சலனபருவம் - 2
கட்டிலில் படுத்துக்கொண்டு விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் குருபிரசாத். பக்கத்தில் கிடந்த அலைபேசி, தொடர்ந்து ஒலி எழுப்பி கொண்டே இருந்தது. "பார்த்த முதல் நாளே" என்று பாடிய ரிங் டோன் அழைத்தது யார் என்று காட்டிக் கொடுத்தாலும் அவனது கவனம் அதில் இல்லை. மனம் அலை பாய்ந்து...