியூஆர் கோட்டை எடுங்கோ! சண்டை போடாதேங்கோ!" என்று பொலிஸ் அதிகாரி சத்தம் போட்டார்.
கந்தசாமி ஐயாவின் இதயத் துடிப்பு அதிகரித்தது. 'அப்பாடா... இண்டைக்கு ஒரு வழியா செல்லம்மாவுக்குச் சோறு சமைக்கக் காஸ் கிடைச்சிடும்!' என்று நினைத்தார். வரிசை மெதுமெதுவென நகர்ந்தது.
கந்தசாமி ஐயாவின் முறை வந்தது. "இந்தாங்கப்பா கோடு," என்று தனது போனை நீட்டினார்.
கடைக்காரர் ஸ்கேன் செய்துவிட்டு, "ஐயா... உங்கட கோர்டுல 'ஏற்கனவே பெற்றுக்கொள்ளப்பட்டது' எண்டு வருதே?" என்றார்.
கந்தசாமி ஐயா அதிர்ந்து போனார். "என்னப்பா சொல்லுறாய்? நான் மூணு நாளா அடுப்பு எரியாமத் தவிக்கிறேன். இப்பதான் வாரேன்!"
பின்னால் நின்றவர்கள் கத்த ஆரம்பித்தார்கள். "சீக்கிரம் எடுப்பா... நேரம் ஆகுது!"
கந்தசாமி ஐயா யோசித்தார். திடீரென அவருக்குப் பொறி தட்டியது. "ஐயோ... காலையில என்ர மவன் அவசரமா போனை வாங்கிக்கொண்டு போனான். அவன் வேற எங்கேயாவது கியூவில நின்று எடுத்துட்டானோ தெரியலையே!"
உடனே மகனுக்குப் போன் போட்டார். "ஏன்டா தம்பி... நீ காஸ் எடுத்தனியா?"
மகன் கூலாகச் சொன்னான், "ஓம் அப்பா... நீங்க கியூவில கஷ்டப்படுவீங்கள் எண்டுதான் எனக்குத் தெரிஞ்ச ஒரு இடத்தில சொல்லி வைச்சு வாங்கிட்டேன். வேலை முடிஞ்சு வரேக்க அம்மாட்டயும் கொண்டு போய்க் குடுத்திட்டன். அம்மா சொன்னா நீங்களும் காஸ் வாங்கப் போய்ட்டியள் என்று. உங்களுக்கு போன் பண்ணினான், நீங்க போனை எடுக்கேல்ல.
கந்தசாமி ஐயாவுக்குச் சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை.
கந்தசாமி ஐயா தனது காலியான சிலிண்டரை மீண்டும் சைக்கிளில் கட்டினார்.
தம்பிதுரை கேட்டார், "என்ன கந்தசாமி... என்னாச்சு?"
"ஒண்டுமில்லை தம்பிதுரை... என்ர மகன் ஏற்கனவே வாங்கிட்டானாம். நான் அது தெரியாமல் இஞ்ச வம்பளந்து கொண்டு இருந்திருக்கிறன்!"
தம்பிதுரை சிரித்தார். "பரவாயில்லை ஐயா... குறைந்தது ஒரு நாள் முழுக்கப் பழைய நண்பர்களைச் சந்திச்ச திருப்தி கிடைச்சதுதானே?"
கந்தசாமி ஐயா சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினார். இரவு பதினொரு மணி. வீதி வெறிச்சோடிக்கிடந்தது. மின்சாரம் இல்லாததால் வீடுகள் இருட்டில் மூழ்கியிருந்தன.
வீட்டுக்குச் சென்றதும், செல்லம்மா எள்ளும் கொள்ளும் முகத்தில் வெடிக்க வரவேற்றார்.
"போன் அடிச்சா எடுக்காமல் அங்க யாரோட அலட்டிக் கொண்டிருந்தனியள்? மவன் ஒரு சிலிண்டரோட வந்தப்ப இருந்து எத்தினை தரம் ஹோல் பண்ணிருப்பன்.. எடுத்தால்தானே"
கந்தசாமி ஐயா கதிரையில் அமர்ந்தார். "அடி செல்லம்மா... காஸ் கிடைச்சதை விட, இண்டைக்கு அந்த கியூ வரிசையில இருந்த சந்தோஷம் இருக்கே... அது எங்கயும் கிடைக்காது மோனை. பெட்ரோல், டீசல், கேஸ் - இதெல்லாம் தட்டுப்பாடா இருக்கலாம். ஆனா மனுஷங்களிட்ட இருக்கிற அந்தப் பாசமும், ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்யுற குணமும் இன்னும் தட்டுப்பாடு ஆகல!" என்றார் தத்துவமாக.
"சரி சரி... பெரிய தத்துவம் கதைச்சுக் கதைய மாத்தாமல் வாங்கோ. மவன் வாங்கிட்டு வந்த காஸ்ல சூடா ஒரு தேத்தண்ணி போட்டுத் தாரேன், குடிச்சிட்டுப் படுங்கோ! அங்கணயே இரவுச் சாப்பாடும் முடிச்சிருப்பியளே.." என்றார் செல்லம்மா.
யாழ்ப்பாணத்து நிலவொளியில், அந்தத் தேத்தண்ணி கந்தசாமி ஐயாவுக்கு அமிர்தமாக இனித்தது. அடுத்த வாரம் பெட்ரோல் கியூவில் யாரைச் சந்திக்கலாம் என்ற யோசனையுடன் அவர் கண் அயர்ந்தார்.

Author: VedhaVishal
Article Title: 46 - சிலிண்டர் சிநேகிதங்கள் - அமுதயாழினி
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.