• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

50. பொண்ணு பாக்கப் போன குமாரு - பண்ருட்டி பரமசிவம்

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
452
16
43
india
பொண்ணு பாக்கப் போன குமாரு



“நந்தினி காபி எடுத்துட்டு வா “


ஹாலில் அமர்ந்தவாறு உள்ளே பார்த்து குரல் கொடுத்தார் பலராமன்.


“ தோ வரேன் டாடி “


என்றது கதவு.


டீப்பாய் மீது ஆப்பிள், ஆரஞ்சு, மல்லிகைப்பூ எல்லாம் சம்பிரதாயமாக காத்திருந்தது.


அருகில் சோபாவில் பெண் பார்க்க வந்த அம்புஜம் மற்றும் அவள் பையன் குமாரும் காத்திருந்தனர்.


காப்பிக் கோப்பைகளோடு நந்தினி வந்தாள்.


“ புடவைக்கு மேட்ச் ஆ

ப்ளவுஸ் ஓ கே ஆனா

சம்பந்தமே இல்லாம இதென்ன கைல பேன்டேஜ்? என்று பதறினாள் பங்கஜம்.


“கட்டு போட்டதே உங்க புள்ள தான் “ என்று சர்காஸ்டிக்காக சிரித்தாள் நந்தினி.


“டேய் உனக்கு கால் கட்டுபோட பெரியவங்க நாங்க ப்ளான் பண்ணா எங்களுக்கு தெரியாம நீ அவளுக்கு கை கட்டு போட்டிருக்க “


“ஆன்டி கால்லயும் கட்டு இருக்கு. புடவைல தெரியல “


“ஐயோ! என்னடி நடக்குது இங்க?”


குமார் அம்மாவை சமாதானப் படுத்துகிற மாதிரி தோளை ஆதரவாகத் தொட்டு “ ம்மா கூல் கூல் நானே சொல்றேன் “ என்று ஆரம்பித்தான்


@@@@@@


குல்பூஷன் கர்பந்தாவுக்கு திருமண் சாத்தி ஜீன்ஸ் மாட்டி விட்ட மாதிரி இருந்தார் ஆதிசேஷன்.


சாயங்காலம் ஆனால் அவரின் ஒரே லட்சியம் பேத்திக்காக வளர்த்து வரும் அல்சேஷன் நாயை நடை பயிற்சி கூட்டிப் போவது தான்.


ஆனால் அது இழுக்கிற இழுப்புக்கு அவர் ஓட வேண்டியது தான் காலத்தின் கட்டாயம்.


பக்கத்து வீட்டு பரமன் கூட “ என்ன அல்சேஷன் ஆதிசேஷன கூட்டிக் கிட்டு வாக்கிங் கிளம்பிட்டியா? “ என்று நாயைப் பார்த்து கிண்டலாக பேசுவார்.


வழக்கமாக ஆள் நடமாட்டம் இல்லாத வீதிகளில் தான் சேஷன்கள் வாக்கிங் போவார்கள்.


அன்றைக்கு

ஆதிசேஷன் ஜாதகத்தில் அஷ்டமத்து சனி இஷ்டத்துக்கு புகுந்து விளையாட மெயின் ரோடு பக்கம் போய் விட்டார். நிறைய டூ வீலர், கார்கள், பஸ் மற்றும் ஆள் நடமாட்டம் பார்த்ததும் அல்சேஷன் ட்ரில் சேஷனாக மாறி ஹை ஜம்ப், லாங் ஜம்ப் எல்லாம் முயற்சிக்க, ஆதிசேஷன் பயத்தில் பாதி சேஷன் ஆகி விட்டார். போவோர் வருவோர் எல்லாம் அவரை துஷ்டபார்வை பார்த்தது வேறு கஷ்டமாகி விட்டது.


புதிதாக ஆக்டிவா ஒட்டிப் பழகிய நந்தினிக்கு சனி எட்டாம் வீட்டுக்கு

நகர்ந்ததால் அவளும் வண்டி எடுத்துக் கொண்டு மெயின் ரோடு வந்து விட்டாள்.


சேஷன்கள் வரலாறு

பூகோளம் எதுவும் தெரியாத நந்தினி வண்டியை அந்த ஓரம் கொண்டு போக,

அல்சேஷன்

எகிறயதில் அல்லு விட்டு அவசரத்தில் ஒரு சைட் ப்ரேக் பிடித்து சறுக்கி விழுந்து முழங்கால் கைகள் சிராய்ப்போடு அவள் ஒரு பக்கம் வண்டி ஒரு பக்கம் ஓடி விழுந்தனர்.


ஐயோ என்று பதறி ஒடி வந்தவர்களில் குமாரும் இருந்தான்.


“அட இந்தப் பெண்ணோட போட்டோ காலையில் பார்த்தோமே” என்று மெலிதாக அதிர்ச்சி அடைந்தான்


அவள் அருகே சென்று “உங்களை வீட்டில் வந்து பார்க்கலாம்னு நினைச்சுக்கிட்டு இருந்தா “


அவள் திடுக்கிட்டு அவனைப் பார்த்து பின் மெலிதாக புன்னகைத்தாள்.


“பக்கத்துல இருக்குற பிரைமரி ஹெல்த் சென்டர்ல நர்ஸ் எனக்கு தெரிஞ்சவங்க வாங்க ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிட்டு அப்படியே உங்களை வீட்டுக்கு அனுப்பி விடுறேன் “


இருவரும் வண்டிகளை தள்ளிக் கொண்டு நடந்தார்கள்.


@@@@@@@@


“அப்ப ரோட்லயே பொண்ணு பாக்குற வேலை முடிஞ்சு போச்சு “


“ஆமாம் ஆன்ட்டி “ என்று சொல்லி சிரித்தாள் நந்தினி.
 

Author: SudhaSri
Article Title: 50. பொண்ணு பாக்கப் போன குமாரு - பண்ருட்டி பரமசிவம்
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Haha
Reactions: Mrs Beenaloganathan

Mrs Beenaloganathan

Active member
Mar 21, 2025
265
19
43
46
Bangalore
பொண்ணு பார்க்கப் போன குமார்....

பாதையில் பார்த்தான் அவளை…
பதறி விழுந்த அந்த நொடி
பாதுகாப்பாய்
பிடித்தான் கைகளை…


பயந்து நின்ற பாவையின்
பார்வையில்
பாசம் மெதுவாய் பிறந்தது…

பாதம் காயம் கண்டவனுக்கு
பார்வை மட்டும் போதவில்லை…

பத்திரமாக கூட்டிச் சென்று
பாதுகாப்பாய் நிற்க
பட்டை கட்ட வந்தவனை
பாசத்தால் கைகட்டு போட…

பார்த்த அந்த சந்திப்பில்
புதிய கதையோ ஆரம்பம்…
பொண்ணு பார்க்க வந்த பயணம்
பாசம் நிறைந்த காதலானது… 💞