• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

அத்தியாயம் - 21

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
506
44
43
india
அத்தியாயம் -21

புருஷோத்தமனும் அவன் ஆட்களும் மகதப்படையின் ஒவ்வொரு நகர்வையும் நெருக்கமாகக் கண்காணித்துக் கொண்டிருந்தனர். படையினர் தண்ணீரைத் தேட ஆரம்பித்த போது, அவர்களுக்குத் தங்காள் திட்டம் செயல்படுகிறது என்பது நிச்சயமானது. அவர்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான், படையைத் தண்ணீர் ஆதாரங்களிலிருந்து தொடர்ந்து தள்ளி வைப்பது.

படையினர் அதே திசையில் தொடர்ந்து நகர்ந்தால், இன்னும் நாற்பது யோஜனைகளுக்குள் எந்தத் தண்ணீரும் இல்லை; குறைந்தது இரண்டு நாட்கள் இன்னும் நடைபயணம். இடையில் சில சிறு நீர்நிலைகள் இருந்தாலும், படை அவற்றை கண்டுபிடிப்பது அபூர்வம். படையினர் நீர்நிலையை அணுகத் தொடங்கினால், அம்புகளின் மழையைப் பொழிந்து அவர்களைத் துரத்த வேண்டிய நிலை.

இந்தப் புள்ளியிலிருந்து, அவர்கள் படையின் நகர்வை நிழல்போல் தொடர்ந்து கண்காணித்து, அவசியமான போதுதான் தலையிட வேண்டும்.

படைக்குத் தீங்கு மிக வேகமாக அதிகரித்தது. தண்ணீரில்லா ஒவ்வொரு அடியும் வீரர்களைக் கோபப்படுத்தியது. தண்ணீர் தேட உத்தரவு இருந்தபோதிலும், பலரின் பொறுமை முற்றிலும் தீர்ந்தது.

சிசுபாலன் மீதமிருந்த ஐநூறுவீரர்களின் பலத்தை மதிப்பீடு செய்தபோது, அவர்களில் பெரும்பாலோர் அனுபவசாலிகள் என்பதால் மகிழ்ந்தான். ஆனால் அவன் கவனிக்காத ஒன்று, அவர்களின் அனுபவம் பெரும்பாலும் தோல்விகளின் அனுபவம்.

பலர் பார்பதி போரில் அவனுடன் இருந்தவர்கள், அங்கே, சாதாரணப் படை வீரர்காள் பெரிய படையையே எளிதில் தோற்கடித்தனர்.
அவனது தலைமையின் கீழ் வெற்றியைச் சுவைத்தவர்கள் மிகச் சிலர். பெரும்பாலும் அவனுக்கு வழிநடத்தும் திறன் உண்டா என அவர்களே சந்தேகப்பட்டனர். மதியம் வரை அந்த எச்சரிக்கையான நடை தொடர்ந்தது.

புருஷோத்தமன் தன் தேர்வுகளை கணித்துக் கொண்டிருந்தான். அடர்ந்த காட்டில் வேறு நீர்மூலம் இல்லையென்ற நிச்சயம் இல்லை. காடு எப்போதும் ஆச்சரியங்களால் நிரம்பியது.படைக்கு வழிகாட்டி இல்லை என்பதும் ஒரு ஊகம் தான். அங்கே ஐநூறு வீரர்கள் இருந்தனர். சிலருக்கு அந்தக் காடு பற்றிய அறிவு இருக்கக் கூடும். அப்படி இருந்தால், சிசுபாலனைக் கொல்லுவதற்கான பொன்னான வாய்ப்பை இழந்துவிடுவார்கள்.

ஆனால் இதுவரை அவர்கள் முந்நூறு சிப்பாய்களைப் பதுங்கித் தாக்கி கொன்றிருந்தனர். அதையே மீதம் இருபோருக்குச் செய்ய முடியாதா என்ன? எண்ணிக்கை அதிகமானால் நேரம் சற்று கூடும்; ஆனால் சாத்தியமே.

புருஷோத்தமன் செயலில் இயங்கும் மனிதன். நீண்ட நேரம் எதுவும் செய்யாமல் காத்திருப்பது அவனுக்கு வேதனை அளித்தது. இந்தப் போரின் முடிவைத் தீர்மானிப்பது அவனது உறுதியும் தீர்மானமெடுக்கத் திறனும் தான். புருஷோத்தமனின் பொறுமை பலன் தந்தது. மிகவும் கட்டுக்கோப்பானது எனக் கருதப்பட்ட அந்தப் படையில் ஒரு சிறு முறிவு ஏற்பட்டது. நீர்த் தேவை பற்றிய மெல்லிய கிசுகிசுக்கள் வீரர்களிடையே எழுந்தன. சிலர், இதுவரை எந்த நீர்ச் சுவடும் காணவில்லை என்பதால் பாதையை மாற்ற வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.

அந்தச் சமயத்தில், ஒரு வீரன் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அமைப்பை உடைத்தான். தனித் திசையில் ஓட ஆரம்பித்தான். அவனை மீளக் கட்டளையிட்டபோது, அவன் கத்தினான்:

“தாகத்தில் சாவதைவிட எதிரியின் அம்பால் சாவது மேலே. என் தளபதியைவிட என் கடவுளையே நான் நம்புகிறேன்!” அவன் புதர்களுக்குள் மறைந்து காணாமல் போனான்.

அவனது தோழர்கள் சிலறும் அவனது பாதச்சுவடுகளைப் பின்தொடர்ந்தனர். அது அலையாகப் பரவியது. ஒருவருக்கொருவர் தொடர்ந்து, பல வீரர்கள் வெவ்வேறு திசைகளில் ஓடத் தொடங்கினர். தளபதிகளும் அதிகாரிகளும் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்று எச்சரித்தனர். ஆனால், நிலைமை கட்டுக்குள் இல்லை..

சிசுபாலன், தப்பி ஓடியவர்களைக் கொல்ல உத்தரவிட்டான். அவனுடன் இருந்த விசுவாசமான வீரர்களும் தளபதிகளும் ஓடிக் கொண்டிருந்த தங்கள் சக வீரர்களையே தாக்கத் தொடங்கினர். அது பேரழிவை ஏற்படுத்தியது.

மேலும் மேலும் சிப்பாய்கள் தங்கள் தளபதிகளின் மீது நம்பிக்கையை இழந்தனர். அவர்கள் கொடூரமான தளபதியை விட, அறியாத காட்டையே தேர்ந்தெடுத்தனர்.

இப்போது அங்கே சில கணக்கில் கொள்ளக்கூடிய, நம்பிக்கையான போராளிகள் மட்டுமே மிச்சம். காணாத எதிரியை எதிர்க்க அவர்களுக்கு வாய்ப்பே இல்லை. மனோபலம் அடித்தட்டில், அச்சம் உச்சத்தில்.

புருஷோத்தமன் அவசரப்படவில்லை. அவர்களை அடர்ந்த காட்டில் சுற்றவிட்டு, அவர்கள் தாங்களே சாகும் நிலைக்கு வரும் வரை காத்திருந்தான்.
சிசுபாலனை உயிருடன் பிடிக்க வேண்டும் என்பதே அவனின் இலக்கு. அவனது குதிரை கொல்லப்பட்டது. அவன் தனியாக காட்டிற்குள் நடக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானான்.

மாலை அணுகியபோது, சிசுபாலன் சோர்ந்து போனான். முன்னல் தெரிந்த வெறுமையை நோக்கி கத்தினான்,எதிரி முன் வந்து தன்னையும் கொல்லச் சவால் விடுத்தான். அந்த தருணத்திற்காகக் காத்திருந்தவர்கள், எல்லாப் பக்கங்களிலும் அவனைச் சுற்றி வளைத்தனர்.
சிசுபாலன் மரணத்தையே எதிர்பார்த்தான். எந்தப் போராட்டமுமின்றி விழுந்தான். அவன் பகைவர்களின் முகங்களைப் பார்த்தான், அனைவரும் அவன் அறியாதவர்கள். பின்னர் பிரதாபனைப் பார்த்தான்.

“இவனை நான் அறிவேன், என் கீழ் போர் புரிந்த ஒருவன்” என்று முணுமமுணுத்தான். தன்னை கொல்லுமாறு மன்றாடினான்.

“உன்னைத் தண்டிக்க விரும்புவது நான் மட்டுமல்ல; பட்டியல் நீளமானது,” என்று பிரதாபன்பதிலளித்தான்.

புருஷோத்தமன் சிசுபாலனைக் காலால் உதைத்தான். அவன் தரையில் விழுந்தான். அந்த உயரமான, திட உடலுடைய மனிதன் யார் என்று அவனுக்கு புரியவில்லை. புருஷோத்தமனின் உத்தரவின்படி, இரண்டு வீரர்கள் அவனை பிடித்து, அவனது உடையெல்லாம் பறித்தனர்.

“இவனுக்குப் பிடித்தது இதுதான், நிர்வாணமாக இருப்பது,” என்று ஒருவன் கத்தினான்.

அவர்கள் சிரிப்பில் வெடித்தனர். ஈட்டிகளாலும் அம்புகளாலும் அவன் நிர்வாண உடலைத் தேய்த்தும் துளைத்தும் சித்தரித்தனர்.

“வாழ்நாள் முழுவதும் அவன் செய்தது இதுதான். இப்போது அவனுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டிய நேரம்,” என்று ஒருவர் சொன்னான்.

சிசுபாலன் அதிர்ச்சியில் உறைந்தான். தன் வாழ்வில் என்றேனும் இவ்வளவு கொடூரத்தை அனுபவிக்க வேண்டி இருக்கும் என்று அவன் ஒரு போதும் நினைத்ததில்லை. அவன் விட்டு விடுமாறு கெஞ்சினான்.
அது மேலும் சிரிப்பைத் தூண்டியது.

“துன்புறும் பெண்களின் அழுகுரலை கேட்டு மகிழ்ந்தவன் நீ தானே. இது அவர்களுக்கான பழிவாங்கல்” என்று விஜயன் சொன்னான்.
புருஷோத்தமன் அவனை காட்டின் நடுவிலுள்ள ஒரு மரத்துக்கு கட்டிவிட உத்தரவிட்டான். அவன் வீரர்கள் உடனே அதைப் செய்தனர். அவனது கை கால்கள் அனைத்தும் நாலா திசைகளிலும் கயிறுகளால் கட்டப்பட்டது.

பிரதாபன் அவனருகே சென்று, வாளை இழுத்து, சிசுபாலனின் ஆணுறுப்பை வெட்டி எறிந்தான். அவன் முகத்தில் வெறுப்பும் அருவருப்பும் வெளிப்படையாகத் தெரிந்தன. “உனது கடைசி நொடிகளில், உனது விளையாட்டு உனக்கென்ன கொண்டு வந்தது என்பதை நீ உணர வேண்டுமென்று, உனது பிடித்த பொம்மையை எடுத்துவிட்டேன்,” என்றான்.

சிசுபாலன் வலியிலும் வேதனையிலும் அலறினான். க்ரசேனன் தனியாக விடப்பட்டான். கயிறுகளிலிருந்து தன்னை விடுவிக்க முயன்றான் பயனில்லை. அவனது அந்தப் போராட்டம் வலியை மட்டுமே அதிகரித்தது. உதவி கேட்டு கத்தத் தொடங்கினான். யாராவது வழிப்போக்கர் உதவலாம் என்று அவன் நினைத்தான். ஆனால் அவனுடைய குரல் அவனிடமே எதிரொலித்தது.

ஒருவர் அருகே வருவது போலத் தோன்றியது. முன்பு தப்பிச் சென்ற தன் சிப்பாய்களில் ஒருவனாக இருக்கலாம்; இப்போது திரும்பி அவனை காப்பாற்ற வந்திருக்கலாம்! அந்த உருவம், அது ஓர் சிப்பாய் இல்லை, ஒரு துறவி. அவர் கௌதமன். இப்போது சிசுபாலனுக்குள் நம்பிக்கை எழுந்தது.

துறவிஅருகே வந்து சொன்னார், “நீ காட்டில் புதிது போலிருக்கிறாய். இந்தக் காட்டின் விதிகளை அறியவில்லை. இங்கே கத்தக் கூடாது, அது வேட்டையாடிகளை ஈர்க்கும். அவர்கள் உன் சதையை விரும்புவார்கள். கத்துவதற்குப் பதிலாக, மனதையும் எண்ணங்களையும் கட்டுப்படுத்து. உன் வாழ்வின் கடைசி மணிநேரத்தில், உன்னைச் சந்திக்கவிருக்கும் இறைவனிடம் மன்னிப்பைக் கேட்டு தியானி.”

சிசுபாலனால் கேட்டதை நம்ப முடியவில்லை. அரசிலிருந்து தானம் பெற்றவன், திருப்பிச் சேவை செய்யாமல் என்று துறவியைப் பழித்தான்.

“நீ உன் பாடத்தை கற்றுக்கொள்ளவில்லை. நரகத்தின் வாயில்களைப் பார்க்கவே நீ உறுதியுடன் இருக்கிறாய். கொடூர மனிதனிடமிருந்து கூட ஞானம் எதிர்பார்த்தது என் தவறு” என்று துறவி காட்டிற்குள் மறைந்து போய்விட்டார்.

உக்ரசேனன் அவனை மீண்டும் மீண்டும் அழைத்தான், மன்னிப்பு கேட்டான். அவன் மறைந்த திசையைப் பார்த்துக் கொண்டே இருந்தான். அழுதான், மன்றாடினான், எல்லா வகையிலும் நியாயம் பேச முயன்றான், பலன் இல்லை.

இப்போது இரவு முழுமையாகக் கவிந்தது. காடு இருளில் மூடப்பட்டது. தனிமையிலும் இருளிலும், உடலெங்கும் வலி இருப்பதை உணர்ந்தான். உடலெங்கும் தேன் பூசப்பட்டதால் பூச்சிகள் குவிந்தன. எரிச்சலும் அரிப்பும் உடலெங்கும். கைகள் கட்டப்பட்டிருந்ததால் எதுவும் செய்ய முடியவில்லை.

புருஷோத்தமன் அவனை தனியாக விட்டதன் காரணம், அவன் தனது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கவும், தண்டனை அனுபவிக்கவும் தான். அது இப்போது நிகழ்ந்தது.

உக்ரசேனன் தன் சகோதரனை நினைத்தான், தப்பினால் இந்த அவமானத்திற்கு எப்படி பழிவாங்குவான் என்று நினைத்தான். இந்தக் கயவர்களை ஒவ்வொருவராகக் கொன்று, வாழ்க்கைப் பாடம் கற்பிப்பேன் என்று எண்ணினான். அவன் செய்தது தவறு என்ற எண்ணம் மட்டும் மூளையின் எந்தப் பகுதியிலும் உதிக்கவே இல்லை.

அவனது கடைசி நம்பிக்கை முடிவுக்கு வந்தபோது, தூரத்தில் ஒரு ஜ்வாலையின் ஒளி தெரிந்தது. அவனது கண்கள் மீண்டும் ஒளியுற்றன. முழுக் குரலிலும் கத்தினான். திடீரென இன்னொரு ஒளி. இதயம் பரபரக்கத் தொடங்கியது.
அவனது குரலில் புதிய சுறுசுறுப்பு. அவன் தொடர்ந்து கத்தி அந்த ஒளிகளை தன் பக்கம் திருப்ப முயன்றான்.

சிறிது நேரத்தில் மேலும் ஒளிகள். தன் கடவுள்களுக்கு நன்றி கூறினான். ஆரம்பத்தில் தப்பியோடிய சிப்பாய்கள் திரும்பி வந்து தன்னை காப்பாற்ற வந்துள்ளனர் என்று நம்பினான்.

ஆனால் விரைவில் ஒரு சந்தேகம். ஒளிகள் இன்னும் தொலைவிலேயே இருந்தன, நெருங்கவும் இல்லை, விலகவும் இல்லை. கவனித்து பார்த்தபோது, அவன் உடல் நடுங்கியது. அவை ஜ்வாலைகள் அல்ல.

அவை இருளில் ஒளிரும் மிருகங்களின் கண்கள்.
 

Author: SudhaSri
Article Title: அத்தியாயம் - 21
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.