• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

51. முன்னாடி, பின்னாடி, காலம் மாறுமா சொல்லு கண்ணாடி - அக்னிபறவை

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
452
16
43
india
முன்னாடி, பின்னாடி, காலம் மாறுமா சொல்லு கண்ணாடி


கி.பி 1200 (முன்னாடி), என்ன ஒரே புகையாக இருக்கிறது. புகையை ஊதி விட்டுக் கொண்டே பார்த்தால் அட கல்பனா தேசத்து ராஜகுரு, நள்ளிரவில் நாட்டு மக்கள் மனநிலை மாற்றம் வேண்டி சிவபெருமானை நோக்கி யாகம் வளர்த்துக் கொண்டிருக்கிறார். அதே சமயம், 2026 (பின்னாடி) மந்தாரை தேசத்தில் ஒரு சொகுசு ஹோட்டலில், தேசத்தின் டாப் பொலிட்டிக்கல் ஸ்டிராட்டஜிஸ்ட் சஞ்சய், தனது லேப்டாப்பில் தனக்கு தேவையான விதத்தில் மக்கள் அரசியல் மனநிலை மாற்றம் பெறத் தேவையான திட்டத்தினை தயாரித்துக் கொண்டிருந்தான்.

திடீரென மின்னல் வெட்டியது! யாகத் தீயும், லேப்டாப் சார்ஜரும் ஒரு விசித்திர அதிர்வெண்ணில் மோத, ராஜகுரு நவீன கால ஹோட்டல் அறையிலும், சஞ்சய் புகை மண்டிய யாகசாலையிலும் கண் விழித்தனர்.


ராஜகுருவிற்கு குளிராக இருந்தது. தனது மேல் துண்டினை இழுக்க முற் பட்டவருக்கு அந்த வித்தியாசம் புலப்பட்டது. கீழே குழாய் அங்கி, மேலே ஒரு கையில்லாத சட்டை. குழப்பத்துடன் எழுந்து நடந்தவர் ஒரு கண்ணாடி முன்னாடி வந்தார். மழு மழுவென்று மீசை இல்லாத முகம். அதே நேரத்தில் எங்கோ தட்டுகிற சத்தம், திடுக்கிட்டு சத்தம் வந்த இடத்தில் பிடியை திருக, முன்னே ஒருவன். "தாங்கள் எமதூதரா?" என்றவாறே மயங்கி விழுந்தார் ராஜகுரு.



பின்னாடி: சஞ்சய், "டேய் சந்திரா, ஏசியப் போடுடா. ரொம்ப சூடா இருக்கு" என்றவன் ஒன்றும் மாறா நிலையில் வாயில் வண்ண வார்த்தைகளுடன் எழுந்து அமர்ந்தவன் "ஐயோ, நெருப்பு நெருப்பு, " கத்தியவனுக்கு அருகில் ஒரு குரல் கேட்டது. "ராஜகுருவே, அமைதி கொள்ள வேண்டும். அது யாகத்தீ தான், தாங்கள் சற்று மயங்கி விட்டீர்கள்". குரலை நோக்கி திரும்பியவன் "இது தான் சொர்க்கமா?" என்றவாறு மறுபடி மயங்கி விட்டான்.


முன்னாடி இந்திரன், மறுபடியும் மயங்கிய ராஜகுருவையும், பின்னாடி சந்திரன் மயங்கிய சஞ்சயையும் பார்த்து தலை சொரிந்து நின்றனர். இருவரையும் சமதரையில் கிடத்தி மறுபடியும் எழுந்திருக்க வைக்க சிறிது தண்ணீர் தெளித்தனர்.


முன்னாடி: ராஜகுரு உடலில் எழுந்த சஞ்சய்யை பார்த்த இந்திரன், உடனடியாக அவர் குழப்பத்தை நீ‌க்க எண்ணி "ராஜகுரு, தாங்கள் இன்னும் கல்பனா தேசத்தில் தான் இருக்கிறீர்கள். த‌ங்களு‌க்கு ஒன்றுமில்லை வெறும் மயக்கம்". அவனை கடுப்பாக பார்த்த சஞ்சய், "மயங்கி தானடா விழுந்தேன், பேர் சஞ்சய் ன்றதுனால, கல்பனா பேர் சொல்லி ஓட்டுறியா, எனக்கு நடுவுல எந்த பக்கமும் காணாம போகல, சந்திரன கூப்பிட்றா". முகம் வெளிறிய இந்திரன், "ராஜகுருவே, மன்னிக்க வேண்டும். தங்களுடைய மொழிவழமை மாறினாலும், தாங்கள் கூறுவதை அர்த்தப்படுத்திக் கொள்ளவே விளைகின்றேன். தங்கள் கட்டளையை சிரமேற் கொள்ள முற்பட்டாலும், இன்று அமாவாசை தினம், சந்திரனைப் கொண்டு வருதல் என்னால் இயலாத காரியம் குருவே " என்று அவர் காலில் விழுந்தே விட்டான்.

அவனைத் திட்ட வாயெடுத்த சஞ்சய் முன்னாடி ஒரு கண்ணாடி, பளபளத்த உலோகம் அவன் தாடி, மண்டை மேலே ஒரு கொண்டையுடன் வயதான முகத்தைப் பிரதிபலித்தது.

அவன் வாயிலிருந்து உதிர்ந்தது ஒரு கேள்வி "இது என்ன வருடம்?"


பின்னாடி: கண் விழித்த ராஜகுருவை கவலையாகப் பார்த்த சந்திரனை பார்த்தவர் அந்த பால்வடியும் முகத்தவன் எருமை போன்று இருந்தாலும் எருமையிலேறி வரும் பாசக்கயிறோன் அல்ல என விளங்கிக் கொண்டார். "குழந்தாய்" என அவனை விளிக்க, அவனோ "ஆமா சஞ்சய், எனக்கும் குழந்தை ஆய் போன மாதிரியே ஒரு ஸ்மெல் வருதுடா " அவன் முகத்தை புரியாது பார்த்த ராஜகுரு, "இது என்ன வருடம்?" என்றார்.


என்னடா சஞ்சய், நீ ஒன்னும் வருஷ கணக்கா மயங்கலை, வெறும் 30 வினாடிகள் மட்டுமே. இன்னும் அதே 2026 ல தான் இருக்கோம்.


ராஜகுரு "2026 ஆம் வருடம், என்னே இறைவனின் லீலை! அப்பனே"


"டேய், ங்கொப்பன் மவனே, ஒழுங்கா பேசுடா, நாளைக்கு மீட்டிங் வேற இருக்கு, பயந்து வருதுடா"


"நான் கூறுவதை சற்று அமைதியாக கேள் மகனே, 30 வினாடிகள் அல்ல, தோராயமாக 30 தலைமுறைகள் முன்பிருந்து நான் கூடுமாறி வந்திருக்கிறேன். நான் கல்பனா தேசத்து ராஜகுரு ஸ்ரீகண்டர்"


'டட்டடொய்ங்' இப்போது மயங்கியது, யெஸ் தட்ஸ் சந்திரன்.


முன்னாடி, பின்னாடி, இருசாராரும் ஒரு அன்டர்ஸ்டான்டிங்கிற்கு வந்தனர். அந்த கேப்பில் (gap) நாம் மயங்குவதற்கு முதல் இரண்டு பேருக்கும் என்ன பிரச்சினை ப்ளஸ் எப்படி இடம் மாறியிருப்பார்கள் என நாம் பார்த்து விடுவோம். (நான் சொல்லுவேன், நீங்க நம்பனும்)


இப்போது இருக்கும் பெரிய பிரச்சினை கல்பனா தேசத்தில் கலகம் விளைவிக்கும் குழுவினர் மன்னர் ஆட்சியை கலைக்க மக்கள் மனதில் குழப்பம் விளைவிக்கின்றனர். இது நடந்தால் இலகுவாக நாட்டை கைப்பற்றலாம் என எதிரி நாட்டு மன்னன் போர் தொடுக்க ஆயத்தம் செய்கிறான்.


மந்தாரை தேசத்தில் மக்கள் மத்தியில் குறித்த அமைச்சர் தொடர்பாக பரவிய வீடியோ மக்கள் மத்தியில் அவரது நற்பெயரை களங்கப்படுத்துகிறது. அதிலிருந்து அவரை வெளிக்கொணர திட்டம் தேவைப்படுகிறது.


இந்தப்பிரச்சினையில் தலை விண் விண்ணென்று தெறிக்க தடைகளை தாண்டி வின் பண்ண வழி தெரியா இருவரும் "ஆண்டவா, எங்களை இந்தப்பிரச்சினை இல்லா காலத்திற்கு அனுப்ப மாட்டாயா" என கத்த, இந்த நேரத்தில் கரெக்டா சிங்க்கான இறைவன் ரெண்டு பேரையும் நான்-சிங்க் டைம்ல கொண்டு போய் விட்டாருப்பா.


பின்னாடி: கன்னத்தில் கை வைத்து ராஜகுருவை பார்த்தவாறு அமர்ந்திருந்த சந்திரன் மைன்ட்வாய்சில் பாட்டு ஓடியது. கூடுவிட்டு கூடு ஜீவன் பாயும் போது...... எங்களுக்கு தாண்டா கலக்கிட்டு போகுது அவன் கவுண்டர் மைன்ட்வாய்சே தான். அதை அடக்கியவன், ரியல் வாய்சில்


"ராஜகுரு, நான் சொன்ன பிரச்சினைக்கு என்ன தீர்வு? "


ராஜகுரு: உனது நண்பன் இதற்கென்ன தீர்வு வைத்திருந்தானென தெரியுமா?


சந்திரன்: முதலில் அந்த வீடியோ டீப்ஃபேக் னு நிரூபிக்க ஆதாரம் எடுத்தாச்சு, அதைப்பற்றி ப்ரஸ் மீட்டிங்கில் சொல்வதோட, சோசியல் மீடியாவில் , ஃபேஸ்புக், இன்ஸ்டா எக்ஸ் எல்லாமே சரியான விபரத்தை காட்டுறதுக்கான அல்கோரிதம் உருவாக்குற வேலையும் ஒரு பக்கம் நடக்கும், மீடியா இன்ஃபுளுயன்சர் இதைப்பற்றி பாசிட்டிவ் விஷயங்களை பரப்புவாங்க என்று லேப்டாப் பார்த்து சொல்லிக் கொண்டே அவர் முகத்தைப் பார்த்தவன், பாடி புதுசு ஆனா உள்ள உள்ள ப்ரோக்ராம் பழசு என்று எரர் கோட் காட்டியது. உடனே அவன் ச்சாட் ஜிபிடி யாக மாறி ஓளவையார் கால ஃபைப் இயர் ஓல்டாக அவரை கருதி அனைத்தையும் ரிபீட்டு.


ராஜகுரு முகத்தில் ஓரளவு ஒளிவெள்ளம் பாய்ந்தது. சந்திரனைப் பார்த்து நல்லது, இந்த வியூகத்தை நான் மெருகேற்றுகிறேன் என்றவர் கேட்டதில் அவன் முகத்தில் ஃப்யூஸ் போனது.


முன்னாடி: ராஜகுருவின் திட்டங்களை அறிய முடியாமல் சஞ்சய் தானே செய்வது பற்றி யோசித்ததில் செய்யப்போவது பர்செப்ஷன் பாட்டல். "இந்திரன் முள்ளை முள்ளால் எடுக்கனும். சொல்லை சொல்லால் தான் அடிக்கனும்"


அதற்கெதற்கு என் கையை உடைக்கனும்? என்று தன்னை சுற்றி கிடந்த ஓலைச்சுவடிகளைப் பாவமாக பார்த்தான் இந்திரன்.


பாவம் அவனுக்கெங்கே தெரியப் போகிறது லேப்டாப்பின் டிலீட்டும், ரீடூ, அன்டூ, காப்பி பேஸ்ட் எல்லாம்.

அவனுக்குத் தெரிந்தென்னவோ காப்பி அன்ட் ரைட் மட்டும் தான்.


கலகக்காரர்கள் இருக்கும் இடமெங்கும் வாட்ஸ்ஆப்பில் ஃபார்வர்ட் ஆனது மெசேஜ் அதாவது உரிய ஓலைச்சுவடிகளை உரிய இடத்தில் கொண்டு சேர்த்தனர் ஒற்றர்கள்.


ஓலைச்சுவடியில் குறிப்பிட்டது உண்மையா என அறிய ஒன்று கூடினர் மக்கள், கலகக்காரர்களும் தான்.


பின்னாடி: ஓலைச்சுவடி கேட்ட ராஜகுருவை தாஜா செய்து அவர் சொன்னதை சோசியல் மீடியாவில் செய்தான் சந்திரன். அடுத்த நாள் லைவில் கரை புரண்டது.


முன்னாடி மற்றும் பின்னாடி ரெண்டுலயும் கூட்டமா இருக்கே என்னவா இருக்கும்?


கண்ணாடி ஒன்றாக காட்டுதே பாருங்க.


ஓலைச்சுவடியில் குறிப்பிட்டது:

உங்களுக்கு சொந்தமான சொத்து மன்னர் வசமுள்ளது. நாளை இந்த இடத்திற்கு வந்தால் திருப்பித் தரப்படும்.


சோசியல் மீடியாவில் குறிப்பிட்டது: உங்களுக்கு சொந்தமான பொருள் வீடியோவுடன் நாங்கள் பெற்றுக் கொண்டோம். நாளை லைவ்வாக இருந்தால் சேதாரமின்றி பெற்றுக்கொள்ளலாம்.


நேரில் வந்தவர்கள் முன்னாடி ஒரு அறை இருந்தது, வந்தவர்கள் ஒவ்வொருவராக உள்ளே சென்று வெளியே வர வேண்டும்.


லைவ்வில் வந்தவர்கள் லிங்க் திறந்து பார்த்தார்கள்.


உள்ளே இருந்தது ஒரு கண்ணாடி.

அதன்மேல் எழுதியிருந்தது:



"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு" (குறள் 423)


எந்த ஒரு தகவலாக இருந்தாலும், எந்த சோசியல் மீடியால வந்தாலும், கண்ணால பார்த்தாலும் காதுல கேட்டாலும் அதனுடைய உண்மையை தேடி அறிவதே அறிவு.


எப்போது ஒருநபர் கூட்டத்தோடு கூட்டமாகச் சிந்திப்பதை நிறுத்திவிட்டு, 'ஏன், எதற்கு, எப்படி' என்று ஆராயத் தொடங்குகிறானோ, அன்றுதான் அவன் உண்மையான சுதந்திரத்தைப் பெறுவான்."



இன்று உங்களை உங்களுக்குத் திருப்பி கொடுத்திருக்கிறோம். வதந்திகளில் தொலைந்து தொலைத்து விடாதீர்கள். மெய் காண்பதே எக்காலத்திலும் அறம்.


மின்னல் மறுபடியும் வெட்டியது.
 

Author: SudhaSri
Article Title: 51. முன்னாடி, பின்னாடி, காலம் மாறுமா சொல்லு கண்ணாடி - அக்னிபறவை
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Mar 21, 2025
265
19
43
46
Bangalore
முன்னாடி பின்னாடி காலம் மாறுமா சொல்லு கண்ணாடி.....

அருமை 👏🏻👏🏻👏🏻👏🏻💐🤩❤️

🪞 முன்னாடி – பின்னாடி – கண்ணாடி

முன்னாடி கேட்ட சொல்
மூலத்தைத் தேடும் மனம்
மெய்ப்பொருள் காண முயன்றால்
மாறாத உண்மை தெரியும்…


பின்னாடி வந்த காலம்
புதிதென தோன்றினாலும்…
பழையதே பிரச்சினை
பாதை மட்டும் மாறியது…

கண்ணாடி போல உலகம்
காண்பதையே காட்டும்
கேள்வி கேட்கும் கண்களில்
காரணம் தான் தெரியும்…


முன்னாடி மனிதன்
முயற்சியில் வாழ்ந்தான்…
பின்னாடி மனிதன்
பதிலில் தேடுகிறான்…



கண்ணாடி சொல்லும் உண்மை—
காலம் மாறினாலும்
காரணம் மாறவில்லை…
முன்னாடி பிரச்சினை
மூச்சாக இருந்தது…
பின்னாடி பிரச்சினை
முகமாய் நின்றது…

தீர்வு மட்டும்—
தீண்டாத உண்மை போல
எந்த காலத்திலும்
எப்போதும் ஒன்றே… 🪞✨
 
  • Like
Reactions: Agniparavai